Category: மதிப்புரை

எழுத்து

ரூஹ் : வரலாறும் நாவலின் நிகழ்காலமும் அல்லது அதிர்ச்சி மதிப்பீடுகளும் புரட்சி பிம்பங்களும்

தர்மு பிரசாத் · 24.01.20

தமிழின் நவீனத்துவத்தை மீறி வந்த நாவல்களில் கட்டற்ற போக்கும் மொழிப் பிரவாகமும் இருந்தன. வரலாறும் நிகழ்காலமும் கதைச் சரட்டினால் இணைக்கப்பட்டு படைப்பூக்கத்துடன் விவாதிக்கப்பட்டன. நாவல்கள் கடலில் கரைந்தழியும் ஆற்று நீராக இல்லாது வரலாற்றுள் மிதக்கும் எண்ணைக் கழிவுகளாக இருக்கும்படி புனையப்பட்டன. அதனால் நவீனத்துவத்தைப் பீடித்திருந்த ‘அன்றாடத்தின்’ சோம்பல் நிகழ்வுகளை வரலாற்றின் விரிவுடன் நாவல்களில் கையாள வேண்டியிருந்தது. உத்தி என்றில்லாமல் நிகழ்காலத்திற்கு வரலாற்றின் ஒரு தொடர்ச்சியையும், விவாத நோக்கையும் படைப்பூக்கத்துடன் இணைக்கும் நாவல்களில் ஆழமும், உள்விரிவும் கூடி வருகின்றது. […]

எழுத்து

காலமேடையில் சப்தமிடும் சொற்கள் – நெற்கொழு தாசன்

கோகுல் பிரசாத் · 24.01.20

பெருந்தேவியின் “பெண் மனசு ஆழம் என 99.99 சதவீத ஆண்கள் கருதுகிறார்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து. சமூகத்தின் அசைவுகளுக்கிடையில் உந்தப்படும் மனிதன் அந்தப் பாடுகளை எழுதிவிடுதல் என்பது இன்று நேற்றல்ல, காலங்காலமாக தொடரும் ஒரு நிகழ்வு தான். மனித வாழ்வின் போக்குகளை மாற்றியமைத்த ஒவ்வொரு சம்பவங்களின் முன்னும் பின்னுமாக புதிய ஒழுங்குகளும் ஒழுங்கமைவின்மைகளும் நிகழ்ந்தேறியிருந்தன. அதையே இலக்கியங்களும் பிரதிபலித்தன. அவற்றில் சில கலையாகின. சில பிரச்சாரங்களாயின. இன்னும் சில தங்களுக்கான இடங்களைக் கோரி கூவி அழைத்துக் கொண்டே இருக்கின்றன. நவீனத்தின் பின்னான ஊடுபாய்ச்சலில் […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை – இன்று: அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும் – சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 27.12.19

சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. சென்ற பகுதி தூயனின் கதைகளைப் பற்றி அமைந்திருந்தது. ‘ஒளிர் நிழல்’ நாவலின் வழியாக தமிழ்ச் சூழலில் கவனம் பெற்ற சுரேஷ் பிரதீப் தொடர்ந்து ஊக்கத்துடனும் தெளிவுடனும் எழுதி வரும் இளம் எழுத்தாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அவரது சிறுகதைகளைக் குறித்தது இந்த இரண்டாம் பகுதி. பதினைந்து கதைகளைக் கொண்ட […]

எழுத்து

அமுதம் எழும் தருணம் : சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ நாவலை முன்வைத்து

