உள்ளே இருக்கும் குழந்தை வெளியே வருவதற்காக எலும்புகள் விரிவடையத் தொடங்கியதும், உடலை நகர்த்த முடியாதபடிக்கு நடுமுதுகில் சடசடவெனெ வலி பரவ ஆரம்பித்தது. தசையில் வரும் வலியைப் பொறுத்துக்கொள்வதைப் போல எலும்பில் வரும் வலியை அவ்வளவு எளிதாகத் தாங்கிக்கொள்ள முடிவதேயில்லை.
கணவனிடம் ஆட்டோவை வரவழைக்கச் சொன்னாள் பூங்கொடி. இரண்டு நாட்களுக்கு முன் வலி வந்தபோது கசாயம் வைத்துக் குடித்தவுடனேயே பொய்வலி என்று தெரிந்தது. ஆனால் இன்றைய வலி, அடுத்த எட்டிலேயே ஆஸ்பத்திரிக்குப் போய் இறங்க வேண்டுமெனத் தாங்க முடியாமல் உந்தித் தள்ளியது. கடுமை
ராமஜெயம், ஆட்டோவுக்குப் போன் செய்த கையோடு கிருஷ்ணவேணிக்கும் போன் செய்து, பூங்கொடியை மருத்துவமனையில் சேர்க்கவிருக்கும் தகவலைச் சொன்னான்.
பையன்கள் இருவரையும் எதிர்வீட்டுக் கிழவியிடம் விட்டு
பூங்கொடியை ஸ்ட்ரெட்ச்சரில் கிடத்தி, ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்லும்போதே வேணி வந்து
பிறந்த குழந்தைகள் அத்தனைக்கும் ஒன்று போல ஒரே முகமாய் இருந்தது. ஒருவேளை இதுதான் கடவுளின் முகமோ எனத் தனக்குள் நினைத்துக்
“ஏழாம் நம்பர்ல இருக்கு ஆச்சி!” வெளியே இருந்து மெதுவாகச் சொன்னான் ராமஜெயம்.
கண்களில் ஆவல் சுடராய் ஒளிர ஏழாம் நம்பரில் இருந்த குழந்தையைப் பார்த்தாள். தோலுரிந்த எலியைப் போலச் சின்னூண்டு கண்களும் வாயுமாக வெள்ளைத் துணிக்குள் சுருட்டப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து, முகமெல்லாம் பற்களாய்ப் புன்னகைத்தாள். பிஞ்சு, பார்ப்பதற்கு ராமஜெயத்தின் குட்டி உருவமாகத் தெரிந்தது. தன் அண்ணனைப் போல இருக்கிறதென்றால் தன் ஜாடையும் இருக்குமே என்ற ஆவல் மேலிட இன்னும் சற்றுத் தலையைத் தாழ்த்தி ஆழமாக ஊடுருவிப் பார்த்தாள். அவளது மூக்கினையும், காதுகளையும் சிறு அச்சில் வார்த்தது போலத் தெரிந்ததும், உடல் சிலிர்த்தது. உடனே குழந்தையை உள்ளங்கைக்குள் தூக்கிக்கொள்ள வேண்டுமெனத் தோன்றியது.
“போதும் வாங்கம்மா” என்ற செவிலியின் குரலைக் கேட்டுத் திரும்பியவள், மனமின்றி வெளியே வந்து ராமஜெயத்திடம், “அண்ணே மொகத்த உரிச்சி வெச்சாப்புல அப்புடியே நம்பள மேறியே இருக்காண்ணே புள்ள.. ” என்றாள்.
”பூங்கொடி கண்ணு முழிச்சதும் அவகிட்ட புள்ளையக் காட்டிட்டு நீ எடுத்துட்டுப் போயிடு ஆச்சி” சொல்லும்போது ராமஜெயத்தின் குரல் தாழ்ந்திருந்தாலும் தடங்கலின்றி அவன் சொன்னது வேணிக்குச் சற்று நிம்மதியளிப்பதாக இருந்தது.
