நினைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் ஊசலாடுபவை மோகனரங்கனின் கவிதைகள். காலத்தின் பிரவாகத்தில் கைவிட்டு ஒழுகிச் சென்ற நொடிகளைத் தேடித் துழாவும் இந்த கவிதை
இரகசியம்
குன்றின் மீது
ஒலிக்கும்
கோயில் மணியோசை
அறுவடை முடிந்த வயல்
குறுக்காகக் கடக்கிறது
நான்
மறந்த ஒன்றைத்
திரும்ப நினைக்கிறேன்.
கல் திறந்த கணம்
பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடி யோசைக்கு
சடசடத்துப் பறந்தன புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப் பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண்திருப்ப
காதில் விழந்தது
நூறு நூறு வருடங்கள் கடந்து உளியின் ஒலி.
வலியறிதல்
பார்த்த
வண்ணமிருக்க
வெடித்த நிலத்தில்
விழுந்த விதை
செடி
மரமென
பொழிந்த மழைக்கு
தழைந்தது
நிழலுக்கு
இறங்கிய
மரங்கொத்தி ஒன்று
கழுத்தை வாகாய் சாய்த்து
நிறுத்தி
நிதானமாய்
துளையிடுகிறது
இதயத்தை
குடையுமந்த
வலி
அப்படியொன்றும்
அதிகமுமில்லை
அப்படியொன்றும்
குறைவுமில்லை.
உறங்காப் பத்து
1
என்
கண்ணும் கருத்தும்
கூடிக் குறித்து நிற்க
குறுகத் தரித்தவுன்
சிறு தனங்களினும்
பெருந்தக்கது
பிறிதொன்றியேன்
திருவே!
பித்தூறிப்
பீதிக் கனவுகள் பெருகிக் கனத்தயென்
மத்தகம் குத்தியடக்கும்
அங்குசமும்
அவையேயென அறிந்து
ஐம்புலனும் அவிந்தொடுங்க நின்முன்
நிறையழிந்து நின்றேன்.
2.
ஏதிலார் போல்
நோக்கும் தொழில் ஒழித்து விருப்போடுன்
விழி மேவும் திசை
பார்த்திருந்தேன்
காத்திருந்த கணங்கள்
கல்லாகி உறைய
கடுத்த வதனத்தில்
கனிவேது மில்லை
விட்டு விலகிடவும்
விதி கூடவில்லை.
மத்திடைப் பட்ட தயிராய்
புத்தியில் திரிபடும்
நினைவுகள்
பரந்து கெடும்
இவ்வுலகியற்றியானும் அளவறியான்
கரவுற்ற நெஞ்சின் நோவு
3
கல்லாப்பிழையும்
கருதாப் பிழையுமென
எளியேன் கணக்கில்
இது மட்டும் கூடிய
எல்லாப் பிழையும்
இட்டு
எரித்தாற் போலும்
சிவந்து கனலுமுன்
சிற்றடி
சதமெனப் பற்றினேன்
பிறவிப் பெருங் காமத்திற்கு
மருந்து மற்றவையில்லையென
மதி தெளிந்தேன்.
மோகமுற்று முகம் புதைத்தேன் அள்ளியெடுத்து முத்தம் தீர்த்தேன் உன் மத்த களி கொண்டு
உயிரார அவற்றிற்கு
ஊழியமும் புரிந்தேன்.
கண்மறையும்
என் பாதையிருளில்
எப்போதும் எரியும்
விளக்காகிறது
விமோசனி!
நின் பாதங்கள்.
4.
ஊர்
உறங்கும் யாமத்
அடிகாணா ஆழத்தில்
கனவுகள் நீந்தி
விளையாடிட
விழித்திருக்கும்
என் மனம்
புழுவேறிய
தூண்டில் முள்ளென
உன் நினைவு மிதக்கும்
துன்பக் குளமடி.
5.
இமை தாழும்
உனது கண்நோக்கு
என்றேனும்
எனைக் களவு கொள்ளுமென
நடை வழி நின்றேன்
உள்ள மனக் குரங்காட்டி திரிமென
உளவறிந்து ஏறிட்ட
உனது புருவங்களினடியில் பளபளத்த பார்வை
இமை வெட்டிச் சாய்க்க
சதை கிழிந்து சரிந்த குலை ஈரலின்றும் பீறிட்டு வழிந்தது பிசுபிசுத்த திரவமாய்
நின் மெலிந்த
தேகத்தை
கரந்த யென் காமம்
6.
