Category: திரைப்படக் கலை

எழுத்து

நெடுநீர், புனையின்றி நீந்துதல்: The Painted Bird (2019)

கோ.கமலக்கண்ணன் · 16.06.20

கருப்பு வெள்ளைக்குள் எல்லா நிறங்களும் நிறமின்மைகளும் ஒளிந்து கொள்கின்றன. நிறமற்ற குமிழுக்குள், தான் உடையும் கணத்திற்கும் முன் பல நிறங்களையும் பிரித்து, பிரதிபலித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற உந்தம் இருப்பதும், வளி வழியே அது மேலெழும்பிப் பறப்பதும் இயற்கையின் சாகசக் கவிதைகளுள் ஒன்று. நீளாயிரம் ஆண்டுகளாய் தங்கள் முகங்களையே மாற்றி மாற்றிப் பார்த்து சலித்துவிட்ட ஐம்பூதங்களும் புவியில் உயிர்களைப் பரப்பி நாற்களமாடி இரசித்தன. அவ்விளையாட்டின் மேம்பட்ட வடிவமாய், இன்று மானுட இனத்தின் நாடகங்களை இரசித்துக் கொண்டிருக்கின்றனவோ என்ற […]

எழுத்து

விட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் (பகுதி 2) – தமிழில்: எஸ். ஆனந்த்

எஸ்.ஆனந்த் · 16.05.20

சார்ல்ஸ் தாமஸ் சாமுவெல்ஸ் (Charles Thomas Samuels) நடத்திய நேர்காணல். சாமுவெல்ஸ்: டி சிகா, நீங்கள் சவாட்டினியுடன் இணைந்து திரைப்படங்களை உருவாக்குவது என்ற முடிவை எடுக்கக் காரணம் என்ன? டி சிகா: ‘ப்ரிகோ’ என்ற நாவலைப் படமாக்கும் திட்டத்துடன் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன் மிலான் நகரில் அவரைச் சந்தித்தபோதே அவருடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் கொண்டிருந்தேன். அவர் எழுத்து மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.  நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘The Children Are […]

எழுத்து

இராட்டினத்தின் பயணத்தொலைவு சுழியம்: எலியா கஸானின் திரையுலம்

கோ.கமலக்கண்ணன் · 14.04.20

செய்தி என்ற வடிவத்திற்கு ஒரு பண்பு உண்டு. அது ‘இந்தப் பேரிடரில் இத்தனை ஆயிரம் பேர் இறந்தார்கள்’ என்றோ ‘பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்’ என்றோ குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளும், விரைந்து அடுத்த செய்திகளுக்கும் தாவிவிடவும் செய்யும். அது உணர்வு மயமாக்குதலுக்கு அப்பாற்பட்டது. அது உண்மையின் தொகுப்பு என்பதே அது அப்படி இருந்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. மாறாக ஒரு புனைவிற்கு தடுப்பும் முடிவும் பற்றிய இடங்களை அதுவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாக்கியம் இருக்கிறது. அது […]

எழுத்து

விட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் – தமிழில்: எஸ். ஆனந்த்

எஸ்.ஆனந்த் · 14.04.20

ரோம் நகரில் 1973 ஜூலை மாதம் விட்டோரியோ டி சிகா அளித்த நேர்காணல். கார்டில்லோ: உங்களுடைய நியோ ரியலிசப் படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டவை. பிறகு வண்ணப்படங்களும் எடுத்திருக்கிறீர்கள். வண்ணத்தில் படமெடுப்பது உங்களுக்குப் பிடிக்குமா? டி சிகா: இல்லை. பார்வையாளர்கள் வண்ணத்தை விரும்பினாலும் என்னைப் பொறுத்தவரை அது கவனத்தைத் திருப்பக் கூடியது. யதார்த்தம் என்பது கருப்பு வெள்ளையுடன் அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சாம்பல் வண்ண அடர்வுகள் சார்ந்தது. வண்ணம் மேலோட்டமானது; அதன் மீது எனக்கு அதிக […]