“அவுருக்கு இன்னைக்கும் லீவு போட முடியலண்ண.. இந்தா இப்ப மூனு மணிக்கெல்லாம் டூட்டி முடிஞ்சதும் நேரா இங்க
ராமஜெயம் தலைநிமிர்த்தி மருத்துவமனைச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தபோது மணி ஒன்றைக் காட்டியது. இன்னும் மூன்று மணி நேரம் என நினைத்துக்
பிரசவ வார்டிலிருக்கும் மூத்த செவிலி ஒருவர் இவர்கள் இருவரையும் நோக்கி வந்து, “ம்மா.. புள்ளைக்குப் பால் கொடுக்கணும், பேபியோட மதர எழுப்புங்கம்மா” என்றதுமே வேணிக்கு உள்ளே வலிய கரமொன்று ஈரக்கொலையைக் கொத்தாகப் பிடித்திழுப்பதைப் போல இருந்தது.
குழந்தைக்குப் பால் கொடுக்கத் தொடங்கி
நாள் தள்ளிப் போனதிலிருந்தே ஜோசியம் பார்க்கச் சோழம்பேட்டைக்குச் செல்ல வேண்டுமெனப் பூங்கொடி ராமஜெயத்தை நச்சரித்துக்
நடவு எந்திரம் வந்துவிட்டாலும் கூடக் கைநடவு போல ஆகாது என்பதாலேயே நத்தம், திருநன்றியூர், ஆலவேலி எனப் பக்கத்து ஊர்களிலிருந்து உதிரி உதிரியாய் வேலைக்கு ஆட்களை அழைத்து வந்து, ஐம்பது ரூபாய் அதிகமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. கால்நடை
இதற்கிடையே ஒருநாள் எல்லாவற்றையும் ஓரமாக ஒதுங்க வைத்து
ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர் சொன்னார்: “ஸ்கேன் ரிப்போர்ட் மாதிரி சொல்ல முடியிலன்னாலும், கிரகங்களோட கணக்குப்படி பாக்கும்போது மறுபடியும் ஒங்களுக்கு ஆம்பளப் புள்ளன்னு
வீட்டுக்குப் போகும்போது ராமஜெயம்
“பூங்கொடி நான் ஒரு விசியம் ஒங்கிட்ட சொல்ணும்னு நெனச்சிகிட்ருந்தேன்.. இன்னைக்கி ஜோசியரு சொன்னதும் இப்பியே சொல்லிடுலாம்னு நெனைக்கிறேன்.”
அவன் பீடிகை போட்டதும், வார்த்தை
“இல்ல, நம்ப ஆச்சிக்கி கல்யாணம் ஆயி ஏழெட்டு வருசமா புள்ளையில்லீல்ல.. நம்பளுக்கு ஏற்கனயே ரெண்டு புள்ளையா ஆயிடுச்சி.. மூனாவதா பொறக்குறப் புள்ளைய அதுகிட்டக் குடுத்துருவமான்னு நெனச்சேன்.. அதுவும் என்னுகிட்ட வாய்வுட்டுக் கேட்டுடுச்சி.. அதான் ஒன்கிட்ட ஒரு வார்த்த கேக்குலாம்னு..” முதல்முறையாக யாசகம் கேட்பவனுடையதைப் போலிருந்தது அவன் குரல்.
”ஓகோன்னான்னாம்.. என்னாடா இன்னைக்கு அதிசிய மசுரா புருசன் வயல தெடல உட்டுட்டு கூப்ட ஒடனே அழச்சிகிட்டு வந்தானேன்னு பாத்தா இதான் சங்கதியா? அடேயப்பா… பத்து மாசம் செமந்து புள்ளைய பெத்து நோவாமா ஒன் தொங்கச்சிக்கு நொட்டுனும்ங்கற.. என்னா நெனச்சிகிட்டு இருக்குற?” என்று அவனிடம் உரத்த குரலில் கத்தினாள்.
