Category: கட்டுரை

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 10): கதை சொல்லாத கதைகள் – கமல தேவியின் கதைகளை முன்வைத்து

எம்.கோபாலகிருஷ்ணன் · 25.11.21

இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் சிறுகதையாளர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கமலதேவியின் பெயரை சுனில் கிருஷ்ணன்தான் பரிந்துரைத்தார். அதுவரை நான் கேள்விப்பட்டிராத பெயர். பதாகையில் வெளிவந்திருந்த ‘அலைவு’ கதையை வாசித்தேன். அதைத் தொடர்ந்து ‘ஜீவனம்’. அந்த இரண்டு கதைகளும் உடனடியாக வசீகரிக்கவில்லை. ஆனால், கிராமம் சார்ந்த சில நுட்பங்களும் இயல்பான அனுபவத்திலிருந்து வெளிப்படும் சொல்முறையும் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.  கதை என்பதே ஒரு சம்பவத்தைச் சொல்வதுதான். நடந்தது நடந்தபடியோ அல்லது கூட்டிக் குறைத்தோ அது விவரிக்கப்படும். சிறுகதையின் பொதுவான, […]

எழுத்து

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

பாலா கருப்பசாமி · 25.11.21

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி தமிழின் ஆகச்சிறந்த நாவல்களுள் ஒன்று. இது பல எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட விஷயம்தான். பல்வேறு நேர்காணல்களில் கன்னி நாவல் தனது சொந்த அனுபவம் என்றே கிருபா குறிப்பிட்டுள்ளார். அவரது இயற்பெயர் பிரான்சிஸ். கிருபா என்பது அவர் பம்பாயில் இருந்தபோது நெருங்கிய நண்பனாக இருந்தவரது பெயர். அவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும் அவர் நினைவாக இந்தப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். ஏற்கெனவே முகநூலில் முதன்முதலாகக் கன்னி நாவல் வாசித்தபோது ஏற்பட்ட பரவசத்தில் ஒரு […]

எழுத்து

ஊழ்அடி முட்டம்

கார்த்திக் நேத்தா · 28.09.21

அண்ணன் பிரான்சிஸை நான் நேரில் சந்தித்தது வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட அலுவலகத்தில். 2008ம் ஆண்டு வாக்கில். அவரது கவிதைகளைச் செரித்துப் பித்தேறிக் கனன்றுகொண்டிருந்த காலகட்டத்தில் அவரையே சந்தித்த அந்த முதல்கணத்தின் உன்மத்தம் இன்றளவும் வடியவில்லை. வடியாது. எனது தோளில் கைவைத்து அமரச் சொன்னார். எப்போதும் அனந்தர் நடுக்கத்தில் இருந்த எனக்கு அந்தத் தொடுகை ஈன்றளித்த நடுக்கம் எத்தன்மையது என்பதை இன்றளவும் அறியேன். என்னைப் பற்றி, எனது ஊர் பற்றி விசாரித்தார். எனது தோள்பை நன்றாக இருப்பதாகச் சொல்லி […]

எழுத்து

கடலாகத் துணிந்தவன்

மானசீகன் · 28.09.21

தமிழில் ‘நாவல்’ என்கிற குழந்தை பிறந்து நூறாண்டுகளைத் தாண்டிவிட்டது. விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு மொழி பேசி, ஒவ்வொரு கணத்திலும் சிந்தனையால் தன்னை உருமாற்றிக்கொண்டு, ‘இது இப்படித்தான்’ என்று வகைப்படுத்திவிட முடியாதபடி, ‘அந்தக் குழந்தை’ படிக்கட்டுகளில் ஏறியும் இறங்கியும், நதி போல் பொங்கியும், கடல் போல் கொந்தளித்தும், மாட்டுவண்டிச் சாலையாய் குறுகியும், நெடுஞ்சாலை கருப்பு வழுக்கலாய் விரிந்தும், புகைவண்டிப் பாதையாய்த் தடதடத்தும், ஆகாய விமானத்தைப் போல் காற்றில் மிதந்தும், கைகளில் சிக்கிவிட்ட மீனின் குறுகுறுப்பைப் போல் பிடிநழுவியும், காலத்தில் அமர்ந்து, காலத்தில் […]

