ஆகஸ்ட் மாத வெயில் சூடேறத் தொடங்கும் காலை வேளை. ஓரறை ஓட்டு
“பாப்பாவை எழுப்பிவுடுய்யா…”
“இன்னிக்கி பள்ளிக்கூடம் இல்லப்பாயி… வேலைக்குப் போறேன்…”
“இதுகள படிக்கவச்சி கரையேத்தலான்னு பாத்தா மாசக்கணக்கா பள்ளிக்கூடத்த மூடி போட்டுட்டானுங்க… நோவுநோவுன்னு ஊரே பதறிக்கெடக்கு. எட்டடியானுக்கு ஒரு பொங்க பூச வச்சி, ஊர்க்கெடா வெட்டி ஊருக்கு சோறு போட்டா எல்லாம் சரியா போயிரும். அத ஒரு பயலும் நெனக்க மாட்டிக்கிறான்…”
“நம்ம ஊர்ல மட்டுமில்ல எல்லா நாட்டுலயும்
“ஆமாண்டா… அவுகவுக சாமிக்குண்டானத செய்யனும்… இப்பிடியே பள்ளிக்கூடம், பஸ்ஸூன்னு எல்லாத்தையும் நிறுத்திப்போட்டா எப்படி பொழைக்கறது…” என்றபடி எழுந்து கதவில் சாய்ந்து அமர்ந்தது. மூன்றாவது வீட்டில் இருந்து செந்தில் சித்தப்பா குரல் கொடுத்தார்.
“டேய்… ஜீவா…”
“என்னப்பா…”
“முன்னாடியே போய் கலவைக்கு வேணுங்குற மணலு, தண்ணில்லாம் ரெடி பண்ணி வையி…”
“சரிப்பா…”
வாசலில் கிடந்த கல்தொட்டியில் தட்டைக் கழுவி அதன் மேலேயே வைத்து
வாசல் படலையைத் திறந்தவனிடம் அப்பாயி, “சாமி கும்பிட்டுட்டு போடா…” என்றது. தலையாட்டிக்
முடக்கு திரும்பியதும் ஆலமரம் எது அரசமரம் எது என்று தெரியாது பிணைந்து வளர்ந்திருந்த மரங்
“ரெண்டு உசுருல எதோ ஒன்னுக்கு துவட்டம்… வாதுகளப் பாருய்யா மாணிக்கம்…” என்ற சன்னாசி பாட்டா கண்களைச் சுருக்கிச் சுருக்கி மரத்தை உற்று உற்றுப் பார்த்து சுற்றி வந்தார். மணிக்கம் அய்யா ஒரே இடத்தில் நின்று பார்த்துக்
“எத்தனைக்கு நெருக்கிப் புடிச்சு சூரியனுக்கு வழிவிட மாட்டேன்னு நின்ன மரம், இப்ப ஆறு மாசமா பச்சை விட்டுப் போவுதுய்யா…”
சூரிய ஔி மரத்தின் கிளையிடுக்கு
“அடிக்கட்டையில கருப்படிக்குது.. ரெண்டுல எதுல பூச்சியடிச்சிருக்கோ தெரியல. அடித்தண்டு என்னமா இருக்குன்னு பாக்கணும். நானும் ஆறு மாசமா சொல்றேன். ஒருத்தனும் கேக்க மாட்டிக்கிறானுங்க…”
“ஆமாங்கய்யா, வுட்டுட்டா ரெண்டு மரமும் பாழாப்போயிரும்… வாதுகள வெட்டி விடணுன்னா உடுக்கைடியடுச்சு சாமி பாத்து ஒப்புதல் வாங்கணும். நீங்க ஒப்புதல் வாங்கிட்டு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.”
மீண்டும் மாணிக்கம் அய்யா கல்கட்டில் ஏறி மரத்தைச் சுற்றிவந்து தொட்டுத் தொட்டுப் பார்த்தார். மரத்தைத் தொட்டுக் கும்பிட்டு
“உசிர் புடிக்க நல்லா தெம்பு இருக்கு… பாத்து தேத்தி எடுக்க வழி சொல்றது எம் பொறுப்புங்கய்யா.”
இருவரும் பேசியபடி விலகி நடந்தார்கள்.
ஜீவா கல்கட்டின் படிகளில் மெதுவாக ஏறினான். வேல்களின் கீழ் இருந்த கல்லால் ஆன விளக்குமாடத்தினுள் இருந்த தீப்பெட்டியை எடுத்து கல்விளக்கைப் பொருத்தினான். தீபம் காற்றில் தடுமாறியது. தட்டைக்கல்லால் ஒரு பக்க
கைக்கூப்பி கண்களை மூடி நின்றான். துறையூர் மருத்துவர் சொன்னதை மனப்பாடமாய் மெதுவாக வாய்விட்டுச் சொன்னான்.
