Category: கட்டுரை

எழுத்து

ஆன்னாவின் மனப்போரும் மரணத்தின் அமைதியும்: ஆன்னா காரனீனா

நவீனா அமரன் · 18.11.20

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.” –ஆன்னா காரனீனா நாவலின் முதல் வரி. ரயில் பெட்டிகளும் தண்டவாளங்களும் போல, காலமும் மனிதனின் விருப்பங்களும் தெரிவுகளும் (Choices) முடிவில்லாதவை. எதிர்காலம், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தன்னகத்தே கொண்டு, காலத்தின் முடிவிலி தன்மையை பிரதிபலிக்கும் பிம்பமாக, மனிதனால் தகர்த்து உடைக்க முடியாத பெரும் மதிலாக, அவனால் குடித்துத் தீர்க்க முடியாத பரந்த சமுத்திரமாக, காட்சிப்பிழையாக உருப்பெறும் போது, […]

எழுத்து

மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும்

ரா. செந்தில்குமார் · 18.11.20

எங்கள் தெருவிற்குப் புதிதாக வந்தாள் துளசி. வங்கிப் பணியில் இருந்த தனது தந்தை மற்றும் தாயுடன் மாற்றலாகி எங்கள் ஊருக்கு வந்திருந்தாள். ஏறக்குறைய, நகரின் அனைத்து இளம்பெண்களும் அப்போது சுடிதாருக்கு மாறியிருக்க, இவள் மட்டும் தாவணியில், தேவதை போல வலம் வந்தாள். ஊரில் இருந்த அனைத்து இளைஞர்களுக்கும், எங்கள் தெருவில், நண்பர்கள் இருப்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஆனால், தனது அழகு மற்றவர்களை என்ன செய்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் அறியாத குழந்தைபோல், துளசி இருந்தாள். கல்லூரிவிட்டால் […]

எழுத்து

உழலும் உள்ளத்து உறையாக் களி: தல்ஸ்தோயின் Family Happiness

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 18.11.20

காந்திக்கு நெருக்கமானவராக, அஹிம்சை, ஒழுக்கம், நல்லூழ் இவற்றில் நம்பிக்கை கொண்டவராக கிட்டத்தட்ட ஒரு சமய போதகருக்கு நிகரானதொரு பிம்பமே தல்ஸ்தோய் பற்றி தமிழ்ப்பரப்பில் நிலவியிருக்கிறது. அதில் பிழையில்லை என்றாலும்கூட அப்படியான நேர்மறை பிம்பமே பலருக்கும் அவரை அணுகுவதில் தயக்கத்தைத் தந்திருக்கிறது. தல்ஸ்தோயின் பெரும் நாவல்களான போரும் வாழ்வும், அன்னா கரினீனா, புத்துயிர்ப்பு போன்றவை அடைந்த கவனத்தில் பாதியைக்கூட ஃபேமிலி ஹாப்பினஸ், த கொஸாக்ஸ், த டெத் ஆஃப் இவான் இலியிச் போன்ற குறுநாவல்கள் இங்கு பெறவில்லை. அடுக்கடுக்காய் […]

எழுத்து

விழைவின் துயரமும் இசைவின் மகத்துவமும்: இவான் இலியிச்சின் மரணம்

லோகேஷ் ரகுராமன் · 18.11.20

என் தாயார் அன்று ஊரில் இல்லை. அடிபட்டிருந்த என் மாமாவின் மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக கல்கத்தா சென்றிருந்தார். ஒருமாத காலமாக அங்கேயே இருந்தார். நான் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. “ராமா பாட்டி செத்துப்போய்ட்டாடா. இன்னிக்கு காத்தால பதினோரு மணிக்கு. கெளம்பி வந்துடு.” அவ்வளவுதான். ஃபோனை வைத்துவிட்டார். மேலும் எனக்கு எதுவும் கேட்க வார்த்தை வரவில்லை. அவரும் சொல்லவில்லை. அம்மாவிடம் அவள் கிளம்பிப் போனபோது பேசியிருந்ததுதான். அதன்பின் பேசவில்லை. கல்லூரிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு […]