பித்தம் வடிந்து
பிரமை கலைந்து
பேதலித்த புத்தி
ஆடாது நிற்க
அதன் நடுவே
மண் நீர் தீ வளி வானென
அனைத்துமாகி நிற்கும்
போதப் பொருளே
மெத்தப் பல கற்றும்
உன்னையறியும்
ஓரறிவை
அறியாது குறைபட்டேன்
7.
கண் தொட எட்டி
கை பட எட்டாது நழுவும்
உனதுடலை
உச்சரிக்கத் தித்திக்குமொரு சொல்லாக்கி
உள்ளுக்குமுள்ளே
கிடத்தினேன்
உருவேறத் திருவாகிய
அச் சொல்
திறந்தேகிய
உருவங்கள் ஓராயிரம்
உன் தீராச் சாயல்
ஆரத்தழுவியே
ஆலிங்கனம் செய்திட
உடல் கொள்ளாது
உயிர் கொதிக்கும்
கடிவாளம் உதறியெழுந்த
குருதியின் குளம்புகள்
நாளங்
தலை கீழாய்
8.
ஓயாது துடிக்கும்
நாடிக்கும் நடுவே
யாதிட்டும் நிறையாத
ஊசி முனைப் பள்ளம்
ஒன்றிருந்து
வாதிக்கும் உயிரை
வழியும்
புறங்கழுத்தின்
கூந்தல் பற்றிக்
குனிந்து வுன்
உச்சி முகர்ந்து
உடல் மணம் தேடி
உள்ளிழுக்க
நிறையுமப் பள்ளம் என
நினைத்து,
கூடுபிரிந்தே
மேவியெழுந்த என் ஆவியுனைக்
கூடி முயங்கிய கோலம் ஒன்றினையும்
கூற வாய் துணியேன்!
ஆலம் உண்ட கண்டனாய்
நாவை எரித்து நிற்கும்
அந் நினைவு
9
அந்தி தொறும்
ஒளியணைந்து பிறக்கும் அரையிருளில்
இரை தேடி
மறைவிடம் விட்டு வரும்
நினைவுகள்
பிளவுண்ட நா நீட்டித்
தொடப் பரவும்
உடல் முழுவதும் மயக்கம
சருமத் துளைதொறும்
உருகிக் கசியும்
உயிர்த் தைலம் பற்றி
உந்திச் சுழியில்
மூண்ட தீ
திசுக்கள் யாவற்றையும்
தின்றெரிய
வெந்தடங்கும்
எலும்பும் நரம்பும் கூடி
சதை சொண்டு
எழுந்தாடிய விரகம்
நிசி முழுதும்
கலைந்த படுக்கையில்
கனலும் சுடலை காத்து
விடியவும்
எஞ்சிய சாம்பலை
நுதலில் நீரெனப் பூசி
எழுவாய் காளீ!
10
முன்னைப் பேறின் தவத்தால் என்னையின்று யிங்கு
ஆட் கொண்டாய்
எண்ணம் போல்
ஆட்டு வித்தாய்
பின்னைப் பிறவி
அன்னை! அன்னை!
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.
வாசம்
தன்
தலையில்
துளி சரத்தைக்
கிள்ளிவைக்க
ஏன் தோன்ற
சாய ஏதுவாகச்
சுவரிலிருந்து சற்றுத்
தள்ளயமர்ந்து
முன்கிடக்கும் குவியலின்றும்
ஒவ்வொன்றாகத் தொட்டெடுத்துப்
பூக் கட்டும் பெண்ணையே
பார்த்தபடியிரு்ககிறேன்.
காற்றில் இறகுகளைப் போல்
அலைகிற
அவளது கைவிரல்
அழுந்தப் பற்றி
ஒரு கணம்
ஆழ முகரவேண்டும் போலிருக்

நடைவழி
இரண்டு கால்களும்
இரண்டு கைகளும்
எவ்வளவு உழைத்தும் போதவில்லை
ஒரு வயிற்றுக்கு
அதைச் சுமந்து
அவர்கள் நடையாய்
நடந்து
பசியிலிருந்து துாக்கத்திற்கு
பிழைக்கவந்த இடத்திலிருந்து
பிறந்த ஊருக்கு
அவநம்பிக்கையிலிருந்து விதிவசத்திற்கு
கருப்பபையிலிருந்து கல்லறைக்கு
ஒலியற்றதொரு
சலனப் படமென
அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்
எனக்கோ
அவர்
என்ன நடக்கிறதென
யோசிக்கவும் முடிய
திருவிளையாடல்
நெஞ்சு வெடித்துச்
சாகப் போகுமுன்
அவன் கேட்டான்
“என் தெய்வமே
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?”
