Category: எழுத்து

எழுத்து

நோய்நோக்கு

த. கண்ணன் · 01.07.23

1 திட்டமின்றி மின்னோடைவெளியில் உலவிக்கொண்டிருந்த ஓர் இரவு, When They See Us (2019) தொடரின் முதல் பகுதியைப் பார்க்கத் தொடங்கினேன். எப்போதோ கோகுல் பிரசாத்தின் பரிந்துரைப் பட்டியலில் கண்டு என் விருப்பப் பட்டியலில் சேர்த்தது. உண்மையிலேயே உலுக்கிவிட்டது. தொலைக்காட்சி வரலாற்றில் மிகச்சிறந்த ஒரு மணி நேரம் என்று பல தொடர்களின் பகுதிகளைக் குறிப்பிடுகிறார்கள். இப்படம் அவ்வரிசையில் எளிதாக இடம்பிடிக்கத் தகுந்தது. சமூக அக்கறையுடன் செயல்படுவதில் கலையின் சாத்தியங்களை விரிவுபடுத்திக் காட்டுகிற தொடராக இதைக் காண்கிறேன். உண்மை […]

எழுத்து

இலையுதிர் காலத்து மழை

கமல தேவி · 01.07.23

இந்த இரவு என்றில்லை, ஒவ்வொரு இரவுமே இப்படித்தான் இருக்கிறது. இரவைக் கழிக்க வேண்டும், பகலைக் கடக்க வேண்டும். இரவில் என்னவாகும் என்று இந்த நகரத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் பதற்றம். சாமானிய மக்களின் தினப்படி வாழ்வில் அரசியல் தீவிரமானால் அந்த நாட்டு மக்கள் நல்ல வாழ்க்கை வாழவில்லை என்று அப்பா சொல்வார். அப்பா கொந்தளிப்புகளை விரும்பாத மனிதர். இளம் வயதில் அவர் மீது எனக்கு அத்தனை எரிச்சல் இருந்தது. என்ன மனிதர் இவர்? சப்பாத்திகளும் வெண்ணெயும் முட்டைகளும் மேசையில் […]

எழுத்து

தூய அடிபணிவின் மகிழ்ச்சியற்ற தருணங்கள்: மாஜிதாவின் ‘பர்தா’

ஜிஃப்ரி ஹாசன் · 01.07.23

முஸ்லிம் பெண்களின் ஆடை (குறிப்பாக பர்தா, அபாயா போன்ற ஆடைகள்) குறித்த பார்வைகள் முஸ்லிம் சூழலில் தூய அடிபணிவிற்கான மதப் புனித ஆடையாகவே கருதப்பட்டு வருகிறது. அதன் மீது எந்தவொரு மாற்றுப் பார்வையும் ஏற்புடையதல்ல எனும் கருத்துநிலை தீவிரமாக உறைந்துள்ள ஈழத் தமிழ் முஸ்லிம் சமூக அமைப்பிலிருந்து எழுந்த மாஜிதாவின் பர்தா ஒரு புதிய உடைப்பாகக் கவனத்தை ஈர்க்கும் படைப்பு முயற்சியாகத் தோன்றுகிறது. சென்ற வருடம் வெளியான தமிழ் நாவல்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகப் பிரதிகள் […]

எழுத்து

தாள அமைதி

கார்த்திக் நேத்தா · 01.07.23

1. ஏதோ ஒன்று சிறுகச் சிறுகக்  கற்கண்டை உண்ணும் சில்லெறும்பாகத் தன்னுணர்வைத் தின்னுகிறது ஏதோ ஒன்று. தின்னத் தின்னக் குறையும் தன்னுணர்வு அவ்விடத்தில் நிறையும் ஏதோ ஒன்று. இப்போது இருப்பது  உருண்டு திரண்ட ஒப்பற்ற ஒன்று. எல்லாவற்றையும் தின்றுவிட்ட ஏதுமற்ற ஒன்று. எல்லாவற்றையும் தின்ற பிறகே எதிர்ப்படும் ஒன்று. தன்னைத் தான் சுரந்து தன்னில் தான் திளைக்கும் தன்னற்ற ஏதோ ஒன்று. * 2. அந்தி ஒளி பசந்த அந்தியில் சன்னலோரம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சூலுற்ற […]

