Category: பொது

எழுத்து

ஹெர்டர் (பகுதி 2) – இரா. குப்புசாமி

இரா. குப்புசாமி · 17.02.19

ஐரோப்பிய வரலாற்றை ஆழ்ந்து வாசித்தால் ஓர் உண்மை புலப்படும். அது ஜெர்மானிய மண்ணின் தனித்த வாசனை. காலம் காலமாக அது தன்னைத் தனிமைப்படுத்தியே அடையாளம் கண்டிருக்கிறது. மற்றச் சமயங்களை, அவற்றின் தெய்வங்களை ஜெர்மானிய பழங்குடித் தொன்மங்களும் அவை காட்டிய தெய்வங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்தே வந்திருக்கின்றன. சமரசம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. மேற்கிலிருந்து வந்த யூத, கிறித்துவ சமயங்களையும், கிரேக்க, உரோமானிய தத்துவங்களையும், கலாச்சாரங்களையும் எப்போதும் அது எதிர்த்தே நின்றிருக்கிறது. பல சமயங்களில் தகர்த்து அழித்திருக்கிறது. […]

எழுத்து

தொல்நிலம்

போகன் சங்கர் · 13.01.19

வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது. ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு […]

எழுத்து

சித்தாந்தவாதி எனும் உபாதை

நவீன்குமார் · 13.01.19

நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் ஒரு முக்கியப் பிரச்னையை விவாதிக்கும்போது, அதற்கான தீர்வை நோக்கி நகர முடியாமல் பல நேரங்களில் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியிலேயே நின்று விவாதிக்கிறோம். இணையம், இலக்கியச் சூழல், தொலைகாட்சி விவாதம் என எல்லாவற்றிலும் இது தான் நிலை. இதனைக் கொஞ்சம் உற்று கவனித்தால் அவற்றில் நடப்பவை எல்லாம் கருத்து மோதல்கள் அல்ல, கருத்தியல் மோதல்கள் […]

எழுத்து

ஹெர்டர் (பகுதி 1)

இரா. குப்புசாமி · 13.01.19

ஹெர்டர் (1744 – 1803) 1 ஹெர்டர் கிழக்கு பிரஸ்ஸியா நாட்டில் ஒரு சிறு நகரில் ஒரு பள்ளியாசிரியரின் மகனாக 1744ம் ஆண்டு பிறந்தார். இலத்தீன், மருத்துவம் ஆகியவற்றை விரும்பிக் கற்றாலும், இறையியலே இவரது வாழ்நாள் பணிக்கு மூலதனம் ஆனது. ஒரு கிறித்துவ பாதிரியாகவே கடைசிவரை வாழ்ந்து 1803ல் இறந்தார். இவரது பரந்த படிப்பும், ஆழ்ந்த சிந்தனையும் மொழியியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப் பல்துறைகளில் ஏராளமான நூல்களை எழுத உதவின. இவரது படைப்புகள் 33 தொகுதிகளாக […]

எழுத்து

The Gospel of Kasiar

பாதசாரி · 13.01.19

எல்லா மனிதர்களும் இயற்கையாக இறக்கிறார்களா என்பது சந்தேகமே! என்றோ மனதால் இறந்து விட்டு, உடலால் மட்டுமே நடமாடித் திரிபவர்கள் எத்தனையோ பேர். மூச்சு நிற்பதில் மட்டுமே இல்லையய்யா முழுமையான சாவு. * எழுத்தே ஒரு பாவனை. உண்மை. ஆனால் நான் இங்கே எழுதிக்கொண்டிருப்பதே என் பாவனையைக் களையும் முயற்சியாகத்தான். அது முற்றிலும் களையப்படுமானால், எனக்கு தியானப்பலன் கைகூடும். * ஆழ்நிலைத் தியானத்தில் என்ன நடக்கிறது? நினைக்க பயப்பட்டது, நினைவில் செரிக்காமல் கிடப்பது எல்லாம் நினைக்கப்படுகிறது. எல்லா நினைவுகளையும் […]

எழுத்து

கல்லிலே கண்ட கலைவண்ணம்: படங்களின் வழியே ஒரு பயணம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 13.01.19

விஜயநகரப் பேரரசு – தென்னிந்தியாவின் மாபெரும் பேரரசு. செல்வச் செழிப்பும் கலைப்பெருக்கும் படைபலமும் ஆற்றலும் கொண்ட விஜயநகரப் பேரரசின் தலைநகரம் ஹம்பி. தக்காணத்தின் மத்தியில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆந்திரத்தின் எல்லையோரத்தில் அமைந்த சிற்றூர். ஒருபுறம் பெருக்கெடுத்தோடும் துங்கபத்திரையும் சுற்றிலும் பிரமாண்டமான பாறைக் குன்றுகளும் இயற்கை அரண்களாய் அமையப் பெற்ற அழகிய ஊர். 14ம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கப்பட்டு இந்திய வரலாற்றின் சிறப்புகள் மிக்க தலைநகராய் கோலோச்சிய விஜயநககரம், 1565ம் ஆண்டில் இஸ்லாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. கலை எழில்மிக்க […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 4)

