சுஜாதா:
ஏதோ பள்ளி ஆண்டு விடுமுறையைப் போல மாதக் கணக்கில் வீட்டிலேயே இருந்து
முதலாண்டுப் புகைப்படங்
விழுப்புரத்தில் இருந்த சந்திரா கலை அறிவியல் கல்லூரியில் உடற்செயலியல் வகுப்பெடுக்க ஆசிரியர் தேவை என்று சித்ரா சொன்னாள். கெஸ்ட் லெக்சரர். அங்கு சென்று ரெசமே தரலாம் என்று யோசித்தேன். ராஜேஷ் சொன்ன டேட்டா என்ட்ரி ஜாபுக்கு இது எவ்வளவோ தேவலை.
இடையிடையே சாரல் போல் தீண்டிச் சென்றன அப்புவின் நினைவுகள். இல்லை அவனைத்
அப்புவிடம் பேசுவதே இல்லை. தயக்கமா திமிரா? இரண்டும் இல்லை. அச்சமா? அவன் மீதான உணர்வுகள் மரத்துவிட்டனவா? அவனும் என்னுடன் பேசுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எப்போது பேசினாலும் நறுக்கென்று பேசிவிட்டு வைத்துவிடுகிறான். ஏதோ கஸ்டமர் கேர் சர்வீஸ் போல நானே மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டியதாக இருந்தது.
தாஹிராவை வீட்டுச் சிறை வைத்து
பிரவீண் முரட்டுத்தன
சுஷ்மிக்குச் சம்மந்தமே இல்லாமல் வந்து சேர்ந்தது கெடுவினை. இல்லாவிடில் அவர்
என்னை ராஜேஷும் அம்மாவும் சேர்ந்து பூட்டி வைத்தால் என்னால் என்ன செய்துவிட முடியும். தூக்கு மாட்டி உயிரை விடுவேனா. அப்புவின் பெயரை எழுதி அந்தத் தாளைக் காபியில் கலக்கி அருந்துவேனா. ஒத்திகை செய்து சினிமாவில் நிகழும் காதல்
கல்பனாவிடம் பேசியபோது வினோதினிக்கும் சம்பத்துக்கும் இடையே இருக்கும் நெருக்கம் பற்றிச் சொன்னாள். சம்பத்தை நன்கு அறிந்தவள் என்ற முறையில் அவர்களிடையே வெறும் காமம் மட்டும்
என் காதலும் கண்ணீரைத்
சில நாள் முன்பு செண்பகத்தோடு பேசினேன். அவள் ஏதோ மெடிக்கல் கோடிங் அலுவலகத்தில் சேரப்போவதாகச் சொன்னாள். இப்போதும் குண்டாவதற்கென அன்றாடம் மாத்திரை எடுத்துக்கொள்கிறாளாம். ‘நீ ரொம்ப யோசிச்சி ஆற்றலச் செலவிடாம இரு. தன்னால குண்டாகிடுவ’ என்றேன்.
ராபினிடம் பேசினேன். அவன் ஒருவன் மட்டும்
‘சுஷ்மி எப்டிடா இருக்கா?’ அந்தக் கேள்வியைத் தவிர்க்க முடிய
‘சி.எம்.சி.க்குப் பிறகு அவளோட சிந்தனையும் உடம்பும் தெம்போட இருக்க மாதிரி இருக்கு. கொஞ்ச கொஞ்சம் கஷ்டப்பட்றா. ஓவர் ஆல் லாட் பெட்டர். உனக்கு எப்டி ப் போகுது?’ அதற்கு மேல் அந்தப் பகுதியில் உரையாடலை நீட்டிக்க அவன் விரும்ப
‘ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. காலேஜ்ல இருந்த வரைக்கும் அதோட அருமை புரியல. முடிஞ்சதும் இன்னம் கொஞ்ச நாள் அந்த லைப் வேணும்னு அடிக்கடி தோணுது.’
‘தோணும் தோணும்’ பொருள் கூர்மையுடன் சிரித்
’அந்த இம்ச இல்லாம இருக்குமா? நானாதான் அதையும் இதயும் சொல்லி தவிர்த்திட்டு வரேன். அப்பா மட்டும்
‘நல்ல விசயம்
‘செம்மடா. கங்கிராட்ஸ்.’ அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. மெளன
‘அவன் என்ன பண்றான். அப்டியே செல மாதிரி கெடக்குறான். அவனுக்குள்ள ஒரே பதற்றம் சுஜா. வெளிய பெருசா காட்டிக்கிறது இல்ல. இருக்காதா பின்ன? டாடா சுமோ எடுத்துட்டு போய் தாஹிராவ தூக்கிடலாம்னு சொன்னோம். வேண்டாங்கிறான்.’ சிரித்
‘ஏன் வேலைக்குப் போறதுக்கு என்னா அவனுக்கு?’
’தாஹிரா நெனப்பு
‘பைத்தியக்காரன்.’
‘நீ வேணும்னா பேசிப் பாரேன்.’
‘எனக்கெதுக்கு வம்பு? நான் சொன்னா மட்டும் உன் ஃபிரெண்டு கேட்டுட்டு
‘அதுவும் சரிதான்.’
“கண்ணெல்லாம் கருவளையமா இருக்கு. வேலைக்குப் போற மாதிரி ரூம்ல வந்து கெடக்குறான். படம் பாக்குறான். பொழுத ஒட்டிட்டு ரெண்டு நாளைக்கு ஒரு தடவ
ராபினிடம் பேசியதில் இருந்தே மனம் நிலைகொள்ள
நெடுநேரம் மனம் கொள்ளாமல் அப்புவை அழைத்தேன். போனை எடுக்க
அன்றிரவு விறுவிறுவென விண்ணப்பத்தை எழுதி முடித்து மடித்து வைத்தேன். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து புறப்பட்டாக வேண்டும். அம்மாவிடம் சொன்னேன். சாதம் ஆக்கி உருளைக் கிழங்கு வறுவல் செய்து தருவதாகச் சொன்னாள். அப்போதும் என்னிடம் புது மாப்பிள்ளை பற்றிய பேச்சு வந்தது. ஜெயங்கொண்டத்தில் ஒரு முந்திரிக் காடு உண்டாம். டிகிரி படித்தவர் என்றார்கள். இல்லாத ஒரு காரணத்தைத் தேற்றியெடுத்து சொல்லிச் சொல்லி திருமணத்தைத் தள்ளிப் போட்டேன்.
இதெல்லாம் எதற்காக? ஏதோ ஒரு அற்ப நம்பிக்கை என் நெஞ்சின் ஓரம் ஒட்டிக் கிடந்தது. அப்பு கண்ணிமைத்தால் போதும், எல்லாம் தலைகீழாகிவிடும். அப்படியா என்ன? பத்துப் பேர் இருக்கும் வீட்டில் ஒரு ஓட்டாவது எனக்குச் சாதக
எனக்கு முந்திரிக் காடு முக அழகு படிப்பு என எதுவும் பொருட்டில்லை. மனசு குழம்பிக் கிடக்கிறதே. அந்தக் குழப்பத்துடனே ஏன் தண்டவாளத்தில் தலைவைக்க வேண்டும். அன்றும் கறாராக மறுத்தபோது அம்மா ஒப்பாரி வைத்தாள். அண்ணன் குற்றம் சாட்டினான். இதெல்லாம் இப்போது தினசரி நிகழ்வாகி
‘தோ பாருடா. என் பொண்ணு கண்ணு முன்னாடிதான இருக்கா. நீயும் உன் அம்மாவும் பயந்த மாதிரி தப்பு பண்றவளா இருந்தா எப்பவோ ஓடிப் போயிருப்பா. பேசாம அவங்கவங்க வேலையப் பாருங்க. அவளா தோணும்போது கல்யாணத்துக்கு ஒப்புவா.’ அப்பாவின் கூற்றில் மனத்தாங்கலோடு என் மீதான மறைமுக அழுத்தமும் இருந்தது. அவர் குறிப்புணர்த்தியதில் பிழையில்லை. என்றைக்காயினும் வேறோர் இல்லம் சென்றாக வேண்டியவள்தானே நான்.