எழுத்து

ஆஸ்கார் 2020 : சில அவதானிப்புகள்

கோ.கமலக்கண்ணன் · 24.02.20

1985-ஆம் ஆண்டு ’அமேடியஸ்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. அதை மேடையில் அறிவித்த லாரன்ஸ் ஆலிவர் அவசரத்தில் நாமினிகளைக் குறிப்பிட மறந்து விட்டிருந்தார். ஒவ்வொரு பிரிவிலும் விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அப்பிரிவில் இருக்கும் பரிந்துரைகளைக் குறிப்பிட வேண்டுமென்பது ஆஸ்காரின் மரபு. அதைச் சொல்ல விட்டு விட்டோமே, சொல்லியாக வேண்டுமே என்ற புரிதலுக்குச் சென்று மீளும் முன்னரே அமேடியஸ் குழு முண்டியடித்து மேடைக்கு வந்துவிட்டிருந்தது. இதை ஒரு தனி நபரின் தடுமாற்றம் எனக் கொள்ளலாம். வெகு சமீபத்தில் […]

எழுத்து

பாறையுண்டு பசியாறுதல் : கோபயாஷியின் ‘The Human Condition’

கோ.கமலக்கண்ணன் · 24.01.20

1 கொடுங்கோன்மை அரசுக்கென சில எளிய கணக்குகள் உண்டு. அது ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய எந்த ஒரு இன, மொழி, தேசிய உணர்வையும் மடை மாற்றி, போலி எதிரிகளை வடிவமைத்து அழிவுக்கென பயன்படுத்திக் கொள்ளும். அதை எதிர்த்து நிற்கவோ, குறைந்த பட்சம் அதனை விமர்சிக்கவோ செய்பவரை இன்னும் எத்தனையோ நுட்பம் கொண்டு கயவனென முத்திரையிட்டு பாதாளத்திற்குத் தூக்கி வீசிடும். வரலாறும் எவ்வித கருணை உணர்வுமின்றி அத்தகைய மனிதாபிமானிகளை அழித்தொழித்து விடும். ஒரு வேளை போர்ச் சமயமாக இருந்து […]

எழுத்து

பைத்தியக்கார முயல்கள்: டார்டன் சகோதரர்களின் திரையுலகம்

கோ.கமலக்கண்ணன் · 27.12.19

1999-இல் Rosetta படத்திற்காகவும் 2005-இல் The Child திரைப்படத்திற்காகவும் இருமுறை தங்கப்பனை விருது பெற்றிருக்கும் பெல்ஜியத்தின் இரட்டை இயக்குநர்களான டார்டன் சகோதரர்கள் (Jean-Pierre Dardenne, Luc Dardenne) தங்களது தனித்துவமான யதார்த்த திரைக்கதைகள் மூலம் தொடர்ந்து உலக அரங்கில் சினிமா ஆர்வலர்களின் அங்கீகாரத்தினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். பெரும்பாலான திரைக்கதைகள் தனிமையில் நிர்கதியில் உழலும் சின்ன மனங்களின் தவிப்பையும் ஆற்றாமையையுமே பேசு பொருட்களாகக் கொண்டிருக்கின்றன. கூடியிருப்பினும் வாழ்க்கையின் பிரம்மாண்டத்தின் முன் மனித சிற்றினம் வீழ்ச்சிக்குரியதே. எனினும் தனித்திருக்கும் […]

எழுத்து

முடிவிலியின் முறுவல்கள்: Shatranj Ke Khilari / The Seventh Seal

கோ.கமலக்கண்ணன் · 26.10.19

விதியின் பாதைகள் மர்மத்தின் தடங்களால் ஆனதென்பதே மெய்யறிவுத் தேடலில் பயணிக்கும் எவருக்கும் உற்சாகத்தையும் சஞ்சலத்தையும் ஒருசேர உற்பத்தி செய்கிறது, ஆர்வத்தை நீட்டிக்கிறது. மனிதன் தொடர்ந்து தன் வாழ்விற்கான பொருளைத் தேடி அலைவதற்கும் அதற்கான இறுதி இலாபமாய் எஞ்சும் வெறுமைக்கும் இடையிலான அல்லாட்டம் கருப்பொருளாய் நிலைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலாச்சார நாகரீக முன்னகர்வதாய் தோற்றம் கொள்ளும் நிலை மயக்கத்தின் துளைவழி ஒரு சுழலெடுத்து மீண்டும் அந்த அபத்தத்தின் முன்பே வந்து நிற்பதென்பது தவிப்பையும் கண்ணீரையும் தருவதுடன் கூடவே சலிப்பையும் […]

