Category: கட்டுரை

எழுத்து

பூட்லேரின் சொர்க்கமயமான தீமையின் மலர்கள்

நம்பி கிருஷ்ணன் · 25.04.22

பூட்லேரைப் பொறுத்தமட்டில் அவருடன் தொடர்பிலிருந்த பெண்களுடனேயே ஒருவர் ஆரம்பிக்கலாம். லே ஃப்லேர் டு மால் (Les Fleurs du Mal, The Flowers of Evil) தொகுதியின் முதல் கவிதை ஒரு தாயின் குரலில் தொடங்குகிறது, அனைத்துப் பெண்களின் விதிகளிலிருந்தும் தனக்காக இந்தப் பிரத்யேக விதியைத் தேர்ந்தெடுத்ததற்காக, முஷ்டியை மடக்கியபடி கடவுளிடம், கோபத்துடன் மன்றாடுவதைப் போல் அது தொடங்குகிறது: “Since I was chosen of all my sex bring this scandal to my bed and board […]

எழுத்து

‘அவன் என்னை அடிக்க வரான் சார்’

மானசீகன் · 25.04.22

‘அவன் என்னை அடிக்க வரான் சார்’. இந்த வார்த்தைகளைக் கேட்காத மாணவர்களே இருந்திருக்க முடியாது. வகுப்பறைகளில், காலை வழிபாட்டில், மைதானங்களில், ஆண்டு விழாக்களில், ஏன் கல்விச் சுற்றுலாக்களில்கூட இப்படியொரு சொற்றொடரைக் கேட்டுக் கேட்டு ஆசிரியர்களுக்குக் காதே புளித்திருக்கும். உப்புப் பெறாத பிரச்சினைக்கு உச்ச நீதிமன்ற வக்கீல்கள் மாதிரி இரண்டு பேரும் மாற்றி மாற்றிப் பேச, கடைசியில் வாத்தியாரின் அடியோடு பஞ்சாயத்து கலையும். ஆனால், முதன்முறையாக ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டு பயந்து விடுமுறை போட்டுவிட்டு கல்வி அதிகாரியின் அறை […]

எழுத்து

மன்னிப்பு கேட்பதன் சிக்கல்கள்

ஆர்.அபிலாஷ் · 25.04.22

என் வேலையிட வளாகத்தில் நான் சக்கர நாற்காலியில் புழங்குவேன். ஒருநாள் உணவகம் ஒன்றில் காப்பி வாங்கிவிட்டுத் திரும்புகிறேன். ஜனநெருக்கடி அதிகமான இடமது. நின்றாலோ திரும்பினாலோ நீங்கள் யார் மீதாவது கவிழ நேரிடும். கையை உயர்த்தினாலோ நீட்டினாலோ யாரையாவது “இடிக்கவோ” “குத்தவோ” நேரும். தலையைத் திருப்பினால், உங்கள் உயரத்தைப் பொறுத்து, யாரோ ஒருவரது கன்னத்தை உரசவோ அல்லது உங்கள் நாசியால் அவரது வியர்வை கசகசக்கும் கழுத்தை நிரடவோ மூக்கால் ஒரு குறுகுறு தாடியை உரசவோ நேரும். நான் சக்கர […]

எழுத்து

புக்கில் அமைந்தின்று கொல்லோ!

வி.அமலன் ஸ்டேன்லி · 25.04.22

“நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிற முப்பாட்டன் வீட்டின் முன்வாசலில் நூறாண்டுகள் தாண்டிய பெரியதோர் ஆலமரம் தழைத்து நின்றதை இன்று காலையில்தான் கண்டேன்” – ஜென் பாடல்.  புத்தனைச் சந்திக்க நேர்ந்தால் கேட்பேன். தியானமெல்லாம் வேண்டாம், துவராடை வேண்டாம், மழித்தலும் நீட்டலும்கூட. எந்தவிதமான துறவு நெறிகளும் வேண்டாம், சும்மா உங்களுடனேயே பயணிக்கட்டுமா என்று. மௌனமாக நடந்து போகக்கூடும். அப்படித்தான் செய்வார் என்று முதலிலேயே யூகித்துவிட்டதால் நான் கூடவே நடப்பேன். போகுமிடமெல்லாம் பின்தொடர்வேன். கூட்டத்தோடே வரும் ஆர்வமுள்ள தெரு நாய்க்குட்டியைப் போல. […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 8): இசையில் இருவர் – சங்கர் கணேஷ்