அறைக்குள் வந்ததும் ஒரு சிறு நிம்மதி. தனிமை
*****
ஏழுமணிக்கெல்லாம் விழுப்புரம் போயாக வேண்டும். ஆறு மணிக்கு
சித்ரா பஸ்ஸ்டாண்டில் இருந்து கல்லூரிக்கு என்னை அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருந்தாள். ஏதோ சம்பளம் வரும். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் போனால் போதும். பணத்தில் என்ன இருக்
தலை குளித்தேன். பச்சை நிறத்தில் பிங்க் தெளித்த ஓரம் கொண்ட வாயல் சேலை அணிந்தேன். கழுத்தெலும்பு கிடைமட்டக் கோடாகத் தெரிந்தது. குறைவான முகச் சுன்னம் எளிமை
வாய்விட்டு ‘செருப்பு.. உன்ன யார் கேட்டா இப்ப?’ என்றேன். மனம் காரணமின்றி இனிமை
காலையில் புறப்பட்டபோது தியாகு அண்ணன் ‘வாம்மா. நான் விழுப்புரம்
‘அண்ணே. நீ பிசியா இருப்ப.. உன் வேலையப் பாருண்ணே. நான் பஸ்ல போயிக்கிறேன்.’
‘அட நீ வேற. நானும் அங்க
‘சரிண்ணா. எனக்கும் நேரம் ஆயிடுச்சி. பஸ் ஸ்டாப் கிட்ட விட்ரு. போயிக்கிறேன்.’ மதிய உணவைக் கட்டுகையில் அம்மா இட்லி
ஏழு மணிக்கு முன்பாகவே அண்ணன் என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி
தெருவோரம் கிளிக் கூண்டுகளோடு நின்றவன் அப் பறவைகளைப் பேரம் பேசினான். விற்கப் போகிறான். விற்பதால் வரும் பணம் அவனுக்கு உணவாகப் போகிறது. தான் வளர்த்த பறவை
‘நீ கெளம்புண்ணே’ என்றேன்.
‘இருக்கட்டும்’ என்றான். கிளியின் குரல் பரிதாபமாகக் கேட்டது.
வாழ்க்கைச் சக்கரத்தில் மயிர்போல் சிக்கிய மனத்தில் சிந்தனைகள் தடுமாறி நின்றன. அப்புவோடு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்ற நாள் நினைவுக்கு வந்தது. என்னென்ன இம்சை தந்தான். அழகன். கவிஞன். காதல் என்பது பூவா தலையா விளையாட்டு என்று ஒருமுறை சொன்னான். இதெல்லாம் அவனுக்கு யார் சொல்லித் தந்தது? அன்று அவனை ஏன் என்னால் திருப்பி அனுப்ப முடிய
அதே நேரம் சரியாக என் கண் முன் ஒரு திருச்சி பேருந்து நின்றது. தேங்கிய நீரை மேலே பீய்ச்சியடிப்பது போல வந்து நிதான
மீண்டும் அண்ணனைப் பார்த்து ‘நீ போண்ணே. நான் வெயிட் பண்ணிப் போறேன்’ என்றேன். அவன் என் அகச் சிந்தனைகளைக் கண்காணிப்பது போல அசெளகரிய
அண்ணன் நகர்வதாய்த் தெரிய
என்னை உளவு பார்க்கிறார்கள். கிளியைத் தானியமும் விதைகளும் போட்டு வளர்த்தாயிற்று. சேதாரம் இல்லாமல் யாருக்கேனும் விற்க வேண்டுமே. அவ்வளவு
‘சரிண்ணா, நான் அடுத்த வாரத்திலேர்ந்து வேலைக்குப் போய்டுவேன். அப்ப தெனமும் இப்டி என்ன கொண்டுவந்து விட்டுட்டு
’பரவால்ல. வெயிட் பண்றேம்மா’ என்று ஒரே சொல்லில் வாயடைத்
ஐந்து நிமிடத்தில் சித்ரா வந்து சேர்ந்தாள். பிறகே புறப்
சித்ராவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என நினைவு வந்ததும் அவள் முகத்தில் பரிதாபக்
’என்னடி அண்ணன் என்னா சொல்றாரு?’ எனக் கேட்டாள்.
‘அவருக்கென்ன’ சோர்வைக் காட்டிக் கொடுத்தது குரல்.
‘ஏன்டி ஒருமாதிரி பேசுற. உடம்பேதும் சரியில்லையா?’
‘ஆமாம்டி. திடீர்னு வயிறு வலிக்குது. நாளைக்கு வந்து உங்க காலேஜ் மேனேஜ்மெண்ட பாக்கட்டுமா? ஏதும் கோவிச்சுக்குவாங்களா? நீ கொஞ்சம் எனக்காகப் பேசுறியா?’ பற்களை நறநறவெனக் கடித்தேன். கண்களைச் சுருக்கினேன்.
‘அட இது ஒரு பிரச்சனையா? நீ வீட்டுக்குப் போடி. அவனுங்க கெடக்குறானுங்க. குறைஞ்ச சம்பளத்துக்கு அடிமை சிக்குமான்னு உக்காந்திருக்கானுங்க. நீயெல்லாம் லட்டு மாதிரி அவனுங்
’இல்லடி அதெல்லாம் வேணாம். பஸ் ஏறினா போதும் தியாகதுர்கத்துல அண்ணனே வந்து பிக்கப் பண்ணிக்கு
’குடுத்து வச்சவடி ஏத்திவிட ஒரு அண்ணன். இறக்கிவிட இன்னோரு அண்ணன். ஸ்பேருக்கு மூணு பேர்.’ அவள் மட்டும் பேருந்து ஏறினாள்.
அவள் நகர்ந்ததும் தந்திர ரேகைகள் முகத்தில் படர்ந்தன. எங்கிருந்து உருவானது இந்தப் பொய். திருச்சியில் இருந்து
என்முன் இப்போது இரண்டு பாதைகள். எப்போதும் எனக்கென வழங்கப்பட்டவற்றையே ஏற்று வாழ்கிறேன். சுயமாகத் தேர்ந்தெடுத்ததே இல்லை. நான் வேண்டிய எதற்காகவும் முழுமனத்துடன் போராட
முந்தைய இனிய பயணங்
இறங்கும்வரை போன் செய்யக்கூடாது. அழைத்தால் வேண்டுமென்றே தப்பி ஓடுவான். அவனுக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும்.
*****
சத்திரம். இறங்கியதும் நீர்ப்புட்டியை எடுத்து முகம் கழுவினேன். ஹேண்ட்பேகின் சிறிய கண்ணாடியில் முகத்தைக் கோணித் திருப்பி அவசர
‘தோ போய்ட்டு
’அப்ப சுஷ்மிய பாக்குறத பத்தி சொல்லவே இல்ல. இரு இரு அவகிட்ட போட்டுவிட்றேன்.’
