Category: சிறுகதை

எழுத்து

அன்பின் வழியது

இராசேந்திர சோழன் · 27.02.21

‘அப்பாடா என்ன வெயில்’ என்று அலுத்தபடியே குறட்டுப் படியேறிய சபாபதிப் பிள்ளை தலையிலிருந்து துண்டை அவிழ்த்து உதறியபடி வாசற்படியில் செருப்பைக் கழற்றிவிட்டு ‘பர்வதம்’ என்று குரல் கொடுத்தார். கூடவே ‘ஒரு சொம்புல தண்ணி கொண்டா’ என்றார். சற்று நேரத்தில் பர்வதம் செம்பில் நீருடன் வெளியே வந்தாள். செம்பை வாங்கி முகத்தை கைகால்களைக் கழுவியபடி ‘இன்னைக்காவது மணியார்டர் வந்துதா’ என்று கேட்டார். ‘மணியார்டர் தானே, வந்துட கிந்துடப் போவுது’ என்று வேண்டாவெறுப்பாகச் சிடுசிடுப்போடு பதிலளித்துவிட்டு செம்பை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.  […]

எழுத்து

உமையொருபாகன்

பாலாஜி பிருத்விராஜ் · 25.01.21

“இழுத்து உள்ள விட்றா அவன”. காலுக்குக் கீழே நீரின் கலங்கலாக குரல் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். முங்கி எழுந்த பளபளப்பு உடலுடன் எனக்குப் பின்னால் பார்த்து ஜெயராம் அண்ணா கத்திக்கொண்டிருந்தான். முகத்தில் நீர் வழிவுடன் ஒரு சிரிப்பும் இருந்தது.  அப்போதுதான் எங்கிருக்கிறேன் என்கிற உணர்வு வந்தது. கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தேன். சுவரில் என்றால் சுவர் நுனியில். அத்தனை நேரம் எப்படி விழாமல் இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. ஏதொவொன்று என்னைக் கீழே விழாமல் தடுத்திருக்கிறது. பின்னால் திரும்ப […]

எழுத்து

குகைவாய் கழுகு

ப.தெய்வீகன் · 25.01.21

சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த கணத்தை எண்ணி பீதியடைந்ததில்லை. இன்று மிருதுளா விடயத்தில்தான் பாம்பொன்றின் தொண்டைக்குள் அகப்பட்டிருப்பதுபோல அவள் உணர்ந்தாள். வருணின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்குள், உருட்டிச்செல்லும் வேகத்தில் வாகனத்தை மெதுவாக ஓட்டியபடியிருந்தாள். தரிப்பிடமொன்றினைத் தனது பதற்றம் மிகுந்த விழிகளினால் துழாவித் தேடினாள். வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, அதில் வாகனத்தை நிறுத்தும்போது, மெல்பேர்ன் “ரோஹினி ஸ்பைஸஸ்” உரிமையாளரும் மனைவியும் சுபத்ராவுக்கு கை […]

எழுத்து

பச்சைப்பட்டு

சுஷில் குமார் · 25.01.21

“மக்ளே, முகூர்த்தப்பட்டு பச்சக் கலர்தான?” “ஆமா பெரிப்பா.” “செரி, அதையும் ஒனக்க பட்டு வேட்டி சட்டையையும் ஒரு தாம்பாளத்துல எடுக்கணும், மறந்துறாத.” “செரி, பெரிப்பா.” “சம்பங்கியும் ரோசும் நல்லா கனமா போட்டு கெட்டச் சொல்லு, என்னா? மொத்தம் ரெண்டு பெரிய மாலை, நாலடியோ அஞ்சடியோ இருக்கமாரி பாத்துக்கோ. பொறவு, பிச்சிப்பூ சரம் ரெண்டு பந்து, கிரேந்தி மாலை சின்னது ஒரு அஞ்சு, உதிரிப்பூ நெறைய வாங்கிக்கோ.” குதப்பிய வெற்றிலையைத் துப்புவதற்காக எழுந்து சென்றார் பெரியப்பா.  ஆச்சியின் குழி […]

