Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

‘என் போராட்டத்தை’ எழுதுதல்: கருத்துப் பரிமாற்றம் – கார்ல் ஊவ் கினௌஸ்கார்ட்

தாமரை கண்ணன் · 24.12.21

தி நியூயார்க்கர் இதழின் இலக்கிய விமர்சகரான ஜேம்ஸ் வுட், நாவலாசிரியர் கார்ல் ஊவ் கினௌஸ்கார்ட் (Karl Ove Knausgård, Karl Oov K’Nouse-gaard அல்லது Karl Oov Kin-owss-gourd என உச்சரிக்க வேண்டும்) உடன் பொதுமக்கள் முன்னிலையிலான உரையாடலைக் கடந்த செப்டம்பர் மாதம் ஒஸ்லோ நகரில் நிகழ்த்தினார். மூன்றாவது வருடாந்திர நோர்வே அமெரிக்கன் இலக்கிய விழாவின் பகுதியாக இது நடைபெற்றது. அரச மாளிகைக்கு எதிரிலிருந்த ஒஸ்லோ இலக்கிய மையத்தின் பிரதான அரங்கில் இந்த உடையாடல் நிகழ்ந்தது. அரங்கின் […]

எழுத்து

மலரும் மணமும்: மலர்க்காணிக்கை – ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை

தாமரை கண்ணன் · 24.12.21

இயற்கையில் அவ்வளவு அழகு நிரம்பியதாக, தூய இதயத்தின் குறியீடாக, களங்கமற்றதாக, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக, ஒரு சின்னஞ்சிறிய மலரைவிட வேறு எது இருந்திட முடியும்? மகத்தான தெய்வீக அழகை, அன்பை, இசைவை எளிய ஒரு மலர்ப்படுகையை விட வேறு எது பிரதிபலிக்கும்? மலர்களின் புத்தொளிர்வும், சீர்மையும், மென்மையும் எப்படி மனிதர்களின் ஆழத்தை ஈர்க்கின்றன, எவ்வாறு உயிர்ப்பை அளிக்கின்றன! அத்தகைய மலர் கிழக்குலகைக் கவர்ந்ததில் ஏதும் வியப்புண்டா? இதற்கு இங்கு அளிக்கப்படும் இடம் எவ்விதத்திலும் மிகையானதன்று. மலர்கள் இங்குள்ளவனின் […]

எழுத்து

தேவருக்காக வேய்ந்த கூரை – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 26.11.21

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே எழுந்து கோவேறு கழுதையில் ஏறி வெட்டுக்கத்தியையும் சுத்தியலையும் கடன்வாங்குவதற்காக கில்லேக்ரூவின் வீட்டுக்குப் போனார் அப்பா. நாற்பது நிமிடங்களுக்குள் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் சூரியன் மேலே எழுந்து, நான் பாலைக் கறந்து தீனி வைத்துவிட்டுக் காலை உணவைச் சாப்பிடும் போதுதான் திரும்பி வந்தார். கோவேறு கழுதை வாயில் நுரை தள்ளியதோடு அதன் விலா எலும்புக்கருகே விக்கல் எடுப்பதைப் போலத் துடித்தது. “நரி வேட்டையாம் நரி வேட்டை. எழுபது வயது முதியவர். […]

எழுத்து

நன்மக்கள் – ஃப்ளானரி ஓ கானர்

எஸ்.கயல் · 25.11.21

தனிமையில் இருக்கையில் சலனமற்ற ஒரு முன்னோக்கு முகபாவனை, ஆட்களைக் கையாளும்போது பயன்படுத்துவதற்கென அப்படியே நேர்மாறான ஒன்று என இரு வேறுவிதமான முகபாவனைகளைத் திருமதி ஃப்ரீமேன் தன் கைவசம் வைத்திருந்தாள். அவளுடைய முன்னோக்கு முகபாவனை, நிதானமாக அதே சமயம் வேகமாக முன்னேறிச் செல்லும் ஒரு கனரக வகை டிரக் போன்றது. அவளுடைய கண்கள் இடமோ வலமோ திரும்பாமல் இருந்தாலும் வாசித்துக்கொண்டிருக்கும் சிறுகதையின் இடையில் ஒரு மஞ்சள்நிற அடிக்கோடிட்ட வாசகத்தைக் கண்டதும் நம் கவனம் அதன் மீது திரும்புவதைப் போலத் திரும்பக் […]

