Category: சிறுகதை

எழுத்து

தாயுமானவள் – சு. வேணுகோபால்

சு. வேணுகோபால் · 24.01.20

இரண்டு மூன்று நாட்களாகவே பறவைகளின் இரைச்சல் விடியற்காலையில் அதிகம் தான். காகங்களும் மைனாக்களும் ஒன்றையொன்று கொத்திச் சண்டை இடுவது போல கத்துகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிரொலியாக ஓடைக்கு மேலே உள்ள புதரிலிருந்து மயில்கள் மாறி மாறி அகவுகின்றன. விடிகிற போது மயில்கள் அதிகம் அகவாது. ஆனால் இந்தப் பறவைகளின் கூச்சல் எல்லை மீறிப் போய் விட்டது. கரபுரவென அவை கத்துவதால் மயில்களும் என்னவோ ஏதோவென்று வெறிக்கின்றன. சுந்தரம் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து வேட்டியைச் சரி செய்தான். கதவைத் […]

எழுத்து

சுயம்

பாலாஜி பிருத்விராஜ் · 24.01.20

“இங்க‌ யாரும் சொல்லிக் கொடுக்காதத செய்ய ஆரம்பிக்கறப்பத் தான் உள்ளுக்குள்ள நாம யாரோ அதா ஆகத் தொடங்குறோம்”. ஒரு கூரிய வாக்கியத்தை அல்லது ஒரு கருத்தை கூறிவிட்டதன் உத்வேகத்தில் கிளாசின் முக்காலளவு திரவத்தை வெங்கடாச்சலம் வாயில் கவிழ்த்துக் கொண்டார். குடிக்கும் போது எப்போதும் வரும் இடம் ஒன்றுண்டு. அங்கு தான் குடி நம்மை தூக்கிக் கொள்ளத் தொடங்குகிறது. அவருக்கு அது பொதுவாக இரண்டாம் ரவுண்டின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ. அந்த இடத்திற்கான முஸ்தீபாகத் தான் முதல் ரவுண்ட் […]

எழுத்து

அழைப்பு – சு. வேணுகோபால்

சு. வேணுகோபால் · 27.12.19

ஐந்து வருடங்களில் ஏழு வீடு மாறிய பின்தான் சொந்தமாக வீடு வாங்கியே தீர வேண்டும் என்று நடத்திக்காட்டி விட்டாள் செண்பகம். எஞ்சினியர்கள் கட்டிக் கட்டி விற்கும் வீடுகளில் ஒன்று தான் இது. செண்பகமும் குடியிருக்கும் வீட்டில் அது குறை இது குறை என்று கசப்பை வளர்த்துத் தான் வெளியேறுவாள். சாத்தூருக்கும் கோவைக்கும் ஏழுமணி நேரப் பயணம். வர ஒரு நாள். போக ஒரு நாள். புதுமனை புகுவிழாவிற்கு ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியதாகி விட்டது. புது […]

எழுத்து

உரு

ப.தெய்வீகன் · 27.12.19

1 மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஒழுங்கை வழியாக நன்றாக உள்ளே சென்றால் ஒரு காளி கோயில் வரும். பெரிய சடைத்த ஆலமரத்துக்குக் கீழ் சிறியதொரு கோயிலாக கனகாலமாக அந்தக் கோயில் அங்குள்ளது. நவாலி வேலக்கை பிள்ளையார் கோவில் கொடியேறும் காலப் பகுதியில் அந்தக் கோயிலுக்கு காவடி எடுக்க நேர்த்தி வைப்பவர்களை இந்தக் காளி கோவிலுக்கு அழைத்து வந்து இங்கு தான் முள்ளு குத்துவார்கள். பின்னர் அவர்களை ஆடி ஆடி சங்கரப்பிள்ளை வீதிக்கு அழைத்துச் சென்று […]