எழுத்து

அமெரிக்கத் திரைவனத்தின் ஆதி விதை: ஜான் ஃபோர்டின் திரைப்படங்கள்

கோ.கமலக்கண்ணன் · 20.09.19

திரைப்பட வரலாற்றில் இனிய முரண்கள் நிறையவே உள்ளன. உலகெங்கும் வன்மேற்கு வகைமையின் (Western Genre) பிதாமகனாக அறியப் பெற்ற ஜான் ஃபோர்டின் பல சாதனைக் குறிப்புகளுள் முதன்மையானது 4 ஆஸ்கார் விருதுகளைச் சிறந்த இயக்குநர் பிரிவிற்காகப் பெற்றவர் அவர் ஒருவர் மட்டுமே என்பது. அவை நான்குமே (The Informer, The Grapes of Wrath, How Green was my Valley & The Quiet Man ) வெஸ்டர்ன் திரைப்படங்கள் அல்ல என்பது அப்படி ஒரு அழகிய […]

எழுத்து

அபத்தங்களைத் தோலுரிக்கும் மாயக்கண்ணாடி (Black Mirror)

ப.தெய்வீகன் · 20.09.19

மூன்றாவது தடவையாக எனது பெற்றோர் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்த போது அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், சமகால சடுகுடு உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவோடு காணப்பட்டார்கள். அவர்கள் முதல் தடவை வந்திருந்த போது உருவாக்கிக் கொடுத்த முகநூலில் “லைக்” போடுவது எப்படி என்பது மாத்திரமல்லாமல் அவர்களது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது நான் பதிவேற்றம் செய்துவிடுகின்ற பயணப் படங்களுக்கு யாரெல்லம் லைக் போடுகிறார்கள் என்ற விவரங்களைச் சென்று பார்த்து அறியக் கூடிய நுட்பத்தையும் […]

எழுத்து

காலத்தின் தொடர்வேட்டன்: பி கானும் அவரது “நயநுணுக்கமிக்க பிணங்களும்”

நம்பி கிருஷ்ணன் · 17.08.19

Cadavre exquis (ஆங்கிலத்தில் Exquisite Corpse, நயநுணுக்கமிக்க பிணம்) என்று பிரெஞ்சுக்காரர்கள் அழைக்கிறார்கள் அல்லவா, அங்கு துவங்குகிறேன். சர்ரியலிஸ்டுகளே விளையாட்டுத்தனமாகத் தான் இதைத் தொடங்கி வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. எந்த விளையாட்டையும் போல் இவ்விளையாட்டிற்கும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில விதிமுறைகள் உண்டு. அவற்றின்படி சித்திரங்கள் அல்லது சொற்றொடர்களை விளையாடுபவர்கள் அடுத்தடுத்து இணைத்துக் கொண்டே செல்ல வேண்டும். பங்களிக்கையில் அதுவரையில் தொகுக்கப்பட்டிருக்கும் பங்களிப்புகளில் ஒரு பகுதியை மட்டுமே ஒருவர் பார்வையிட முடியும் போன்ற நிபந்தனைகளும் உண்டு. சைனீஸ் […]

எழுத்து

நெருஞ்சிக் கனவுகளைச் சுமக்கும் வெள்ளை முகமூடிக்காரர்கள்: மைக்கேல் ஹனகேவின் திரைப்படங்கள்

கோ.கமலக்கண்ணன் · 17.08.19

1 ஒரு வணிக இயக்குநரின் மிகச்சிறந்த திரைப்படம் என்று குறிப்பிடப்படும் ஒரு படம் எதிர்பார்த்ததைப் போலவே பல வணிக இயக்குநர்களை உருவாக்கும். அந்தத் திரைப்படத்தின் ஏறத்தாழ அப்பட்டமான மறுவார்ப்பையும் அதை விட தரம் சற்றே குறைந்த படைப்பையும் அவர்கள் எடுத்துத் தள்ளுவார்கள். இது ஒரே பொம்மையைப் பெயரை மாற்றி விற்கும் இயந்திரத்தனமான செய்கையை ஒத்தது. அதன் நோக்கம் சுய பொருளாதார முன்னேற்றம் மட்டுமே. சிலர் அதற்கென தொழில்நுட்ப வித்தைகளையும் சேர்த்திருப்பார்கள். உதாரணமாக கிறிஸ்டோபர் நோலனைப் பார்த்து இந்தியா […]