Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

ஜிம்பல் எனும் முட்டாள் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

எஸ்.கயல் · 16.05.20

1 நான் ஜிம்பல் என்கிற முட்டாள். நான் என்னை முட்டாள் என்று நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் அப்படித்தான் என்னை அழைக்கிறார்கள். நான் பள்ளியில் இருந்த காலத்திலேயே அந்தப் பெயர் என்னை வந்தடைந்தது. மொத்தமாக எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: அறிவற்றவன், கழுதை, ஆளித் தலையன், மடையன், சிடுமூஞ்சி, மூடன், அப்புறம் முட்டாள். இதில் கடைசிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனத்தில் என்னவெல்லாம் அடங்கியிருந்தது? என்னை எளிதாக ஏமாற்றிவிட முடியும். அவர்கள், “ஜிம்பல் உனக்குத் தெரியுமா? மத குருவின் […]

எழுத்து

கரையொதுங்கும் மீன்கள் – சிக்கா ஓன்யேனேஸி – தமிழில் : லதா அருணாச்சலம்

லதா அருணாச்சலம் · 16.05.20

உன் கைகளில் நீ அள்ளிக் கொள்வதற்கென்றே மீன்கள் கரையொதுங்கும் கடற்கரையைப் பற்றிய கனவொன்று நீண்ட காலமாக உன்னுள் இருந்தது. அவையனைத்தையும் உனக்கொரு பாதுகாப்பான பிரயாணத்தையையும் உன் வருகைக்குப் பின் முறையான குடியுரிமைப் பத்திரங்களையும் ஏற்பாடு செய்வதாக அவன் வாக்குறுதி அளித்திருந்தான். உன் வீட்டிற்கு அனுப்புமளவு ஒரு நல்ல தொகையை வருமானமாக ஈட்டப் போகிறாய் எனவும் கூறினான். நீ கனவு கண்டாய்.. அதில் வாழ்ந்திருந்தாய், அதை நனவாக்கத் தயாராக இருந்தாய். ஜெனீவா, எண் 10, நேவிகேஷன் தெருவில் இருக்கும் […]

எழுத்து

லாட்டரி – ஷெர்லி ஜாக்சன் – தமிழில் : கார்குழலி

கார்குழலி · 16.05.20

அந்த ஜூன் 27-ஆம் நாளின் காலை தெளிவாகவும் ஒளிபடர்ந்தும் முழுநீள கோடைக்கால நாளொன்றின் புத்தம்புதிய கதகதப்பையும் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பூக்கள் பூத்துக் குலுங்கின, புல் செழிப்பான அடர்ந்த பச்சை நிறத்திலிருந்தது. சுமார் பத்து மணியிருக்கும். தபால் நிலையத்துக்கும் வங்கிக்கும் இடையே இருந்த சதுக்கத்தில் கிராமத்து மக்கள் கூட ஆரம்பித்தனர். சில ஊர்களில் மக்கள்தொகை அதிகமாக இருந்ததால் லாட்டரியை நடத்தி முடிக்க இரண்டு நாட்களானது என்பதால் ஜூன் 26-ஆம் தேதியே தொடங்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் வெறும் முந்நூறு […]

எழுத்து

பார்ஸி இடுகாட்டின் கழுகுகள் – அலி இமாம் நக்வி

கோ.கமலக்கண்ணன் · 16.05.20

எல்லாம் எதிர்பாராததாய் இருந்தது. அவர்கள் திகைப்படைந்தனர். அவர்கள் வெடுக்கென பாடையைக் கீழே வைத்துவிட்டு, சடலத்தை வெறித்துப் பார்த்தனர், பிறகு, கலங்கிய விழிகளால் இலட்சம் கேள்விகளுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களது விழிமணிகள், கொஞ்ச நேரத்திற்குத் தங்கள் குழிகளுக்குள் அர்த்தமின்றி அங்குமிங்கும் நகர்ந்தன, அவை நின்ற பிறகு இருவரும் தமது புரிதலின்மையை வெளிப்படுத்தும் விதமாக தோள்பட்டையை குலுக்கிக் கொண்டனர். பிறகு, ஒரே சமயத்தில், தங்களது கழுத்துகளுக்கு வலியேற்படும் அளவிற்கு முகப்பழிப்புச் செய்து கொண்டே, தமது பார்வையை பார்ஸி இடுகாட்டில் […]

