Category: திரைப்படக் கலை

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 4) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 24.02.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி 31. வெளியே / இரவு: மாளிகை. விழாப்பந்தங்கள் அணையும் நிலையில் இருக்கின்றன. ஓரிரு விளக்குகள் மட்டும் துப்புரவுப் பணிக்கு உதவியாக ஆங்காங்கே எரிகின்றன. கதவைத் திறந்து வெளிவந்த சீமான் நீண்ட முற்றத்தைக் கடக்கிறார். சற்று தூரம் சென்றதும் கத்துகிறார்.  சீமான் பிரேக்கர்… (விழாவில் பயன்படுத்திய அமர்வுப் பலகைகளைக் களஞ்சியத்தின் உள்ளே அடுக்கிவந்த பத்துப் பன்னிரண்டு பணியாளர்களை வேலை வாங்கிக்கொண்டிக்கிறார் மேற்பார்வையாளர். சீமானை நோக்கி நடந்து வருகிறார்.) சீமான் என் […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 8): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 30.01.22

அரசியல் ஒரு சாக்கடை என்பதெல்லாம் போதாது. ஆயிரமாயிரம் இடுக்குகளும் சிடுக்குகளும் உள்ள மனித வாழ்க்கை என்கிற பிரம்மாண்டமான சக்கரத்துக்கு முன்னால் அது ஒன்றுமேயில்லை. எங்குமே யாராவது யாரையாவது சுரண்டித் தின்னுகிறார்கள், பிடுங்கித் தின்னுகிறார்கள், காலில் விழுந்தோ கழுத்தைப் பிடித்தோ தின்று முடிக்கிறார்கள். அது ஒரு துறை. அதற்குள் நல்லது செய்துவிடலாம் என்று நினைத்து விடுகிறவன் புகுந்துவிட முடியாது. அவன் விரட்டப்படுவான். இவைகளையெல்லாம் உலகின் ஒரு பக்க நியதி, இப்படி நடக்கத்தான் செய்யும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். வீராப்பு […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 3) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 30.01.22

முதல் பகுதி இரண்டாம் பகுதி 21. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல் விருந்து தடபுடலாக நிகழ்கிறது. மக்கள் உரக்க ஆடிப் பாடி மகிழ்கின்றனர். சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி ஆடுகின்றனர். இளைஞர்கள் அரிவையர் முன்பு தம்மை மிடுக்காகக் காட்டிக்கொள்கின்றனர்; சண்டையிட்டும் கொள்கின்றனர். மங்கையர் குழுக்களாகச் சேர்ந்து அலர் பேசுகின்றனர். சில உழவர்கள் நிலக்கிழாரைச் சுற்றி நட்புணர்வுடன் பேசுகின்றனர். அவர்கள் பேசுவது நமக்குக் கேட்கவில்லை.  நரம்புத் தளர்ச்சிகொண்ட சீமானது மனைவி இந்தக் கும்பல்களைக் கடந்து எதையோ பார்க்கிறாள். […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 7): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 24.12.21

ஒரு திரைப்படம் பார்த்து நிறைகிற திருப்தியை கே.ஜி.ஜார்ஜின் பெரும்பாலான படங்கள் நமக்குக் கொடுக்காது. ஏற்கனவே பலமுறை நினைவு செய்துகொண்டபடி அவர் நம்முடைய நிம்மதியைப் பிடுங்கிக்கொள்பவர். “ஆதாமின் விலா எலும்பு” (Adaminte Vaariyellu, 1983) நான் கூறுவதைக் காட்டிலும் தீவிரமானது. படத்தில் எங்கேனும் ஆசுவாசத்தின் வெளிச்சப் புள்ளி தட்டுப்படுவதேயில்லை. தற்போது வந்த இந்தியன் கிச்சன் படத்துக்கான உத்வேகம் இங்கிருந்து தொடங்கியிருக்கலாம். முன்பு பலமுறை பார்த்து இருந்ததுதான், படம் தொடங்கின அடுத்த கணம் சுகாசினி, ஸ்ரீவித்யா ஆகியோரின் முகங்களின் வழியே படம் […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 2) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 24.12.21

