நல்ல வாசகரும் நல்ல எழுத்தாளரும் – விளாதிமிர் நபக்கோவ்
நேசத்தோடும், விவரங்களை நீட்டித்தும் பல ஐரோப்பிய பெரும்படைப்புகளை நேசத்தோடு அணுகும் என்னுடைய திட்டத்திற்கு, பல்வேறு ஆசிரியர்களைக் குறித்த இந்த பல்வேறுபட்ட கலந்துரையாடல்களுக்கு, “நல்ல வாசகராக இருப்பது எப்படி” அல்லது “ஆசிரியர்களிடத்திலான கனிவு” – இதுபோல ஏதோவொன்று ஒரு துணைத்தலைப்பை வழங்கும் பணியாற்றும். நூறாண்டுகளுக்கு முன்பு ஃபிளபர்ட் அவருடைய மனைவிக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் குறிப்பைச் சொல்கிறார்: Comme I’on serait savant si I’on connaissait bien seulement cinq a six livres: “அரைடஜன் புத்தகங்களை […]
