Category: கட்டுரை

எழுத்து

தில்லைக் கோவிந்தனின் திடும் பிரவேசம்

கால.சுப்ரமணியம் · 24.02.22

அ.மாதவையா (A.Madhaviah, 1872-1925) தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய காலனி ஆட்சிக் காலகட்டத்தின் ஒருவகை இலக்கிய நீட்சி என்றும் ஆரம்பகால நவீன இந்திய இலக்கிய எழுச்சியின் ஒருவகைச் சுதாரிப்பு என்றும்கூட இதைச் சொல்லலாம். மாதவையா தமிழில் எழுதிய நாவல்கள்: 1. முத்துமீனாக்ஷி: ஒரு பிராமணப் பெண்ணின் சுயசரிதை, (1892, 1903) 2. பத்மாவதி சரித்திரம்: ஒரு தமிழ் நாட்டுக்கதை, (1898-99) 3. விஜய மார்த்தாண்டம், (1903). மாதவையாவின் இறப்பிற்குப் பின், அவர் எழுதிய […]

எழுத்து

சிறியதின் ஆவியும் பெரிதே: க.சீ.சிவகுமார் நினைவுக்குறிப்பு

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · 04.02.22

நோற்றலுக்கு இணையான விரும்பி ஏற்கப்படும் மதிப்புமிக்கத் துன்பங்களில் ஒன்று எழுதுதல். இதை எழுதும் இவ்வேளையில் குஸ்தவ் மாஹ்லரின் ஐந்தாம் சிம்பொனி ஒலிக்கிறது. எழுத்து மேஜையில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அசோகமித்திரனின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பும் கண் முன்னேயிருக்கிறது. 1647 பக்கங்களிருக்கும் அப்புத்தகத்தை கையிலெடுத்து க.சீ. சிவகுமார் சொன்னார்: “அசோகமித்திரனை விடவும் எடை அதிகமா இருக்கே”. அப்போது நான் புன்னகைத்தேன். இப்போதும் அவர் சொன்னது நினைவிலிருந்து புன்னகைக்கத் தூண்டுகிறது. ஆனால் நீத்தார் நினைவுக்குறிப்பை எழுதும் போது புன்னகைப்பதை யார் விரும்புவார்களோ இல்லையோ நிச்சயம் க.சீ. சிவகுமார் விரும்பவே […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 7): கு.அழகிரிசாமியின் சமூகப் பார்வை

மானசீகன் · 30.01.22

கு.அழகிரிசாமியின் கதை வெளியெங்கும் எளிய மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். அவர் கதைகளில் வருகிற கதாபாத்திரங்களின் மிக முக்கிய குணாம்சமாகப் பசி இருக்கிறது. யாரோ சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையை வழித்துச் சாப்பிடுகிற ராஜா (ராஜா வந்திருக்கிறார்), பக்கத்து வீட்டில் தந்த கஞ்சியை சகோதரன் ‘நியாயம்’ பேசிக் கொட்டிவிட்டதற்காக அம்மா மீது கோபம் கொள்ளும் சிறுவன் (இருவர் கண்ட ஒரே கனவு), பசியை வெல்வதற்காக உடலைத் தந்துவிட்டு காசைப் பார்த்தவுடன் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கும் இளம்பெண் (திரிபுரம்), செருப்பு தொங்க […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 6): பி.ஜெயச்சந்திரன்

ஆத்மார்த்தி · 30.01.22

பளியத் ஜெயச்சந்திரன் (எ) பி.ஜெயச்சந்திரன் 03.03.1944 அன்று பிறந்தவர். சிறுவயது முதலே இசையார்வம் கொண்டவர். அவருடைய இன்ஸ்பிரேஷன் கே.ஜே.ஏசுதாஸ். இருவருமே தமிழில் மிகவும் கொண்டாடப்படுகிற கேரளக் குரலாளர்கள் என்பதில் தொடங்கி, பேசுவதற்குப் பல விஷயங்கள் உண்டு. ஜி.தேவராஜன் இசையில் ஸ்ரீ நாராயண குரு (1986) மலையாளப் படத்திற்காக ஒரு டூயட் உட்பட மூன்று பாட்டுகளை ஜெயன் பாடியிருக்கிறார். அந்தப் படத்தில் சிவசங்கர சர்வ சரண்ய விவோ எனும் சோலோ அவருக்குச் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுத் […]