எழுத்து

ஜி

சி.சரவணகார்த்திகேயன் · 22.12.20

கமல் பெருமூச்சுடன் விலகியபோது மின்வெட்டு நிகழ்ந்தது போலிருந்தது காயாவுக்கு. குழந்தையின் கையிலிருக்கும் பொம்மையை வெடுக்கெனப் பறித்த மாதிரி இருந்தது. அவளை அதிகம் யோசிக்கவிடாமல் தலையணைக்கடியிலிருந்த செல்பேசி கனைத்தது. அகாலத்தில் ஒலிக்கும் தொலைபேசிகள் அச்சமூட்டத்தான் செய்கின்றன. காயா தயங்கி எடுத்துப் பார்த்த‌போது திரையில் அம்மாவின் நிழற்படம் அந்த இருளில் கூடுதலாக ஒளிர்ந்தது. கமல் பெர்முடாஸ் அணிந்து, நாடா இறுக்காமல் படுத்து, கண்களை மூடிக்கொண்டான். காயா பச்சை வட்டத்தில் பெருவிரலிட்டு இடமிருந்து வலம் தடவி அழைப்பை எடுத்தாள். “ஹலோ, சொல்லும்மா…” […]

எழுத்து

தங்க நொடிகள்

கலைச்செல்வி · 22.12.20

வசிட்டா ஏரியில் நீர்பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈரமான நிலங்கள் கிராமங்கள் என்றாகின. அவை வரிசையாக அமைந்திருந்தாலும் கோடு கிழித்தாற் போன்றிருப்பதில்லை. ஏரிக்குள் வளைந்தும் படுகைக்குள் நுழைந்துமாக அமைந்த கிராமங்களில் நகருடன் இணையும் பிரதான சாலையின் அருகாமையில் இருந்தது சர்வாடா கிராமம். நீரின் செழிப்பும் நிலத்தின் வளமும் கிராமங்களை வயல்களுக்குள் புதைத்திருந்தன. போக்குப்பாதைகளைத் தவிர்த்து சிறு மண்பரப்புகளைக்கூட தாவரங்கள் தவறவிடவில்லை. காணுமிடமெங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. படுகைகள் நீண்டு காடுகளாகியிருந்தன. வங்கத்தின் மாரிக்கால மாதமொன்றில் […]

எழுத்து

சூழ்வின் இருள்

இளங்கோவன் முத்தையா · 22.12.20

காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள் அமுதவல்லி. கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும்போதுதான் அதைக் கவனித்தாள். ஒரு சந்தேகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஜன்னலின் அருகே நின்று வெளிச்சத்தில் வைத்துப்பார்த்த போது உறுதியாகத் தெரிந்தது… அது நரை முடிதான். முன்னெற்றியின் புருவத்திற்கு அருகே அந்த ஒற்றை நரைமுடி அழகாகச் சுருண்டுவிழாமல் இருந்திருந்தால், தனக்கு நரைக்க ஆரம்பித்திருப்பதே அவளுக்குத் தெரிந்திருக்காது. வேறு எங்கும் நரைத்திருக்கிறதா என்று விரல்களால் முன் தலையில் இருந்த முடிக்கற்றைகளை இலேசாக ஒதுக்கிப் பார்த்தாள். […]

எழுத்து

ஓசைகள்

கே.ஜே.அசோக்குமார் · 22.12.20

அதிகாலையில் ஒலிக்கப்படும் இசையில் குளிர் இருக்கிறது. மென்குளிரில் நீர்நிலையில் மேல் ஏற்படும் சிறு அதிர்வை ஒத்திருக்கிறது. காதுகளுக்குள் நுழையும்போது இதமான குளிருடன் நுழைகிறது. அந்தக் குளிர், பனிபடர்ந்த உயரத்திலும் அந்தரத்திலும் உடலைத் தூக்கிச் செல்கிறது. இனிய மதுவை முகர்ந்து பார்க்கும் சிலிர்ப்பு, சிறுதுளியாக உதடுகளில் விழுந்து வயிறை அடையும் பிரம்மாண்ட தருணம் இசையின் தொடக்கம். மேலேறும் வயலினின் ஓட்டத்தை இடைநுழைந்து அலகுகளாகப் பிரிக்கும் பியானோவின் இசை, இவற்றை குதிரை ஓட்டத்தோடு பின்தொடர்கிறது தபலா.  எங்கே நிற்கிறேன்? என்னை […]

