சித்திரச் சபை
1 அப்பா முதலும் கடைசியுமாக என் முன்னே அமர்ந்து குடித்தது என்னுடைய இருபத்து மூன்றாவது வயதில். பாண்டவையாற்றின் கரையிலிருந்த ஒரு கைவிடப்பட்ட கான்கிரீட் சுடுகாட்டில் அப்பாவும் நானும் அமர்ந்திருந்தோம். எங்களைச் சூழ்ந்து கரையில் செழித்திருந்த புற்களை ஆடுகள் வலுக்கட்டாயமாக மேயும் ‘வருக் வருக்’ சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. பாண்டவனூரில் நான் வெறுக்கும் பொழுது இந்தப் பின்மதியம்தான். ஆத்தா வீட்டில் தொலைக்காட்சி வாங்கப்படாதவரை விடுமுறை நாட்களில் இப்பொழுதின் நிசப்தம் என்னை அவ்வளவு அச்சுறுத்தி இருக்கிறது. சன் டிவியில் நகைச்சுவைத் திங்கள், […]
