காந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்
ஒருமுறை காந்தியப் பொருளாதாரம் பற்றிய உரையாடலில், நண்பர்களில் ஒருவர், “அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராதுங்க.. இன்னிக்கு எவன் உக்காந்து நூல் நூத்துகிட்டு இருக்கப் போறான்”, என்றார். இது வழக்கமாகக் கேள்விப்படும் ஒரு வாதம்தான்.. நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. மாறாக, இன்னொரு கேள்வி கேட்டேன். ‘இந்தியாவின் மிகப்பெரும் உணவு வணிக நிறுவனம் எது?’ நண்பர்கள், ‘ஐடிசி, ப்ரிட்டானியா, நெஸ்ட்லே…’ எனப் பல பதில்களைச் சொன்னார்கள். நான் சொன்னேன், “இல்லை. இந்தியாவின் மிகப் பெரும் உணவு வணிக நிறுவனம், […]