எழுத்து

யாதவப் பிரகாசர்

சரவணன் சந்திரன் · 31.01.23

கால்பந்து மைதானத்திற்கு அருகில் இருந்த கேலரியின் படிக்கட்டுகளில் அமர்ந்து, உடலை வளைக்கும் பயிற்சிகள் செய்தபடி, தூரத்தில் ஹாக்கி மைதானத்தில் எங்களுடைய பயிற்சியாளர் அகஸ்டின், தனியாக மைதானத்தில் மட்டையால் பந்தை வலதுபுறம் தள்ளி மறுபடி இடதுபக்கம் வெட்டி இழுக்கிற பயிற்சியை மறுபடி மறுபடி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். சாதரணமானதுதானே என்று தோன்றலாம். அது அப்படியில்லை. வலதுபுறத்துக்குப் பந்தைத் தள்ளும்போது வலது காலும் அங்கே பறந்து, பிறகு காற்றிலேயே இடதுபுறத்துக்கு வந்து ஊன்றியவுடன் இடது காலும் சேர்ந்து திரும்புகிற பயிற்சி. பறவையொன்று […]

எழுத்து

அனாகத நாதம்

செந்தில் ஜெகன்நாதன் · 30.01.23

முகூர்த்த நாள் என்பதால் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சுப காரியங்களுக்குச் செல்லும் பயணிகளால் தளும்பிக்கொண்டிருந்தன. நிலையத்தில் இருக்கும் வேப்ப மரத்தடியில் இளம்பெண்ணொருத்தி தன் எதிரில் நின்றிருந்த மனிதரிடம் கரங்களை அசைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அணைசு இல்லாத நாதஸ்வரம் போல நீண்டிருந்த ஜடை அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் துள்ளிக்கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சாமிநாதனின் கவனத்தைக் கலைப்பதைப் போல வந்த ஆரன் சத்தம் கேட்டு முகத்தைத் திருப்பினான். சிதம்பரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து மிகுந்த வேகத்துடன் […]

எழுத்து

அந்தக் கிச்சிலி மரத்தடியில்

கமல தேவி · 30.01.23

நீண்ட மரத்திண்டின் மீது யுவான் தன் சிவந்த மெல்லிய இடது கரத்தை அழுத்தி ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றான். அந்தச் சிறுவீட்டின் வடக்குப்புறமாக இருந்த கணப்பினுள் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தின் தண்ணீரிலிருந்து ஆவி எழுந்தது. அவனுடைய தாய் அதை இரும்பு இடுக்கியால் பற்றி எடுத்து கோப்பையில் ஊற்றும் ஒலி அவனுக்குத் தனித்துக் கேட்டது. அந்த ஒலியைக் கேட்டபடி தன் வலது கரத்திலிருந்த இழைப்பு உளியால் ஓக் மரத்தின் தண்டைச் சீவிக்கொண்டிருந்தான். மரச்சீவல்கள் சுருண்டு சுருண்டு விழுந்தன. சுருண்டு விழும் மரச்சீவல்களில் […]

எழுத்து

ஹேம்லட் – ஷேக்ஸ்பியர்

கோ.கமலக்கண்ணன் · 30.01.23

கெர்ட்ரூடும் பொலோனியஸும் நுழைகின்றனர். பொலோனியஸ் அவர் இங்கு வரும்போது அவரைத் துருவிக் கேட்டு நிலைமையை அறிய முயலுங்கள். அவரது வீண் விளையாட்டுகள் அரசரைச் சினமூட்டியதாகச் சொல்லி, அவருக்காக நீங்கள் பல துன்பங்களைத் தாங்கி வருவதாகவும் வருந்துங்கள். நான் இங்கேயே அமைதியாகக் கரந்து நிற்கிறேன். அவருடன் நேரடியாகப் பேசுங்கள். ஹேம்லட் (மேடைக்கு வெளியிருந்து) அன்னையே! அன்னையே! கெர்ட்ரூட் கவலை வேண்டாம். நீங்கள் சொன்னபடியே செய்வேன். உடனே ஒளிந்துகொள்ளுங்கள். அவன் வரும் ஓசை கேட்கிறது. (பொலோனியஸ் மறைய ஹேம்லட் நுழைகிறான்.) […]