முதல் பகுதி 11. உள்ளே / பகல்: மர அறுப்பு ஆலை. உழவனின் மூத்த மகன் ஃபிரான்ஸ் தன் தாயின் மரணம் தொடர்பான தடயம் ஏதும் கிடைக்குமா என்று தேடுகிறான். அவனுடன் 16 வயது மதிக்கத்தக்க அண்டை வீட்டுக்காரரின் மகன் மாட்டியும் துணை இருக்கிறான். மர அறுப்பு ஆலை ஆற்றினருகே இடிந்துவிழும் நிலையில் இருந்த ஒரு கட்டடம்.  விபத்து நிகழ்ந்தபோது அங்கிருந்த ஃபிரான்ஸிடம் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டுகிறான் மாட்டி. மாட்டி இந்த இடம்தான். கவனமாக நட. […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 6): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 25.11.21

“சார், சினிமாவில் சினிமாவா?“ என்றொரு முகச்சுழிப்பு உண்டு. என்ன பிரச்சினை என்று கேட்கப்போனால் முதலில் ராசி இல்லை என்ற பதில் வரும். எந்தப் படங்களும் ஓடியதில்லை என்று ஒரே வீச்சு. அப்படி இல்லையே என்று துவங்கி நாம் இருவர், சர்வர் சுந்தரம், சினிமாப் பைத்தியம், ஏணிப்படிகள், நட்சத்திரம் என்று பட்டியல் போட முற்பட்டால், இறுகின முகத்துடன் சினிமாவில் சினிமா வேண்டாம் என்று காரணம் கூறாமல் மறுத்துவிடுவார்கள். ராசியில்லை போன்ற இன்ன பிற சொல்லாடல்கள் பற்றி என்ன சொல்லுவது? […]

எழுத்து

The White Ribbon: திரைக்கதை (பகுதி 1) – மைக்கேல் ஹனகே

கோ.கமலக்கண்ணன் · 25.11.21

1. உள்ளே / பகல் : பண்ணை நிலத்தில் இருக்கும் குதிரைவித்தைப் பள்ளி : அண்மை ஷாட்களின் மாண்டேஜ்கள்.  ஒருவன் வித்தைக் குதிரையை ஓட்டுகிறான். நம்மால் அவனது முகத்தைக் காண முடியவில்லை. அவனது சப்பாத்துகள், தார்க்குச்சி, சாட்டை, விரைத்த கடிவாளம், நுரைதோன்றும் குதிரையின் வாய், அவ்விலங்கினை முன்னகர்த்தும் இயக்கம் ஆகியவற்றை மட்டுமே காண முடிகிறது. செவியில் குளம்படிகளின் மெல்லிய சப்தமும் வேகமாக உச்சரிக்கப்படும் குதிரையோட்டியின் ஆணைகளும் நம் செவியில் விழுகின்றன. அதன் பின்னர் நாம் ஒரு மென்குரலைக் […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 5): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 28.09.21

தீமை எங்கிருந்து புறப்படுகிறது? உலகில் மனிதராக வாழ வேண்டியிருக்கிற யாருக்குமே எப்போதேனும் ஒரு கட்டத்தில் இந்த வியப்பு எழாமலிருக்க வாய்ப்பில்லை. அது ஒருவேளை தன்னைக் குறித்தாக இருக்கலாம் அல்லது நேரடியாகப் பாதிக்கப்பட்ட மூச்சுமுட்டலில் மனம் விதும்பும்போது, அல்லது அநீதிகளால் பிதுக்கப்படும்போது “என்ன இது, இப்படி” என்கிற ஆயாசம் உண்டாகலாம். ஒரு காரணமும் சொல்லாமல் தம்மைப் பார்த்து நிற்கிற எவ்வளவோ விரோதங்களைப் பலரும் தினம் தினம் எதிர்கொள்கிறார்கள். காந்தியைக் கொன்றவனின் மனம் என்ன என்பதை நம்மில் பலரும் உணரவே […]