“இல்ல இந்தப் புள்ள ஒன் ஆசப்படி பொம்பளப் புள்ளையா பொறந்தா நம்ப வளத்துக்குவோம்.. ஆணாப் பொறந்தா ஆச்சிக்கிக் குடுத்துருவோம்”.
யோசனை சொல்பவனைப் போல அவன் சொன்னதும் அவனை நேருக்கு நேர் மறித்துக்
இருபது வயதுக்குள்ளேயே தாய் தந்தையை இழந்தவன் ராமஜெயம். இருப்பினும், வேணி ஒருபோதும் பாதித் தூக்கத்திலெழுந்து அம்மாவைக் கேட்டு அழுததில்லை, அப்பா இருந்திருக்கலாமோ என்று ஒருநாளும் அவளை வீட்டுக்கு வெளியே அவன் யோசிக்கச் செய்ததுமில்லை. வேணியின் சிந்தனையில் இன்னது வேண்டும் எனத் தோன்றி, அவள் கேட்கும் முன்னமே அவள் உள்ளங்கை
தங்கையை டீச்சராக்க வேண்டுமென்ற கனவு ராமஜெயத்துக்கு இருந்தது. ஆனால், வேணிக்குப் பத்தாம் வகுப்பு கணிதப்பாடம் பேயாய்ப் பயமுறுத்த அண்ணனிடம் பிடிவாதம் பிடித்துப் பள்ளிக்குப் போவதை நிறுத்திக்
வேணிக்குத் திருமண வயது வந்ததும் தன் ஊர்ப்பெண்களைப் போல மாடு மேய்க்கவும், சாணம் பொறுக்கி ராட்டி தட்டவும் ஆளாகிவிடக் கூடாது என்று தினமும் சொக்காயி முன் நின்று வேண்டிக்கொள்
எல்லாம் இருந்தும், அவையெதுவும் ஒன்றுமே இல்லை என்றாக்கிவிடும் குழந்தை பிறக்காத துயரம் ஒருவருடம் கழித்து வேணி மனதில் உண்டானது. வருடங்கள் கரையைக் கரைய அந்தக் கவலை அவளது உடலிலொரு உறுப்பாகவே வளரத் தொடங்கியது.
பிரபல
இயற்கையாகவே கெச்சலான உடலைக் கொண்டிருந்ததால் அவளது வயிறு எப்போதும் ஒட்டி உள்ளடங்கியே இருந்தது. கண்ணாடிக்குமுன் நின்று நீள்மூச்சு
இதற்கிடையே ராமஜெயத்துக்கும் பூங்கொடிக்கும் திருமண
வேணி ஊருக்கு வந்திருக்கும் சமயங்
இந்த நிலையில்
“யாரோ ஒரு அநாதை புள்ளைய எடுத்து வளத்தாக்கூட ஒன்னும் தெரியாதுடி. அண்ணன் புள்ளன்னா ஆயிரம் பிரச்சன வரும் “ என்று கணவன் சொன்னது வேணிக்கு ஏமாற்ற
“ஏதோ ஒரு புள்ளய வளக்கறதுக்கு எங்க வூட்டு அண்ணன் புள்ளைய என் புள்ளையா வளத்துக்குறேன்” என்று திண்ணமாகப் பதில் சொன்னாள்.

சம்பத்துக்கு இதில் உவப்பில்லையென்றாலும் வேணி தன் முடிவில் திடமாக இருந்ததால், அவள் பக்கமே தலையாட்டினான்.
