Category: சிறுகதை

எழுத்து

காக்கைப்பொன்

பா.திருச்செந்தாழை · 30.01.22

ஆண்டுக்கணக்காக மஞ்சளும் சந்தனமும் பூசிப்பூசி மாட்டுவாலைப்போல மெழுகோடி விட்டிருந்த கொச்சைக்கயிற்றினால் பின்னப்பட்ட சாட்டையை வாசலில் நின்றபடி வீட்டினுள் எறிந்துவிட்டு நல்ல வெயிலில் சுருட்டை ஆவேசமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தார் குஜுலுவா சுப்பையர். குஜுலுவா அவர்களது குடும்பப் பெயர், சுப்பையர் என்கிற அய்யர் ஒட்டு சௌராஷ்டிரா சமூகங்களுக்கேயுரிய தாங்கள் பாதி பிராமணர்கள் என்கிற மனமயக்கத்தின் பொருட்டு ஒட்டிக்கொண்ட ஒன்று. சற்குணம் அவரைத் தாத்தா என்றுதான் அழைப்பான். நல்ல செவிடான அவருக்கு அந்த வாயசைவு மட்டும் எப்படியோ துல்லியமாக அர்த்தமாகிவிடும். தொடர்ந்தாற்போல […]

எழுத்து

சித்திரக்கூடம்

கமல தேவி · 30.01.22

ஜன்னலைத் திறந்ததும் மார்கழியின் பனி சட்டென்று அறையினுள் பாய்ந்தது. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு சன்னல் பக்கமாக நின்றேன். வயல்வேலைக்குச் செல்லும் ஆட்கள் எப்போதா எழுந்து வாசலில் கோலமிட்டு மண் அகல்களை ஏற்றி வாசல் படிஓரமாக வைத்திருந்தார்கள். அவை சிவந்த பொட்டுப்பொட்டான கனல்துண்டங்களாகக் கறுப்புத்திரையில் கனன்றுகொண்டிருந்தன. மாரியம்மன் கோவில் ஒலிபெருக்கியில் பாடல் ஒலி பரவி  ஊரின் செவிகளைத் தொட்டு எழுப்பத் தொடங்கியிருந்தது. மாடியறை என்பதால் தெளிவாக கணீரென்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் மார்கழிப் பனி போலக் காதுகளில் நுழைந்தது. காற்றாகி கனலாகி […]

எழுத்து

கோவா

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 30.01.22

குறித்த நேரத்துக்குப் பத்து நிமிடங்கள் முன்னரே சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்து சேர்ந்துவிட்டோம். பெங்களூருவிலிருந்து கோவாவுக்குச் செல்ல வேண்டிய விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகிவிட்டது. என்னுடைய முதல் கோவா பயணம். இதுவும்கூட அலுவலக ரீதியான ஒன்று. கூடவே துணைக்கு மணீஷ் ராவ். நாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சென்னைக்கு அருகில் ஓரகடத்திலிருக்கிறது. சாலைகள் அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற பெரிய பெரிய கட்டிட வேலைகளுக்குப் பயன்படும் கனரக வாகனங்கள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாகனங்கள் தயாரிப்புக்குப் போகும் […]

எழுத்து

துறப்பு

சுஷில் குமார் · 30.01.22

ஒரு நொடிகூட மூச்சைக் கவனிக்க முடியவில்லை. இதயம் படபடவெனத் துடிக்கிறது. கண்ணை மூடினாலே பத்து, நூறு, ஆயிரம் முகங்களும் காட்சிகளும் வந்து குவிகின்றன. கைகளின் முத்திரைகள் தானாகவே மாறி நிற்கின்றன. இயல்பை மீறி உடல் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது. வடதிசை நோக்கி ஒரு நொடிகூட உட்கார முடியவில்லை. கால்கள் ஓரிடத்தில் நிலைக்காமல் பதறுகின்றன. இந்தக் குளிரை சிறிதும் தாங்க முடியவில்லை. எது நிஜம் எது கனவு என ஏதும் தெளிவில்லை. என்னுடல் இருக்கிறதா இல்லையா, சமாதி ஆகிவிட்டேனா, எப்படி உறுதிப்படுத்துவதெனத் […]