எழுத்து

வசீலி கிராஸ்மேன்: இருபதாம் நூற்றாண்டின் தல்ஸ்தோய் – ஆரோன் லேக் ஸ்மித்

கோ.கமலக்கண்ணன் · 25.11.21

சோவியத் ஒன்றியம் உதிரி எழுத்தாளர்களாலும் இதழாசிரியர்களாலும் நிறுவப்பட்ட அரசாங்கம் என்றே நினைவுகூரப்பட வேண்டும். வேறு சொல்லில் அதைக் கொடுங்கனவு என்றும் குறிப்பிடலாம். துண்டுப் பிரசுரர்கள், தன்னிச்சையான கொள்கையாளர்கள், விமர்சகர்கள், சிறு பத்திரிகை வெளியீட்டாளர்கள், கவன ஈர்ப்புக்காகக் கருத்திடுபவர்கள், திருட்டுக் கலைஞர்கள், தம்மைத் தாமே தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர்கள் என்று அழைத்துக்கொண்ட தோல்வியடைந்த கவிஞர்கள் – ஒருவரோடு ஒருவர் உரசி நித்தியமாகப் போரிட்டபடி இருக்கும் முழு முற்றான இலக்கியவாதிகள் ஆகியோர் அதன் பங்களிப்பாளர்கள்.  தொடக்க கால சோவியத் ஒன்றியத்தை நாம் […]

எழுத்து

தஸ்தாயேவ்ஸ்கியின் கலைத்தன்மை – பி.கே.பாலகிருஷ்ணன்

அழகிய மணவாளன் · 25.11.21

தஸ்தாயேவ்ஸ்கியின் நான்கு மாஸ்டர்பீஸ் நாவல்களான குற்றமும் தண்டனையும், அசடன், டெவில்ஸ் (The Devils), கரமசோவ் சகோதரர்கள் போன்றவற்றின் சிறப்பம்சம் அந்த நாவல்களில் உள்ள கடவுளின் இருப்பு சார்ந்த தேடல்கள்தான். இந்த நாவல்களில் உள்ள கடவுளின் இருப்பு சார்ந்த தேடல்கள் தஸ்தாயேவ்ஸ்கியின் உள்ளார்ந்த தொந்தரவைப் பிரதிபலிக்கின்றன, அதிலுள்ள கதாபாத்திரங்கள் அந்தத் தேடலை விவாதப்பொருளாக ஆக்குகின்றன. அது மட்டுமல்ல, அவரது நான்கு முக்கிய நாவல்களுமே கடவுளின் இருப்பு சார்ந்த கேள்வியின் உள்ளார்ந்த வலியிலிருந்துதான் உருவானவை, அந்த ஒரு கேள்வியின் தீவிரத்தால்தான் […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 1) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 25.11.21

1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள்.  ஒருவன் வித்தைக் குதிரையை ஓட்டுகிறான். நம்மால் அவனது முகத்தைக் காண முடியவில்லை. அவனது சப்பாத்துகள், தார்க்குச்சி, சாட்டை, விரைத்த கடிவாளம், நுரைதோன்றும் குதிரையின் வாய், அவ்விலங்கினை முன்னகர்த்தும் இயக்கம் ஆகியவற்றை மட்டுமே காண முடிகிறது. செவியில் குளம்படிகளின் மெல்லிய சப்தமும் வேகமாக உச்சரிக்கப்படும் குதிரையோட்டியின் ஆணைகளும் நம் செவியில் விழுகின்றன. அதன் பின்னர் நாம் ஒரு மென்குரலைக் […]

எழுத்து

கண்ணொடு கண்இணை நோக்கின் – ஆனந்த குமாரசாமி

தாமரை கண்ணன் · 25.11.21

சில உருவச்சித்திரங்களில் (portrait) கண்கள் பார்வையாளரை நேருக்குநேர் பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றும். அவர் ஓவியத்திற்கு நேராக இருந்தாலும், வலது அல்லது இடமாக நகர்ந்தாலும்கூட அவ்வாறே தெரியும். கிறிஸ்துவின் பல சித்திரங்களில் அவருடைய நோக்கு பார்வையாளர் எந்த இடத்திலிருந்தாலும் அவரைத் தொடுவது போலவும், எங்கு நகர்ந்தாலும் உடனே அவரைப் பின்தொடர்வது போலவும் தோன்றும். இதற்கு நல்ல உதாரணமாக குவெண்டின் மாட்ஸிஸ் (Quentin Matsys) வரைந்து ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரில் வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் முகத்தைக் (Christus Salvador Mundi) குறிப்பிடலாம். […]