“அம்மா அப்பாவா என்னோட சாமி இருக்கு. இனிமே பயப்பட மாட்டேன். நல்லா படிப்பேன். நல்லா சாப்பிடுவேன். எல்லோரோடையும் பேசுவேன். பாப்பாவ பாத்துக்குவேன்…”
கண்களைத் திறந்
“விளக்கு ஏத்திட்டியா…” என்றபடி பார்வதி அக்கா வயலுக்கு எடுத்துச்செல்லும் சாப்பாட்டுக் கூடையை இறக்கி வைத்தாள்.
“கெணத்து வீட்டுக்கு சித்தாள் வேலைக்கு போறேக்கா..”
“அங்க என்ன வேல?”
“தெக்கால பக்கமா ஒரு ரூம் போடுறாங்க.”
“பாத்து நெதானமா செய்யி… பயப்படக்கூடாது… இந்த பூவ வேலுக்கு கீழ வையி…” என்று இரண்டு செவ்வந்திப்பூக்களைக் கொடுத்து
காரைத்தட்டில் மணலைத் தூக்கிவீட்டு வாசலில் குவித்தபின், பிளாஸ்டிக் பேரலில் தண்ணீர் பிடித்து வைத்தான். அந்த வீட்டு அம்மா வாசல்படியில் வந்து அமர்ந்தாள். வெள்ளையும் ஊதாவு
அம்மா இது மாதிரி ஒரு சேலை வைத்திருந்தது. ஊர்த் திருவிழாவின் கடைசிநாள். ‘தரங்குத்தலின்’ போது அந்தச் சேலையைத்
அம்மா சிரித்தபடி, “நீயே இந்த சேலைய கையோட வச்சிக்க. என்னடா ஆம்பளப்பய நீ…” என்று இழுத்து அணைத்துக்
“ஏ… பயலே… பள்ளிக்கூடம் போறதில்லையான்னு கேக்குறனே.. ஒன்னுமே சொல்ல மாட்டிக்கிற…”
அந்தம்மாவின் குரலால் பிடரியில் ஒரு கூச்சம் வந்து தள்ளிவிட்டதைப் போல விசுக்கென்று மனதிலிருந்து வெளியே வந்தான்.
“ப்ளஸ் டூக்கா…”
“வேலைக்கும் போவியா…”
“கரோனா லீவுலருந்து போறேக்கா…”
“சாப்பிட்டியா…”
தலையாட்டும் போதே சித்தப்பா வண்டியை நிறுத்தி இறங்கினார்.
“ரெண்டு ரெண்டா செங்கலை எடுத்துட்டு வந்து போடு…”
செங்கற்
“தண்ணி ஊத்துனது போதும்… கலவை கலக்கி வச்சிருக்கேன்… தூக்க முடிஞ்ச அளவுக்கு தூக்கிட்டு வந்து அங்க கொட்டணும்… எம் பக்கத்துல ஒருவாளி தண்ணி கொண்டாந்து வையி…”
“சரிப்பா…”
“நிக்காம மெதுவா செஞ்சா போதும்…”
“சரிப்பா…”
அவன் மெதுவாகக் கலவையையும் செங்கல்லையும் கொண்டுபோய் வைத்துக்
சித்தப்பா அலைபேசியில் பாட்டை ஒலிக்கவிட்டு கரணையைக் கும்பிட்டு வேலையைத் தொடங்கினார்.
சித்தப்பா பெஞ்சில் ஏறியதும் அவருக்குக் கீழ் காரைத்தட்டை கையில் ஏந்திக்
சத்தங்கள் குறைந்து அமைதியாக ஆக படிப்படியாக அவன் நெஞ்சு துடிப்பது அதிக

“கொஞ்சம் நேரம் ஒக்காரு…”
அருகே கிடந்த கருங்கல்லில் அமர்ந்
“இப்பெல்லாம் பாட்டு கேக்கறியோ… உங்க வூட்டு டீ.வியில பாட்டு சத்தம் கேக்குதே?”
தலையைக் குனிந்து
அவனைப் பார்த்து புன்னகைத்தபடி, “செல்லை எடுத்து அடுத்த பாட்டை மாத்து…” என்றார்.
‘வெற்றி வேலடா இது வீர வேலடா’ என்று பாடல் தொடங்கியது.