மானசீகன் · 13.01.19

‘ஸ்காலர்ஷிப்னா என்னடா? எதுக்கு தர்றாங்க?’ ‘அது அய்யருகள்லாம் சூத்திரன்னு ஒதுக்கி வச்சுட்டாங்கள்ல? அதுக்காக கவர்மெண்ட் நமக்கு காசு கொடுக்குது.’ ‘அதில்ல மாப்ள. அம்பேத்கர் அவுக ஆளுகள்ல படிக்கிறவனுகளுக்கு துட்டு தரணும்னு அரசியல் சட்டத்தில எழுதி வச்சுட்டாராம். தேவர் சண்டை போட்ருக்காப்ல. அதுக்கப்புறம்தான் நமக்கும் காசு வருது.’ ‘அப்ப தேவர்தான் ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுத்தாரா? எங்க தாத்தா வெள்ளக்காரன் சட்டம் போட்டதுன்னு சொன்னாரு.’ ‘யார் தந்ததுன்னு தெரியல. ஆனா பெரியார், அம்பேத்கர் எல்லாம் போராடிருக்காங்க.’ ‘எம்ஜிஆராத்தான் மாப்ள இருக்கும். […]

எழுத்து

ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை

ஆர்.ஸ்ரீனிவாசன் · 15.12.18

“விடுதியிலிருந்து வந்து கொண்டிருந்த ஓலங்களினால் என்னால் பத்து நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியவில்லை. மறுநாள் சர்ச்சிலிருந்து பிரார்த்தனை முடிந்து திரும்பும் பொழுது, எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தார்கள். நான் ப்ளூஸுடன் வீடு திரும்பினேன். இந்த இடத்துக்கு வந்த பிறகு முதன்முறையாக தனிமையையும் அனுதாபத்தையும் உணர்ந்தேன்.” ஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியரும், அடிமைமுறை ஒழிப்புப் போராளியுமான ஷார்லட் ஃபோர்ட்டன் (Charlotte Forten Grimké), டிசம்பர் 14 ,1862இல் இவ்வரிகளை தன்னுடைய நாட்குறிப்பில் எழுதினார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு தெற்கு கேரலைனா […]

எழுத்து

வால்டேர் (பகுதி 3)

இரா. குப்புசாமி · 15.12.18

வாழ்வில் வெற்றிபெற்ற மாமனிதர்கள் பெரும்பாலும் தனக்கு முன் வாழ்ந்த ஒருவரை முன்மாதிரியாக வைத்திருந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். மாவீரர்களில் ஜுலியஸ் சீசர் மகா அலெக்சாண்டரை முன்மாதிரியாகக் கொண்டார். அவரைப் போலவே உலகம் முழுவதையும் ஒரே குடைக் கீழ்தான் உரோமப் பேரரசின் தலைவனாக இருந்து ஆள விரும்பினார். அக்கனவில் ஓரளவு வெற்றி கண்டார். ஐரோப்பா கண்டத்தில் பெரும்பகுதி, ஆப்ரிக்க கண்டத்தில் எகிப்து போன்ற பகுதிகளை வென்றார். பின்னாளில் பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியன் இதே போன்றதொரு பெருங்கனவைக் […]

எழுத்து

ஸெர்கெய் ரஹ்க்மனினோஃப் : இசையின் கிறக்கத்தில்.. !

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் · 15.12.18

“To speak of music is to foster an illusion, a “category mistake” as logicians would put it. It is to treat music as if it was or was very close to natural language. It is to transfer semantic realities from a linguistic to a musical code. Musical elements are experienced or classified as syntax; the […]

எழுத்து

பின் தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 3)

மானசீகன் · 15.12.18

சாதிக் கலவரங்களை எம்ஜிஆர் × நம்பியார் கத்திச் சண்டையைப் போல் புரிந்து வைத்திருந்த எனக்கு அதன் கொடூரத்தை பத்து வயதிற்குள்ளாகவே உணர்கிற வாய்ப்பு வந்தது. 1989 ஆம் வருடம் நாங்கள் சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் இருந்தோம். மறவர்கள் அதிகமாகவும், இஸ்லாமியர்கள் குறைவாகவும் வாழும் பகுதி அது. கொஞ்சம் கூட வேறுபாடில்லாத நெருக்கமான உறவு மறவர்களோடு எங்களைப் போலவே அங்கிருந்த பல இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் வாய்த்திருந்தது. சின்னமனூர் – தேனி நெடுஞ்சாலையில் முதல் நிறுத்தம் காந்தி சிலைதான். அங்குதான் ஐந்து […]