ஒரு கிழவியின் பழைய கண்ணாடியின் ஒடிந்த காலை மாட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது ஓர் ஆள் வந்து நின்ற மாதிரி இருந்தது. பக்கத்து வீட்டுப் பையன். ”ஆச்சி உடனே வரச் சொல்லிச்சி.”
நாதன் நிமிர்ந்து, “ஏம்லே.. என்ன விஷயம்?” என்று கேட்டான். பையன், “தெரியலை, உடனே வரணுமாம்” என்றான்.
நாதன், “கிழவி, போட்டுப் பாரு… பார்ப்போம்” என்று கண்ணாடியைக் கொடுத்
“இருக்கிறதை கொடு.”
அவள் தனது சுருக்குப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைத் தேடியெடுத்துக் கொடுத்தாள். அதில் விபூதி வாசம் அடித்தது. பையன், “உடனே வரணுமாம்” என்றான் மறுபடியும்.
நாதன் தத்தளித்
“ஏலேய்.. கடையில கொஞ்சம் நிக்கியா? நான் போயி என்னன்னு பார்த்துட்டு வாரேன்.”
அவன், “ஹுக்கூம். எனக்குப் படிக்கணும்” என்று ஓடிவிட்டான்.
அந்த நேரம் பார்த்து சரம் போட சரோஜம் வந்தாள்.
“ஏய் சரோஜம், கடைல கொஞ்சம் இரி. வீட்ல அம்மை எதுக்கோ கூப்பிடுதா. போய்ப் பார்த்துட்டு இந்தா வந்துடுதேன்.”
“ஆத்தாடி… இதைப் பத்தி எனக்கென்ன தெரியும்? என்னை உட்கார வைச்சிட்டுப் போனா?”
“ஒன்னும் தெரிய வேண்டாம். ஓனர் இந்தா போயிருக்காரு… வந்துருவாருன்னு யாரும் வந்தா சொல்லி உட்கார வை. நீ சிரிச்சிக்கிட்டே சொன்னா யாரு தப்பிச்சுக்க முடியும்?”
அவள், “அது சரி” என்றாள். முகத்தில் இலேசாக புன்னகை ஏறியது. “சீக்கிரம் வந்துடு. எனக்கு இன்னும் ஆறு கடை இருக்கு.”
“இதோ வந்துடறேன். பெரும்பாலும் எனக்கு நெஞ்சு கரிக்காப்ல இருக்கு.. குல்கந்து வாங்கியா, அஞ்சால் வாங்கியான்னு சொல்லக் கூப்பிடுவா. இந்தப் பையன்கிட்ட ஒரு ரூபா கூட கொடுத்தா வாங்கிக் கொடுப்பான்.”
“காந்திமதி அம்மைக்கு அந்த ஒரு ரூபா கொடுக்க மனசு வராதுல்லா?” என்றாள் சரோஜம்.
2
“ஏலேய்.. இந்த லட்சுமி சனியன் மதியம் பனிரெண்டு மணிக்கு டைப் ரைட்டிங் கிளாசுக்குப் போறேன்னு இறங்கிப் போனது. இன்னும் வரலைலே… நானும் இப்போ வருவா, அப்போ வருவான்னு இருந்தேன்.”
நாதன் தளர்ந்து அமர்ந்து
“என்ன சொல்லுதே? மதியம் நான் சாப்பிட வந்தப்ப ஒன்னுமே சொல்லல?”
“எதுவும் பிரண்டு வீட்டுக்குப் போயிருப்பான்னு நினைச்சேன்.”
“அங்கே போகலியா?”
“அவ போகக்
“பட்டப்பகல்ல யார் கண்லயும் படாம எங்கே போயிருப்பா?”
“டைப் கிளாசுக்கு பத்து நாளா வரலியாம்..”
“அவ ரூம்ல பார்த்தியா?”
“பார்த்தேன். கொஞ்சம் துணிமணி மட்டும் எடுத்துட்டு போயிருக்கா. கைல கால்ல போட்டதோட போயிருக்கா.”
நாதன் மெதுவாய் எழுந்து அவள் அறையைத் திறந்து பார்த்
நாதன், “யாரு?” என்றான்.
“யாரோ? நான் தலைதலையா அடிச்சிக்கிட்டேன். உனக்கு இவளுக்கு ஒரு பையனைப் பிடிச்சிக் கொண்டுவரத் துப்பில்லே. உங்க அப்பா செத்ததோட இந்த வீட்டோட சீவன் போச்சி.”
அம்மை புலம்ப ஆரம்பித்தாள்.