“இந்தப் படம் அப்ப அப்பிடி ஓடுச்சு. நானெல்லாம் ஒரு பத்துவாட்டியாச்சும் பாத்திருப்பேன். கோட்டப்பாளையத்துல சினிமா கொட்டாயி இருந்துச்சு தெரியுமா?”
“தெரியாதுப்பா.”
“இப்ப நெல்லு குடோனா இருக்கே அதுதான்..”
“அதுவா…”
“கொட்டாய் முன்னாடி எம்புட்டு எடம். பள்ளிக்கூட மைதானம் மாதிரி… சந்தனக் கலர்ல அந்த சினிமாக் கொட்டாயி ஜம்முன்னு இருக்கும்…”
‘மிதிபடும் நிலமெனப் பொறுப்பது காதல்’ என்று அலைபேசி தன்போக்கில் பாடியது.
“இந்த வரியெல்லாம் சினிமா கொட்டாயில கேக்கறப்ப அப்படி இருக்கும். ஒவ்வொரு தவண பேசறப்பவும் உங்க சித்திக்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன்…”
ஜீவா நிமிர்ந்து பார்த்
“தண்ணியெடு.”
தண்ணீர் குவளையுடன் நின்றான்.
“அப்ப என்ன வயசுங்கற. உன்னவிட ஒரு நாலு வருஷம் கூட இருக்கும்.”
மீண்டும் பாடல் வரி. சிரித்
“இத கேட்கறப்பெல்லாம் சக்தி மச்சான் கன்னத்துல ஒரு அறை விடணுன்னு தோணும்.”
“சக்தி மாமாவையா?”
“அது கல்யாணத்துக்கு முன்னாலடா… இப்ப மலையேறுனாலும் எம் மச்சான் வேணுல்ல…”
அவனே காரைத்தட்டில் கலவையை எடுத்துவந்து தண்ணீர் ஊற்றி வைத்து
“ஒருநாளு உங்க சித்தியும் நானும் நம்ம வேல் கோயில் மரத்துக்குப் பின்னாடி பேசிக்கிட்டிருந்ததை பாத்துட்டாங்க. உங்க சித்தி வூட்டுக்கும் நமக்கும் சரியான சண்டை. அன்னிக்கு ராத்திரி ஒரு மணிக்கு அதே கோயில் முன்னாடி தாலி கட்டிட்டேன்.”
ஜீவா நிமிர்ந்து விழிகளை விரித்
“ஆமாண்டா… சக்தி மச்சான் என்னைய அங்கியே வச்சு விளாசுனாம்பாரு. நாலு நாள் எந்திரிக்க முடியல.”
‘துளிதான் நெருப்பே.. அது காட்டை சுடவில்லையா’ என்று பாடல் முடிந்தது.
“இப்பெல்லாம் உங்க சித்தி போடற போடுல இந்தப் பாட்டெல்லாம் கேட்டிருக்க வேணாம்ன்னு தோணுது…”
ஜீவா முகம் மலர்ந்தது.
“சிரிப்பு வந்தா சிரிடா பயலே…”
“ஆனாலும் இந்தப் பாட்டை எப்பக் கேட்டாலும் புடிக்கும்… உங்க சித்தி என்ன வாங்குவாங்குனாலும் அவளத்தானே புடிக்குது. அது ஒரு பயித்தியக்காரத்தனம்டா…” என்றபடி செங்கல் சுவரின் மீது கலவையை அடித்து வீசினார்.
“பாட்டு பிடிக்கலையாடா… இந்த காலத்து பயலு
‘துளிதான் நெருப்பே காட்டை சுடவில்லையா?’ யாரோ சொல்லியது போல இருந்தது. யார் என்று யோசித்தபடி கலவைத்தட்டைத் தூக்கிக்
‘ஜீவா, மனசுக்குள்ள பயப்பட மாட்டேன்னு நீயே சொல்லிக்கணும். காலையில எழுந்திருச்சதும் கடவுள் முன்னாடி நிக்கிறப்ப, படுக்கறதுக்கு முன்னாடின்னு உனக்கு தோணும்போதெல்லாம் நீயே சொல்லிக்கணும். ஒரு வார்த்தை
பதினொரு மணிக்கு மேல் வீட்டம்மாள் தேநீரும் போண்டாவும் கொண்டுவந்தாள். அவனால் ஒரு கையில் டீ டம்ளரையும் மறுகையில் போண்டாவையும் வாங்க முடிய
“அந்தப் படியில ஒக்காருய்யா… டீ சூடா இருக்கு,” என்றாள்.
