எல்லா மனிதர்களும் இயற்கையாக இறக்கிறார்களா என்பது சந்தேகமே! என்றோ மனதால் இறந்து விட்டு, உடலால் மட்டுமே நடமாடித் திரிபவர்கள் எத்தனையோ பேர். மூச்சு நிற்பதில் மட்டுமே இல்லையய்யா முழுமை
*
எழுத்தே ஒரு பாவனை. உண்மை. ஆனால் நான் இங்கே எழுதிக்கொண்டிருப்பதே என் பாவனையைக் களையும் முயற்சியாகத்
*
ஆழ்நிலைத் தியானத்தில் என்ன நடக்கிறது? நினைக்க பயப்
*
மரணத்தின் மூலம் கூட வாழ்க்கையிலிருந்து தப்ப முடியாது சாமி! மரணத்தை எதிர்கொள்ள தைரியம் உள்ள மனமே வாழவும் லாயக்கு. உடலிலிருந்து உயிரைப் பிரிக்கும் நிமிடத் தவிப்பில் மனம் படும்பாட்டுக்கு யாராலும் இசை அமைக்க முடியாதய்யா. என்ன செய்ய? மரணத்தை மடியில் போட்டு, ஒரு பூனையை வளர்ப்பது மாதிரி வளர்த்துக் கொண்டு, கூடவே வாழ்ந்து போவோமே!
*
நல்லவனாக காட்டிக் கொள்வதைக் காட்டிலும் மிகச் சுலப
*
உயிர் தானே விரும்பினால் ஒழிய உருவம் களைந்து வீசி எறிந்து விட்டுப் போகாது போல. எப்படியோ என் மரணத்துக்கும் கூட நான் பொறுப்பேற்க வேண்டியதில்லை. எனில் நானே சுதந்திர
*
மரபணுக்
*
எங்கும் எப்போதும் எவருக்கும் ‘உண்மை’ கேடயமாகத் தான் இருக்கும். வாள் ஆக இருக்காது.
*
அலைகள் அடங்குவதில்லை. கண்ணில் படாதபோது, காற்றில் சுருண்டு ஒளிந்திருக்கலாம். மேலும் மேலும் என்றுமே மனதில் யூக அலைகள்
*
ஏதோ ஒரு கணக்கில்
*
இந்த எழுத்தில் நீங்கள் லயித்துக் கொண்டிருக்கையில், நீங்களும்
*
காலத்தைக் கடிகாரத்தில் பார்ப்பது, கல்லில் கடவுளைக் காண்பது போலத்
*
காலப்பிரமை சுமந்தலையும் இறவா எண்ணப் பேய் நான்.
*
நடுநடுங்கும் இச்சுடரை விட்டு விடு காற்றே!
*
இந்தக் குரங்காட்டி அவ்வப்போது குரங்கை மரத்திலேற விடலாம். அப்படியெல்லாம் அது ஓடிவிடாது,
*
என் அகந்தையோடு போராடவே எனக்கு நேரமில்லை. இதில் உன் அகந்தையை வேறு நீட்டுகிறாய்!
*
தன்வினை, திரள்வினை, தீவினை, செய்வினை, செயப்பாட்டுவினை அனைத்தையும் விட வலியது மனவினை
*
எந்த ஒரு விஷயத்தையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதில் என்ன இருக்
*
நிம்மதி வேறு அமைதி வேறு. நிம்மதிக்குள் ஒரு நோக்கம் கண் சிமிட்டிக்
*
உலகம் பிரமாண்டமானதோர் காத்திருப்போர் கூடம்.
*
ஆளுயர நிலைக்கண்ணாடியில் தோன்றிய என் பிம்பத்தை ஊடுருவிப் பூச்சு உதிரக் கடந்தேன். வெளியே எல்லையற்று மலர்ந்தது என் நறுமண மரணம்
*
அம்பலம் ஏறவேண்டாம் ஏழை சொல்; அடிபடாமல் பிழைத்துப் போனால் சரி.
*
பற்று நீங்கிப் போனால் உயிர் வேறு பிண்டமேறித் தொடராது. அண்டத்தில் கலந்துவிடும் என்பது கிழக்கின் அகநூல் நம்பிக்கை. மயிரிழையேனும் ஒட்டாமல் பற்று விடுமா?
*
விருப்பமின்றியே ஓரொரு முறையும் திரும்பிப் போகும் அலை நான்.
*
அமைதியிடம் கோபித்துக்
*
பசியாறியவுடன் வாழ்வும் ஆறித்
*
எல்லோருக்கு
*
காற்றில் கண்ணறியாமல் கலந்தாடுகிறது மண். ஏன், பஞ்ச பூதத்
*
இந்தத் தற்காலிகப் பிரிவுகள், நிரந்தரப் பிரிவைத் தாங்கிக் கொள்வதற்கான பயிற்சிகள் என ஓரொரு முறையும் எனைச் சமாதானப்
*
என் இறுதி வாக்கியத்தில் முற்றுப்புள்ளியாக இந்த பூமி உருண்டையைத் தூக்கி வைக்கும்படிக்கு ஒரு வரி தா பேரியற்கையே!