சுரேஷ் பிரதீப் · 27.12.19

தமிழில் குழந்தைப் பேறின்மை சிக்கலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவுகள் பல உள்ளன. குள்ளச்சித்தன் சரித்திரம் மற்றும் மாதொருபாகன் சமீபத்திய உதாரணங்கள். இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்கக் கூடிய நாவல்கள். குள்ளச்சித்தன் நேர்கோடற்ற தன்மை கொண்ட நாவல். மாதொருபாகன் ஒரு யதார்த்தவாத நாவல். ஆனால் இரண்டு நாவலும் ‘பரிகாரம்’ என்ற ஒரு புள்ளியில் இணைகின்றன. குழந்தைப் பேறின்மைக்கு மருத்துவரீதியாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் நம்முடைய மனம் இந்த புறவயக் காரணங்களால் திருப்தியுறுவதில்லை. குழந்தைப் பேறினை ஒரு […]

எழுத்து

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 27.12.19

“சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளைத் தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக […]

எழுத்து

பருவ மழையுடன் ஒரு பயணம்

எம்.கோபாலகிருஷ்ணன் · 27.12.19

அலெக்ஸாண்டர் ஃபிரேடர் புகழ்பெற்ற பயண எழுத்தாளர். லண்டனில் வசிப்பவர். இம்பீரியல் ஏர்வேஸின் பாதையைத் தொடர்ந்து எழுதிய ‘Beyond the Blue horizon’ நூலும் நில நடுக்கோட்டு நாடுகளில் பயணம் செய்து எழுதிய ‘Tales from the Torrid Zone’ புத்தகமும் புகழ்பெற்றவை. சிறுவனாக இருந்த போது அவரது படுக்கையருகே ஒரு ஓவியம் தொங்க விடப்பட்டிருந்தது. அடர்ந்த புற்களுடன் கூடிய மலைச் சரிவுகள், முகடுகளில் சிறிய கோபுரங்களுடனான கோயில்கள், புலிகளை நோக்கி ஓங்கிய ஈட்டிகளுடன் நிர்வாண கோலத்தில் வேட்டையர்கள் […]

எழுத்து

நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள்

இசை · 26.10.19

நேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை? “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமானால் குழந்தைமையின் தூய அறியாமைகளோடு அணுகிப்பாருங்கள்” என்று பதிலளிக்கிறார். இதுவொரு கவித்துவமான பதில் என்றே தோன்றுகிறது. “தூய அறியாமை” போதாதென்றே படுகிறது. அந்தக் குழந்தைமையில் கொஞ்சம் ஞானத்தின் தாடி மண்டியிருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது. முகுந்த் நாகராஜன் சொல்லும் குழந்தைமையும் அபி சொல்லும் குழந்தைமையும் ஒன்றல்ல. இரண்டிற்கும் நோக்கங்கள் வேறு. அபியின் கவியுலகை ஆழங்கண்டு சொல்ல […]

எழுத்து

தமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணன் · 26.10.19

1 இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1999-2000ம் ஆண்டுகளில் தமிழ் நாவல்களில் ஏற்பட்ட புத்தெழுச்சியின் காரணமாக தமிழ்ச் சிறுகதைகளுக்குரிய கவனமும் முக்கியத்துவமும் சற்றே குறைந்தது. சிறுகதைகள் தொடர்ந்து எழுதப்பட்ட போதிலும் பெருந்தொகுப்புகள் வெளியாகின என்றாலும் சிறுகதைகள் மீதான வெளிச்சம் மங்கியிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அந்த நிலை மாறி நாவல்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாது சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகின்றன. புதிய தலைமுறையினர் தமிழ்ச் சிறுகதையின் தொடர்ச்சிக்கு அக்கறையுடன் பங்களித்து வருகிறார்கள். இவர்களின் கதைகள் சமகால தமிழ்ச் சிறுகதைகளில் […]

எழுத்து

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முறி மருந்து: யுவன் சந்திரசேகரின் சிறுகதை உலகம் – சுநீல் கிருஷ்ணன்