எழுத்து

புதிய நிலம்

ஸ்ரீதர் நாராயணன் · 27.12.19

அந்த ஞாயிற்றுக் கிழமையை அப்படியே தொந்தரவு செய்யாமல், அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் எனத் தான் சரிதா விரும்பினாள். வாரயிறுதி நாட்களில் பொழுது போக்குவது சற்று சிரமமாகத் தான் இருந்தது. கல்லூரிக் காலங்களிலும், புதிய இடங்களில் அவள் பெரும்பாலும் தனி ஆளாகத் தான் இருந்திருக்கிறாள். ஆனால், இவ்வளவு தூரம் தனிமையை உணர்ந்ததில்லை. தற்போதைய வேலையா அல்லது இந்த மனநிலையா என்று தெரியவில்லை. கடந்த ஆறு மாத காலமாக அவளை எந்த விஷயத்திலும் நாட்டம் காட்ட விடாத ஒரு […]

எழுத்து

கிறிஸ்துமஸ் லைட்ஸ் – தன்ராஜ் மணி

கோகுல் பிரசாத் · 27.12.19

“ரூப், விண்டோ எல்லாத்துலயும் நிறைய… நிறைய்ய்ய்ய லைட்ஸ் வேணும் இந்த இயர்,” கைகளை அகல விரித்து சுவர் அகலத்திற்கு நீண்டிருந்த சாளரத்தின் முன்நின்று குதித்துக் கொண்டே சொன்னான் டெரி. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவதாஸ் ஐபேடில் இருந்து தலையைத் தூக்கி அவனைப் பார்த்துச் சிரித்தார். “இங்க வா,” என்றார் ஐபேடை சைட் டேபிளில் வைத்தபடி. ஓடி வந்து, வந்த வேகத்தில் தாவி, கால் முட்டியைத் தன் அப்பாவின் மடியில் அழுத்தி, முகத்தை அவர் மார்பில் பதித்து, கட்டிக் கொண்டான். வலியில், […]

எழுத்து

இருள் – கலைச்செல்வி

கலைச்செல்வி · 20.09.19

கானகத்தின் இடைவிடாத ஒலிகள் தான் உறக்கத்தைக் கலைத்தன என்றால் அது பொய்யாகி விடும். ஓலைப்பாயில் ஒருக்களித்திருந்த உடலை புரட்டிக் கொண்டேன். இருளும் கூடவே வந்தது. காற்று காட்டுப்பன்றியின் உறுமலாய் ஓலமிடுவதை புறஅசைவுகளில் உணர முடிந்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன். சுரைபுருடையிலிருந்த நீரை எக்குதப்பாக வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டதில் புரையேறிக் கொண்டது. மணிராசன் இருளில் அசைந்து வருவது ஒலிகளால் தெரிந்தது. அவன் நீட்டிய கஞ்சாத்துாள்களால் நிரப்பப்பட்ட பீடியை உதட்டில் பொருத்தி இழுக்கத் தொடங்கிய போது வேறு ஏதேனும் வேண்டுமா […]

எழுத்து

கத்திக்காரன்

ஸ்ரீதர் நாராயணன் · 20.09.19

ஒரு சனிக்கிழமை மாலை, விஜிக்குட்டியின் படுத்தல் தாளாமல் தான் தங்கராஜ் அந்த சர்க்கஸிற்கு சென்றான். பிக் ஆப்பிள் சர்க்கஸ் எனப் போட்டிருந்தார்கள். முந்தின நாளின் ஜேஸ்டன்வில் ஹெரால்டு பத்திரிகையில் பத்து சதம் தள்ளுபடி கூப்பன் ஒன்று கொடுத்திருந்தார்கள். விஜிக்குட்டிக்கு இன்னமும் நான்கு வயது முடியாததால் டிக்கெட் கிடையாது. வழக்கமாக, கோடை விடுமுறைக் காலத்தில் ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் ஏதாவது கார்னிவெல் போடுவார்கள். இந்த முறை இந்த சர்க்கஸ் போட்டிருந்தார்கள். சர்க்கஸ் கூடாரத்தின் முகப்பில் வெட்டிப்போட்ட தழைகளைத் துதிக்கையால் வளைத்து […]

