
க. மோகனரங்கன்
க. மோகனரங்கன் (பி. 1967) தமிழின் நவீன கவிஞர், சிறுகதை எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். 1987ஆம் ஆண்டு கணையாழி இதழில் கவிதை எழுதி இலக்கிய உலகில் அறிமுகமானார். நெடுவழித்தனிமை, மீகாமம், கல்லாப் பிழை, இடம் பெயர்ந்த கடல் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். நவீன தமிழ்க் கவிதை குறித்த விமர்சனத்திலும் மொழிபெயர்ப்பிலும் இயங்கிவருகிறார். கவிஞர் ஆத்மாநாம் விருது உள்ளிட்ட இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