எழுத்து

கண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்

கோகுல் பிரசாத் · 18.11.20

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தல்ஸ்தோயின் ‘God sees the truth, but waits’ கதையை வாசித்தேன். எங்களது பாடத்திட்டத்தின் பகுதியாக அது இருந்தது. நான் வாசித்த முதல் தல்ஸ்தோய் கதை என்று நினைவு. எந்நேரமும் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்களுடன் கத்தியைத் தூக்கிக்கொண்டு திரிகிற மற்ற நீதிபோதனைக் கதைகளுக்கு நடுவே அது தனித்திருந்தது- பிறரது வலிகளைக் கடத்தவல்ல கதையாகப்பட்டது. அதன் பொதுமையிலிருந்து முழுமையை நோக்கி நகர முடிந்திருந்தது. அக்சினோவின் ஆழத்தனிமையில் தெளிவாய்ப் புலப்பட்டும் குழப்பமாய் மங்கியும் […]

எழுத்து

“அதுதான் நமது வழி”: Master and Man

அனோஜன் பாலகிருஷ்ணன் · 18.11.20

1895-இல் எழுதப்பட்ட “மாஸ்டர் அண்ட் மேன்”, தல்ஸ்தோயின் நீண்ட சிறுகதைகளில் ஒன்று. வல்லிக்கண்ணன் “இரண்டு பேர்” என்ற தலைப்பில் அக்கதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குற்றவுணர்ச்சி, மன்னிப்பு, மீட்சி என்று விரியும் தல்ஸ்தோயின் படைப்புலகத்தை ஒட்டிய புனைவுதான் இக்கதை என்றாலும், தடையற்ற இலட்சியத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான முரண்பாடு கதையின் மேல்தளத்தில் நகர்கிறது. உட்தளத்தில் கதை ஒரு நில உரிமையாளருக்கும், அவரிடம் தொடர்ச்சியாக வேலைபார்த்து வரும் ஊழியருக்கும் இடையிலான உறவுகளின் தன்மையை ஆராய்கிறது. ரஷ்ய நிலப்பிரபுத்துவத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் ஏற்கும் மறுக்கும் […]

எழுத்து

தல்ஸ்தோயின் ஆதித்தேடல்

வி.அமலன் ஸ்டேன்லி · 18.11.20

ஓருயர்ந்த ஒப்பற்ற படைப்பாளிக்கும்கூட வாழ்க்கை அர்த்தப்படாதது வியப்புதான். தல்ஸ்தோயின் ‘வாக்குமூலம்’ அவரது சொந்த மெய்ஞானத் தேடலின் தடங்கள் நமக்கு உரைப்பதென்ன என்ற ஆர்வம் மேலிட டேவிட் பாட்டர்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது.  மரபுவழி கிறிஸ்துவத்தில் திரித்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார் தல்ஸ்தோய். 1879ல் கீவ் நகரிலிருந்த குகை மடங்களில் தங்கியிருந்த ஆதிகிறிஸ்துவ வழியில் வசித்துவந்த துறவிகளின் எளிய வாழ்முறையோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆகமங்களின்படி தேவாலயங்கள் நடத்தப்படவில்லை என்பதை அறிந்து மதம்சார்ந்த பற்றுகளைக் கைவிட்டார். அதன் சட்டதிட்டங்களைச் சாடினார். எல்லையற்றதை அனுபூதியாய் உணர இயலும் என்றும் ஒன்றுமற்றதில் அடங்கியிருக்கிறது […]

எழுத்து

இந்து ராஷ்டிரம் பற்றி தெரிதா என்ன சொல்வார்?