‘நான் போர் அடிக்கிற விசயங்கள மட்டும்தான சொன்னேன். சுஷ்மிய பாக்குறது எப்டி அதுல வரும்?’ சமாளித்து
‘டேய் டேய் இந்த ரோமியோஸ் எல்லாரும் எங்கேர்ந்துடா இப்டி சட்டு சட்டுன்னு அடிச்சிப் பேசக் கத்துக்கிட்டீங்க. அப்பு எங்க இருக்கான்?’
‘என் கூடதான் ரூம்ல.’
‘நான் சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல ரம்பா ஊர்வசி தியேட்டர் பக்கம் நிக்கிறேன். உங்களப் பாக்கணும். நான் வந்தத அப்புகிட்ட சொல்லிடாத. சர்ப்ரைஸ்.’
‘என்ன சொல்ற? திடீர்னு.’
‘அரியலூர் வரைக்கும் ஒரு வேலையா வந்தேன். அந்த வேல நடக்கல. அதான் திருச்சி வரை வந்து உங்கள பாத்துட்டுப் போலாமேன்னு’ என்றேன். பொய்கள் எளிதாகவும் சரள
’என்னைப் பாக்கவா? சரி நம்பிட்டேன்’ சிரித்
அவன் அறையிருந்த திசையை நோக்கி உத்தேச
‘சுஷ்மி எப்டி இருக்கா?’ மீண்டும் அதே கேள்வி தன்னிச்சையாக வெளிவந்தது.
ராபின் முகத்தில் சுஷ்மியின் சாயல் தெரிந்தது. தன்னை இவன் முகத்தில் ஒட்ட வைத்து
‘நல்லா இருக்கா. அதான் சொன்னனே.’
’ம்..? அப்பறம்’ விழியில் கேள்வியோடு நின்றவனை ‘வா போகலாம்’ என்றேன். ’நான் ரொம்ப குண்டாயிட்டனாடா?’
‘என்ன உண்டாயிட்டியா!’ வழக்கம் போல் மட்டி ஜோக்கு சொன்னான். கல்லூரி ஞாபகம் வந்தது. அவனைத் திட்டத் தோன்ற
‘சரி உங்க ரூமக் காட்டு.’
‘பேசில்லர் ரூமுக்கா.. வேணாமே’ என்றான்.
’அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. இனி திருச்சில எனக்குத் தெரிஞ்ச ஒரே இடம் இதுதான். வேற போக்கிடம் இல்ல. ஜஸ்ட் அப்புவ பாத்து கொஞ்ச நேரம் பேசிட்டுப் போறேன்.’ அப்போதும் புன்னகைத்
ஆள் அகலத்துக்கு அளவெடுத்ததைப் போலக் குறுகிய படிகள். முதல் ஆண்டு மாணவியாக இருந்தபோது எளிதாக நடந்திருப்பேன். இப்போது நிதான
‘டேய் என்னடா பேந்த பேந்த முழிக்கிற?’ உள்ளிருந்து பேசிய அப்புவின் குரலைக் கேட்கையில் ஏலியனைப் போல் இருந்தது.
அந்நியன் ஒருவனைக் காணவா இவ்வளவு தூரம் வந்தோம். எனக்குள் பதற்றம் எழுந்தது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம்
‘உன்னைத் தேடி ஒருத்தங்க வந்திருக்காங்க’ என்றான் ராபின். சொல்லிவிட்டானா!
‘யாரு அது?’ கேட்டுக்
படியிறங்கி ஓடிவிடலாமா?
மூச்சை இழுத்துப் பிடித்தபடி பாய்ந்தேன். அவன் வெளியே வருவதற்குள் அவன் முன்னால் குதித்தேன். லுங்கியும் பனியனு
”என்னைப் பார்த்ததும் முகம் திருப்பப் போகிறான்!” மைக்ரோ நொடியில் சிறுசிறு துணுக்குறல்கள் உண்டாகின. ஆனால் அவன் அப்படி ஏதும் செய்ய
‘ஏய் சுஜி’ விழி இயல்பாக விரிந்தது. “சுஜி”யில் இருந்த நீட்சியும் அழுத்தமும் எனக்கு மகிழ்ச்சி அளித்தன. ‘என்னதிது இன்ப அதிர்ச்சிலாம் கொடுக்கிற!’ என்னைச் சுஜி என்றழைக்கையில் எல்லாம் மனத்தில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இயல்பாக அழைப்பதாகத் தோன்றும். பாவனையுடன் பேசும் சமயங்
அப்பாடா என்றிருந்தது. இது எனக்கான நாளேதான்.
‘வா வா வா உக்காரு’ என்றான். ‘என்ன சாப்பிட்ற ஜூஸ் பன்னீர் சோடா.. இல்ல பொவாண்டோ
சட்டை அணியப் போனவனிடம் ராபின் ‘நீ பேசிட்டிரு மச்சி. நான் வாங்கிட்டு வரேன்’ என்றான். ’உனக்கேதும் வேணுமா?’
அப்பு யோசித்து ‘டைரி மில்க் பெரிய பேக் ஒண்ணு’ என்று விழி சுருக்கிச் சிரித்
’பிரவீண் எங்க?’ அறையைச் சுற்றி நோட்டமிட்டபடி கேட்டேன். சுவரில் கிழிந்து ஒட்டுப் போட்ட அர்னால்ட் இருந்தார். பக்கத்தில் கரண்ட் அடுப்பு. அதற்கும் பக்கத்தில் புஜபலம் காட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டிய பெரிய பெரிய டப்பாக்கள். பகவத் கீதை புத்தகம்.
‘அதுதான் ஆன்மீக அர்னால்டுடைய செல்ஃப்’ என்றான் அப்பு.
‘அவர் நம்ம காலேஜ்ல மாஸ்டர்ஸ் டிக்ரி ஆத்தப் போறார்’ என்று சொல்லியபடி படியில் இறங்கினான் ராபின். ‘அடுத்த மாதம் அட்மிசன்.’ ஆமாம். நினைவுக்கு வந்தது. அப்ப போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பது யார்?
‘அவன் என்கூட சரியா பேசுறதெல்லாம் இல்ல. நான் இப்டி உக்காந்திருந்தா அவன் அப்டி போவான். அந்தக் காலத்துல மாமியார் மருமகன் முன்னாடி திரும்பிக்குவாங்கல்ல அந்த மாதிரி.’ உதடு பிதுக்கிச் சொன்னான்.
புன்னகைத்தேன். ராபின் வெளியே சென்ற பின்னும் என்னால் இயல்பாக முடிய
எப்படி எதை ஆரம்பிப்பது என்று தெரியாமல் கேவல
தேவையில்லாமல் வளவளவென்று பேசினான். அவன் பேச்சை முழுமை
‘என்னடா கேட்ட?’
‘தெரில.. நேரத்த ஓட்டணும்ல.’ ஒன்றுக்கொன்று ஒத்திசையாமல் பேசினான்.
‘டேய் வாய மூட்றா ப்ளீஸ்.’
‘சரி’ என்றான். டிராயரில் இருந்த சாக்லெட்டை ஒரு கடி கடித்
‘ம்.. ஜாலியா இருக்க?’
‘உண்மைய சொல்லணும்னா கஷ்டத்துல
எனக்கு அந்தத் திருத்தம் பிடிக்க
அவன் லொட லொடவென்று பேசியதும் அப்புவின் அந்நியத் தன்மை மறைந்தது. ’இந்த தேவதாஸ் இருக்கானே அவன் ஒரு தேவையில்லாத தாஸ். நாய்க்குக் காதலி பேர வச்சி யார கேவலப்படுத்துறான் நாயையா இல்ல காதலியையா?’
