21. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல்
விருந்து தடபுடலாக நிகழ்கிறது. மக்கள் உரக்க ஆடிப் பாடி மகிழ்கின்றனர். சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி ஆடுகின்றனர். இளைஞர்கள் அரிவையர் முன்பு தம்மை மிடுக்காகக் காட்டிக்கொள்கின்றனர்; சண்டையிட்டும் கொள்கின்றனர். மங்கையர் குழுக்களாகச் சேர்ந்து அலர் பேசுகின்றனர். சில உழவர்கள் நிலக்கிழாரைச் சுற்றி நட்புணர்வுடன் பேசுகின்றனர். அவர்கள் பேசுவது நமக்குக் கேட்க
நரம்புத் தளர்ச்சிகொண்ட சீமானது மனைவி இந்தக் கும்பல்களைக் கடந்து எதையோ பார்க்கிறாள். பள்ளியாசிரியருடன் பேசிக்
பீட்ரிக்ஸ்
உங்களுடைய ஞானச்சிறுவர்களைக் கொண்டு ஒரு குழுப்பாடலைப் பாடவிருப்பதாக உறுதியளித்திருந்தீர்கள்தானே?
பள்ளியாசிரியர்
நீங்கள் போதகரிடம் அதுகுறித்துப் பேசினால் நல்லது சீமாட்டியே. நாங்கள் இன்னும் பெருவிழாவிற்காக ஒரு குழுப்பாடலைப் பயில்வதில் முனைப்புடன் இருந்து வருகிறோம்.
பீட்ரிக்ஸ்
(ஆச்சரியத்துடன்)
ஆனால் அவ்விழாவோ குளிர்காலத்தில்தானே நடக்கும்! நாம் இப்போது
பள்ளியாசிரியர்
(சங்கடத்துடன் புன்னகைத்தவாறு)
ஆம், உண்மை
22. வெளியே / பகல்: பண்ணை வீட்டுத் திடல்: எலுமிச்சை மரத்தடியில்.
மாளிகையிலேயே அமைதியான இடம்.
பெரிய நிழல்தரும் மரத்தினடியில் நிலக்கிழாரின் குடும்பத்தினர் இருவர் நடை முடித்து வருவதைக் காண்கிறோம். சிறிய மேசை. சில நாற்காலிகள். ஏவா இரட்டையர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு வண்ணமய
மேற்பார்வையாளர்
இரு தாய்மார்
தன்னையும் தாய்மார் என்று குறிப்பிட்ட இந்த நகைச்சுவைக்கு எப்படி மறுவினை ஆற்றுவது என்று புரியாது மேற்பார்வையாளரின் மனைவியைப் பார்க்கிறாள் ஏவா. ஆனால் அப்பாவித்தன
எம்மா
இங்கு நிழல் இனிமை
மேற்பார்வையாளர் அருகே வந்து சேர்கிறார். அவர் குழாய் புகைத்தபடி இருக்
மேற்பார்வையாளர்
(மகிழ்ச்சியான மனநிலையில்)
நம் மகன் அதை மிக இரசித்து உறிஞ்சுவது போலத் தெரிகிறதே.
எம்மா
ஆமாம்.
மேற்பார்வையாளர்
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. யாருக்குத்
எம்மா
(அவரை மென்மையாகக் கடிந்தாள்)
ஜியார்ஜ்!
மேற்பார்வையாளர்
(ஏவாவிடம்)
நீ என்ன நினைக்கிறாய்? அங்கிருக்கும் இளைஞர்களோடு சேர்ந்து களிக்காமல் பிறருடைய குழந்தையைப் பேணிக் காத்து அமர்ந்திருப்பதால் உனக்குச் சலிப்பு உண்டாக
ஏவா
(தயக்கத்துடனும் வரவழைக்கப்பட்ட மகிழ்ச்சியுடனும்)
இல்லை அய்யா. நான் குழந்தைகளோடு இருப்பதை மிகவும் விரும்புகிறேன்.