English

Incognito – Theivigan Panchalingam – Translated by G. Kamalakannan

ப.தெய்வீகன் · 16.05.20

1 Churches in Australia had requested the people to pray for the consolance of his soul, tolling at evening six, on the day of passing his Death penalty for Arulkumaran. 2 Thavaranjani was hitting the doors of the jailhouse hard, crying. Although, permitted duration for visiting Arulkumaran had ceased, she kept hollering with deafening voice […]

எழுத்து

இலட்சாதிபதி மாடல் – ஆஸ்கர் வைல்ட்

எஸ்.கயல் · 14.04.20

பணம் இல்லாத ஒருவன் அழகனாக இருந்து எந்தப் பயனும் இல்லை. காதல், பணக்காரர்களின் பிறப்புரிமையே தவிர வேலைவெட்டி அற்றவர்களின் தொழில் அல்ல. ஏழைகள் யதார்த்தவாதிகளாகவும் கற்பனைத் திறன் அற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அத்துடன் கவர்ச்சி மிகுந்த அதிகமான வருமானத்தை விட நிலையான வருமானம் மேலானது.  இவையெல்லாமே ஹுகி எர்கினால் எப்போதும் புரிந்து கொள்ளப்படாத நவீன வாழ்வின் பெரும் உண்மைகள். பாவப்பட்ட ஹுகி ஒன்றும் அவ்வளவு அறிவாளி இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அறிவுப்பூர்வமாகவோ கீழ்த்தரமாகவோ […]

எழுத்து

விட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் – தமிழில்: எஸ். ஆனந்த்

எஸ்.ஆனந்த் · 14.04.20

ரோம் நகரில் 1973 ஜூலை மாதம் விட்டோரியோ டி சிகா அளித்த நேர்காணல். கார்டில்லோ: உங்களுடைய நியோ ரியலிசப் படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டவை. பிறகு வண்ணப்படங்களும் எடுத்திருக்கிறீர்கள். வண்ணத்தில் படமெடுப்பது உங்களுக்குப் பிடிக்குமா? டி சிகா: இல்லை. பார்வையாளர்கள் வண்ணத்தை விரும்பினாலும் என்னைப் பொறுத்தவரை அது கவனத்தைத் திருப்பக் கூடியது. யதார்த்தம் என்பது கருப்பு வெள்ளையுடன் அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சாம்பல் வண்ண அடர்வுகள் சார்ந்தது. வண்ணம் மேலோட்டமானது; அதன் மீது எனக்கு அதிக […]

எழுத்து

ஃபயஸ் அகமது ஃபயஸ் கவிதைகள்

எஸ்.கயல் · 14.04.20

பேசு! ஏனெனில் உன்னிரு உதடுகள் சுதந்திரமாயுள்ளன. பேசு! உன் நாக்கு இன்னும் உன்னுடையதே. இந்த நிமிர்ந்த உடல் இன்னும் உன்னுடையது தான். உன் வாழ்க்கை இன்னும் உன்னுடையதே. கொல்லனின் சுடுகலனில் தழல் உயர்ந்தெழ இரும்பு சிவந்து ஒளிர பூட்டுகள் தங்கள் தாடையை அகலத் திறக்க, ஒவ்வொரு சங்கிலியும் எப்படி விடுதலையைத் தழுவுகிறது என்று பார். * அடர்வனத்துள் வசந்தத்தின் ரகசிய வருகையாக, பாலை மணற்துகளில் மென் தென்றலின் அடிச்சுவடுகளாக, நோய்மை ஒருவருக்கு எப்படியாகிலும் தரும் மன அமைதியைப் […]

