தல்ஸ்தோய் மானுட நேயரா?
பகுதி 1: மானுடவாதம் எனும் சிந்தனை இலக்கிய வாசகனின் பரிணாமம் ஒன்றை உருவகிக்க முடிகிறது. அவன் இளமையில் கற்பனையுலகு ஒன்றில் வாழும்பொருட்டு வாசிக்கிறான். பின்னர் உயர்ந்த இலட்சியக் கனவுகளுக்காக வாசிக்கிறான். அதன்பின் வாழ்க்கையின் தருணங்களைக் கண்டறிவதற்காக வாசிக்கிறான். மேலும் முதிர்ந்து வாழ்க்கையின் புதிய நுட்பங்களைக் கண்டடைவதற்காக வாசிக்கிறான். அதன்பின் இலக்கிய வாசகன் என்ற அடையாளத்தை அடைந்ததும் புதிய வகையான கூறுமுறைகளுக்காக வாசிக்கிறான். அங்கேயே நின்றுவிடுபவன் இரக்கத்திற்குரியவன். வழிதவறி பாலைநிலத்துக்குச் சென்றுவிட்டவன். அங்கே சென்றதுமே திரும்பி மீண்டும் வாழ்க்கையின் […]