எழுத்து

நூறு ரூபிள்கள்

மயிலன் ஜி சின்னப்பன் · 18.11.20

1 “எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் […]

எழுத்து

புழுதி

கண்மணி குணசேகரன் · 25.09.20

விஜயா பதிப்பக வாசகர் வட்டமும் சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘கி.ரா. விருது’ பெற்ற கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துகள். * செம்மேகமாய் திரண்டு வந்தது மேலைக்காற்று. மூச்சு வாங்கக்கூட இடைவெளி கொடுக்காமல் நிறைமுக்காடாய் போர்த்திதான் பார்த்தாள், கருவறைக்குள் முடங்கிக்கிடந்த அங்காளம்மை. ஆனால் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு படுதாவைப் போல் படிந்தது மேற்கே மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்மேட்டின் புழுதி. மூக்கைப் பொத்துவதற்குள், நாசியில் நுழைந்து நடுமண்டைக்கும் ஏறிவிட்டது. அங்காளம்மைக்கு நெஞ்சை அடைக்கிற மாதிரியிருந்தது. மூக்கினுள் நாவராஞ்சி […]

எழுத்து

கழுதையின் வாயில்

இராசேந்திர சோழன் · 25.09.20

விஜயா பதிப்பகம் சார்பில் வழங்கப்படும் ‘ஜெயகாந்தன் விருது’ பெற்ற இராஜேந்திர சோழனுக்கு வாழ்த்துகள். * கோர்ட் விவகாரங்கள் அவனுக்குப் புதுசு என்று சொல்ல முடியாது. வண்டி ஓட்ட ஆரம்பித்த புதிதில் அவனுக்கு அதுபற்றி கொஞ்சம் பயமாக இருந்தது. முதல் தடவையாக கோர்ட்டுக்கு போக நேர்ந்தபோது அவன் உள்ளே நுழையவே பயந்தான். கனத்த பூட்சுகள் சிமெண்ட் தரையிலே நறநறத்து கறுக்முறுக்கென்று ஒலிக்க எஸ்கார்ட் போலீஸுகள் வராந்தாவிலே நடப்பதும், குழம்பிப் போன முகங்களும் வாழ்க்கையின் இறுதிக் கணக்கைத் தீர்த்துமுடித்து பாவ […]

எழுத்து

ஊழ்த்துணை

மயிலன் ஜி சின்னப்பன் · 24.08.20

1 இப்படி வந்து உட்கார்ந்திருக்க நேருமென்று சண்மு எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றுமொரு வெற்றுநாள் என்பதாகத்தான் புறப்பட்டிருந்தான். கடைசியில் இப்படி கொண்டு வந்து விட்டிருக்கிறது. அடர்த்தியாக இருட்டிவிட்டிருந்தாலும், எந்தவோர் அமானுஷ்ய அறிகுறிகளும் இல்லாமல்தான் அந்த இடம் இருந்தது. முன்னிரவிற்கான சம்பிரதாய சப்தங்கள் தாண்டிய சிலவும் கேட்டுக்கொண்டிருந்தன. அடுத்த வளைவிலிருந்த டீக்கடைகளிலிருந்து மனநிலைக்குத் துளியும் ஒவ்வாத பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அவை இல்லாவிடினும் அவ்விடத்தில் தனிமையில் உட்கார்ந்திருக்க முடியாதுதான். தனித்துவிடப்பட்டதன் துயரத்தை, உயிரற்றுக் கிடந்த அலைபேசி பெரிதாக்குவதாக தெரிந்தது. ‘இந்தா வந்துர்றேன்’ என்று […]