Category: கட்டுரை

எழுத்து

கலி சுட்டும் அகம்: உருவகங்களும் அழகியலும்

வெண்பா கீதாயன் · 27.02.21

எட்டுத்தொகை நூல்களில் நாடகத்தன்மையும் காட்சியழகியலும் செறிந்த நூல் கலித்தொகை. கலிப்பாக்களில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளால் இயற்றப்பட்டு நல்லந்துவனாரால் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பே காட்சிகளும் காட்சிகளுடனான உரையாடல்களும் ஆகும். வெறும் அகத்திணைகளும் துறைகளும் மட்டுமின்றி அறம் சார்ந்த கூற்றுகளும் இருக்கிற தொகைநூல்.  “அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தருமென பிரி வெண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் வருவர்கொல்.” அரியதெனக் கருதப்படும் அறங்களை […]

எழுத்து

தல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி! (பகுதி 2)

போகன் சங்கர் · 27.01.21

தல்ஸ்தோய் மறைந்து சரியாக நூற்றிப்பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் உலக அரங்கில் மானுட குலத்தின் மீது அவரது பாதிப்பு என்னவென்று ஆராய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். 2010-இல் உலகம் முழுவதும் அவர் மறைந்து நூறாண்டுகள் சென்றதையொட்டி அவரது படைப்புகள் குறித்து மீண்டுமொரு பெரிய கவனம் எழுந்தது. அவரது வாழ்க்கையின் கடைசி நாட்களைக் காட்சிப்படுத்தும் ‘The Last Station’ என்கிற திரைப்படமும் வெளிவந்தது. 1910ஆம் ஆண்டு ருஷ்யாவின் நல்ல பனிக்காலத்தில் வயோதிகர் ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியேறி ஒரு […]

எழுத்து

தொ.ப எனும் பெருசு

மானசீகன் · 25.01.21

தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சிறு வட்டத்துக்குள் சுடரும் தீக்குச்சி நெருப்பைப் போன்றவர்கள். அவர்கள் தாரகைகளாக உருமாற வேண்டும் என்றால் சினிமாவுக்குப் போய் பாட்டெழுதி கதாநாயகிகளை வார்த்தைகளால் துகிலுரிய வேண்டும். குறைந்தபட்சம் அரசியல்வாதிகள் தலைமையேற்கும் நிகழ்ச்சிகளில் போய் உட்கார்ந்துகொண்டு ‘நீ உன் மானத்தால் வானத்தை நாண வைத்தவன்’ என்று சிரிக்காமல் கயிறு திரிப்பதற்குக் கற்றிருக்க வேண்டும். மற்றவர்களையெல்லாம் ‘எழுத்தாளர்கள்’ என்று அவர்கள் குடும்பத்திற்கே தெரியாது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முகநூல் வந்த பிறகு சுயமி படத்தை பதிவேற்றம் செய்து விருப்பக்குறிகளை […]

எழுத்து

உழவர் சத்தியாகிரகம்

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · 25.01.21

கடந்த ஐம்பது நாட்களாக தில்லியின் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, உழவர்கள் நடத்திவரும் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  இதற்கு முன்பு, மராத்திய மாநிலத்தில் நடந்த 150 கிலோமீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகச் சென்ற பேரணியும் முக்கியமான ஒன்று எனினும், அது சில நாட்களில் நடந்து முடிந்துவிட்டது. இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடக்க முக்கியக் காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள உழவர்களும், உழவர் சங்கங்களும் ஒன்றிணைந்து, 3-4 மாத போராட்டத்துக்கான மனநிலையுடனும், உணவு, படுக்கை […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்

ஆத்மார்த்தி · 25.01.21

தேவைப்படுகிற துல்லியத்தில் எந்தவொரு பாடலையும் பதிவு செய்வதுதான் இசையமைத்தலின் முக்கியக் கட்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கென நிலையான செல்திசைப் பின்னணி ஒன்று அமையும். மேடைக் கச்சேரிகளிலோ நேர்முகப் பேட்டியிலோ இசையுடனோ இன்றியோ பாட முனையும்போது அந்தப் பாடலின் பதிவுக் கணத்திற்குத் திரும்பச் சென்று அங்கே நின்றபடி பாடுவதுதான் துல்லியமான மறுநிகழ்தலை வாய்த்துத் தரும். பாடல்களை அவற்றின் பதிவுத் துல்லியத்தோடு எப்போதும் பாடுவது இயந்திரத்தாலன்றி மனித எத்தனத்தால் முடியாத ஒன்றுதான். முன்பே சொல்கிறாற் போல் எந்தப் பாடலையுமே அதனதன் யதார்த்தப் புள்ளியிலிருந்து […]

எழுத்து

சமகால அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியமாக்க முடியுமா? – Submission நாவலை முன்வைத்து

ஆர்.அபிலாஷ் · 25.01.21

மிஷல் வெய்ல்பெக் (Michel Houellebecq) தற்கால ஃபிரெஞ்சு நாவலாசிரியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். அவரை மகத்தான ஃபிரெஞ்சு நாவலாசிரியர் எனக் கருதுகிறவர்களும் உண்டு. அது உண்மையா என்பதற்கு பின்னால் வருவோம். வெய்ல்பெக்கின் Submission நாவல் பற்றி ஸிஸெக் ஓரிடத்தில் குறிப்பிட, அது ஏற்படுத்திய ஆர்வத்தில் நான் உடனே வாங்கிப் படித்தேன். இதையடுத்து வெய்ல்பெக்கின் வேறு சில நாவல்களையும் படித்தேன். இந்தக் குறிப்பை நான் எழுதுவதற்குக் காரணம் வெய்ல்பெக் எழுதுவது போன்ற நாவல்களின் சாத்தியங்களை நாம் தமிழில் பரிசீலிப்பது இல்லை […]

எழுத்து

வேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்?