எழுத்து

முஃமின் புறாக்கள்

வி.அமலன் ஸ்டேன்லி · 30.01.22

செடிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன தர்காவின் சுற்றுப்புறத்தில். பின்பக்கமாய் பக்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே பறக்கும் ரயில்தடம் பாய்ந்து சென்றது. சுமார் முன்னூறு வருட தர்கா. தஸ்தகீர் பாபா சாகிப் ஜீவசமாதியான இடம். துருக்கியரான தஸ்தகீர் பிஜப்பூரின் அடில் ஷாஹி அரச வம்சாவழி. பதினேழாம் நூற்றாண்டில் தனது உடலின் இறுதிச்சடங்கை எந்த இமாமும் செய்ய வேண்டாமென்றபடி பின்னர் தானே தன்னுடலுக்கான ஜனாசா ஈமக்கிரியைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. வாயில் வளைவு கடந்து உள்ளே நடந்துசெல்ல மிக உயர்ந்த இரண்டு மினாராக்கள் நின்றன. சுற்றுப்புறமெங்கிலும் நிறைய இஸ்லாமியர் […]

எழுத்து

கதே: முழுமையான வாழ்வின் இலக்கியம்

இரா. குப்புசாமி · 30.01.22

ஒவ்வொரு மொழியும் தன்னை அழியாப் புகழில் ஏற்றும் மகா காப்பியத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட தன் தலைமகனுக்காகத் தவமிருக்கிறது. அவன் பிறக்கும்வரை அது தன்னை மலடியாகவே கருதுகிறது. அப்படிப்பட்ட காப்பியம் பிறந்த பிறகு தாய்மையால் பூரிக்கிறது. தனக்கு இனி என்றுமே அழிவில்லை என்று இறுமாந்து கொள்கிறது. அந்தக் காப்பியம்தான் அந்த மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் அந்தத் தேசத்தையே உரிமையாக்கும் சாசனமாக அன்று முதல் மாறுகிறது. ஹீப்ரு மொழிக்கு ஒரு மோஸஸ், கிரேக்க மொழிக்கு ஒரு ஹோமர், […]

எழுத்து

கந்து வட்டியும் சூப்பர் ஹீரோக்களும்!

கிங் விஸ்வா · 30.01.22

கதை உருவான கதை: 2015ல் அமெரிக்காவில் இரண்டு விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. ஒன்று, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பக் கட்ட முடியாதவர்களிடம் இருந்து வசூலிக்கும் முறைகள். இரண்டாவது விஷயம், விக்கிலீக்ஸ். இந்த இரண்டையும் வைத்து, இளைய தலைமுறை காமிக்ஸ் படைப்பாளிகளான டோனியும் ஷாவும் ஒரு காமிக்ஸை உருவாக்க நினைத்தார்கள். அதே சமயம் சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களில் இருக்கும் சில விஷயங்களையும் பகடி செய்து உருவாக்கியதே இந்தக் காமிக்ஸ் தொடர்.  தலைப்பு: The Paybacks கதாசிரியர்: டோனி […]

எழுத்து

இரு வகையான வழக்குகள்

ஆர்.அபிலாஷ் · 30.01.22

தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக, ஆங்கிலம், கொச்சையான சொற்கள் கலந்து நேரடியாக ஒரு விசயத்தைச் சொல்லத் தலைப்படும் எழுத்துக்கு இங்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் வட்டார வழக்குக்குப் பெரிய மதிப்பு இருந்ததில்லை. நீங்கள் எந்தப் பதிவர்களைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறும் என்றாலும் பேச்சுவழக்கு என்னதான் எதார்த்தமாகவும் பாசாங்கற்றதாகவும் இருந்தாலும், பொதுவழக்கே பொதுவாகக் கோலோச்சுகிறது. இந்தப் பொதுவழக்கைப் […]