எழுத்து

எலனாரின் இல்லம் – வில்லா கேதர்

இல. சுபத்ரா · 28.09.21

”அடுத்ததாக நீங்கள் ஃபார்ச்சூனிற்குச் செல்கிறீர்களா?” எனத் தொடங்கினாள் ஹாரியட். பதிலாக, தோட்டத்தின் ஒரு மூலையில் நீரூற்றின் அடிக்கிண்ணத்தில் இருந்த கசிவினை ஆய்ந்துகொண்டிருந்த ராபர்ட் வெஸ்ட்ஃபீல்டையும் ஹரால்டையும் நோக்கி அதிர்ச்சியான ஒரு பார்வையை வீசினாள் அப்பெண். அவ்வளவு நேரடியாக அப்படிக் கேட்டது குறித்து வருந்தினாள் ஹாரியட். ஏதெல் அதற்குப் பதில் கூறியபோது அது வார்த்தையாக அன்றி வெறும் காற்றாகவே வெளிப்பட்டது.  ”நாங்கள் பிறகு போய்க்கொள்ளலாம் என நினைக்கிறேன். அங்கே அவனுக்கு மிகச் சிரமமாய் இருக்கும், உங்களுக்குத் தெரியும்தானே? அங்கே அவன் சென்று […]

எழுத்து

இளம் பெண்ணொருத்தியின் ஒப்புதல் வாக்குமூலம் – மார்சல் ப்ரூஸ்ட்

எஸ்.கயல் · 28.09.21

“உணர்வுகள் இங்குமங்குமாக நம்மை அலைக்கழிக்கின்றன. ஆனால் அந்தத் தருணம் முடிந்ததும் நம்மிடம் என்ன மிஞ்சியிருக்கிறது? கழிவிரக்கமும் ஆன்மீகத்தில் வீணாய்க் கழிந்த நேரமும்தான். களிப்புடன் கிளம்பிச் செல்லும் நாம் பெரும்பாலும் சோகத்துடனேயே திரும்புகிறோம். அந்தியின் மகிழ்ச்சி விடியலின் மீது ஒரு இருளைப் பூசியது போலாகிவிடுகிறது. ஆக, உணர்ச்சிகளால் எழும் களிப்பு முதலில் நம்மைத் தற்பெருமை கொள்ள வைத்தாலும் இறுதியில் அது நம்மைக் காயப்படுத்திக் கொன்றுபோட்டுவிடும்.” -தாமஸ் ஏ கெம்பிஸ்: இமிடேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட், நூல் 1, அத்தியாயம் 18. “சுயநினைவற்ற நிலையில் பொய்யான […]

எழுத்து

முற்றத்துக்குள் நுழைந்த கோவேறு கழுதை – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 28.09.21

ஜனவரி மாத இறுதியில் ஒரு சாம்பல்நிற நாள் அது. மூடுபனியாக இருந்ததால் குளிர் தெரியவில்லை. ஏழைகளுக்காக அரசாங்கம் நடத்திய தங்கும் விடுதியில் இருந்து வெளியே வந்தாள் முதியவள் ஹெட். உரத்த குரலில் மகிழ்ச்சி ததும்பப் பேசிக்கொண்டே கூடத்தின் வழியாகச் சமையலறைக்கு ஓடினாள். எழுபது வயதிருக்கலாம். என்றாலும் ஊரில் உள்ள மணமுடிக்கும் வயதான பெண்கள் முதல் கிழவிகள் வரையில் எல்லோரையும் பிறந்தது முதல் நான்தான் வளர்த்தெடுத்தேன் என்னும் அவளுடைய கணக்குப்படி பார்த்தால் நூறு வயதிருக்கும், கூடவே ஒரே பிரசவத்தில் […]

எழுத்து

சவச்சீலை – முன்ஷி பிரேம்சந்த்

கோ.கமலக்கண்ணன் · 29.08.21

குடிசைக்கு வெளியே அணைந்து போன தீக்குழிக்கு முன்பாக தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். உள்ளே பேறுவலி கண்ட மகனின் இளம் மனைவி, புத்யா அவ்வப்போது இதயத்தைக் கிழிக்கும் கூரிய ஓலங்களை அவர்களுக்கு அனுப்பித் துணுக்குற வைத்தாள். அவள் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வோலமே அறிவித்தது. கடுமையான குளிர் இரவு. எங்கும் உறைவு நீக்கமற நிறைந்திருந்தது. அந்தக் கிராமத்தை இருள் மெல்ல மெல்ல மொத்தமாக விழுங்கியிருந்தது. ‘இவள் உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை’ என்றார் கிஷு. ’இந்த நீண்ட நாள் முழுவதும் […]