உட்கார்ந்ததும் படியில் டம்ளரை வைத்து
“கொஞ்சம் மெரளு
“ஒம் பங்காளி மவந்தானே… அப்பனாத்தா ரெண்டும் ஒன்னுக்கொன்னு ஆத்திரப்
“ஆமாக்கா… புருஷனும் பொண்டாட்டியும் அதுங்க கோவம்
“அவங்கப்பன பாத்தாப்ல இருக்கான்…”
“நம்ம என்ன பணங்காசு வச்சிருக்கமாக்கா… நம்ம வண்டியே இழுத்துப்பிடிச்சு ஓடுது. முடியாததுக்கு ஒன்னு ரெண்டு
“நீ என்ன பண்ணுவ… பயல தனியா வுடாம கூட வச்சிக்க போதும்…”
“நாளைக்கு லீவுக்கா….”
“வேலயை சுருக்க முடிச்சுக் குடுத்துருவேன்னு பாத்தா…”
“இவன துறயூர் பெரிய ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போணும்…”
“ஒடம்புக்கு என்ன?”
“டேய்… கட்ட செட்டியார் கடைக்கு போயி நம்ம கணக்குல ரெண்டு பஞ்சு வாங்கிட்டு வா..”
எழுந்து நடந்
“இந்த வயசுப் பயலுக்கு துள்ளல் இல்லையே…”
“ஆமாக்கா… இந்த வயசுலயே நெதமும் ராத்திரி மாத்திரை. ஒடம்பு என்ன பண்ணும்?”
“நெதமும் மாத்திரையா…”
“ஆமாக்கா… ஆயி அப்பன் செத்து ஒரு மாசத்துல பிள்ளை ராத்திரியானா திடீர்ன்னு எந்திரிச்சு அழுகவும் மெரளவுமா இருந்
“நல்லாருப்ப போ. என்ன ஏதுன்னு புரியாம நம்ம சனங்க பண்ற வேல…”
“அந்த டாக்டரு வைத்தியம் பாத்துட்டு இன்னொரு டாக்டருட்ட அனுப்புனாரு. அந்த மனுசன் ஐயாத்து தண்ணியாட்டமா அப்படி ஒரு மனுசன். அவரு
சாயங்காலம் வேலை முடியும் நேரத்தில் மணி கொத்தனார் வந்து நின்றார்.
“தர்மராசு வூட்ல ரெண்டு நாளு வேல இருக்கு. தொணைக்கு பயல அனுப்புறியா…”
“இல்லண்ணே… வெளியில வேலைக்கு இன்னும் அனுப்பல.”
“அதான் நல்லா வேல செய்யறானே… எங்கூடத்தானே…”
“இல்லண்ணே… சித்தாள்தானே வேணும்? நாம் பாத்து சொல்றேன்…”
“நீ மட்டும் சின்னப்பயல வேல வாங்கிக்கிடணுன்னு நெனக்கிற… டேய் வேலைக்கு வரியா நீ? சொல்லுடா…”
“சித்தப்பா சொன்னா வரேன்…” என்று சொல்லி
அவர் சென்ற பிறகு அந்தம்மாள், “ஏண்டா மணிக்கூட அனுப்பு… நாலு பேரோட பழகட்டும்,” என்றாள்.
“இல்லக்கா… பிற்பாடு அனுப்பிக்கலாம்…” என்றபடி சித்தப்பா பைக்கை எடுத்தார்.
கரணை, காரைத்தட்டுகளைக் கழுவி ஓரமாக எடுத்து வைத்து
“வேல முடிஞ்சுருச்சாய்யா…” என்றபடி வீட்டம்மாள் கையில் சிறு பையுடன் வந்தாள்.
“வூட்டுக்கு போயிட்டு வரேம்மா…”
“இந்தா இதுல தீனி இருக்கு. நீயும் பாப்பாவும் தின்னுங்க…”
“வேணாம்…”
“பெரியவங்க குடுத்தா வாங்கிக்கணும்..”
“இல்ல … வேணாம்.”
“உங்க சித்தப்பனுக்கிட்ட நாஞ்சொல்லிக்கறேன்..”
வாங்கிக்
திண்ணையில் அமர்ந்திருந்த பாப்பா ஓடிவந்து பையை வாங்கினாள். திண்ணையில் உட்கார்ந்து பிரித்தாள்.
சற்றுத் தள்ளி திண்ணையில் கிடந்த பாயில் படுத்து உடலை முறுக்கினான். உடலெங்கும் வலி. விட்டத்தைப் பார்த்

Beautiful
Salutations to Kamala Devi
Thanks