காதில் விழாதது போல
பாவனை செய்த கடவுள்
கடமையே கண்ணாக
தனது அடுத்த
அற்புதத்தை நிகழ்த்த
புதியதொரு
பூஞ்சையான இதயத்தை
தேடத் தொடங்கினார்.
வானின் கீழ் தனியர் யாருமில்லை
அன்று
கர்த்தருள் நித்திரை அடைந்த
சகல ஆத்மாக்களையும்
அவர்தம் சந்ததியினர்
நினைவு கூறும் திருநாள்.
ஊரிலிருந்து
நேரத்தோடு வரமுடியாத
தமக்கை,
தாமதமாகிவிட்ட பதைப்புடன்
தம் பெற்றோரின்
நினைவிடத்தை அவசர
கழுவித் துடைத்துக்கொண்டிருக்க,
அம்மட்டும்
பொறுத்திருக்க முடியாத
தங்கையானவள்
அருகிலிருக்கும்
அடையாளம் தெரியாத
ஒவ்வொரு மேடை மேலாகவும்
ஓடியோடி ஒரு பூவை
வைத்து வணங்குகிறாள்!
மெழுகுத் திரியைப்
பொருத்தும்முன்
எங்கே இவளென
திரும்பி நோக்கும் மூத்தவள்
தங்கையின் காரியத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறாள்
அவள் விழிகளிரண்டிலும்
தாய்மையின் தயை பெருகுகிறது.
இதோ வருகிறேன் என்பதாக
அங்கிருந்தபடியே அக்காவிடம் சைகை காட்டியவள்
கையிலிருக்கும்
கடைசி மலரையும்
கல்லறை ஒன்றின் மீது கிடத்தி
மூச்சிரைக்க ஓடிவந்து
முழந்தாளிட்டு வணங்கத் தொடங்குகையில்
அவளது தலைக்குமேல்
தனிப்பெரும் கருணையென கவிந்திருக்
எல்லையற்ற வானம்.
என்பிலது
அன்பெனப்படுவது
ஆயுளுக்கும் நீளும் மூச்சுக்குழாய் அல்ல
அறைந்து மூடப்பெறும் கதவிடுக்கில்
அசந்தர்ப்ப
அகப்பட்டுக்கொள்ள நேரிடும்போது
அறுந்துவிடக் கூடிய
மெல்லியதொரு பல்லி வால்
அவ்வளவே.
அதற்கும் மேல்
அழுதும் புரண்டும்
ஆற்றாது புலம்பிட
அதில் ஒன்றுமில்லை.
துண்டிக்கப்பட்ட கணத்தில்
துள்ளத் துடித்
மெல்ல அத் தவிப்பு அடங்கிவிடும்.
தப்பிச்செல்லும் முனைப்பில்
பிறப்பிலிருந்தே ஒட்டிக்கொண்டிருந்த
உறுப்பொன்றை
ஒரேயடியாக இழந்துவிட்டோமே
என்கிற
ஒரு கணப் பரிவைத் தவிர,
உதிர்த்துவிட்டுப் போன உடலுக்கு
வாலைக் குறித்த வருத்தமெல்லாம்
பெரிதாக இருக்க நியாயமில்லை.
காலப்போக்கில்
மீளவுமொன்று புதிதாக
வளரும் போது
வடுவோடு அந்த கெடுநினைவும்
வலி மரத்துப்போயிருக்கும்.
கிழக்கிருத்தல்
அம்மாவுக்கு நான்
அடிக்கடி வந்து பார்ப்பதில்லை
என்று என்மீது குறை.
எப்போதும் உடனிருப்பார்
என்று நம்பிய அப்பா
இடையிலேயே
இல்லாமல் போய்விட்டார்.
சகோதரர்களோடு பெரிதாக
சச்சரவு ஏதுமில்லை.
காதலைச் சொன்ன பெண்
யாரையோ கல்யாணம் செய்து
நிறை வாழ்வு வாழ்கிறாள்.
உற்ற நண்பர்கள்
ஒரிரண்டு பேர் உண்டு
அவர்களும் அவ்வப்போது காணாமல்போய்
திரும்ப வருவார்கள்.
வேலை செய்யும் இடத்
வேற்றுமை பாராட்டுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
வீடு வேறு வழியில்லாமல்
என்னைச் சகித்துக்கொள்கிறது.
தெருவிலும் ஊரிலும்
தெரிந்தவர்களைக் காட்டிலும்
தெரியாதவர்கள் அதிகமாகி
கடவுளுக்கு யாரும்
பயந்து நடக்கிற மாதிரி தெரிய
கடற்கரையைப் போல
கோவில்களிலும் நல்ல கூட்டம்.
