பழந்தமிழகமும் தமிழ்ச்சிந்தனை மரபும்
பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு “பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் உலகாயதம் என்கிற பூதவாதம், சாங்கியம் என்கிற எண்ணியம், வைசேடிகம் என்கிற சிறப்பியம், அளவியல் என்கிற நியாயவியல், ஆசிவகம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. தமிழகத்தின் […]