எழுத்து

உலவ ஒரு வெளி – சர்வோத்தமன் சடகோபன்

சர்வோத்தமன் சடகோபன் · 20.09.19

என் பெயர் கதிர். என் தந்தையின் பெயர் அர்ஜூனன். அவர் ஒரு விவசாயக் கூலி. நான் திருக்கோயிலூர் விழுப்புரம் சாலையில் இருக்கும் வில்லிக்குப்பம் என்ற கிராமத்தின் காலனியைச் சேர்ந்தவன். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் திருவெண்ணெய்நல்லூர் கோவிலில் தான் கம்பன் வந்து பாடிச் சென்றதாகச் சொல்வார்கள். நான் எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பு வரை பக்கத்து கிராமமான திருக்குறிச்சியில் படித்தேன். நான் என் வகுப்பின் முதல் மாணவனாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி […]

எழுத்து

மெய்நிகரி

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 17.08.19

அது கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் ஓர் இத்தாலிய உணவகம். மரமும் செடியும் செறிந்திருக்கும் பச்சைத் தோட்டத்துக்கு நடுவே மண் சுவரால் கட்டி எழுப்பப்பட்ட சிறு சிறு குடிசைகளின் கூடுகையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவற்றின் நடுவே சிறியதொரு குளம். செந்நாரை ஒன்று குளத்துக்குள் தன் நீண்ட அலகினைக் கவிழ்ப்பதும் நிமிர்வதுமாயிருந்தது. அன்று பகல் முழுவதும் வெயிலின்றி மூடாரமிட்டிருந்த வானமும் கடற்காற்றில் ஏறியிருந்த குளுமையும் அவ்விடத்தை இன்னும் இரம்மியமாக்கியிருந்தது. அந்தச் சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அதற்கு முற்றிலும் எதிரான […]

எழுத்து

வருவிருந்து – ரா. கிரிதரன்

ரா.கிரிதரன் · 17.08.19

காக்ஸ்டன் அரங்கில் குழுமியிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்களின் கண்களில் ஒரு நிமிடம் தங்கிவிட்டு அடுத்தப் பார்வை பார்ப்பதற்குள் விறுவிறுவென கடைசி வரிசையில் உட்கார்ந்த சில நிமிடங்களில் பசிக்கத் தொடங்கியது. பெரும் பாரமாய் கிடந்த என் பையைப் பிடித்திருந்த விரல்களில் வியர்வை பிசுபிசுப்பு. அரங்கின் நுழைவாயிலிருந்து நிழலடித்த கடைசி வரிசைக்கு வருவதற்குள் ஒரு யுகத்தைக் கடந்திருந்தேன். விலை உயர்ந்த செம்மறி ஆட்டுத் தோல் உடுப்பு மேலாடையை மறைத்திருந்தது. கழுத்தை இறுகப்பிடித்த பட்டையைக் கழற்றி வைக்கலாம் என நினைத்து அரங்கிலிருந்தவர்களின் விதவிதமான […]

எழுத்து

மித்ரா – தீபு ஹரி

கோகுல் பிரசாத் · 17.08.19

“People don’t have ideas, ideas have people.” – Carl Jung மித்ரா இறந்து போயிருந்தாள். ஆனால் அது கனவிலா, நிஜத்திலா என்று தெரியவில்லை. அவளுக்குச் சமீப காலமாக, பல நேரங்களில் தன்னுடைய இருப்பு குறித்து நிறைய சந்தேகங்கள் வருகின்றன. தன்னுடைய இருப்பு என்பது நிஜ உலகத்தில் இருக்கிறதா, இல்லை தான் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உயிரினமா என்ற கடுமையான சந்தேகம் அவளுடைய மூளையை அரித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவளால் கனவுக்கும் உண்மைக்குமான வேறுபாட்டை […]