நாதன், “இப்போ நிறுத்தப் போறியா இல்லியா? அப்பா இருக்கும் போதுதானே அந்த ஜான்ஸ் காலேஜ் பையனோட பாபநாசத்துக்கு ஓடிப்போயி பிடிச்சிட்டு வந்தீங்க? என்னமோ ஒழுக்க மயிரா பேசுறே? ஒரு பொட்டைப் புள்ளையைச் சரியா வளர்க்கத் துப்புண்டா? எங்க.. உனக்கே மார்னிங் ஷோவும் மேட்னி ஷோவும் பார்க்க நேரம் சரியா இருந்திச்சி.”
அம்மை புலம்புவதை நிறுத்தி
“இனி என்ன அசிங்கம்? இன்னேரம் அந்தப் பய போயி எல்லா இடமும் சொல்லிருப்பான். எங்கே போயிருக்கான்னு மட்டும் தெரிஞ்சா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.”
3
கடைக்குப் போகும்போது சரோஜம் தவித்துப் போயிருந்தாள். “ஏய்.. என்ன இவ்வளோ நேரம் ஆக்கிட்டே? மூந்தி கறுத்துப் போன பிறகு யாரு பூ வாங்குவா?”
நாதன், “போய்த் தொலை” என்றான்.
சரோஜத்தின் முகம் சுருங்கியது. “என்ன அக்கா வாயில வரா?” என்றாள்.
நாதன் தாழ்வான குரலில், “இந்த லட்சுமிப் புள்ளை இல்லே? காலைலருந்து வீட்டுக்கு வரலியாம். யார் கூடயோ போயிடுச்சு போலிருக்கு” என்றான். “யாருன்னு தெரிஞ்சா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். இது கொஞ்சம் பேக்கு. விவரம் பத்தாது. அதான் பயமா இருக்கு.”
சரோஜம், “அய்யோ” என்றாள். பிறகு, “நீ ஒன்னும் கவலைப்படாதே. எல்லாம் சரியாயிடும். நான் உன்கிட்ட வேற ஒன்னு சொல்ல வந்தேன்.”
“என்ன?”
“பெரிசா ஒன்னுமிலே. கோலார்ல இருந்து இது லெட்டர் போட்டிருக்கு. அடுத்த பத்தாம் தேதி இங்க வருதாம். இந்த தடவை கட்டாயம் கூடப் போகணுமாம்.”
நாதன், “ஓ!” என்றான்.

“அது ஒன்னுமில்லே. நீ மண்டையைப் போட்டு உடைச்சுக்காத. நான் கொஞ்சம் விசாரிச்சிப் பார்க்கேன்.”
4
இரண்டாம் மாலை வரை எந்தத் தகவலும் இல்லை. அம்மா, ‘சாத்தான் குளத்தில அவ பெரியம்மா வீட்டுக்குப் போயிருக்கா’ என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சமாளித்துக்
உடலெல்லாம் இரத்தக் கோடுகளுடன் லட்சுமி இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கிடந்தாள். அப்பா ஒன்றுமே சொல்ல
சாகும் முன்பு ஹைகிரவுண்டில் சேர்த்திருந்தது. “முழுக்க குணமாகிட்டாரு. நாளைக்குப் போயிடலாம்” என்று டாக்டர் சொன்ன அன்றிரவு அவனைக் கூப்பிட்டு, “சரியாயிடுச்சின்னு நர்ஸ் சொல்லுதா. இல்லை, நான் பொழைக்க மாட்டேன். எனக்கு இந்த லட்சுமிப் பிள்ளையை நினைச்சாத்
ஆனால் இந்தக் கணத்தில் அவனால் லட்சுமியை, அப்பாவை, அம்மாவை வெறுக்காமல் இருக்க முடிய
அம்மாவின் அண்ணன் வந்து போலீசுக்குப் போகக்கூடாது என்று சொல்லி
மூன்றாம் நாள் மாலை சரோஜம்
அவள், “ஆமா” என்றாள்.
“இவ எங்கே அவனோட? அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சில்லா?”
“ஒரு புள்ளைகூட இருக்கு.”
அவன் மறுபடியும் நம்ப முடியாதவனாய், “இவ எப்படி அவனோட?” என்றான்.
“இந்தி படிக்கறேன்னு போனாள்லா? அவன் வீடு இந்தி மாஸ்டர் வீட்டுக்கு அடுத்த வீடுதான்”.
நாதனுக்குக் கடும் சினம் எழுந்தது. “இவளுக்கு எதுக்கு இப்போ இந்தியெல்லாம்?” என்று கேட்ட அம்மாவிடம், “சும்மா இரு. வீட்லெயே கிடந்து டிவில சினிமா பார்த்துப் பார்த்து ஆனை மாதிரி ஆயிட்டிருக்கா” என்று அவன்
சரோஜம், “இப்போ என்ன பண்ணப் போறே?” என்றாள்.