ஒருநாள் அண்ணனிடம் இதைக் கேட்டுவிடுவது என முடிவுசெய்து ஊருக்கு வந்தாள். பிள்ளையார் கோவில் தெருமுனையில் அவள் முகம் தெரிந்ததுமே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் ஓடிப்போய், “ஐ.. அத்த வந்துதுக்கு ஐ அத்த வந்துதுக்கு” என்று அவளது புடவையைப் பிடித்துக்
பையன்கள் இருவருக்கும் கை நிறைய தின்பண்டங்களைக் கொடுத்தாள். அவர்கள் மாறி மாறி அவள் கன்னங்
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவனை வலிய இழுத்து மடியில் இருத்திக்
“உளுந்து வெறச்சிருக்கு. அததான் பாக்கப் போயிருக்காரு.. இப்ப வர்ற நேரம்
அரிதாளுக்கு இடையே வளர்ந்திருக்கும் ஆமணக்கம்பூண்டுச் செடிகளைக் குந்திப் பறித்துத் தூக்கி வரப்பில் எறிந்து
வேணி வயலின் மறுகோடியில் அமர்ந்து களைகளைப் பறிக்க ஆரம்பித்தாள்.
இரவுப் பனியில் நனைந்து இளம்பச்சை நிறத்தில் முளைவிட்டிருந்த உளுந்தும் பயிறும் மூடியிருக்கும் துணியிலிருந்து வெளியே தெரியும் குழந்தையின் கால் விரல்களைப் போல மண்ணைப் பொத்துக்
“எப்ப ஆச்சி வந்த?”
“இப்பத்
“சாப்ட்டியா ஆச்சி..”
“வரும்போதே சாப்ட்டு
“உளுந்து வெறச்சிட்டு ரெண்டுநாள் சென்டு பாக்க வந்தோம்னா வய முழுக்க பச்ச பல்லக் காட்டுதுன்னு நம்ப அம்மா சொல்லுமே நாபகம் இருக்கா ஆச்சி?”
“ஆமாண்ண..”
“வெறச்சது போவ ரெண்டு படிக்குமேல பயிறு வூட்ல கெடக்கு.. நீ வேணுங்கறத எடுத்துகிட்டுப் போ.”
வேணியின் கண்கள் எதையோ சொல்லத் தயங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த ராமஜெயம், “என்னா ஆச்சி.. பணங்காசு எதாவது வேணுமா?” என்றான்.
“பணத்துக்கு என்னா கொற அண்ண.. சொக்காயி புண்ணியத்துல அதுல்லாம் நல்லாதான இருக்குறோம்.”
”பின்ன சொல்ல வந்தத கடவாயில அதக்குனாமாறி இருக்கியே? என்னான்னு சொல்லு.”
“இல்லண்ண நம்ப அண்ணி முழுவாம இருக்குல்ல.. அதான் ஒரு ரோசன. நேத்தைக்கே அவுருகிட்டயும் கேட்டன்.. இப்பப் பொறக்கப் போறப் புள்ளய நான் சீர்காழியில கொண்டு வளத்துகிட்டுமான்னு கேக்குலாம்னு வந்தன்.”
சொல்லி
“அட இதானா.. நானே ஒரு புள்ளைய வளத்துக்குறியா ஆச்சீன்னு கேக்குலாம்னு இருந்தேன்.. அவ என்ன சொல்லுவாளோன்னு ரோசிச்சேன்.. நான் நேரம் பாத்து அவள்ட்ட பேசுறன்..”
“அண்ணன் அண்ணி எதாவது தப்பா நெனச்சிக்கப் போவுது.”
“அவ என்னா நெனைக்கப் போறா? நீதான ஆயி எனக்குத் தலச்சன்புள்ள… உன்னவிட எனக்கு என்னா கெடக்கு.. பொறக்குற புள்ள ஒனக்குத்
ராமஜெயம் சொன்ன அந்த நொடியே வயிற்றுக்குள் எதுவோ ஊர்வதைப் போலத் தோன்றி, அடிவயிறு கூசியது வேணிக்கு.