‘அய்யோ விட்றா சாமி.’
‘தேவதாஸ் படம்
என்னிடம் நீட்டவே ‘வேணாம்’ என்றேன்.
‘சிலப்பதிகாரத்த அப்டியே சுட்டானுங்க. இங்க திருட்டுப் பழி விழுந்து சாவான் கோவலன். அங்க அவன் குடிச்சே சாவான். தன் வதைக்கும் ஒரு காவிய மரியாத இருக்கு பாரேன். சிலப்பதிகாரம் மொழியாலயும் கற்பனையாலையும் உயர்வா தெரியுது. ஆனா தேவதாஸ் கதைல இருக்க ஒரு சோகம் இதுல இல்ல. ரெண்டுமே முக்கோணக் காதல் கதை..’ என்றவன் சட்டென நாவைக் கடித்து அமைதியானான்.
‘அவ வீட்ல என்ன சொல்றாங்க?’
‘என்ன சொல்லப் போறாங்க. வாரம் ஒரு தடவ அவங்க அம்மா கிட்டேர்ந்து எனக்கொரு போன் வரும்.’
‘என்ன நல விசாரிப்புகளா?’
‘ஆமா குற்றியலுகரமா சொல்லி கண்டபடி என்னைத் திட்டுவாங்க.’ புரியாமல் விழித்தேன். ‘அதான் கெட்ட கெட்ட வார்த்தைகளா பறக்கும். எல்லாம் தீந்த உடன வச்சிடுவாங்க. அவளோட பெரிய தம்பி ஒண்ணு ரெண்டு தடவ பேசினான். கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி பேசுனான். ஆனா எனக்குச் சிரிப்பா வரும். சின்னப் பயதான போகப் போக பயமுறுத்துற மாதிரி மிரட்டக் கத்துக்கு
‘ஏன்டா உனக்கு இந்த நிலைமை? சரி அதப் பத்தி பேசவே வேணாம்.’
நீண்ட மெளனம் இடையே பாறாங்கல்லாய்க் கிடந்தது. எனக்கும் வேறு எதைப் பற்றிப் பேசுவதென்று தெரிய
நான் மட்டும் ஒழுங்கா? அப்படியொரு நசிந்த நூலைப் பிடித்து
‘அதுவும் சரிதான். என் வலி என்னோட போகட்டும். நீ சொல்லு. மாப்பிள்ள பார்க்கும் படலம் இந்நேரம் முடிஞ்சிருக்கணுமே?’
‘என்னடா எல்லாரும் இதையே கேக்குறீங்க?’ தலையில் கைவைத்தேன். ‘ஆமாம். ஏறத்தாழ.’
‘உனக்கென்ன குறைச்சல் கண்ணாடிக்குப் பதில் லென்ஸ் போட்ட உடன ஒரு மாடர்ன் களை வந்துடிச்சி. புடவைல டிரெடிசனல் அழகுல இன்னும் பல படிகள் மேல ஏறிட்ட. யு டிசர்வ் எவ்ரிதிங்க்!’
மனம் சிறகடித்தது. எல்லாம் உனக்காகத்தான டா! சொல்லிவிட வேண்டியது
‘எனக்குக் கூடத்

‘விரக்தியா பேசாதடா’ சடுதியில் என் சலிப்பு வெளிப்
‘ஏன் மாப்பிள்ள புடிக்கலயா?’
எப்படிடா பிடிக்கும் மடையா. இந்தக் கேள்வி உன் வாயில் வருவது அபத்தம் கூட இல்லை அருவருப்பு ஆபாசம். ஒன்றும் அறியாதவன் போல் எத்தனை இயல்பாக இருக்
‘புடிக்கல. முன்னாடி பேசினது தட்டிப் போச்சி. இப்ப ஜெயங்கொண்டான வச்சி நெதம் ஒரு சண்ட. எனக்கு அவன் மூஞ்சிய பாக்க கூடத் தோணல.’
‘நமக்குப் பிடிக்காதத நம்மள செய்ய வைக்கறதுக்குப் பேர்தான் குடும்பம்! எப்டி தத்துவம்..’ மீண்டும் சிரித்
‘வயித்தெரிச்சல கொட்டிக்காதடா.’
’ஏய் லூசு. எப்டியும் கல்யாணம் பண்ணிதான ஆகணும்?’
‘இப்ப நீ தாஹிரா கெடக்கலன்னா இன்னொருத்தியக் கல்யாணம் பண்ணுவியா?’ அவன் வாயை அடைக்க இப்படியொரு கேள்வியைக் கேட்டேன். கேட்ட பிறகு நாமே ஏன் அவர்கள் இருவரையும் சேர்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது.
‘என் கதையே வேற. ரெண்டு பேரும் சேரணும்னு போராடிக்கிட்டு இருக்கோம். இதுல வெற்றி தோல்வி ரெண்டுக்குமே வாய்ப்பு இருக்கு. ஏறத்தாழ ரெண்டு மாசமா தோல்விய நோக்கி
‘ஒருவேள என்ன ஒருவேள..’ வாய்ச் சொல் தடித்தது. அடக்கிக்
’அத விடேன். அப்பறம் சொல்றேன்.’ தவிர்த்
வேண்டுமென்றே அவன் உளவியலைக் கையகப்படுத்த வினோவின் கதையைச் சொன்னேன். ‘சம்பத்துக்கும் வினோதினிக்கும் மிங்கிள் ஆயிடிச்சாமே’ என்றேன். அதைச் சொல்வதற்கு முன் வெட்க
‘என்ன மீன் பண்ற? லவ்வா?’
‘அதெல்லாம் தெரியாது. எல்லாம் முடிஞ்சிடுச்சாம்.’
’ச்சீ நாயே.. ஏதாச்சும் உளறாத. யார் சொன்னா?’
கல்பனாவைச் சொல்ல மனம் வரவில்லை. மெளன
’அவன் அடிக்கடி அவளோட பேசுனது எனக்கே தெரியும். செகண்ட் இயர்லேர்ந்தே நெருக்கமா பேசிட்டு
‘ச்சீ மானங் கெட்டவனே. ஒரு கெஸ்ஸிங்
‘இப்ப நீயும் நானும்
’அட போடா லூசு. நீயும் நானும்
’நான் லூசெல்லாம் இல்ல. நான் காதலன்’ என்றான். ’அட ஆமா ரெண்டும் ஒண்ணுதானே!’ என்று சொல்லிச் சிரித்
சட்டென விழியறியாக் கோட்டைத் தாண்டினேன். ‘அப்டின்னா என்னைக் காதலியேன்’ என்றேன். விளையாட்டாகச் சொல்வதைப் போல முகத்தை வைத்துக்
உடலை ஒருமுறை சாப்ளினைப் போல் குலுக்கி பல் தெரியச் சிரித்
‘என்ன சும்மா இரேன். டிரெஸ்ஸோட
திருட்டு முழி முழித்
மீன் தூண்டிலைக் கடிக்கிறது. இழுத்துப் போட வேண்டும்.
‘சரி விடு.. நீ வினோ சம்பத் பத்தி சொல்லு.’ தந்திரக்கார மீன். நழுவுகிறது.