எதைப் படித்
எப்போதோ படித்த நினைவு.
இப்போதெல்லாம்
குழந்தைகளைக் கொஞ்சுகையில்
அசட்டுத்தனம் மேவி
கண்களில் நீர் துளிர்த்துவிடுகிறது.
அந்தியில் மறைகிற சூரியனை
அசந்தர்ப்ப
உற்ற ஒருவரின் சடலம்
மயானத்தில் எரிவது போலிருக்
நெற்றுக்குள் முற்றிடும் விதையென
எல்லாவற்றின் மீதும் பட்சமின்றிப்
படர்கிறதொரு பற்றின்மை.
இருப்பினும்
இன்னும் பிரிக்கப்படாததொரு
பரிசுப் பொதியைப்
ஒவ்வொரு நாளையையும்
அனுமானம் எதுவும் கொள்ளாமல்
அவிழ்க்க முற்படுகிறேன்.
ஐந்து நட்சத்திரங்
நித்தமும்
உறக்கத்தில் வேறாக
உலகம் இயங்கும்போது தலைகளுக்கு மேல் எழும் கனவு
உன்னின்
கன்னிமை பற்றியதொரு கதையினை ஊர்வாய்
புனையும் முன்
பிறந்தவுடன் இரகசியமாய் நெரித்துக் கொன்ற
கள்ளப் பிள்ளையென்
மல்லாந்த முகம்
மறக்கவேண்டி
நினைவின்
நெறிகட்டிய முலைகளை
நிலம் நனைய நனையப்
பீச்சிடும்
தாயும் நீயே.
★
மனதின் புரியை
முறுக்கிப் பின் தளர்த்தும் முன்னிரவுக் காலங்
மோகமும் வடிந்து கொடுங்கனவு
யாமமும் கடந்து
மெல்லெனவே பயின்று
வந்ததொரு சந்தியில்
உறக்க விழிப்பினிடையே
கண்டேன்
கொலுசு வரை செய்த
வண்ணச் சீரடிகளிரண்டினை குற்றமுணர் யென் வன்நெஞ்சில் உதைத்தொரு பாதம் எழ
நினைவின் தூளியில்
ஆடி உயர்ந்து
ஆகாயம் தாண்டி
அண்டசராசரமும்
மறுபுறம் தொட்டு மீ
ளும் பிள்ளைச் சிறுமகளும் போல்வாய் நீ.
★
கவிழ்த்துக்
காலமுதறும் கணங்கள்
கல்ப கோடியுள்
யதேச்சையின் கைபட்டுத் தெறிக்குமொரு நிகழ்வின் திவலையில்
அருகருகாகக் கூடும்
வாழ்வு நமதில்
சிகை கழிந்து
என்பிலதன் கூட்டிலுலர்ந்து
தோல் தொங்க
தொந்தி சரிந்து
சாயக் கிடக்கும் சடலமுனதின் அடிவயிறு மூளத் தீக் கொணரும் தலைப் பிள்ளையும்
நானேயாவேன்.
★
தடியூன்றி கால் தயங்கி
எடுத்து வைக்குமொரு அடியாய் நிதானித்து நகரும் நாளொன்றில் பித்தமூறிக் கசந்த உதடுகள்
உணர்வு மேலீட்டில் நடுங்கிட
உச்சி முகர்ந்துன்
மேடிட்ட வயிற்றின் வரிகளை மந்தித்த பார்வை வருட
பிள்ளைச் சூல் தந்தனுப்பிய
பின் வீட்டின் வெறுமைக்குள் தளர்வுற்று நுழையும்
வயோதிகத் தந்தையும்
நான்.
★
உனதூனுடல்
உடைந்தூறிப் பெருகும் பேராறு சுழித்தோடித் தேங்கும்
நினைவின் கடல் முகத்தில்
மிதந்து மெல்ல ஏகுமென்
ஏமப்புணை
தந்தையும் மகளுமாய்
மகனும் தாயுமாய்
சரீரம் கொள்ளும்
பாவனைகளைக் கீறி
உள்ளுக்குள் ரத்தம் ருசிக்கும் ஆன்மாவோ
புறத்தே பேசி நடிக்கிறது
பிரிவின் தீராத வாதையை
சுகமென.
★
எதிர்கொள்ளல்
ஓடு உடைந்த
நத்தை ஒன்று,
தான் ஊர்ந்து செல்லும்
தடத்தில்
முள்ளெலி ஒன்றை
எதேச்சையாக
எதிரிடுகிறது.