ஜோசியம் பார்க்கச் சென்ற நாளிலிருந்தே குழந்தையைக் கொடுப்பது பற்றிய பேச்சைத் தொடங்கினாலே காளியாய் மாறிவிடு
குழந்தை பலவீன
பதினைந்து நாட்கள் கழித்து ஆனந்த தாண்டவபுரம் சொக்காயி கோவிலில் வைத்துக் குழந்தையை வேணிக்குக் கொடுப்பதற்குச் சென்றார்கள். ஒரு மரக்கால் முழுக்க தவிடு நிரப்பப்
பதினைந்து நாட்கள் குழந்தை பால் குடித்திருந்ததால் பூங்கொடிக்கு மார்பு
“புள்ளை சாப்ட்டானா? புள்ள பசியில அடிக்கடி அழுவுதா? வெளிய என்னா கலர்ல போவுதுன்னு பாத்தியா? குளுப்பாட்டும்போது கைகால வழிச்சி உடுறியா?” எனக் கேள்வி
வீட்டில், ”ஆளும் பேருமா அண்ணனுவோளோட வளர வேண்டிய என் புள்ளைய பொட்டப்பிராந்து கோழிக்குஞ்சத் தூக்கிட்டுப் போனாப்ள அவகிட்ட குடுத்துட்டுக் குந்தியிருக்கேனே ஐயோ” என்று வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்
பாத்திரங்களைப் போட்டு உருட்டு
உறவினர்
ஒரு உறவினர் கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவே குழந்தையைத் தூக்கிக்
வேணி குழந்தையைப் பெறவில்லையே தவிர பெற்றவளைக் காட்டிலும் நுண்கவனத்தோடு
குழந்தையின் வருகைக்குப் பின்னர் வேணியின் உடல் சற்றுச் சதை வைத்தது. கண்கள் ஒளிகொண்டு, கன்னம் விரிந்து பார்ப்பதற்கு முன்பைவிடவும் அழகாகத் தெரிந்தாள்.
முதன்முதலாகக் குழந்தை, நாவசைத்து “அத்த” என்று
ஒருநாள் சட்டநாதர் கோவிலுக்குக் குழந்தையைத் தூக்கிச் சென்றிருந்தாள்.
அப்போது தத்தித்தத்தி நடைபழகத் தொடங்கியிருந்
“அம்மாட்டகிட்ட வாங்க.. அம்மாட்டகிட்ட வாங்க.. ஓடியாங்கடி..” என்று கைதட்டி அழைத்தாள். ஒரு பொம்மை அசைந்து வருவதைப் போல நடந்து வந்த குழந்தை, “ம்மா..” என்றது. முதல்முறையாகத் தன்னை அம்மா என்று அழைக்கக் கேட்ட வேணிக்கு முதுகுத்தண்டில் ஐஸ் கட்டியால் கோடிழுப்பதைப் போலிருந்தது. கால்கள் நிலத்தில் பாவாமல் மிதப்பதைப் போல உணர்ந்தாள். சந்தோஷ மிகுதியில் ஓடிப்போய்க் குழந்தையை வாரி நெஞ்சோடு அணைத்துக்
*
வீட்டுக்கு முன் இருந்த பள்ளத்தால் குழந்தைகள் சறுக்கி விளையாடி, அடிபட்டுக் காயமாவதுடன் அடிக்கடி உடல் வழண்டு போகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லி விளக்கிப் புரிய வைக்கவும் முடிய
தெரு அளவிற்கு வாசலுக்கு இரண்டு வண்டி மண் அடித்து மட்டப்படுத்தலாம் என்று நினைத்
ராமஜெயம் உதவிக்கு ஆளின்றித் தானே மண்ணை வெட்டி அன்னக்கூடையில் சுமந்து, வண்டியில் ஏற்றிக்
பூங்கொடியும் பிள்ளைகளும் துடிதுடித்துக் குளத்தை நோக்கி ஓடினார்கள்.