ஆத்மார்த்தி · 25.04.22

சங்கர் – கணேஷ் இருவரும் திரையிசை உலகில் பரபரப்பாக கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருட காலத்திற்கு மேலாக இயங்கியவர்கள். சங்கர் ராமன், இசை மேதை சி.ஆர்.சுப்பராமனின் உடன் பிறந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு எம்.எஸ்.வி.யிடம் இசைக்கலைஞராகத் தன் திரைவாழ்வைத் தொடங்கியவர். கணேஷூம் எம்.எஸ்.வி.யிடம் பணிபுரிந்தவரே. இந்த இருவரும் சேர்ந்து இசையமைப்பில் ஈடுபடத் தொடங்கி முதல் படமாக நகரத்தில் திருடர்கள் என்ற படத்திற்கு இசையமைத்தனர்.அந்தப் படம் முழுவதும் வளரவில்லை. அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவியரசர் கண்ணதாசன் இந்த இருவரின் இசை மீது […]

எழுத்து

மேகி கேரிஸன் – செய்வன தில்லாய்ச் செய்!

டாக்டர். ரகுநாதன் · 25.04.22

உலகைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்க சூப்பர் ஹீரோக்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளைப் (இன்றும்) பறைசாற்றும் இரகசிய உளவாளிகள், இத்தாலிய கௌபாய்கள், துப்பறிவாளர்கள் என்று கடிவாளமிட்ட குதிரை போலத் தொடர்ச்சியாகக் காமிக்ஸ் வாசிப்பு சலிப்பூட்டும்போது வசந்தமாக ஒருசில படைப்புகள் வந்து நமது எண்ணத்தைச் சற்றே திசை திருப்பும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் மேகி கேரிஸன் என்ற பெண்ணை மையப்படுத்தி சென்ற மாதம் வந்த முத்து காமிக்ஸ் இதழ் “செய்வன தில்லாய்ச் செய்!” இரண்டு பிரெஞ்சுப் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் லண்டனில் நடப்பதுபோல […]

எழுத்து

பாஸனின் வடமொழி நாடகங்கள்: சொப்பன வாசவதத்தமும் பிரதிமாவும்

கால.சுப்ரமணியம் · 25.04.22

சமஸ்கிருத இலக்கியத்தில் மகாகவியாகவும் மகாகாவிய கர்த்தாவாகவும் போற்றப்படும் காளிதாசன், சாகுந்தலம் என்ற நாடகக் காவியத்தின் மூலம்தான் மகத்தானவராகக் கருதப்படுகிறார். அவருக்குக் காலத்தால் முற்பட்ட பாஸ மகாகவி (Bhāsa), சமஸ்கிருத நாடக இலக்கிய உலகத்தில் காளிதாசனுக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். பாணினி இலக்கணத்துக்கும் பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்கும் காளிதாசன் கட்டுப்பட்டவர். ஆனால் பாஸன் இவர்களுக்கும் முந்தியவர் என்பதால், அவர்களது இலக்கண வரையறைகளிடமிருந்து விடுபட்டவராகத் திகழ்கிறார். ஒரு இலக்கியப் படைப்பை அதன் மூல மொழியிலேயே பூரணமாக அனுபவிக்கவும் இரசிக்கவும் பரவசம் கொள்ளவும் முடியும் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 7): தனிமையின் பாடகன் – ஹரீஷ் ராகவேந்திரா

ஆத்மார்த்தி · 04.03.22

தனிப்பாடல்களுக்குத் திரைப்படங்களின் உள்ளே பேரிடம் உண்டு. இன்னும் சொல்வதானால் காதல் பாடல் என்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தை எல்லாப் படங்களிலும் எடுத்துக்கொள்ளக்கூடிய டூயட் சேர்ந்திசை பாடல்கள்கூட கதையில் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் தனிப்பாடல்களை முழுவதுமாக அப்படிச் சொல்லித் தள்ளுவதற்கில்லை. கதையோடு கூடியெழுகிற மனத்தின் குரலாக ஒலிப்பவை தனிப்பாடல்கள். கதாபாத்திரத்தின் எண்ண வெளிப்பாடாக உள்ளார்ந்த உதடுகளைத் திறந்து பாட முனைவதாக அமைக்கப்பட்டவை பல தனிப்பாடல்கள். இரசிகன் ஒருவன் பெரும்பாலும் டூயட் பாடல்கள் வரும்போது எழுந்து செல்வதைக் காட்டிலும் […]

எழுத்து

தேவகன்னியர் உருண்டால் புயல்!