’வயசுப் பசி இல்லாமயா போயிடும். வினோவுக்கும் பெருசா ஃபிரெண்ட்ஸ் இல்லாமப் போயிடுச்சி. அவளே விலகிட்டா. அவங்க ரெண்டு பேரும் தனிமைல சந்திச்சிக்கிட்டா இதெல்லாம் ஆகாம எப்டி இருக்கும்..’ அந்தத் தொனியைப் பயன்படுத்தி எங்கள் தனிமையைப் பெருமூச்சால் அடிக்கோடிட்டேன்.
அவன் பதிலே சொல்ல
‘இப்ப நாம தனியா இருக்கோம். உனக்குக் காய்ச்சல்னா நான் பாராசிடமால் ஆக மாட்டேனா’ என்றேன். அளவு மீறிவிட்டோம் என்ற எண்ணத்தில் ‘ஒரு பேச்சுக்குதான்டா சொன்னேன். பயந்துடாத’ என்றேன்.
இப்போது என்னை என்ன நினைப்பான். சொல்லிவிட்ட பிறகு மனக்கண்ணில் மீண்டும் தாவிக் குதித்தது செருப்பு. ”ஒரு இடத்தில் தைரிய
ஒருவேளை அவனுக்கும் இப்படிப் பேசுவது பிடிக்குமோ? என்னை அவனுக்குப் பிடிக்காமலா இருக்கும். அவன் தனிமையின் வாட்டத்தை என் இருப்பு துளியேனும் அகற்றாமலா போய்விடும். மனம் என்னென்னவோ சொன்னது. எழுந்தேன். உடையைச் சரிசெய்தபடி அவனைப் பார்த்துச் சிரித்தேன். ‘புடவ நல்லா இருக்கா?’
குனிந்தபடியே பாராமுகத்துடன் ‘ம்’ என்றான்.
ஒற்றையெழுத்து என்னை அவமதித்தது. பொறுத்துக் கொண்டேன். முண்டா பனியன் பளபளப்பான அவன் தோளைக் காட்டியது. என்னே நிறம்!
‘அப்பு..’ என்றழைத்த வாறே அருகில் போனேன். தயங்கிஉள்ளங்கையால் தோளைத் தொட்டதும் எடைக்கல்லை மேலே வைத்ததைப் போல நழுவினான். சட்டென விலகினான். மீண்டும் தொட முயன்றபோது படபடவென கையைத் தட்டி
நான் மீண்டும் விரைந்தோடி இருக்கையில் அமர்ந்தேன். கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருந்த என்னிடம் அசெளகர்யம் வெளிப்படையாகத் தெரிந்தது. என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ராபின் கண்டிருப்பானோ.
‘ஹேய்’ என்று மென்மை
‘சுஜிக்குப் பிடிக்காதுடா’ என்றான் அப்பு.
’பரவால்ல..’ மடமடவென பன்னீர் சோடாவைக் குடித்தேன். என் தாகம் ஒருபோதும் தீராது. டைரி மில்க்கை வாங்கி இரண்டாகப் பிளந்து மிச்சத்தை மடித்து மேசை ஓரம் வைத்தான். கையில் எடுத்த தன் பங்கை நொடியில் தின்று முடித்
‘மச்சி, நான் ஒரு கால் பாக்கணும். தில்லை நகர் வரை போறேன்’ என்றான் ராபின்.
‘மழ வர்ற மாதிரி இருக்கேடா’ என்றேன்.
‘நமக்கு மழதான் சீசன். சளி காய்ச்சல் பெருகும். பிரிஸ்கிப்சன் மழை பெய்யும்.’
’ராபி, இவள போற வழில பஸ்ஸ்டாண்டில எறக்கிவிட்ரு’ என்று கருணையே இல்லாமல் சொன்னான் அப்பு. அப்படியே தலைமுழுகத் திட்டம்! உயிர் உள்ளே வெடித்தது. ’பை சுஜி!’ போலியான புன்னகை தீயில் எண்ணெய் ஊற்றியது.
‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எனக்கு ஒரு மணிக்கு
அவன் ‘சரி’ என்பதில் சிரிப்பையும் சேர்த்
ரகசியக் குரலில் ‘ஒரு நாளைக்கு ஏகப்பட்ட சாக்லேட் சாப்பிட்றான். இல்லனா தூங்குறான். இல்லனா படம் பாக்குறான். இதுதான் அவனோட டிஃபென்ஸ் மெக்கானிசம் போல. சரக்கடிக்கிற பழக்கம் வேற இல்ல. சாப்பாடே எறங்குறது இல்ல’ என்று சொல்லிப் புறப்
ஹேண்ட்பேகில் இருந்த கட்டுச்சாதம் நினைவுக்கு வந்தது.
‘சரி நான் வரேன். ஒரு மணிக்கு வந்து உன்னை பிக்கப் பண்றேன்.’ படிகளில் இறங்கியபடி சொன்னான்.
‘டேய் அதெல்லாம் ஒண்ணும் வர வேணாம். இறங்கின எடத்துல ஏறப்போறேன். பத்துக் கிலோமீட்டரா இருக்கு. நீ வேலையப் பாரு. சுஷ்மியக் கேட்டதா சொல்லு. கொஞ்ச நேரம் இந்த லூசுகிட்ட பேசிட்டு போயிடுவேன்.’
‘பை’ என்றான்.
‘பை டா. இனிமே உங்களலாம் பாப்பனோ இல்லையோ’ என்றேன்.
‘ஏன் உன் கல்யாணத்துக்குப் பத்திரிக்க வைக்க மாட்டியா?’ பேசிக்
இவன் வேறு என் நிலைமை புரியாமல். ‘உஷ்ஷப்பா..’ தலையில் அடித்துக் கொண்டேன். பேச்சை வளர்க்காமல் வெறுமையாகத் தலையாட்டி வைத்தேன்.
டிபன்பாக்ஸை வெளியே எடுத்து வைத்தேன். அவனுக்கு என் கையால் ஊட்டிவிட வேண்டும் என்ற ஆசை மிகுந்தது. காரட் உருளை தயிர்சாதம். அவனுக்குக் காரட் பிடிக்கும். திரும்பியபோது சட்டை அணிந்து வெளியே புறப்படுகிறவனைப் போல் தயாராக நின்றான் அப்பு. ‘இப்ப எங்க போற?’
‘உன்ன பஸ் ஏத்தி விடத்
கடுங்கோபம் வந்தது. ‘நான் கேட்டனா?’ என்றேன். குரலில் இருந்த கடுமை அவனைப் பெரிதாக ஒன்றும் செய்ய
‘வேணாம் சுஜி’ என்றான். சோர்வு வெளிப்
‘என்ன வேணாம். என்ன வேணாம்?’ இப்போது சுதி ஏற்றிக் கத்தினேன். அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினேன். மடங்கி இருக்கையில் அமர்ந்
‘நானே நொந்து போயிருக்கேன். நீயும் மேல மேல நோகடிக்காத.’
‘உனக்கென்ன பெரிய நோவு வேண்டிக் கெடக்கு. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டுட்ட?’
‘ப்ளீஸ் இந்தப் பேச்ச விடேன்’ என்றான்.
பேசவில்லை நான். மெல்ல மெல்ல சினம் தணிந்தது. மீதமிருந்த சோடாவைக் கவிழ்த்துத் தீர்த்தேன். அது போதவில்லை. எதுவும் போதாது. ‘தோ பாருடா. உன்னைக் கடைசியா ஒருதடவ பாக்கணும்னு தோணுச்சி. வந்தேன். அவ்ள
‘ம் சரி!’ அவன் தசைகள் எனக்காக ஆடவில்லை. அமைதியாகக் தலைகுனிந்து அமர்ந்திருந்
மீண்டும் பொருமல் தீப்போல் எரிந்தது. இறந்தாலும் பொருட்படுத்தாத மடையனுக்காகவா இத்தனை தூரம் வந்தேன். இந்த உலகில் என்னை விடப் பெரிய மடச்செருக்கி யார்?