பாமயன் · 22.12.20

இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து, கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று, உழவர் உற்பத்திப் பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம். அடுத்தது, விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்தச் சட்ட முன்வரைவு. அடுத்தது, பண்ணைச் சேவை முன்வரைவு. இதனால் இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில், அண்மைக் காலங்களில் காண முடியாத அளவுக்கான உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், […]

எழுத்து

தல்ஸ்தோயின் பாடுகள்

கால.சுப்ரமணியம் · 22.12.20

நவீன இலக்கிய விமர்சனத்தை உவமைகளைக் கூறியோ, சம்பவங்களையும் கதைத் துணுக்குகளையும் சொல்லியோ, மேற்கோள்களையும் தகவல்களையும் உதிரிகளையும் நிறைத்தோ, இருண்மைப் பதங்களைக் கையாண்டோ, கோட்பாடுகளைக் கொண்டோ, வரலாறை மட்டும் கொண்டோ, வாசகரின் எளிமையை நினைத்து பரிதாபம்கொண்டோ, கவித்துவக் கூற்றுகளைப் பெய்தோ, இன்னபிற கட்டுரைத் தன்மைகளைக் கைக்கொண்டோ மேற்கொள்ளக்கூடாது என்பது பொதுவான விதி. தெளிவாகவும் கூர்மையாகவும் நேரடியாகவும் தாட்சண்யமற்றும் இந்த விமர்சனம் இருக்க வேண்டும். ஆனால் தல்ஸ்தோய் போன்ற மகத்தான ஆளுமையைப் பற்றி முழுமையாகவும் நிறைவாகவும் தீர்மானமாகவும் நேர்முறையாகவோ அல்லது […]

எழுத்து

கல்லறைத் தோட்டத்து ஜெய கீதங்கள்

ஷாலின் மரியா லாரன்ஸ்  · 22.12.20

“யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வுதரும் வார்த்தையெல்லாம் உம்மிடம்தானே உள்ளன… யாரிடம் செல்வோம் இறைவா…” இந்தப் பாடல் எங்கள் ஊரில் எந்த வீட்டில் கேட்கிறதோ அந்த வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பதனை உறுதிசெய்து கொள்ளலாம். துக்க வேளைகளில் தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொள்ள இயற்றப்பட்ட ஒரு பாடலை முழுக்க முழுக்க சாவு வீட்டுப் பாடலாக மாற்றிய பெருமை சென்னையின் தமிழ் கத்தோலிக்கர்களையே சேரும். இந்தப் பாடலை கத்தோலிக்க ஒப்பாரியென்றே சொல்லலாம். அந்தளவிற்கு மனதைப் பிசைய கூடியது. பாடலைக் கேட்கும்போது […]

எழுத்து

காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · 22.12.20

ஒருமுறை காந்தியப் பொருளாதாரம் பற்றிய உரையாடலில், நண்பர்களில் ஒருவர், “அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராதுங்க.. இன்னிக்கு எவன் உக்காந்து நூல் நூத்துகிட்டு இருக்கப் போறான்”, என்றார். இது வழக்கமாகக் கேள்விப்படும் ஒரு வாதம்தான்.. நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மாறாக, இன்னொரு கேள்வி கேட்டேன். ‘இந்தியாவின் மிகப்பெரும் உணவு வணிக நிறுவனம் எது?’ நண்பர்கள், ‘ஐடிசி, ப்ரிட்டானியா, நெஸ்ட்லே…’ எனப் பல பதில்களைச் சொன்னார்கள். நான் சொன்னேன், “இல்லை. இந்தியாவின் மிகப் பெரும் உணவு வணிக நிறுவனம், […]

எழுத்து

இரைச்சலாக மாறும் சிந்தனை

ராஜன் குறை  · 22.12.20

ஒரு மொழியில் சிந்தனை என்பது கோர்வையாக நிகழவேண்டும். கோர்வை என்று சொல்லும்போது சப்தங்கள் கோர்வையாக ஒலித்தால் உருவாகும் இசை நினைவுக்கு வரலாம். அதற்கு எதிராக இரைச்சல் என்ற ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் ஒலிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாதபடிக்கு நிகழ்வது. ஆர்.அபிலாஷ்  செப்டம்பர் மாதத் தமிழினி இணைய இதழில் எழுதிய “இந்து ராஷ்டிரம் பற்றி தெரிதா என்ன சொல்வார்?” என்ற கட்டுரையைப் படித்தபோது எனக்கு அப்படித்தான் ஒரு இரைச்சலைக் கேட்டது போல இருந்தது. அந்தக் கட்டுரைக்கு மறுப்பு […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 5): மொழிபெயர்ந்த மழை

ஆத்மார்த்தி · 22.12.20

தமிழ்த் திரையுலகத்தின் பிரதிபிம்ப நிலமே தெலுங்குத் திரையுலகம். தமிழைவிட வணிகப் படங்கள் மீதான வாஞ்சை பெருகி ஒளிரும் மொழி தெலுங்கு. இன்னொரு புறம் தீவிரமான கலைப்பற்றுதலுடனான படங்களுக்கும் குறைவிருக்காது. இங்கே எம்.ஜி.ஆர் ஆளவந்தார் என்றால் அங்கே என்.டி.ராமராவ். இன்றைக்கு ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக மாறி இருக்கிறது டோலிவுட். இந்தியாவின் பிராந்திய மொழிகளில் செல்வாக்கான மொழி தெலுங்கு. சினிமா அக்கட தேசத்தில் அடிக்சன். அதீதமும் இயல்புமாகப் பெருக்கெடுக்கும் செலுலாய்ட் வெள்ளம் தெலுங்கு சினிமா. இசையைப் […]