எழுத்து

அறம்பிறழ்ந்தோரிற் கடையோன்

த. கண்ணன் · 29.08.21

Operation Finale என்றொரு படம் நெட்பிளிக்சில் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன். சுமாரான நாஜி வேட்டைப் படம்தான். யூதர்களை அழித்தொழிக்கும் இறுதித் தீர்வை வடிவமைப்பதில் முதன்மையானதொரு பங்காற்றிய அடால்ஃப் ஐக்மேன் (Adolf Eichmann) அர்ஜெண்டினாவில் குடும்பத்தோடு மறைந்து வாழ்ந்துகொண்டிருந்தார். மொசாடைச் சேர்ந்த யூத உளவாளிகள் அவரைக் கைப்பற்றி இசுரேலுக்குக் கடத்தி வருவதுதான் படம். மூன்று காரணங்களுக்காக அப்படம் மனதில் நின்றது. முதல் காரணம், ஐக்மேன் அவ்வளவு பெரிய அழித்தொழிப்பு குறித்த குற்றவுணர்வு அற்றவராகவே பெரும்பாலும் வருவார். தன்னைச் […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 4): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 29.08.21

நல்ல விஷயங்களைப் பார்த்தால் சிலருக்குச் சும்மா இருக்க முடியாது. அதை நாசம் செய்துவிட்டுத்தான் அடங்குவார்கள் என்கிற பொருளில் வருகிற ஒரு வசனம் உண்டு. சதயம் படத்துக்காக எம்.டி.வாசுதேவன் அதை எழுதினார். ‘கோலங்கள்‘ (1981) என்கிற இந்தப் படத்தின் அடிப்படை அம்சம் இதுதான்.  மனிதன் எப்படியிருப்பான் என்பதைக் கணிக்க முடியாது. அவனுடைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கைச் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து அவனை என்னவாக உருட்டித் திரட்டி கூட்டத்தில் தூக்கி எறிந்திருக்கிறது என்பதைப் பிறர் அறிய மாட்டார்கள். அப்படி நூறு பக்கத்தில் […]

எழுத்து

அன்றாடத்தின் கற்பிதம்: தமிழ்த் திரைப்படங்களில் உள்ளூர் நாயகர்கள்

ஸ்டாலின் ராஜாங்கம் · 27.07.21

1980களில் பல்வேறு உள்ளூர் அம்சங்கள் திரைப்படச் சட்டகத்திற்குட்பட்டு தமிழ்த் திரை வெளிக்குள் கொணரப்பட்டன. உள்ளூர் நினைவுகளில் நிலைத்துவிட்ட நாட்டார் நாயகர்கள் பற்றிய கதைகளை மையமாக்கி வெளியான படங்கள் அவ்வகையில் முக்கியமானவை. அவற்றுள் இரண்டு போக்குகள் உண்டு. மக்களிடையே வாழ்ந்து வாய்வழிக் கதைகளாக உள்ளவர்களின் வரலாறை வெகுஜன கதையாடலுக்கேற்ப மாற்றி வெளியிட்ட படங்கள் முதல்வகை. கரிமேடு கருவாயன், மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இந்த வகையில் கூறலாம். இவர்கள் பெரும்பாலும் உள்ளூரில் நிலவிய ஏதோவொரு அதிகாரத்தால் பாதிக்கப்பட்டு […]

எழுத்து

அகம் சுட்டும் முகம் (பகுதி 3): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · 27.07.21

வாழ்வில் துயர்கள் வருவதுண்டு. சில துயர்கள் நின்று நிலைத்துவிடுவதும், வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதும் எல்லாம் உண்டு. பிறப்பின் அடியிலிருந்து, மரணத்தின் முடி வரையில் தொடர்ந்து வருவதற்கு நம்மோடு இணைந்துகொள்ளும் துயரை என்ன செய்ய முடியும்? பிறந்த கணம் அநாதைகளாகி விடுகிற குழந்தைகளை எண்ணிப் பார்க்கலாம். அவைகளில் இருந்து பலரும் உலகையே ஆளக்கூடிய தளத்துக்கு வந்துவிட்டிருந்தாலும், அவர்களுடைய மனதில் குழிந்து விழுந்த பள்ளம், பின்னொரு காலத்தில் எதை முன்னிட்டும் நிரம்புவதில்லை. மேள (1980) என்கிற இந்தப் […]