அவர் தன் மனைவியை ஒருகணம் பார்த்துவிட்டுப் பிறகு ஏவாவின் அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்கிறார்.
மேற்பார்வையாளர்
சரி, உனக்கு என்ன வயதாகிறது?
ஏவா
பதினெட்டு, அய்யா.
மேற்பார்வையாளர்
பதினெட்டு. இந்த வயதில் உன் காதலனை மடியில் ஏந்துவதற்குப் பதிலாக முதலாளியம்மாவின் குழந்தையை ஏந்துவது
எம்மா
(பண்புடன்)
ஜியார்ஜ்! அவளை விடுங்களேன்.
மேற்பார்வையாளர்
நான் அவளை ஒன்றும் தொந்திரவு செய்ய
ஏவா
(எழுந்து எம்மாவின் அருகே சென்று)
குழந்தையைச் சற்று நேரம் பார்த்துக்
மேற்பார்வையாளர்
(அவரும் எழுகிறார்)
அஞ்சாதே இளவரசியே. நான் கிளம்புகிறேன். பீதியடையத் தேவையில்லை.
23. வெளியே / பகல்: பண்ணை வீட்டிலிருந்து காய்கறித் தோட்டத்திற்குச் செல்லும் பாதை.
தங்களது விடுமுறை நாள் உடைகளில் சிறப்பாகத் தோற்றமளிக்கும் 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இருந்தனர். அவர்களுள் மேரி, மார்டின் இருவரும் தம் கைகளில் வெள்ளை நாடாக்களைக் கட்டியிருந்தனர். போதகருடைய மற்ற குழந்தைகளான செனியா, ருடோல்ஃப் ஆகியோருடன் ஹேன்ஸ், லிஸல், ஜியோர்ஜ், ஃபெர்டினாண்ட், சிஜி ஆகியோரும் அங்கு இருந்தனர்.
அவர்கள் மாளிகையிலிருந்து கிளம்பி வயல்
24. வெளியே / பகல்: பண்ணை வீடு. கொட்டகைக்கு வெளியே.
பண்ணைத் தொழிலாளர்களும் குத்தகைதாரர்களும் மேசையைச் சுற்றி அமர்ந்து உண்டனர். அதிலொருவர் சொல்லும் கதை, சுற்றியிருக்கும் இரைச்சலால் நமக்கு அரைகுறையாகக் கேட்கிறது.
முதல் குத்தகை உழவன்
.. அந்த ஆள் கூண்டின் உச்சியிலிருந்து சேவலைத் திருடும் முயற்சியில் மிகுந்த களைப்படைந்திருந்
அதே சமயம் வேறுசிலர் ஆர்பரித்தபடி அங்கு வந்து சேர்ந்தனர்.
பண்ணைத் தொழிலாளர்கள்
இன்னும் வேண்டும், மது வேண்டும், இல்லையெனில் நான் விழுந்து விடுவேன்! ஆஹா!
இன்னும் வேண்டும், மது வேண்டும், இல்லையெனில் நான் விழுந்து விடுவேன்!
எனக்கு மது பரிமாறாத நிலக்கிழார் இன்னும்
தூக்கிட்டுக்கொள்ள
வில்லையா என்ன? இன்னும் வேண்டும், மது வேண்டும், இல்லையெனில் நான் விழுந்து விடுவேன்!
சிரிப்பொலி. ஃபிரான்ஸின் தங்கை லெனியும் இன்னொரு பெண்ணும் உழவர்
லெனி
இருங்கள் வருகிறேன். என்னிடம் மாயக்கோல் ஒன்றும் இல்லை.
முதல் பண்ணைத் தொழிலாளன்
(அசட்டுச் சிரிப்புடன்)
நான் வந்து உதவட்டுமா லெனி? உனக்கு உதவத்
இரண்டாவது பண்ணைத் தொழிலாளன்
(அவனும் அசட்டுச் சிரிப்புடன்)
அவளுக்கு என்ன உதவி செய்ய உத்தேசம்?