எழுத்து

நல்லவனைக் காண்பது அரிது: A Good Man is Hard to Find – Flannery O’Connor

எஸ்.கயல் · 24.02.20

தன் ஒரே மகன் பெய்லியுடன் வாழ்ந்து வரும் பாட்டியம்மாளுக்கு ஊருக்குச் செல்ல விருப்பமே இல்லை. டென்னஸியில் இருக்கும் தனக்குத் தெரிந்த சிலரைச் சந்திக்கவே அவள் விரும்பினாள். பெய்லியின் மனதை மாற்றுவதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தாள். நாற்காலியின் நுனியில் அமர்ந்து மேசையின் மேலே செய்தித்தாளில் விளையாட்டுப் பகுதியை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகே சென்று தன் இடுப்பின் மீது ஒரு கையை வைத்தபடி இன்னொரு கையில் வைத்திருந்த சுருட்டப்பட்டிருந்த செய்தித்தாளால் அவனுடைய வழுக்கைத் தலையின் மீது […]

எழுத்து

கோ யுன் கவிதைகள் – தமிழில்: வே.நி. சூர்யா

கோகுல் பிரசாத் · 24.02.20

இவர் தென் கொரியாவின் முன்னணி கவிஞர். முன்னாள் பெளத்த துறவி. ஆசிய நிலக்காட்சிகள், பெளத்தம், கொரிய யுத்தத்தின் எதிரொலிகள் போன்றவற்றால் ஆனது இவருடைய கவியுலகம். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் அவருடைய “First Person Sorrowful” மற்றும் “What?: 108 Zen Poems” ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. பனிப்பொழிவு ஓராயிரம் வருடங்களுக்கு முன்பு நான் நீயாக இருந்தேன். ஓராயிரம் வருடங்களுக்குப் பின்பு நீ நானாக இருப்பாய். எல்லா காதுகளாலும் நாம் கேட்டுக் […]

எழுத்து

மென்மழை நிச்சயம் பொழியும்: ரே பிராட்பரியின் ‘There Will Come Soft Rains’

எஸ்.கயல் · 24.01.20

ஓய்வறையின் பேசும் கடிகாரம் பாடியது. ‘டிக் டாக்! ஏழு மணி! எழ வேண்டிய நேரம்! ஏழு மணி! எழ வேண்டிய நேரம்!’. யாரும் எழ மாட்டாரோ எனப் பயந்தது போலப் பாடியது. காலையில் வீடு வெறுமையாக இருந்தது. கடிகாரம் தொடர்ந்தது. “காலையுணவு உண்ணும் நேரம். ஏழு ஒன்பது, காலையுணவு உண்ணும் நேரம். ஏழு ஒன்பது” என்று கடிகாரம் திரும்பத் திரும்ப வெறுமையில் ஒலித்தது. சமையலறையில் இருந்த சிற்றுண்டி அடுப்பு உஸ்ஸென சீறலாகப் பெருமூச்சொன்றை எழுப்பி, மிகச் சரியாக […]

எழுத்து

கரைமணலும் அலைநுரையும் – கலீல் ஜிப்ரான் – தமிழில் : வெ. ஜீவானந்தம்

கோகுல் பிரசாத் · 24.01.20

நினைவு ஒரு சந்திப்பு மறதி ஒரு விடுதலை * சூரியன் அலைவது நாட்களாய் ஆனது நாட்களை அளக்க கடிகாரம் வந்தது ஓடும் வாழ்வில் மீண்டும் நாம் அதே நாளில் – அதே இடத்தில் சந்தித்தல் இயலுமோ? * வாழ்வின் நீதியில் நான் நம்பிக்கை இழக்கவில்லை. மென்துகில் மஞ்சத்தில் துயில்பவன் கனவும் கட்டாந்தரையில் கைவைத்துக் கிடந்தவன் கனவும் ஒன்றுபோலவே அழகானதாகவே இருக்கிறது. * மனிதனின் கற்பனைக்கும் அவனது சாதனைக்குமிடையே ஓர் இடைவெளி உண்டு. அவனது வேட்கையே அதை நிறைவு […]