‘அதுக்கு மட்டும் வரல. தனியாக் கெடந்து சாகிறவனக் காதலிச்ச பாவத்துக்கு..’ அதற்குமேல் பேச்சு வரவில்லை. மழை செறிவாகத் தூறியது. அந்தச் சத்தம் காதில் விழுந்ததும் தொண்டை அடைத்தது. சொற்கள் கைவிட்டன.
ரொம்ப நேரம் இருவருமே பேசவில்லை. காலையில் ஊரிலிருந்து வந்தபோது அடித்த வெயிலும் வெளிச்சமும் உடனடியாக மீண்டும் தேவைப்
‘தோ பாரேன். உன்னை எனக்குப் பிடிக்கும்..’ அவன் விட்ட இடைவெளி வலித்தது.
‘ஆனா..?’ நானே கேட்டேன்.
‘ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல. உன்னை எனக்குப் பிடிக்கும் அவ்ளோ
தோலெல்லாம் எரிந்தது.
‘ஆனா உன்ன காதலிக்க முடியல. ப்ளீஸ். நான் தாஹிராவ லவ் பண்றேன். அதான் உண்ம. ரொம்ப சிம்பிள். புரிஞ்சிக்கயேன். ஆனா ஃபிரெண்ட்ஷிப்ல உன்னை அவளுக்கும் ஒருபடி மேல வச்சிருக்கேன்.’
‘தாஹிரா தாஹிரா தாஹிரா! அவ கத முடிஞ்சி போச்சி. இன்னும் ஏன் அத ஏத்துக்க மாட்டேங்கிற. அந்த நிஜத்த ஒத்துக்க முடியாமதான ரூம்ல அழுக்கு லுங்கியக் கட்டிகிட்டு பைத்தியம் மாதிரி கெடக்குற.. எல்லாத்தையும் யதார்த்தமா டீல் பண்றவன் நீ. நீயே இப்டி சொதப்புறியேடா. தாஹி மேலே உனக்கு இருக்
அவனிடம் சலனமே இல்லை. ‘நீ சொன்னதுல பாதி உண்ம இருக்கு ஏத்துக்கிறேன். கடவுள் மேட்டர்ல கூட ஒருத்தன் தெளிவா இருந்திடு
’என்னது ஸ்ப்ரிச்சுவலா. தெனமும் அவளோட ஆவி கூட பேசிட்டிருக்கியா.’
‘உனக்கு என் நிலைம ஜோக்கா இருக்கலாம். நான் பல நேரங்கள்ல பலர அப்டி ஏளனமா பாத்திருக்கேன். அதனால எனக்கு ஒன் மேல கோவம் வராது. கைல பிளேடால கிழிச்சிக்கிறது. மணிக்கணக்கா அழுகுறது. இதெல்லாம் மடத்தனம்னு வெளிய இருந்து பாக்குறவங்க ஈசியா சொல்லாம். ஆனா பகுத்தறிவ மிஞ்சி ஒரு ஃபீல் இருக்குன்னா அது காதல்
‘இப்டியெல்லாம் பேசிட்டே இருந்தீன்னா அறைஞ்சிருவேன். நிறையப் பேசினா
‘இல்லல்ல. தாஹிரா ஆவிகூட மட்டுமில்ல. அவளோடயே பேசிட்டு
வியப்பாக இருந்தது. என்னை ஏய்க்கப் பொய் சொல்கிறான்.
‘யாருக்கும் தெரியாது. உங்கிட்ட சொல்றேன். அவளோட ரெண்டாவது தம்பி ஒரு பழைய போன அவகிட்ட தந்திருக்கான். நான் ஏற்கெனவே தனியா இன்னொரு சிம் அவளுக்குத் தந்திருந்தேன். ஐடியா ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃபிரி ஆஃபர். உங்க ஹாஸ்டலுக்கு வெளிய வித்தானுங்கள்ள ஞாபகம் இருக்கா?’
‘அவ தம்பி ஏன் உங்க காதலுக்கு ஹெல்ப் பண்றான்? நம்புற மாதிரியா இருக்கு.’
‘நீ நம்பாட்டியும் அதான் உண்ம. அவன் காலேஜ்ல ஒரு கிறிஸ்டீன் பொண்ண காதலிக்கிறான்’ என்று சொல்லிச் சிரித்
‘சரி சொல்லு.’
‘அவன் அப்பப்போ தகவல் சொல்லிட்டு
‘டேய் இதெல்லாம் உண்மையா இல்ல உன்னோட கற்பனையா.’
‘தோ பார் சுஜா. எனக்குத் தெரியும். சில விசயங்கள அடை காக்குற மாதிரி மனசுல வச்சி காத்திட்டு வரேன். இத நான் வாய்விட்டு சொன்னதுமே என் காதல் கொஞ்சம் வீக்கா ஆகிட்ட மாதிரி பீல் ஆகுது. உனக்காகத்
‘என்ன மயிருங்குறேன்?’
’அடேங்கப்பா! கோபத்தைப் பாரு..’ உடலைப் பின்னோக்கி இழுத்
‘மயிரு மழ!’
‘என்ன என் தலையிலேர்ந்து
‘உன்ன நம்பி வந்தேன் பாரு..’
‘என்ன நம்பி ஏம்பா வந்த..’ ஒன்றும் தெரியாத குழந்தை போல பாவமாகக் கேட்டான். ஏளனம் செய்கிறானா இல்லை இயல்பாகக் கேட்கிறானா?
பேச்சை எப்படித் தொடர்வதென்றே தெரிய
திடீரென்று என்னை மீறி ஏதோ நடந்தது. கடிவாளம் இன்றித் தன் போக்கில் விட்டேன். கையேந்திய நிலையில் ‘டேய் டேய்.. ப்ளீஸ்டா.. என்ன விட்றாத. கெஞ்சிக் கேட்டுக்கிறேன் டா. மனசார உன்ன நெனச்சி உங் கூட நாலு வருசமா வாழ்றேன்டா.’
‘அய்யோ.. புரியலயாடி உனக்கு?’ கத்தினான். ‘சனியனே.. சாவடிக்காதடி.’
அழுதான். எனக்காகத்
சிறிய விரிசல் கிடைத்
அவன் முகக்கனியைக் கையில் ஏந்தினேன். எச்சில் வழிய அழுதான். துடைத்து விட்டேன்.
‘ஏய் சாரிப்பா. சாரி’ கெஞ்சினேன். அவன் என்னைக் கண்கொண்டு பார்க்கவே இல்லை. குழந்தையைச் சிரிக்க வைப்பதைப் போல என் உதட்டுக்குக் கீழ் இருந்த பருவில் நாவைச் சுழற்றி ஆட்டிப் பேசினேன். ‘அழுத புள்ள சிரிக்குது.. கழுத பால குடிக்குது..’
’ஆமா கழுத..’ ஏதோ கெட்ட வார்த்தை பேச வந்து
‘முழுசா சொல்லுடா’ என்றேன். ‘மனசுல தோணுறதெல்லாம் பேசு. எங்கிட்ட பேசாம வேற யார்ட்ட பேசப் போற?’