ஒரு கணம் நின்று
ஒன்றையொன்று
உற்றுப் பார்த்த பின்
இரண்டும்
தத்தமது திசையில்
தொடர்ந்தேகின.
அன்றைய உறக்கத்தில்
மிருதுவான சருமத்தோடு
மெத்தென்ற கட்டிலில்
முள்ளெலி படுத்திருக்க,
நத்தையின் கனவையோ
முட்கள் குத்தி கிழித்தன.
ஈற்றடி
மனமுடைந்து நீர்தளும்பும் கண்களோடு,
நீ திரும்பிப் போகையில் வழிமறித்துத் தடுத்திருக்கலாம்! தேறுதல் வார்த்தைகள்
சொல்லவும் கூடத் தோன்றாது
திகைத்து நின்று
மரம் போல்.
அது ஆயிற்று வெகுகாலம். இப்போது, இலைகள் உதிர்ந்து கிளைகள் முறிந்து பட்டைகள் தளர்ந்து
அடியோடு சரிகிற காலமும் விரைவில் வரும்!
அப்போது, சாவகாச
உன் திசை நோக்கி ஓடி ஓய்ந்திருக்கும் வேர்களை;
அவற்றில் ஒட்டியிருக்கும் மண்துகள்
அறுத்து அடுக்கியபிறகு
அடித் துண்டில் வரிவரியாய்ச் சுழித்துக்கிடக்கும் வட்டங்
வைரம் பாய்ந்திருக்
நெஞ்சு வேகும் மட்டும்
நின்று நிதான
அணுக்கம்
எனது
ஆயுள் பரியந்தம்
நீந்தினாலும்
கடக்கமுடியாத
கடலுக்கு அப்பால்
அக்கரையில்
நிற்கிறாய்
நீ
நினைத்தால்
நிமிடங்
நீர்மேல் நடந்துவந்து
காணும்படிக்கு
இதோ இக்கரையில்
இருக்
நான்.
பிராயம்
அப்படியே
என்பது அம்மா
எவ்வளவோ மாறிவிட்டேன் என்கிறாள் மனைவி
தொட்டுப்பேசக் கூசுகிறான் வளர்ந்துவிட்ட மகன்
நீயே பார்த்துக்கொள் என்று
காதோர நரையைக் காட்டுகிறது கண்ணாடி
இடுப்பிலிருந்து இறங்கப் பார்க்கும் கால்சட்டையை
ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி மறுகையால் பையில் உருளும் கண்ணாடி கோலிகளைத் தொட்டெண்ணும் சிறுவன்
எனது விரலுக்குச் சிக்கியும் மனதுக்குத் தப்பியும்
நடுவில் சில நழுவிப்போய்விட முழுதாய் ஒருமுறையும்
பின்னமின்றி
எண்ணி முடிக்க
இன்னமும் நான்.
காலகண்டன்
எனக்கு
நான்தான் வெல்லக்கட்டி
ஒரு கடி
கடித்துக்
எல்லாக் கசப்பையும்
விழுங்கிக் கொண்டிருக்
இம்மை
என்பிலதனைக் காயும்
நண்பகல் வெய்யில்
உனதன்பு.
பிறகும்
பிழைத்திருக்க வேண்டிப்
பிடி நிழல் தேடி
நெடுக அலையும்
உடலின் தவிப்பு
இவ் வாழ்வு.
திரவியம்
மனம் மறுகி
நான் நின்ற பொழுது
தனதேயான அருவ விரல்
உனது அந்தரங்க
ஒரு வாசனைத் திரவியம் போல உள்ளம் முழுவதுமாய்
அள்ளிப் பூசிக்
அத்துயர இரவு
பரிமளிக்கச் செய்தேன்!
இன்றோ எனது செவிகளின்
கேள் எல்லைக்கப்பால்
எங்கோ எட்டாத தொலைவுக்கு விட்டகன்று போனாலும்
உனது குரலின்
குறையாத நறுமணத்தை
எண்ணும் போதெல்லாம் தன்னைப்
நினைவு.
அன்புடமை
அன்பு என்பது
வேறொன்றுமில்லை
மதுரம்
நான்
ஒவ்வொரு முறையும்
உங்களுக்குப் பருகத்தரும்
தேநீரில்
அது ஒரு சிட்டிகை
கூடுதலாகவோ
குறைவாகவோ
அமைந்துவிடுகிறது
அரிதாக
அன்றொருநாள்
அளவாகக் கலந்து வைத்து காத்திருந்தபோது
நீங்கள் தாமதித்து வந்ததால் ஆறிப்போய்விட்டிருந்தது.
அன்பு என்பது
பருக முடியாத
துயரமும்