எழுத்து

கன்னி – காலத்தில் நிலைத்த தேவ மலர்

எம்.கோபாலகிருஷ்ணன் · 28.09.21

‘மெசியாவின் காயங்கள்’ என்ற உக்கிரமான தலைப்புடன் ஜெ.பிரான்சிஸ் கிருபா தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமானது தமிழ்ப் புனைவுலகின் நற்பேறு. அதுவரையிலான தமிழ்க் கவிதையின் மொழியிலிருந்தும் கூறுகளிலிருந்தும் கிருபாவின் கவிதைகள் முற்றிலும் தனித்துவமாக அமைந்திருந்தன. கவித்துவத்தின் உச்ச கணங்களை மிக அநாயசமாக எளிய சொற்களின் வழியே அவை சாதித்திருந்தன. வேதாகமத்தின் மொழி அழகைக் கவிதைக்குள் பொருத்தியிருந்த நேர்த்தி திரும்பிப் பார்க்கச் செய்தது.  ‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ என அடுத்தடுத்து வெளியான அவரது கவிதைத் தொகுப்புகளும் அவற்றில் இடம்பெற்றிருந்த […]

எழுத்து

பெண்ணாழியில் பரலென மூழ்குதல்: ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி”

கோ.கமலக்கண்ணன் · 28.09.21

இலக்கியத்தில் படைப்பாளியின் உணர்ச்சியே ஊற்றுக்கண். அது எழுத்து ஊடகத்தின் வாயிலாகப் பல்வேறு கோணங்களில் சிந்திச் சிதறி கதாபாத்திரங்களுடைய உணர்ச்சிகளின் தொகுப்பினால் ஆன நிறமாலை ஒன்றை உருவாக்குகிறது. ஆசிரியரால் மிகுந்த கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட பகுதிகளும் நனவோடை எழுத்துமுறையில் தன்னியல்பாக எழுந்துவந்த வர்ணனைகளும் பிரித்தறியவியலாதபடி அதில் விரவியுள்ளன. வாசகரின் உணர்ச்சிகள் அகக்கண்ணாடியில் படும் படைப்புக் கிரணங்களின் உணர்ச்சிகளைப் படிந்துகொள்ள அனுமதிப்பதன் வாயிலாகவும் வாசகரின் கற்பனை ஆற்றல் காரணமாகவும் இலக்கியப் படைப்புகள் முழுமை அடைகின்றன. எனவே இலக்கியத்தில் உணர்ச்சிகள் மூன்று நிலைகளில் […]

எழுத்து

ஜெ.பிரான்சிஸ் கிருபா: பரிசுத்தத்தைத் தேடியலைந்த நவயுகப் பாணன்

விஜயராகவன் · 28.09.21

ஆகஸ்ட் 8ம் தேதி, 2008ம் ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வசந்தகுமார் அண்ணாச்சி சொன்னதால், “கன்னி” நாவலை வாங்கிச்சென்று அன்றிரவே படிக்க ஆரம்பித்தேன். ஏலான் ஆசாரியின் மரணத்தைச் சத்ராதிகள் செய்தனவா அல்லது அறிவியல் தர்க்கமுறைப்படி இதய அடைப்பால் ஏற்பட்டதா எனத் தீர்மானமாக முடிவெடுக்க முடியாதவாறு இரு பக்கங்களையும் திறந்து வைத்திருந்த எழுத்து உத்தி என்னை உள்ளீர்த்தது. அதன்பின் சித்தப்பிரமை அடைந்துள்ள பாண்டி, கடலை ஒரு பெரும் படிமமாகவும் தேவமைந்தனை ஒரு ஆட்டிடைக் கிழவனாகவும் பார்த்த விவரிப்பு, மனக்கிலேசமடைந்தவனின் […]

எழுத்து

ஆகாயத்துப் பட்சி

சுதாகர் · 28.09.21

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் எப்போதெல்லாம் நான் கவிதை குறித்து நண்பர்களுடன் உரையாட நேர்ந்திருக்கிறதோ அப்போதெல்லாம் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசாமல் இருந்ததில்லை. எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட சில கவியரங்க நிகழ்வுகளிலும் கிருபாவின் கவிதைகளையே தேர்வுசெய்து, எனது இதயத்தில் பசுமையாகப் பதிந்திருக்கும் அந்தக் கவிதைகளை இரசித்துக் கூறி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். பல சமயங்களில் இரவின் தனிமையில் கிருபாவின் கவிதைகளைப் படிக்கும் போது அன்பினால், கருணையினால், பச்சாதப உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணீர் மல்கி இருக்கிறேன். அடுத்தநாள் கிருபாவைத் தேடி அவரது நண்பர்களின் […]