சரவணன் சந்திரன் · 24.02.22

கடந்த நான்கைந்து தினங்களாக வானிலை அறிவிப்புகளையும் அது சார்ந்த கணினி முன்மாதிரிகளையும் உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். வரும் மார்ச் (2022) ஒன்றாம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதிவரை இடையில் மூன்று நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு, தமிழகத்தின் பல இடங்களில் மழைக்கூறு இருப்பதாகக் கணிப்புகள் காட்டின. எனக்கு உடனடியாகச் சத்திரப்பட்டி சந்திரபோஸ் அண்ணனை அழைக்க வேண்டுமெனத் தோன்றியது. ஏனெனில் போன வருடம் காய்ந்தும் கெட்டவர், பெய்தும் கெட்டவர். முன்னோர்கள் அவருக்குக் கடத்திய, தன்னுடைய பாரம்பரிய அறிவை முன்னிறுத்தி மழைப் […]

எழுத்து

தொல்காப்பியம் கூறும் ’நூல் எழுதுவது எப்படி?’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் · 24.02.22

நூலெழுதுங்கால் நூலெழுதுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்ன? ரைட்டேர்ஸ் ஹேண்ட்புக் – பலதும் உண்டு இக்காலத்தில். முன்னோர்களும் இத்தகைய அங்கையேடுகள் தந்துள்ளனர். இளம்பூரணர் உரை தொல்காப்பியம், மரபியல், 112க்கு கவனித்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புலப்படும். என்ன? ’உத்தி என்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது’ என்கிறார் இளம்பூரணர். அதாவது சூத்திரத்தின்பால் இருக்கும் பொருளை விளக்கிக் காட்டும் உரைவரைதல் என்பதைத்தான் உத்தி என்னும் சொல் குறிக்கும். அந்த உத்தியாகிய ‘உரைவரைதலும்’ […]

எழுத்து

இன்மையின் இருப்பு: அபியின் கவிதைகள்

சுநீல் கிருஷ்ணன் · 24.02.22

அந்தி விளையாட்டு முடிகிறது வாசற்படிகளில் பிள்ளைகள் வந்து தளைப்படுகின்றனர் பேச்சும் சிறு சிரிப்புகளும் விசிறி மஞ்சளாய்க் கனல்கிறது மாலை கதை மனிதர்கள்  ஆழங்களிலிருந்து மின்னிக்கொண்டு  வருவதும் போவதுமாயிருப்பர் ஏதேதோ அடுக்குகளிலிருந்து  ஏதேதோ அரூபங்கள்  பறந்து படிந்து மறையும் காலத்துள் நிகழ்ந்திராத  காலம் தகதகத்து பிள்ளைகளின் கண்களில் இறங்கும்  கதைகள் சற்றே வண்ணம் கலங்கி, எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில்  உயிர் சேகரித்துக்கொண்டு பழைய இருப்பிலேயே  புதிது புதிதாகும் எல்லாவற்றுடனும் இழைந்து இருத்தலே  காத்திருத்தலாக நான் (மாலை- கதை, அபி) […]

எழுத்து

சாவித்திரி சரித்திரம் முத்துமீனாட்சியான கதை

கால.சுப்ரமணியம் · 24.02.22

தமிழில் நாவல் என்ற நவீன இலக்கிய வடிவம், தமிழ்ச் சிறுகதை வடிவம் தோன்றும் முன்னரே, பலவித எடுத்துரைப்புகளுடன் பிரசுரம் பெற ஆரம்பித்துவிட்டது. தமிழில் நவீன நாவல் தோன்றி, சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பே நவீனச் சிறுகதை தோன்ற ஆரம்பிக்கிறது. வீரமா முனிவர் (1680-1747) படைத்த பரமார்த்த குரு கதை (அச்சில் 1728, சென்னை கல்விச் சங்கம் 1822), முத்துக்குட்டிப் புலவர் சொன்ன வசன சம்பிரதாயக் கதை (1775, அச்சில் 1895), சேஷய்யங்கார் எழுதிய கவிதை நாவலான ஆதியூர் […]