சிறுகோட்டுப் பெரும்பழம்
பாலத்தில் நின்றபடி ஆர்த்தி காவிரியையே பார்த்துக்கொண்டிருந்தாள். கும்பகோணத்துக் காவிரி குறும்புகள் நிறைந்த பெண். அதே காவிரி திருச்சியில் சலனங்களில்லாத துறவியைப் போல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குத் தகுந்தாற் போல் நதியின் குணம் மாறுமா? ஒரு தண்ணீர்ப் பாம்பு தலையை மட்டும் தூக்கியபடி மிதந்துகொண்டிருந்தது. மாலைப்பொழுது மெல்ல மசங்கி இருட்டின் ஆதிக்கம் ஆரம்பித்திருந்தது. இரவு ஒரு போர்வையைப் போல் நீண்டு மனிதர்களை மூடிக்கொள்வதாக ஆர்த்திக்குத் தோன்றியது. உண்மையில் இரவென்பதே கண்ணாடி பார்த்தல்தான். பகல் பொழுதில் அவரவர் போட்டுக்கொண்ட வேஷங்களை இரவுதானே […]