பெரும் சிரிப்பு.
முதல் பண்ணைத் தொழிலாளன்
எல்லா உதவியும்
சிரிப்பு அதிகமாகிறது.
மூன்றாவது பண்ணைத் தொழிலாளன்
(லெனியிடம்)
சீமானிடமும் இப்படித்
இரண்டாவது குத்தகை உழவன்
அவளைச் சீண்டாமல் இரு.
இரண்டாவது பண்ணைத் தொழிலாளன்
உனக்கு அவளை அவ்வளவு பிடிக்குமெனில் நீ சென்று உதவிசெய்.
நான்காவது பண்ணைத் தொழிலாளன்
(இரண்டாவது பண்ணைத் தொழிலாளன் அருகே அமர்ந்தபடி இரகசியக் குரலில்)
இவளது அம்மாவுக்குத்
அதே சமயம் ஒரு பத்து வயதுச் சிறுவன் முதல் பண்ணையாளிடம் வந்து இடைமறித்துச் சொன்னான்.
சிறுவன்
அப்பா, யாரோ சீமானுடைய முட்டைகோஸ்
முதல் பண்ணைத் தொழிலாளன்
என்ன?
சிறுவன்
(இளித்தபடி)
சீமானுடைய முட்டைகோஸை எல்லாம் வெட்டி
மேசையில் சில கண்ணாடிக் குவளை
25. வெளியே / பகல்: பண்ணைத் திடல். நடன மேடை.
மேடையில் ஏவாவும் பள்ளியாசிரியரும் நடனமாட முயல்கிறார்கள். இருவருக்குமே நடனமாடும் திறமை இல்லை. ஏவா சங்கடத்துடன் தன் பாதங்களையே பார்த்து சிரித்தவண்ணம் இருக்
ஏவா
நான் ஒருபோதும் இதைக் கற்க
பள்ளியாசிரியர்
(புன்னகைத்தவாறு)
நானும்
அவர்கள் அகல
ஏவா
இப்படி நீங்கள் என்னோடு நடனமாடுவதைப் பார்த்து உங்கள் மாணவர்கள் சிரிக்கக்கூடும் என்ற அச்சம் இல்லையா அய்யா உங்களுக்கு?
பள்ளியாசிரியர்
சிரிக்காமல் இருப்பது
ஏவா சிரிக்கிறாள். தயக்கத்துடன் நிலம் நோக்குகிறாள்.
ஏவா
ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று.
பள்ளியாசிரியர்
பாரேன். இப்போது இருவரும் முன்பைவிட நன்றாகவே ஆடுகிறோம்.
ஏவா
ஆமாம்
பள்ளியாசிரியர்
உன் பாதங்களையே பார்ப்பதை நிறுத்து.
அவள் தலையை உயர்த்தி அவரைப் பார்க்கிறாள். தடுமாறுகிறாள். அவர்கள் சிரித்து மீண்டும் நடனத்தைத் தொடர்கிறார்கள்.
26. வெளியே / பகல்: காய்கறித் தோட்டம்.
மாளிகையைக் கடந்து கிராமத்தினரது இசை சன்னமாய்க் கேட்கிறது.
காய்கறி வயலுக்கு சீமாட்டி வந்து சேர்கிறாள். அதன் பிறகு போதகரின் மனைவி, இசையாசிரியன், கிராமத்திலிருந்து சில பெண்கள் ஆகியோர் வந்து சேர்கின்றனர். தட்டியைக் கடந்து சிரச்சேதம் செய்யப்பட்ட முட்டைகோஸ்
சீமான் தன் மனைவியை நோக்கித் திரும்பி தன்னைச் சுற்றிக் கிடக்கும் முட்டைகோஸ் தலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
சீமான்
நல்ல வேலை செய்திருக்
எத்தனை பெரிய சிதைவு என்பதை விரிவிழியால் பார்த்து
சீமாட்டி
கொடுமை

அவர்
மேற்பார்வையாளர்
இது ஒரு பழைய சடங்கு!
