Category: கவிதை

எழுத்து

ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள்

பாலா கருப்பசாமி · 14.11.18

அழகியல்வாதத்துக்கும் (aestheticism) மிகையுணர்வுவாதத்துக்கும் (romanticism) என்ன வேறுபாடு? மனிதன் தன்னை விலங்கிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க ஆரம்பித்ததிலிருந்தே இருக்கும் பார்வையாக அழகியலைச் சொல்லலாம். புறம் மொழிக்குள் வந்தவுடன் அழகியல் கொண்ட ஒன்றாக மாறிவிடுகிறது. சுட்டப்படும் சொற்களே படிமமாய் இருப்பதால் அழகியல் எழுத்தின் தவிர்க்கமுடியாத ஒன்று. எழுத்தில் மட்டுமில்லாமல் அழகியல் வேறு தளங்களிலும் அடிப்படையில் இயங்கும் தன்மையுடையது. உதாரணத்திற்கு நமது பார்வைக்கோணம் 180 டிகிரிவரை பார்க்கும்படி இருந்தாலும், ஒரு க்ஷணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம் பார்வை குவிகிறது. […]

எழுத்து

காலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் · 12.10.18

காலத்திற்கு ஒரு விவஸ்தை என்பதில்லை. சமயத்தில் சிலரை விட்டுவிடலாம். ஆனால் தமிழ் தனக்குப் பங்களித்தவர்களை மறப்பதில்லை. யாரோ, எப்பொழுதோ அந்தத் தமிழைக் கண்டு மயங்கி அன்னாரைக் குறித்து நினைக்கும் பொழுது காலமும் தன் அவசர அடிக்கோலத்தைக் கொஞ்சம் நிறுத்தி நின்று கவனிக்கிறது. இல்லாவிட்டால் திரு பக்ஷிராஜன் என்பவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றோ அவர் பாடி எந்த மலரிலோ வந்து காலத்தில் உறங்கிய பாட்டுகள் கண்ணில் பட்டதும் கருத்தில் மின்னுகிறது. உயிர் விளங்கும் பிராணியை நாம் பார்த்தால் […]

எழுத்து

லேலி லாங் சோல்ஜர் (Layli Long Soldier)

த. கண்ணன் · 13.09.18

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] ———————— இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும். எழுத்துவிதிகள்வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன். உதாரணமாக, எல்லா […]

எழுத்து

கொங்குதேர் வாழ்க்கை

எஸ்.சிவக்குமார் · 13.08.18

தமிழ் இலக்கியத்தின் சிகரமாக விளங்குபவை சங்க இலக்கியங்கள். பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களைப் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று தொகுத்தனர். (பல பாடல்கள் அழிந்துபோயின.) சங்கம் என்று சொல்லப்படுவது கடைச்சங்கம். சங்க இலக்கியம் என வழங்கும் சங்க நூல்கள் அகப்பொருள், புறப்பொருள் அடிப்படையில் இரு பிரிவானவை. சங்க நூல்களில் அகத்திணைப் பாடல்கள் 1862, புறத்திணைப் பாடல்கள் 519. சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 473. 23 பெண்பால் புலவர்கள் உள்பட 378 பேர் அகத்துறை பாடியவர்கள். […]

எழுத்து

கண்ணகன் கவிதைகள்

கண்ணகன் · 09.07.18

உன் தூரிகையிடம் ஒரு கேள்வி பிறையை வேண்டுமெனில் நீ தலைகீழாக வரையலாம் நிலவை? * வலைஞனே, நதிக்குள்ளிருந்து எதையேனுமன்றி ஒருபோதும் பிடித்திழுக்கவே முடியாது நதியை * நீரில் கோபுரம் கோபுரத்தில் வாழும் புறாக்களுக்கென்ன? சிட்டுக் குருவிகளுக்குத்தான் தேவை சுயமாய் ஒரு கூடு ஒரு கூடு சுயமாய் சிட்டுக் குருவிகளுக்குத்தான் தேவை புறாக்களுக்கென்ன? கோபுரத்தில் வாழும் * தரு தழைத்த பின் கிளைகளின் மொழியில் ததும்பும் ஜீவிதம் மௌனம் கனிந்த விதையின் தியான தரிசனம் * நேற்று சற்று […]