எழுத்து

பிரான்சிஸ் கிருபாவின் மும்பை நகரத்து வாழ்க்கை

இறை.ச.இராசேந்திரன் · 28.09.21

எண்பதுகளின் முற்பகுதியில் மும்பையிலிருந்து ‘காரை.பிரான்சிஸ்’ என்ற பெயரில் புதுக்கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை இங்குள்ள இதழ்களில் எழுதிவந்தார். 1991ம் ஆண்டு கவிஞர் ஆறாவயல் பெரியய்யா அவர்கள் பிரான்சிஸை என் வீட்டுக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்துதான் பிரான்சிஸுக்கும் எனக்குமான நட்பு ஆரம்பமானது. அவர் பிறந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் போகும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மூன்றடைப்பு என்ற ஊருக்குக் கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்தினிபாறை. அவர் அம்மா பிறந்தது எனது ஊர்ப்பக்கம் (இறைப்புவாரி) இருக்கும் காராங்காடு. […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 3): ஷ்யாம்

ஆத்மார்த்தி · 28.09.21

19.03.1937 அன்று சென்னையில் அவதரித்த சாமுவேல் ஜோசப் என்கிற இயற்பெயரைக் கொண்ட ஷ்யாமுக்கு அந்தப் பெயரை வழங்கு பெயராக்கியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. தக்ஷிணாமூர்த்தி, சலீல் சவுத்ரி, ஆர்.டி.பர்மன், டி.ஜி.லிங்கப்பா, ராஜேஸ்வர ராவ், பெண்டியால நாகேஸ்வர ராவ், சலபதி ராவ் போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் சியாம். எம்.பி.சீனிவாசன், ஆர்.பார்த்தசாரதி, தக்ஷிணாமூர்த்தி, எஸ்.எம்.சுப்பையா, விஸ்வநாதன் ராமமூர்த்தி எனப் பல புகழ்வாய்ந்த இசையமைப்பாளர்களிடம் வயலின் கலைஞராக வேலை பார்த்த அனுபவம் மிக்கவர். முதல் படம் மாடர்ன் […]

எழுத்து

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி: மாண்டேக் சிங் அலுவாலியாவின் “Backstage”

பாலசுப்பிரமணியம் முத்துசாமி · 28.09.21

பெரும்பாலான சமயங்களில், வரலாறு நிகழும்போது, அதைச் சமூகம் உணர்ந்து கொண்டாடுவதில்லை. காலம் கடந்து பின்னோக்கிப் பார்க்கையில்தான், அது புரிபடுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நிகழ்ந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி அப்படிச் சமகாலத்தில் கொண்டாடப்படாத வரலாறு. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னால், இந்தியா உலகின் மிக வலுவான பொருளாதாரங்களுள் ஒன்றாக இருந்தது. வேளாண்மை, கைவினைத் தொழில், ஜவுளி போன்ற துறைகளில் மிக முன்னேறிய நாடாக இருந்தது.  உலகப் பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்கு 24% ஆக இருந்தது. ஆனால், பல நூறு […]

எழுத்து

தன் நீர்மை

வி.அமலன் ஸ்டேன்லி · 28.09.21

மனவிழிப்புநிலை தியான ஆசிரியருக்கான இரண்டரை ஆண்டுப் பயிற்சியில் சமூகத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம், யாவரையும் உள்ளடக்கல், யாவருக்குமான வளப் பயன்பாடு எனச் சில கூடுதல் பயிற்சிகள் வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்பட்டன. அமெரிக்காவில் இனப்பாகுபாட்டின் உச்ச இழிவுகளைப் பற்றியும் அதே போன்று இந்தியாவில் சாதி சார்ந்த கீழ்மைகளையும் அணுகுவது பற்றிய வகுப்புகள்.   தியானப் பயிற்சிக்காக வரும் மாணவர்கள் பல திறத்தவராய் இருப்பார்கள். முற்றான மெய்யறிவுத் தேடல் தாண்டி அவர்களது அன்றாட உடல், மனம் சார்ந்த அகப் புறப் பிரச்சினைகள் பெரும் தடைகளாக இருக்கக்கூடும். அவற்றுடன் […]