எஸ்.எல். பைரப்பா

எஸ்.எல். பைரப்பா

எஸ்.எல். பைரப்பா (சாந்தேஷிவரா லிங்கண்ணையா பைரப்பா) (Santeshivara Lingannaiah Bhyrappa) (ஆகஸ்ட் 20, 1931 - செப்டம்பர் 24, 2025) கன்னட இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவர். எழுத்தாளர், நாவலாசிரியர், விமர்சகர், திரைக்கதை எழுத்தாளர். தற்கால கன்னட இலக்கியங்களான நவோதயா, நவ்யா, பண்டாயா, தலித் போன்ற எந்தவொரு குறிப்பிட்ட வகையிலும் இவருடைய இலக்கியம் பொருந்தாது. இவர் தத்துவம், மெய்யியல் சார்ந்த யதார்த்தவாத, இயல்புவாத அழகியல் கொண்ட படைப்புகளை எழுதினார்.