புதினங்கள் புதிது
2021ம் ஆண்டின் இறுதியில் புதிய நாவல்கள் சில வெளியாயின. அவற்றுள் ஆர்.சிவகுமாரின் ‘தருநிழல்’, லாவண்யா சுந்தர்ராஜனின் ‘காயாம்பூ’, தூயனின் ‘கதீட்ரல்’, கிருஷ்ணமூர்த்தியின் ‘பாகன்’ ஆகிய நான்கு நாவல்களை வாசிக்க முடிந்தது. தருநிழல், பாகன் இரண்டு நாவல்களுக்கும் சில பொதுத்தன்மைகள் இருந்தன. இரண்டுமே தந்தை-மகன் உறவை மையப்படுத்தியிருந்தவை. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் இந்த உறவுநிலையில் எந்த வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் குறிப்புணர்த்தியவை. சித்தரிப்பில் புறவயமான அணுகுமுறையைக் கொண்டிருந்தவை. நேரடியான சம்பவங்களாலன்றி நினைவுகூறல் உத்தியைக் கொண்டு அமைக்கப்பட்டவை. அளவில் […]
