
மானசீகன்
மானசீகன் (இயற்பெயர்: முகம்மது ரஃபீக், பிறப்பு: 24 ஜனவரி 1980) தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் இலக்கியப் பேச்சாளர். உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பல தளங்களில் எழுதிவரும் இவர், மரபு மற்றும் நவீன இலக்கியம் சார்ந்து தொடர்ந்து சொற்பொழிவுகளும் ஆற்றி வருகிறார். மூன்றாம் பிறை, மேகலை ஆகியவை இவரது நாவல்கள். ‘அன்றில் இலக்கிய சுற்றம்’ அமைப்பின் வழியாக இலக்கிய நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