ஆர்.அபிலாஷ் · 25.09.20

இந்து ராஷ்டிரம் என்பதை தெரிதா ஏற்றுக்கொள்வாரா அல்லது எதிர்ப்பாரா என்பதல்ல என் கேள்வி – இந்துத்துவாவின் (அதாவது பாஜக அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களின்) கனவுகள், எதிர்பார்ப்புகளை அவர் எப்படிப் புரிந்துகொள்வார்? இது ஏன் முக்கியம் என முதலில் சொல்லி விடுகிறேன். இந்து ராஷ்டிர, அகண்ட பாரதக் கனவின் அடிப்படையிலே பாஜக அரசின் கணிசமான செயல்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறே அரசின் நிர்வாகம் குறித்த பிம்பமும் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இந்து தேசம் எனும் இந்துத்துவா கனவு மட்டுமல்ல, அதனடிப்படையிலான திட்டங்களும், […]

எழுத்து

முனியும் முனியும் – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் · 25.09.20

அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க முச்சந்திகளில் நிற்பதில்லை. கோட்பாட்டுக் கூப்பாடுகளை எழுப்பி நிழற்படக் கலைஞர்களுக்கு முகம் காட்டி நிற்பதுவும் இல்லை. ஞாபக […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 1) : கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம்

மானசீகன் · 25.09.20

காமம் மனித மனதின் ஆதாரமான உணர்வு. பிரபஞ்ச இயக்கமும், மனித உணர்வுகளும் பஞ்ச பூதங்களால் மட்டுமல்ல காமத்தாலும்  பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஈர்ப்பு, காதல் ஆகியவற்றுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் முற்போக்கான நகர்வுகளுக்கும் தனி மனிதனின் அளப்பரிய சாதனைகளுக்கும் கூட காமமே அடிப்படையாக இருக்கிறது. நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல் பிரபஞ்சத்தின் உயிர்கள் காமத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றன அல்லது சபிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மகத்தான படைப்பாளியை மதிப்பிட காமம் குறித்த சித்திரிப்புகளை மிக முக்கியமான அளவுகோலாகக் கொள்ளலாம். தமிழிலக்கியப் பரப்பில் காதல், பாசம், […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 4): மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்களை முன்வைத்து

ஆத்மார்த்தி · 25.09.20

கர்நாடக சங்கீதத்தின் மீது பிற எந்தத் தென் மாநிலத்தை விடவும் அதிகப் பற்றுகொண்ட திரைமாநிலம் கேரளம். எல்லா விதமான படங்களும் உருவாகி வருகிறதான திரைக்கதை, படவுருவாக்கத்தின் மறு எல்லையில் இசையைப் பொருத்தவரை பாரம்பர்யத்தின் வேர்வரை ஆழப் பற்றிக்கொள்கிற ஆதார மனோபாவம் குறிப்பிடத்தக்கதாகிறது. மண் சார்ந்த கலைகள், தொன்மங்கள், தங்களுக்கு உரிமைப்பட்ட இசை என்பனவற்றைப் பற்றியெல்லாம் அவ்விடத்திற்கென்று தனித்த பாலிஸிகள் உண்டு. போனி எம்-மையும் மைக்கேல் ஜாக்ஸனையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸையும் இரசித்துக்கொண்டே தங்கள் ஆதர்ஸ மாற்றத்தை நிகழாமல் பேணி […]

எழுத்து

பாலுத்தேவரும் சேனாதிபதியும்: தமிழ்த் திரைப்படங்களில் காவல் உரிமையும் வாக்கைக் காத்தலும் – ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் · 25.09.20

வேத நூல்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு புயலாகிப் புறப்படும் ‘புதுமைப்பெண்’ணை (1984) காட்டிய பாரதிராஜா மூன்றாண்டுகள் கழித்து வேதங்களைப் புதிதாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு (வேதம் புதிது 1987) வந்தார். இரண்டிலும் வேதம் பழமையின் குறியீடாகச் சொல்லப்பட்டு மாற்றத்திற்கான அடையாளமாக புதுமை/புதிது எனும் சொற்கள் வைக்கப்பட்டன. புதுமைப்பெண்ணில் பெண்ணடிமைத்தனம். வேதம் புதிதில் சாதி. இரண்டு படங்களிலும் பாகுபாடுகளுக்குமான ஆதாரமாக வேதங்கள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. இவ்விரண்டு பாகுபாடுகளின் அழிவும் வேதம் அழிவது அல்லது மாறுவது என்பவற்றோடு தொடர்புகொண்டிருந்தன. வேதங்கள் பிராமணர்கள் தொடர்பில் […]