சுநீல் கிருஷ்ணன் · 26.10.19

‘சொல்லு நீ என்ன சொல்லப் போகிறாய்?’ ‘கதை தான். வேறென்ன? ஒருவருக்கொருவர் கதையைச் சொல்வதும் கேட்டுக் கொள்வதும் தவிர, செய்வதற்கு பிரமாதமான வேலை என்ன தான் இருக்கிறது?’ – அறியாப்பிழை, யுவன் சந்திரசேகர் பயிற்சி மருத்துவராக இருந்த காலகட்டத்தில் நானும் என் நண்பனும் மாலை நேரம் தாம்பரத்தின் அருகே இருந்த ஒரு மூத்த அலோபதி மருத்துவரிடம் உதவி மருத்துவர்களாக பணியாற்றினோம். அவருக்கு முடக்குவாதம். நெடுநேரம் இருக்கையில் அமர்ந்து நோயாளிகளை நோக்க முடியாது. கழுத்தைத் தனியாக திருப்ப முடியாமல் […]

எழுத்து

சத்தியாகிரகத்தின் விளைநிலத்தில்: தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலினை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப் · 26.10.19

“மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு மூலையில் பிறந்த அக்குழந்தை கண்விழித்த போது ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான விடிவெள்ளி முளைத்து விட்டதை யாரும் உணரவில்லை. அக்குழந்தை தன் பிஞ்சுக் கரங்களை அசைத்துச் சிரித்த போது ஆண்டாண்டு காலமாய் அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கானவர்களின் கண்ணீர் துடைக்கப்பட்டு அவர்கள் நிம்மதியாக புன்னகைக்கப் போகிறார்கள் என்பதை உலகம் உணர்ந்திருக்கவில்லை” ஏழாம் வகுப்பில் தான் நான் முதன் முறையாக பேச்சுப் போட்டிக்காக மேடையேறினேன். இந்த மேற்கோள் அம்பேத்கர் பற்றிய என் உரையின் தொடக்கமாக அமைந்த வரிகள். […]

எழுத்து

பிரமிள்: தனியொருவன் (பகுதி 8) – பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி · 26.10.19

வாசித்துக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் இப்படியொரு வாக்கியம்: “எனது விமர்சனங்களை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களின் தொடர்போ உதவியோ எனக்கு வேண்டாம்.” என்ன மனிதன் இவன்? இங்கே வாழ்வதற்காக, தாம் உருவாக்கி வைத்திருக்கும் அடையாளங்களைத் தக்க வைக்கவும், மெருகேற்றவும் திட்டமிட்டு ஒவ்வொரு அசைவையும் நிர்ணயிக்கும் நபர்கள் சூழ்ந்த உலகில் இது என்ன பேத்தல். பிரமிள் எந்த வேலைக்கும் செல்லவில்லை. பிறர் தயவில் தான் வாழ வேண்டி இருந்தது. ஆனால் அந்த ஆதரவு வெறும் அனுசரணையாக இல்லாமல் தனது எழுத்தின் […]

எழுத்து

காதலும் சாகசமும் – டி.சே. தமிழன்

கோகுல் பிரசாத் · 26.10.19

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 24 வயதான‌ ரொரி, தனது வசதியான  சூழலை விட்டு விலகி அமெரிக்காவுக்கு ஒரு வருடம் வசிப்பதற்காய் வருகின்றார். கிராபிக் டிசைனராக அமெரிக்காவில் வேலை பார்க்கும் ரொரி, தற்செயலாக ஒரு ஆர்ஜெண்டீனாக்காரரை ஒரு கிளப்பில் சந்திக்கின்றார். இவான் ஆர்ஜெண்டீனாவில் அன்று நிலவிய அசாதாரண சூழலினால் தனது பதினேழாவது வயதில் அமெரிக்காவுக்குப் பெற்றோரோடு புலம்பெயர்ந்தவர். ஆர்ஜெண்டீனாவில் நடக்கும் சித்திரவதைகளையும், காணாமல் போதல்களையும், கண்காணிப்புச் சூழலையும் கண்டு வளர்ந்த இவானுக்கு படகில் உலகைச் சுற்றும் ஆசை இருக்கின்றது. ஐடித்துறையில் […]