அவன், “என்ன பண்றது? எல்லோருமே தேவடியாளா இருக்கீங்க!” என்று வெடித்
அவன், “போடி.. பெரிய பத்தினியாட்டம்” என்றான். அவள் சட்டென்று எழுந்து பூக்கூடையை எடுத்துக்
5
இதே கேள்வியை இரவு அம்மாவும் கேட்டாள். அவன், “என்ன செய்யணும்?” என்றான். அவள், “என்னலே.. பொட்டை மாதிரி என்ன செய்யணும்னு என்னைக் கேக்கே? போயி பொடதில நாலு போட்டு வீட்டுக்கு இழுத்துட்டு வாலே” என்றாள். “இழுத்து வந்து….?” என்றான் அவன். “அவளாத்தானே போயிருக்கா?”
“அது உனக்குத் தெரியுமா? அந்தப் பய ரொம்ப கிருத்திரம
நாதன் மறுநாள் மாமாவையும் கூப்பிட்டுக்
அந்த வீடு உச்சிமாகாளி அம்மன் கோவிலுக்கு இடதுபுறம் இருந்த தெருவில் இருந்தது. முதலில் வாடகைக்கு வந்து பிறகு வீட்டு ஓனரிடம் பிரச்சினை பண்ணி மிரட்டி தங்கள் பெயரில் வாங்கிவிட்டதாக மாமா சொன்னார். “இவனுங்க கையில போய் இந்தப் புள்ளை மாட்டிக்கிட்டிருக்கு. நீ என்ன பண்ணிட்டிருந்தே? புடுங்கிட்டிருந்தியா? உனக்குப் பூக்காரியோட சரசம் பண்ணவே நேரம் சரியா இருந்திருக்கும்.”
நாதன் விதிர்த்து விழிக்க, “தெரியாதுன்னு நினைக்காதே. ஊருக்கே தெரியும். பண்ற தப்பை மறைவா பண்ணவும் துப்பில்லை.”
தாழ்வாரத்தை அடுத்து ஒரு மேடை மீதிருந்த நாற்காலி போன்ற அமைப்பில் அமைந்திருந்தது வீடு. கீழே அடிபம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்த நடுவயதுப் பெண் இவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் தொடர்ந்து தண்ணீர் அடித்துக்
“பால்சாமி வீடுதானே இது?”
“அது இருக்கட்டும். நீங்க ஆரு?”
“நாங்க.. நான் லட்சுமியோட அண்ணன்.”
“லட்சுமி யாரு?”
நாதன் திகைத்
“லட்சுமி… லட்சுமி இங்கே இருக்கான்னு சொன்னாங்க.”
“யாரு சொன்னா?”
அந்த அம்மாள் வெற்றிலையை மெல்லுவதை நிறுத்தி
“சொல்லு தம்பி, யாரு சொன்னா? சும்மா திடீர்னு ஆம்பிளங்க இல்லாதப்ப வந்து உன் வீட்டுப் பொண்ணு இங்கே இருக்குன்னு சொல்றியே? எங்க வீட்டு ஆளுங்க வந்தா என்ன ஆவும் தெரியுமா?” என்றவள் திரும்பி, “ஏய்.. என்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்கே? பின்னால போயி தண்ணியை மாட்டுக்கு ஊத்து. சும்மா கோழை வடிச்சிட்டு நிப்பா” என்று அந்தப் பெண்ணிடம் சீறினாள். அவள் அவசரமாகக் குடத்தைத் தூக்கிக்
இப்போது அவள் மாமாவின் பக்கம் திரும்பி, “அய்யா பெரியவரே, நீங்க சொல்லுங்க”.
மாமா கையெடுத்துக் கும்பிட்டு, “அம்மா எங்க வீட்டுப் பொண்ணை மூணு நாளாக் காணோம். இங்க இருக்குன்னு ஒரு தகவல் கிடைச்சது, இருந்தா பார்த்து ஒரு வார்த்தை பேசிட்டுப் போயிடறோம். வீட்ல நிம்மதியா யாரும் ஒரு வாய்த் தண்ணி குடிச்சி மூணு நாளாச்சி. தயவு பண்ணுங்க. அவ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா போறும்.”
“என்னவே பேசுதீரு? உம்ம வீட்டுக் கழுதை ஓடிப்போயிட்டா தெருவில போயித் தேடும்வே. இல்லே எங்கியாவது கிணத்துல குளத்தில எட்டிப் பாரும். என் வீட்ல ஏறிச் சாடுதே? உன் நல்லவேளை. என் வீட்டுக்காரரும் பயலும் இருந்தாம்னா உங்க இரண்டு பேரு காலு கையை முறிச்சிருப்பான்”.