எழுத்து

காற்றில் எழுதிய ஓலை

எம்.கோபாலகிருஷ்ணன் · 30.01.22

வெங்கி என்னைவிட நான்கு வயது இளையவன். அவன் குழந்தையாய் இருந்த காலத்தை நினைக்க முயலும்போது, அம்மாவின் மடியில் கிடந்த ஒரு காட்சி மட்டும்தான் நினைவுக்கு வருகிறது. பேறுகாலத்தின் வாசனையுடன் இருந்த அம்மாவிடம் போகப் பிடிக்காமல் அப்பாவின் அருகிலிருந்து அவனை நான் பார்த்திருந்தேன். வெங்கியை நான் என் தம்பியாக உணர்ந்தது அவன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பிறகுதான். அவனுக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு நாள் உடம்பு இலேசாகச் சுட சோர்ந்து படுத்திருந்தான். தறிக்குழியருகே விளையாட வரும் பேரனைக் […]

எழுத்து

நெருநல் உளளொருத்தி

செந்தில் ஜெகன்நாதன் · 24.12.21

உள்ளே இருக்கும் குழந்தை வெளியே வருவதற்காக எலும்புகள் விரிவடையத் தொடங்கியதும், உடலை நகர்த்த முடியாதபடிக்கு நடுமுதுகில் சடசடவெனெ வலி பரவ ஆரம்பித்தது. தசையில் வரும் வலியைப் பொறுத்துக்கொள்வதைப் போல எலும்பில் வரும் வலியை அவ்வளவு எளிதாகத் தாங்கிக்கொள்ள முடிவதேயில்லை. கணவனிடம் ஆட்டோவை வரவழைக்கச் சொன்னாள் பூங்கொடி. இரண்டு நாட்களுக்கு முன் வலி வந்தபோது கசாயம் வைத்துக் குடித்தவுடனேயே பொய்வலி என்று தெரிந்தது. ஆனால் இன்றைய வலி, அடுத்த எட்டிலேயே ஆஸ்பத்திரிக்குப் போய் இறங்க வேண்டுமெனத் தாங்க முடியாமல் […]

எழுத்து

செப்டம்

லோகேஷ் ரகுராமன் · 24.12.21

அப்பழுக்கற்ற வெயில் தலைக்குள் இறங்கியது. கண்ணிமைகளுக்கு மேலிருந்த இடுக்குகளில் வெம்மை சூழ்ந்து கனத்தது. அப்படியே மொத்த ஆவியும் எழுந்து காற்றில் கண்காணாமல் கரைந்துவிட்டால் தேவலாம். கண்ணகி சிலைக்கு அருகில் வண்டியை நிறுத்திவைத்துவிட்டு இத்தனை நேரம் அதிலேயே அமர்ந்துகொண்டு இருந்திருக்கிறேன். எதிரில் கடலோரம் போடப்பட்டிருந்த தடுப்புப் பாறைகளில் அலைகள் தெறித்துச் சிதறிக்கொண்டிருந்தன. நான் அதனைப் பார்த்துக்கொண்டா நின்றிருந்திருக்கிறேன்? என் கண்ணில் கடல் பட்ட சுவடே பதியவில்லை. மனைவியைத் தலைச்சங்காட்டில் என் வீட்டில் விட்டுவிட்டு வண்டியைக் குரங்குப் புத்தூர் கடைக்கு விட்டேன். […]

எழுத்து

நிரபராதம்

மயிலன் ஜி சின்னப்பன் · 26.11.21

அதை மற்றுமொரு சாதாரணப் பயணம் என்றுதான் நம்பியிருந்தேன். விமானி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் எல்லோரும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். டெல்லி சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும், தலைநகரின் அன்றைய உஷ்ணநிலை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். பெண் எனினும் குரல் சற்று கரகரப்பாக இருந்தது. ஆண்களே செய்துவந்த பணிகளில் நுழையும் பெண்கள் இப்படியாக குரலை வலிந்து திரிக்கிறார்களோவென எனக்கோர் ஐயப்பாடு.  ஒலிப்பெருக்கிக்குரல் ஓய்வதற்காகவே காத்திருந்ததைப் போல, நானும் பக்கத்து இருக்கைப் பெண்ணும் ஒருவரையொருவரைப் பார்த்து முறுவலித்துக்கொண்டோம். மிதமிஞ்சிய […]