தஞ்சாவூரில் ஒரு பெரிய மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். பின் மண்டையில்பட்ட அடியால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். கையில் இருந்த பணமெல்லாம் போதாமல் இருந்த சொற்ப நிலங்களையும் அடகு வைத்து மருத்துவச் செலவைப் பார்த்தாள் பூங்கொடி. அதுவும் போதாமல் இருக்கத் தாலிக்கொடி உட்பட எல்லா நகைகளையும் விற்கும்படியானது. அண்ணனுக்காக வேணியும் கணவனிடம் சொல்லித் தன்னாலான உதவிகளைச் செய்தாள். கிட்டத்தட்ட பதினொரு இலட்ச ரூபாய் செலவு செய்தும், மூன்று மாதங்
தலை வீழ்ந்த பின் குடும்பம் நொடித்துப்போனது. பத்தாயத்தில் இருந்ததெல்லாம் உணவானது போய், பத்தாயத்தையே விற்று உணவு சமைக்கும் நிலை வந்தது. அக்கம்பக்கத்திலெல்லாம் வாங்கிய கடனுக்கு அவமானத்தால் வட்டி கட்ட வேண்டியிருந்தது. சொந்த வயலும் திடலும் போன பிறகு கூலி வேலைக்குப் போகும் ஆட்களிடம் வேலை கேட்டுச் சென்றாள் பூங்கொடி.
“ஆம்பளப் புள்ளைவோள ஒரு கடக் கண்ணிக்கு வேலைக்குப் போடுறத உட்டுட்டு எதுக்கு இப்புடி வேவாத வெயில்ல கெடந்து அல்லாடுற?” என்று யோசனை சொன்னார்கள் ஊர்க்காரர்கள்.
வேணி அவ்வப்போது அண்ணிக்குப் பணம் காசு கொடுத்தனுப்பினாலும் நேரில் வந்து பார்ப்பதைத் தவிர்த்தாள். அண்ணன் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் நேரில் சென்றால் திரும்பக் குழந்தை குறித்துப் பிரச்சினை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரண
இரண்டு வருடங்கள் மேகம் கரைவதைப்
திருமணமாகிப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து வேணி கருவுற்றாள். பூங்கொடிக்கு இதைச் சொல்ல வேண்டுமெனப் போன் செய்தாள்.
“அண்ணீ! கருவு தங்கிருக்குன்னு சொல்றாங்க அண்ணீ.. ஆனா என்ன.. இதப் பாத்து சந்தோசப்பட அண்ணன் இல்லியேன்னு நெனைக்கிம் போதுதான் எனக்கு ஆத்து ஆத்துப் போவுது அண்ணீ” என்று குரல் தழுதழுத்தாள்.
“அதுல்லாம் ஒங்க அண்ணன் நம்ப கூடவே
“அதான் அண்ணீ ஒடம்பப் போட்டு அசங்கிக்காம நல்லா ரெஸ்ட் எடுக்குணும்னு சொல்லிருக்காங்க. அண்ணீ.. அதனால..” அவள் இழுப்பது பூங்கொடிக்குத் தொண்டைக்குள் எதுவோ உருள்வதைப் போலிருந்தது.
“பிரசவம் வரைக்கிம் புள்ளை கொஞ்ச நாளு அங்கியே இருக்குட்டுமா அண்ணீ.. நானும் அவரும் நாளைக்கிக் கொண்டாந்து உட்டுட்டு வர்றோம்.. ” என்றாள். அதற்குப் பிறகு அவள் பேசிய எதுவும் பூங்கொடிக்குக் கேட்கவே இல்லை.
துணி மூடிய எலும்புக்கூடுகளைப் போலக் கிடந்த பிள்ளைகளைப் பார்த்தாள். ஒடுங்கிய கண்களோடு தூங்கிக்கொண்டிருந்தவர்

❤❤❤
கணத்த இதயத்துடன் படித்து முடித்தேன். கற்பனை செய்து எழுதவில்லை நிஜத்தை பார்த்து எழுதியது போல் உள்ளது..எழுத்தாளருக்கு எனது வாழ்த்துக்கள்.