எழுத்து

பேரழகி

கண்மணி குணசேகரன் · 30.01.23

தெருவெல்லாம் மாவிலைத் தோரணங்கள் கட்டி ஊரே விழாக்கோலம் பூண்டிருந்த மாரியம்மன் கோயில் சாகை. முதல் நாள் சாகை ஊற்றி சாமி ஊர்வலம் முடிந்து மறுநாள் தெருக்கூத்து. வாடிக்கையாய் ஆடுகிற வேகாக்கொல்லை சின்னதுரையை விடுத்து மேல்பாதி மாணிக்கம் சமாவிற்குப் பாக்கு வைத்திருந்தார்கள். இந்தப் பக்கத்திற்குப் ‘புது சமா’ என்பதால் சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்து சனங்கள் கூத்துப் பார்க்க வந்திருந்தார்கள். செயக்கொடி, ஆசைத்தம்பியை இட்டுக்கொண்டு தெய்வீகமும் கிளம்பிவிட்டாள். தெருவில் அரவம் அடங்கி கிழக்கத்திக் காற்றில் கூத்து ஆரம்பித்ததின் அடையாளமாகத் தாள மத்தாளச் […]

எழுத்து

பெண் உகந்த பெரும்பித்தன்

கரு. ஆறுமுகத்தமிழன் · 30.01.23

திருப்பள்ளி எழுச்சி பாடல் 4 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்துஅரு ளாயே! இறைவரை உறக்கம் நீங்கி எழச் சொல்லித் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறோமே, முதலில் இறைவருக்கு உறக்கம் உண்டா? அவர் உறங்கினால் அல்லவா அவரை எழுப்புவதற்கு என்று கேள்வி […]

எழுத்து

உன் யாதுமாகிய நான்

க. மோகனரங்கன் · 30.01.23

அடர்ந்த கானகத்தின் நடுவே – ரியோகன் அடர்ந்த கானகத்தின் நடுவே அமைந்திருக்கிறது எனது குடிசை; அங்கே ஆண்டுதோறும் நீண்டுவளர்கின்றன பசுமையான கொடிகள்; அரிதாக ஒலிக்கும் விறகுவெட்டியின் பாடல்களைத் தவிர, மனிதர்களைக் குறித்த கதைகள் ஏதும் காதில் விழுவதில்லை; சூரியன் பிரகாசிக்கும்போது எனது உடைகளைச் சீர்செய்கிறேன்! நிலவு ஒளிரத் தொடங்குகையில் கவிதைகளை வாசிக்கிறேன்! அர்த்தத்தை நீங்கள் அறிய விரும்பினால், அவற்றைத் துரத்திப்போவதை நிறுத்திவிடுங்கள்! * சிறுவனும் முதியவரும் – ஷெல் சில்வர்ஸ்டீன் சிறுவன் சொன்னான், “சில நேரங்களில் நான் […]

எழுத்து

உடையாது காத்திருந்த குமிழிகள்

பாலா கருப்பசாமி · 30.01.23

எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அமுதா ஆர்த்தியின் பருந்து சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினான்கு சிறுகதைகள் உள்ளன. ஆம்பக்காய் சிறுகதையைத் தவிர மற்ற எல்லாக் கதைகளுமே அருமையாக உள்ளன. இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை என்று எதையும் தனித்துச் சொல்வது சிரமம். ஆனாலும் சைக்கிள் சவுட்டு, நெகிழிக் கனவு, அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும் ஆகிய கதைகளை நான் முன்னிறுத்துகிறேன். சைக்கிள் சவுட்டு கதை ஊரில் நான்கு நாட்கள் நடக்கும் சைக்கிள் சவுட்டு (தொடர்ந்து சைக்கிள் விடுவதும் அதை […]