‘நீயும் இப்டி என்னைப் புரிஞ்சிக்கலன்னா நான் எங்க
சற்று நேரத்தில் நிதானமானான். என்னிடம் அத்துமீறக் கூடாது என்ற தன்னுணர்வை அவன் இழக்க
‘சரிடா சொல்லு. நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்.’ அவன் கையை எடுத்து மாலைபோல் என் கழுத்தில் வைத்தேன். சில நொடிகள் அப்படியே வைத்தவன் கைகள் நடுங்கின.வெடுக்கென உதற முயன்றான். அழுத்திப் பிடித்தேன்.
‘சுஜா, இதெல்லாம் இப்டி சிக்கலாகும்னு நீயோ நானோ நெனக்கல. குருவாயூர்ல நீ இந்தக் குழப்பத்தப் பண்ணதும் எனக்கே என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியலை. பயம்
‘அந்த ஒண்ண மட்டும் சொல்லாத. வேற எத வேணும்னா சொல்லு.’
பட்டெனத் தலையில் அடித்
‘இப்ப எதுக்குடா இப்டி நடந்துக்கிற? உள்ளத்தால் உள்ளியதைக் கண்டிப்பா எய்தறதுக்குத்
மென்மேலும் இறுகி மெளனத்திலேயே அடைக்கலம் புகுந்
‘நீ என்னை கூப்புடல. நானாதான் மானங்கெட்டு வந்தேன். அதனால நீயே துரத்தினாலும் போக மாட்டேன்.’ நிதானமாகச் சொன்னேன்.
தலையின் இருபுறமும் கைவைத்துக் குனிந்தநிலையிலேயே இருந்
‘கல்லுளி மங்கன் மாதிரி இருக்காதடா. பேசு.’ கட்டாயப் படுத்தினேன்.
சோர்வுடன் நிமிர்ந்தவன் ‘சுஜி, எனக்கு ஒண்ணுமே புரியல. மண்ட குழம்பிக் கெடக்குறேன். தயவுசெஞ்சி அமைதியா இரு’ என்றான்.
சில நிமிட மெளனத்துக்குப் பிறகு ‘பொறப்
வலுவாக எதையேனும் சொல்ல வேண்டும். ‘ நீயே இப்படி என்னைத் தொரத்தினா நான் செத்துத்தான்டா போகணும்.’
‘சாவு. யார் வேணாம்னா?’ உலர்ந்த முகத்துடன் பொருட்டின்றிச் சொன்னான்.
எனக்கு இப்போது அழுகை பொங்கி வந்தது. கண்ணீர் சீசா விளையாடுகிறது. தளர்ந்து தரையில் அமர்ந்தேன். ‘நீ அத மீன் பண்ணலன்னு தெரியும். இருந்தாலும் ரெண்டாவது தடவ இப்டி கேஷுவலா சொல்றடா. ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்றேன்.
எனக்குத் தொடர்ந்து ஆறுதல் சொல்வான் என்று ஏங்கினேன். இம்முறையும் மீண்டும் மெளனம் சாதித்
’சரிடா’ விருட்டென எழுந்தேன். உடையைச் சரிசெய்தேன். கண்களைத் துடைத்தேன். ’எனக்கென்ன நீதான் கண்டவன் கையில அடிபட்டுச் சாகப் போற. இல்லன்னா சாக்லேட் தின்னே சாகப் போற. நான் ஏன் சாவணும்..’ மூக்கை உறிஞ்சினேன். மிஸ்டு காலைப் பார்த்தேன்.
‘ஆமாம் கரெக்டு
‘இந்த மாதிரி சம்மந்த சம்மந்தமில்லாம பேசுறது
‘சம்மந்தம் இல்லாம..’ முணுமுணுத்
மீண்டும் போன் அடித்தது. அண்ணன்
‘எடுத்துப் பேசு.’
நான்காவது முறையும் அடித்தது. எடுத்தேன்.
‘பாப்பா எங்க இருக்க?’
‘சொல்லுண்ணா.’
‘எங்க இருக்கன்னு கேட்டேன்?’
‘சொல்லு. அதான் அந்தக் காலேஜ் இன்டர்வியுல..’
‘பொய் சொல்லாத பாப்பா. நான் அங்கேர்ந்து
‘ஆமாம் வயித்து வலிதான். உங்கிட்ட சொன்னா பயப்படுவியேன்னு
அப்பு என்னைப் பார்த்து ’இது தேவையா’ என்பதைப் போல கை காட்டினான்.
அண்ணன் விடாமல் ‘எந்த ஆஸ்பத்ரி?’ எனக் கேட்டார். நான் பதில் அளிக்க
‘எந்த ஆஸ்பத்திரின்னு கேட்டேன்’ என்றார்.
‘வரேன்னு சொல்றேன்ல. சும்மா நொய் நொய்னு’ என்று வெடுக்கென பேசி கைப்பேசியைத் துண்டித்தேன்.
‘இப்ப ஏன் அவர்கிட்ட எரிஞ்சி விழற?’
‘உனக்கு அதெல்லாம் தேவயில்ல. எனக்கொரு பதில சொல்லுடா.’
அதற்கும் மெளனம். புன்னகைக்கும் குறைவான அளவில் அவன் முகத்தசைகள் அசைந்து நிலைத்தன. வெறுப்பேற்றி வெளியே துரத்தும் அரைப் புன்னகை.
மீண்டும் போன் அடித்தது. ’எடு’ என்று கண்ணால் சைகை காட்டினான். நான் எடுக்க
‘ஒரே கேள்வி. என்ன கட்டிக்கிவியா மாட்டியா?’
‘சுஜி.. சுஜி.. உனக்கு ஏம்மா இந்தக் கஷ்டமெல்லாம்..’
‘டேய்.. அதெல்லாம் நீ நொட்ட வேணாம். கட்டிக்கிவியா மாட்டியா. அதுக்கு மட்டும் பதிலச் சொல்லு.’
‘கொஞ்சம் அமைதியாகு.’ பார்வையால் என்னை வருடினான்.
கோபம் பொங்கியது. வெளியே மழை சுழன்றடித்தது. சன்னல் வழியே பார்த்
சாரலடித்தது. சன்னலை மூடினான். சட்டென அறை இருளானது. அவன் முகத்தில் விழி மட்டுமே தெரிந்தது எனக்கு.
‘வேணாம். பொறுமைய சோதிக்காத. பதில சொல்லு. நான் போறேன்.’
‘பதில் இல்ல சுஜி. ப்ளீஸ் வீட்டுக்குப் போ. ஆனா மழ விட்டதும் போ.’
‘என்ன சொன்ன?’
‘மழ விட்டதும் போன்னு சொன்னேன்.’
‘கட்டிக்க மாட்டேன்னு சொன்னியா?’
‘ஆமா. ச்சி இல்ல. பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். நான் தாஹிய
‘பரவால்ல. அவள கட்டுவியா இல்லயான்னு நான் கேக்கல. என்னைக் கட்டிக்குவியான்னு
சிரித்
‘சீரியஸாத்
‘இரு லைட்ட போட்றேன்’ என்று எழுந்தவனை இழுத்து சேரில் போட்டேன். என் கண்களில் கேள்வி எஞ்சி இருந்தது. என் தோளில் கைவைத்
ஒரேயொரு ‘ப்ச்’ கொட்டினான்.
