காலத்திற்கு ஒரு விவஸ்தை என்பதில்லை. சமயத்தில் சிலரை விட்டுவிடலாம். ஆனால் தமிழ் தனக்குப் பங்களித்தவர்
உயிர் விளங்கும் பிராணியை நாம் பார்த்தால் அங்கு உடல் இருக்
நம்மாழ்
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும், ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது. முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன. அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.
இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள்பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்
பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்
அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள். அவர்
திருமங்கையாழ்
முன்னுரையில் எழுதுகிறார் –
“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து, ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப்பொருளையும் பொதுவாக நோக்கி அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”
கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.
மாலை வழிமறித்தே மந்திரங்கொள் வாட்கலியன்
கோலத் திருமொழியால் கூறுபொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில்சுருக்கி ஆக்க முயல்பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.
________________
மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள்பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு
– நாராயணா என்னும் நாமம்
திருமொழி அந்தாதி பேசுகிறது –
வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசைமொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.
அடுத்த திருமொழி ஆரம்பம்
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே
திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –
வாலி மதனழித்த வல்வில்லி நம்வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.
அடுத்த திருமொழி தொடக்கம்
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே
திருமொழி நூற்றந்தாதி –
முற்ற மூத்து மொய்குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளையவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீளவுரை தந்தே நமக்கு
இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.
ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலிநெஞ்சே நாளும் தொழுதெழுகென் றேசொல்
கலியனுரை வேதக் கலை.
__________________
கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்

வாளுழவன் சொல்வினைக்கு வாள்.
__________________
வாணிலவு மாதர்நகை தப்பி நிமிவனத்தே
சேணுயர்
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.
__________________
அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரைதேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு
__________________
கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே
இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்
செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்
தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.
__________________
தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்
வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா
புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்
கவிநமக்கு வாழ்வருளும் கண்
__________________
கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர்களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட்கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.
இப்படி அமுதக் கலை நூறு என்றால் இவரை என் சொல்ல! இது நூலாக வந்துள்ளதா தெரிய
நீங்கள் சிலப்பதிகாரத்துக் கானல் வரிப் பாட்டுகளைப் படித்திருக்கிறீர்கள்தானே! அது போலவே ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி என்று அப்ப்டியே இளங்கோ அடிகள் மீண்டும் யாத்தது போன்று நம்மாழ்வாரின் பேரில் பாடியிருக்
தொடக்கமே பாருங்கள் –
கண்ணன் கருணைத் தனைமொண்டு ககன மணிந்த நீறாடி
வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்தாய் வாழி தண்பொருநை !
வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்த வெல்லாம் தென்பாண்டி
அண்ணல் நெடியோன் அருள்பெறவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!
_____________________
நிலைநின் றிலகு கோலமென நெளிந்து நெளிந்து பாய்ந்தோடி
மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்தாய் வாழி தண்பொருநை!
மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்த வெல்லாம் மால்நின்ற
தலமா குருகூர் வலஞ்செயவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!
நிலைவரி –
கருணை அலையெறியக் கரையிரண்டும் ஓடும்
அருளின் இணைநோக்கோ அம்புயமோ காணீர் !
அம்புயமோ காணீர்! அறிவுடையார் சீறூர்க்கே
இம்பர் உயிர்க்கெல்லாம் இறைவந்திங் கெய்தியதே !
முரிவரி –
பொருநையின் கரையிடமே பொழிலிடை மகிழ்நிழலே
திருவுறை அகலமதே திருமணி யிமையொளியே
பருமணி வடவரையே பணையிணை யிருகரமே
இருவிழி யருளொளியே எனையிடர் செய்தவையே
திணை நிலைவரி –
தன்னுடைய ஆழியும் தனிப்புள்ளும் சங்கமும்
என்னை யருளாதே விட்டாரோ விட்டகல்க!
மன்னும் அவர்பொழிலில் வாழும் அடியீர்காள்
என்னை மறந்தாரை யான்மறக்க மாட்டேனால்!
___________________
காரார் நிறத்தானைக் கைக்கொண்டே வேகப்புள்
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் பிறப்போதம் !
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் மற்றெம் மோடீங்
கூரா தொழிந்திலையால் வாழி பிறப்போதம் !
மயங்கு திணை நிலைவரி –
மூரி முல்லை நகைகாட்டி முதிர்செம் பவள வாய்திறந்து
பார்!எத் தனை என் வடிவழகென் றெனைப்பே யாக்கும் பரஞ்சோதீ!
மாரிச் சோரி என்கண்ணீர் மாழ்கிக் குழறும் வாய்மொழிகண்
டாரிவ் வண்ணம் செய்தாரென் றயலார் வினவில் என்செய்கோ?
வேறு
மாழ்கும் மாய மயக்கில் வந்தென்
தாழ்வை யழித்துத் தணந்தார் ஒருவர்
தாழ்வை யழித்துத் தணந்தார் அவர்நம்
ஆழும் அன்பை அறியார் அல்லர்
முகமில்வரி —
சேரல் குருகே! சேரலெம் சிற்றூர்!
சேரல் குருகே ! செரலெம் சிற்றூர் !
ஊரும்புள் ளேகொடியாய் உயர்த்தார்க்கென் நோய்கூறாய்,
சேரல் குருகே ! சேரலெம் சிற்றூர்!
எல்லாம் ஒவ்வொரு மாதிரி
வரிப்பாடல்
இன்று எத்தனை பேர் இதனை அறிவார்கள்? ஏதோ மலரில் கொண்டு போய்ப் போட்டு