மாமா வெலவெலத்து
“வே இரும்வே… உன் மன்னிப்பு மயிரை உடைப்புல போடும். இப்போ நீங்க பண்ணதுக்கு அபராதம் என்ன?”
இருவரும் ஏறக்குறைய வெளியே ஓடிவந்தார்கள். மாமா, “எலே.. யார்லே சொன்னா இந்த தகவல்? நீ சொன்னது சரியானதுதானா? நீயும் உன் தங்கச்சியும் என்னையும் சேர்த்துக் குழில இறக்கிட்டுத்
நாதன் வேதனையுடன் என்ன செய்வதென்று தெரியாமல் உச்சிமாகாளி கோவிலின் முன்பு நின்றான். கோவில் பூட்டிக்கிடந்தது. உள்ளே இருட்டில் ஒன்றும் தெரிய
அப்போது அந்தப் பெண்ணைப் பார்த்
6
ஐந்து இலட்சம் கேட்டார்கள். அவர்கள் நியாயம் விநோதமாய் இருந்தது. “எங்க பையன் மனசைக் கெடுத்ததுக்கு” என்றார்கள். “விஷயம் தெரிஞ்சதும் அவன் தூக்கில தொங்கப் போயிட்டான். உங்க பொண்ணு ஏற்கனவே ஒரு பையனோட ஓடிப்போச்சாமே? அவளுக்கு இப்படி அறியாப் பையங்
நாதன், “என்கிட்ட அவ்வளவு பணம் இல்லியே ஐயா.”
“இந்தக் கடை இருக்கே? அதை வச்சி கடன் வாங்கிக்கொடும். பொண்ணு வேணுமா இல்லியா?”
அவர்
லட்சுமியின் கண்கள் அதற்குள் குழி விழுந்து, முடி பஞ்சாகி, உச்சி மாகாளி அம்மன் கோவிலில் பார்த்த காய்ந்த பூச்சரம் போலாகியிருந்தாள். யார் கண்களையும் பார்க்காமல் தரையில் எதையோ தேடுவது போன்ற எலிப்பார்வை வந்து
7
நீண்ட நாட்கள் கழித்து கடையைத் திறக்கும்போது ஏதோ பெரிய வியாதிக்காக ஆஸ்பத்திரியில் நிறைய நாள் இருந்து
அவனைப் பார்த்ததும், “என்ன ஆச்சரியமா இருக்கு… பகல்லியே தைரியமா வந்துட்டே?” என்றபடி எழுந்தாள். நாதன் திண்டில் நின்றபடியே, “லட்சுமியைக் கூட்டி வந்துட்டேன்” என்றான். அவள் தூணைப் பிடித்தபடி சிரமத்துடன் மேலே எழ முயன்றாள். “கொஞ்சம் கைகொடு” என்றாள்.
“காப்பி குடிக்கியா?”
அவன், “வேணாம்” என்றான். “அன்னிக்கி உன்னைக் கண்டமானிக்கு பேசிட்டேன்” என்றான்.
அவள், “விடு” என்றாள். “பால் இல்லியே… கடுங்காப்பி போடட்டா?”
“என்னை மன்னிச்சிடு சரோ.”
“விடுங்கறேன்.”
அவன் பாய்ந்து சென்று அவள் இதழ்களைக் கவ்வினான். கையை அவள் சேலைக்குள் செலுத்தினான்.
அவள் மெல்ல விலக்கி, “கொஞ்ச நாளைக்கி முடியாது” என்றாள். அவன் ஏன் என்பது போலப் பார்க்க, “நாளு தள்ளிப் போச்சி. நாப்பது நாளு. அதான் அன்னிக்கு உன்கிட்ட சொல்ல வந்தேன். நடுவில உனக்கு இந்தப் பிரச்சினை. முந்தா நேத்தி
அவன் அதிர்ந்து, “நம்முதா?” என்றான். அவள், “ம்ம்ம்… தெருவில போறவனுடையது. அதான் சொல்லிட்டியே தேவடியான்னு.”
அவன் தளர்ந்து நாற்காலியில் அமர்ந்
அவன், “ஆமா முடியாது” என்றான். “என்னால எதையுமே பத்திரமா வச்சுக்க முடியாது” என்றான். “ஏன்னா.. நான் ஒரு பொட்டை”.
“ஏய்.. என்ன இது? ரொம்ப டென்ஷனா இருக்கியா? வேணும்னா வாயில பண்ணிவிடவா?” என்று வேஷ்டிக்குள் கைவிட்டு அவன் ஆண்குறியை எழுப்ப முயன்றாள். அது சுருங்கிக் கிடந்தது.
“நான்தான் சொன்னேனே? நானொரு பொட்டை” என்றான் அவன்.

Good One