எழுத்து

அறிந்துணர்வில் யாவும் உள: ஜென் துறவி திக் நாட் ஹஞ்ச் நினைவுக்குறிப்பு

வி.அமலன் ஸ்டேன்லி · 30.01.22

‘டீச்சிங்ஸ் ஆஃப் லவ்’ எனும் நூலில் தன் மேலிருந்த பெருவெறுப்பால் வியட்நாம் அரசு ‘தே இறந்துவிட்டார்’ எனப் புரளி கிளப்பியதைப் பற்றி திக் நாட் ஹஞ்ச் எழுதுகிறார். ‘சில வருடங்களுக்கு முன்பு, அரசுச் சார்புக் குழுவொன்று நான் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஹோசிமின் நகரத்தில் வதந்தி பரப்பிற்று. நாடே நம்ப முடியாமல் குழம்பியது. பிற்பாடு பெளத்தப் பிக்குணி ஒருத்தி எனக்கொரு கடிதம் அனுப்பியிருந்தாள். எனது மரணச் செய்தியைக் கேட்டபோது துறவுக்கான ஆரம்ப வகுப்புகளைத் தனது பெளத்தப் பள்ளியில் நடத்திக்கொண்டிருந்தாளாம். துறவு மாணவருள் ஒருத்தி துக்கம் […]

எழுத்து

ஆண்டன் செகாவ் – சிறுகதை முதல்வர்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.12.21

1 உலக அளவில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பட்டியலில் தல்ஸ்தோய்க்கும் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அடுத்திருப்பவர் ஆண்டன் செகாவ். முந்தைய இருவரும் நாவல்களில் செய்திருக்கும் சாதனைக்கு நிகராக செகாவ் சிறுகதைகளில் நிகழ்த்தியிருக்கிறார்.  தமிழில் அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும் என பெரும் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு தீவிரமான மொழியாக்கங்கள் செகாவின் கதைகளுக்கு இல்லை.  ரஷ்யாவின் அன்றைய எழுத்தாளர்களின் அரசியல் நிலைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை செகாவ் கொண்டிருந்ததே அதற்குக் காரணமாக இருக்கமுடியும். இலக்கிய […]

எழுத்து

உடலின் தாண்டவம்: எம்.வி.வெங்கட்ராமின் குறுநாவல்கள்

சுநீல் கிருஷ்ணன் · 24.12.21

மொழி வெளிப்பாடு, நிகழ்வுகளின் முரண் என இரண்டு கூறுகளைப் பொதுவாக இலக்கிய ஆக்கங்களின் இரு அடிப்படைக் கட்டமைப்புகளாகக் காண முடியும். ஒரு பிரதி முதன்மையாக எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது? மொழி வெளிப்பாடுதான் நோக்கம் எனில் மொழி ஒரு திறவுகோலாகப் புறத்தை அகத்துக்குத் திறந்து வைக்கிறது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது போல மொழியால் அள்ளப்படுவது யாவும் மொழிக்குச் சிக்காத அக ஓட்டத்தின் தடயங்களைக் குறிக்கின்றன. புறத்தில் உள்ள ஒவ்வொன்றும் அகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கின்றன. மொழியை முதன்மை […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 5): ஹரிஹரன்

ஆத்மார்த்தி · 24.12.21

“ஹரிஹரன் என்னிடம் கேட்டால் என் வலது கையை வெட்டித் தருவேன்”, “என் உயிரையே தருவேன்” என்றெல்லாம் சொன்னவர்களைச் சந்தித்திருக்கிறேன். தொண்ணூறுகளின் ஆகச்சிறந்த பாடகர் என்று முதன்மையாக ஹரிஹரனைக் குறிப்பிட்ட பிறகுதான் வேறு யாரைப் பற்றியும் யோசிக்கவே முடியும். ஒன்பது மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கும் ஹரிஹரன் ஹிந்துஸ்தானி இசையில் தனக்கெனத் தனித் தடங்களை ஏற்படுத்தியவர். தொழில்முறைப் பாடகர்கள் யாரை விடவும் மிக அதிகமான சூப்பர் ஹிட் பாடல்களைச் சினிமாக்களில் பாடியவர். ஹரிஹரனின் குரல் மெடாலிக் தன்மையும் நம்ப […]