[…] https://tamizhini.in/2021/12/24/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%… […]
நெருநல் உளனொருத்தி – என்னே ஒரு தலைப்பு!!!! அபாரம்!!! மழைக்கண்ணிலிருந்தே இன்னும் மீளவில்லை நான்?
அதியற்புதமான கதை செந்தில்!! மென் மேலும் எழுதி நவீன இலக்கிய உலகிற்குப் பெருமை சேருங்கள்!நல்வாழ்த்துகள்!
மிக்க நன்றி
[…] டிசம்பர் மாதம் வெளியாகிய ‘தமிழினி’ இணைய இதழில் செந்தில் ஜெகன்நாதன் […]
தம்பி, கதையை கனத்த இதையத்துடன் படித்து முடித்தேன், கதை நடக்கும் பகுதி நமது ஊரை சுற்றி நடப்பது போல் எழுதி இருந்தாய், இது உண்மை கதையா அல்லது உண்மை கதையை தழுவி எழுதப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை,ஆனாலும் கதை நமது வீட்டில் நடப்பது போலவே இருந்தது, ஏனென்றால் நான் ஊரில் இருந்த 15 வருட காலங்களில் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்களை நான் அறிந்திருக்கவில்லை, மொத்தத்தில் இதயம் கணத்து விட்டது.
உனக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்
அன்புடன் Annan- கமல் @ கார்த்திக்
ஊருல சனங்களோட இருந்திட்டு வந்த ஒரு நெனப்ப இருக்கு. வாசிக்கையில் 23 வயதுவரை நான் புழங்கிக் கிடந்த இடமும் ஊர்களும் பேச்சும் உள்ளுக்குள் மெல்லப் புரளுது.
மிக்க நன்றி
அருமை தம்பி.இரண்டு பெண்மணிகளின் உணரச்சிகளை அப்படியே வடித்தெடுத்திருக்கின்றீர்கள்.அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அருமையாக கையாண்டு இருக்கின்றீர்கள்.நடந்த சம்பவங்களின் கோர்வையாகவே உள்ளது.அருமையான எழுத்து நடை.
உங்களது எதிர்காலம் மிகச்சிறப்பானதாக அமைய மனமாற வாழ்த்துகிறேன்.
செந்தில் ஜெகநாதன்,
நெருநல் உளனொருத்தி – அருமை படைப்பு!
தலைப்பின் தேர்வு நேர்த்தி தங்கள் ஆழ்ந்த தமிழ் ஆர்வத்திற்கு சான்று. தங்கள் பணியும் பயணமும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சில மணித்துளிகள் மட்டுமே ஆனது படைப்பை வாசிக்க. இருந்தும் ஏனோ பூங்கொடி, வேணி, ராமஜெயம், வேணியின் கணவர் மற்றும் மூன்று ஆண் பிள்ளைகள் என அணைத்து கதாபாத்திரங்களும் காலத்திற்கும் நினைவில் நீங்கா இடம் பிடித்து விட்டதை போல உணர்கிறேன்.
கதைக்காக தலைப்பையும், தலைப்பிற்காக கதையையும் செதுக்கிய விதம் சிறப்பு!
தலைப்பின் அர்த்தம் புரிந்துகொள்ளும் முயற்சியின் தேடலில்…
குறள் அதிகாரம் : நிலையாமை ( குறள் எண் : 336 )
“நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு”
விளக்கம்:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
மிக்க நன்றி
அருமை.
அரிதாளுக்கு என்றால் என்ன ?
நெற்கதிர் அறுவடை முடிந்து வயலில் விடப்படும் அடிப்பாகம்
அருமை