அதை என்னால் தாங்க முடிய
அமைதியாகவே அமர்ந்திருந்
விருட்டென வாசல் நோக்கிப் போனேன். என்னைப் பிடிக்கத் தாவி ஓடி வந்தான். மழையில் நனைந்து விடுவேனாம். மனம் என்னைப் பேய்த்தனத்தின் உச்சத்தில் ஏற்றி
‘ஏய் ஏய் விடு சுஜா’ என்றான். உயிரைத் திரட்டி உடற்பிடியை இறுக்கினேன்.
‘விடணுமா விடணுமா?’ என்றதற்கு ஆமெனத் தலையசைத்
சிரித்
‘என்னடா சிரிக்கிற பைத்தியமே. அவன் நெற்றியில் அடித்தேன். கன்னத்தில் அடித்தேன். வா’ என்று இழுத்துச் சென்றேன். நகர்வில் பிடிவிலகித் தப்பினான். அவன் சட்டை கைலியை கண்டபடி இழுத்தேன். கைலி கீழே விழாமல் பிடித்துக்
என்னை இயக்கியது காமம் இல்லை. இயலாமை. அவனை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற செருக்குணர்வு காலிலிருந்து தலைக்கு ஏறியது. குறிப்பாக அவனது வலிந்து கட்டமைத்த நிதானத்தை எப்படியாவது தகர்க்க வேண்டும். இவன் என் அப்புவே அல்ல. அவனைக் கொந்தளிக்க வைக்க வேண்டும். சொற்களால் உணர்ச்சி
அவனுடைய தற்காப்பில் சலித்துப் போய் ஓய்ந்து நின்றேன். திரியைக் கிள்ளிய வெடிபோல் மூச்சை இழுத்து இழுத்து விட்டேன்.
‘சுஜி ப்ளீஸ். நான் சொன்னா கேப்பியா மாட்டியா’ என்று நெற்றி சுருக்கிப் பார்த்
பன்மடங்கு எரிச்சல் பெருகியது. கைகள் நடுங்கி உடலில் குளிர் பரவியது. பதற்றத்தில் தாறுமாறாக இயங்கினேன். எதுவுமே நானாகச் செய்ததாகத் தோன்ற
ஏதோ சொல்லியபடி என் கையைப் பிடுங்கினான். அவனது வலிமை மிகுதியாக இருந்தது. என்னை அறைய ஓங்கிய கையை உடனே மடக்கினான். என் இரு கைகளையும் பிடித்து ஆட்டினான். தோளைப் பிடித்து உலுக்கினான். அவன் கைகள் பட்ட இடங்
பிரமை
எவ்வளவு நேரம் போனதென்றே தெரிய
மரணத்திற்குப் பின் மட்டுமே தோன்றக்
கொஞ்ச நேரத்தில் மீண்டும் என்னுள் ஆற்றல் சேகர
‘சாரி சுஜி’ என்றான். கண்கள் குளமாக இருந்தன.
எதற்கு என்று நான் கேட்க
‘சாரி டா’ என்றேன்.
‘பரவால்ல விடு’ என்றான். அவனைப் பார்த்துப் பாவமாக இருந்தது. என் பரிதாப நிலையை எண்ணியதும் அழுகையாக வந்தது.
‘ஆச ஆசயா உன்ன பாக்க வந்தேன். இந்தப் புடவ உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னு நூறு தடவ தவிச்சேன். இப்டியெல்லாம் கேவலமா என்னை நடந்துக்க வச்சிட்ட. சாரி சாரி.. நீ நடந்துக்க வைக்கல. நானாதான் நடந்துகிட்டேன். எல்லாமே புரியுது. தெளிவாப் புரியுது. புரிய ஆரம்பிக்குது.’
‘தயவுசெஞ்சி ஃபிரியா விடு சுஜி.’ என் தோளைத் தயக்கத்துடன் தொட்டான்.
’ப்ளீஸ் சுஜின்னு சொல்லாத.’ என்னைச் சூழ்ந்து தாங்குவதற்கு மெளனம் தேவைப்
‘ஏன்டா என் வாழ்க்கைல வந்த?’ சோர்வாகக் கேட்டேன்.
‘விடு. தெரியாம வந்துட்டேன்.’
பதில் பேசாமல் என்னைப் புலம்பவாவது விடேன் என்று கெஞ்சத் தோன்றியது. மறுகணமே பேசிப் பயனில்லை என்றும் தோன்றியது. வெறுமையாலான பார்வை பார்த்தேன்.
சற்று நேரத்தில் மூச்சு சீரானது. ஏதோ தெளிவு வந்ததாகத் தோன்றியது. மீதமிருந்த சாக்லெட்டைப் பாதி தந்தான். பசித்தது. முழுவதையும் பிடுங்கித் தின்றேன்.
‘ரெஸ்ட் ரூம்?’
கை நீட்டிக் காட்டினான்.
உள்ளே சென்று கால் மடக்கி அமர்ந்தேன். உடல் கொதிப்பில் மென்மஞ்சளாய் எரிச்சலுடன் வெளிப்
‘இந்தா’ என்று ஏதோ ஒரு புத்தகத்தைத் தந்தான். அட்டையில் கருப்புப் பின்னணியில் தீ எரிந்தது. தலை வலித்தது. நூலின் தலைப்பைக் கூடப் பார்க்கப் பிடிக்க
‘நான் போறேன்.’
’ஏய் என்னாச்சி?’ என்றான்.
‘டோன்ட் வொர்ரி. என் மேல பரிதாபம்லாம் காட்டாத. வாழ்க்கைலயே இன்னக்கி
‘சுஜி.. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு. இப்படியெல்லாம் கேட்க உனக்கு எல்லாத் தகுதியும் இருக்கு. எனக்கு தான் எதுவுமில்லை.’
மெளனமாகக் கதவை நோக்கி நடந்தேன்.
‘சாப்பாடு வாங்கிட்டு வரேன். இல்லன்னா ஹோட்டல்ல சாப்பிட்டுப் போலாமே.’
சிரித்தேன். ‘ரொம்பிடுச்சி’ என்றேன்.
அவன் புருவத்தை ஆட்டினான். அவனோடு சேர்ந்து உண்ண வேண்டும், ஓரிரு வாய்கள் அவனுக்கும் ஊட்டி விட வேண்டும் என்று அப்போதும் ஆசையாக இருந்தது. அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தினால் அபத்த
கதவின் தாழ்ப்பாளை விலக்கினேன். செருப்பை மாட்டும் போது உள்ளே புத்தகத்தை ஓங்கி அடிக்கும் சத்தம். உள்ளிருந்து மெலிதாய்க் குரல் கேட்டது. ‘ஆரம்பத்துலேயே சொல்லியிருந்தா இந்தப் பிரச்சனையே இல்ல.’ முற்றிலும் அந்நிய
ஒரே நாளில் மழை வெயில் கண்ணீர் அழுகை சினம் ஏக்கம் எல்லாம் உச்சம் சென்று வடிந்து போயிருந்தது. முன்னும் பின்னு
வீடே பரபரப்பாக இருந்தது. கெளரி அண்ணி
நான் உணர்ச்சியே இன்றி தலையாட்டியபடி உள்ளே நுழைந்தேன். வீட்டுக்குள் போனதும் என்னை நடுவில் அமர வைத்து ஆளாளுக்கு என்னென்னவோ பேசினார்கள். யாரோ ஒருவன் அடிக்க கை ஓங்கி ஓங்கி நகர்ந்
‘அப்பா..’ என்றழைத்தேன். ‘அந்த ஜெயங்கொண்டம் மாப்பிள்ளையவே பெண் பார்க்க வரச் சொல்லிடுங்க’ என்று சொல்லி பெயருக்குச் சிரித்து