எழுத்து

பதக்கம்

பாலாஜி பிருத்விராஜ் · 26.11.21

இம்முறை நாற்காலி கிரீச்சிடும் ஒலி எஸ்.ஐ. அறையிலிருந்து பலமாகக் கேட்டது. நான் திரும்பி ஹெட் கான்ஸ்டபிள் நடராஜனைப் பார்த்தேன். “கொட்ட வீங்குன நாய் மாதிரியாக்கும் இப்ப அவரு நெலம. ஒரு இடத்துல உக்கார விடாது பாத்துக்க” என்றார். காற்று உப்பிய பலூன் போல சுருக்கங்கள் மறைந்து முகம் சிரித்துத் தெளிவடைந்தது. கண்முன்னே மேலதிகாரி சிக்கலில் மாட்டித் தவிக்கும் தருணம் அவரின் நாற்பதாண்டு கால அனுபவத்தில் அதிகம் வாய்த்திருக்காது. வெறும் ஆறு மாத காலப் பணியிலேயே அதன் அருமை […]

எழுத்து

மடையான்

எம்.கோபாலகிருஷ்ணன் · 26.11.21

விடிகாலையில் கடப்பாரைச் சத்தம் கேட்ட பின்பு போர்வையைப் போர்த்தியபடி ராசப்பன் டீ கடைக்கு வந்துசேர்ந்தவர்கள் இன்னும் உருமாலையைக் கழற்றாமல் நான்காவது டீயைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. மொண்டிபாளையம் பெருமாள் கோயிலுக்குப் போகும் கூட்டம் விறுவிறுவெனப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் தேர்ப்பெட்டிக்கார சம்முவம் அடுத்தவாரம் திங்கட்கிழமை காலையில் மடையானுக்குக் கோயமுத்தூரில் பெண் பார்க்கப் போகிறார்கள் என்ற தகவலைச் சொன்னார்.  “நெசமாவா சம்முவம். இந்தப் பயலுக்குக் கோயமுத்தூருல பொண்ணு வாச்சிருக்கா? பரவால்லயே..” ராசப்பன் டீ தம்ளர்களைக் […]

எழுத்து

தாயின் மணிக்கொடி!

எம்.கே.மணி · 25.11.21

“நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்!“ என்று கொஞ்சலாகச் சொல்லுகிறாள் லல்லி. மேலே போட்டிருந்த முந்தானை சர்வ அலட்சியமாக விலகிக் கிடந்தது.  அவளுடைய அம்மா வத்சலா அதைக் கவனிக்காதது போல இருப்பதை நான் பார்த்தேன். நான் பார்ப்பதைக் கவனித்ததும் அவள் என்னை நோக்கி வந்தாள். அக்காவின் தோழி. நான் இப்போது வேறு வேலையில் இருந்தாலும், முன்பு அறிமுகமாகி இருந்த ஜிகேவின் இந்த செண்டரில் லல்லியை ஒப்படைத்துவிட்டுப் போக வந்திருக்கிறார்கள். ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவிசெய்ய வந்திருக்கிறேன். ஆனால் […]

எழுத்து

எல்.கே.ஜி

சுஷில் குமார் · 25.11.21

“ஒழுக்கம்தான் சார் ஃபர்ஸ்ட்டு, ஒழுக்கமில்லாத பசங்க இந்த ஸ்கூலுக்குத் தேவையில்ல, நீங்க ஒங்க பையன கூட்டிட்டுப் போயிருங்க சார். இவன வச்சிட்டு எங்களால முடியல,” தலைமை ஆசிரியரின் கோபத் தெறிப்பு அவரது அறையையும் தாண்டி வெளிவந்தது.  தொடர்ந்து அந்தத் தகப்பனின் கெஞ்சல்களும் தலைமை ஆசிரியரின் கறாரான பதிலுமெனச் சில நிமிடங்கள் சென்றன. சலிப்பும் வருத்தமுமாகத் அந்தத் தகப்பன் வெளியேற அவரைப் பின்தொடர்ந்து தலையைக் குனிந்தபடி வந்தான் ஒரு சிறுவன். என்ன, ஒரு பத்து வயது இருக்கும். இந்த […]