(ஒரு பாட்டை மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.)
அறுவைக் காலம் முடிந்தது பணம்
பெறும் காலம் வந்தது
எந்தக் கருமியேனும் எங்களை விட்டுவிட்டால்
அந்த வயலின் முட்டைகோஸ் தலைகள் வெட்டப்
படும்!
இந்தக் குறியீட்டுத்தன
27. உள்ளே / மாலை: போதகரது மனை. படிப்பறை.
போதகர் தன் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறார். சடுதியில் கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது.
போதகர்
(நிமிர்ந்து பார்த்து)
உள்ளே வாருங்கள்.
ஃப்ளோரியன் தயக்கத்துடன் உள்ளே வருகிறான்.
போதகர்
என்ன வேண்டும் உனக்கு?
ஃப்ளோரியன்
(நாணமும் அச்சமும் கலந்த பாவனையுடன்)
அப்பா, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.
போதகர்
என்ன? சொல்.
சிறுவன் மேசைக்கு அருகில் வருகிறான். தன் சட்டையின் சில பொத்தான்
போதகர்
அதற்கு என்னவாயிற்று?
ஃப்ளோரியன்
இதை நான் கண்டெடுத்தேன். இதற்கு காயம் பட்டிருக்
சிறு அமைதி.
போதகர்
உனக்கு என்ன வேண்டும்?
ஃப்ளோரியன்
(மன்றாடும் குரலில்)
நான் இதை வைத்துக்கொள்ளட்டுமா?
சிறு அமைதி.
தன் கடைசி மகனின் இந்தக் கோரிக்கையைக் கேட்டு உணர்ச்சி வயப்பட்டாலும் போதகர் அதை வெளிக்காட்டாமல் கரந்துகொள்கிறார்.
போதகர்
அதை வைத்து என்ன செய்யப் போகிறாய்?
ஃப்ளோரியன்
காயத்தை ஆற்றுவோம்.
போதகர்
(மென்மை
காயம் ஆறிய பிறகு?
அதற்கு என்ன பதில் சொல்வதென அறியாமல் தன் வட்ட
போதகர்
அதன் பின்னர் அதனோடு நீ மிக நெருக்கமாகி விடமாட்டாயா? உண்மையாகவே அதைப் பறக்கவிட உன்னால் முடியுமா?
ஃப்ளோரியன் சிந்திக்கிறான். மேசைக்குப் பின்னால் இருந்த கூண்டினைப் பார்த்து ஆமோதித்துத் தலையசைக்கிறான்.
ஃப்ளோரியன்
‘பிப்ஸி’யும் கூண்டில்தானே வசிக்கிறது?
ஒரு கணம் போதகர் அந்தக் கூண்டைப் பார்க்கிறார். தன் புன்னகையைக் கரந்தபடி ஃப்ளோரியனை நோக்கித் திரும்புகிறார்.
போதகர்
ஆமாம். ஆனால் பிப்ஸி பிறந்தது முதலே கூண்டிலேயே வளர்கிறது. (தன் புருவத்தால் ஃப்ளோரியனிடம் இருந்த பறவையைச் சுட்டிக்காட்டி) ஆனால் இது சுதந்திர
என்ன பதில் சொல்வதென அறியாமல் மீண்டும் விழிக்கிறான் ஃப்ளோரியன். தன் தந்தையை இறைஞ்சும் விழிகளால் கூர்ந்து பார்க்கிறான்.
போதகர்
(மீண்டும்)
அதற்கு காயம் ஆறிய உடனே அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுவாயா?
ஃப்ளோரியன் தலைகுனிந்து கனத்த இதயத்துடன் ஆமோதித்துத் தலையசைக்கிறான்.
போதகர்
அம்மாவிடம் ஏற்கெனவே கேட்டுவிட்டாயா?
ஃப்ளோரியன் ஆர்வத்துடன் தலையசைக்கிறான்.
போதகர்
அப்படியானால், அவர்கள் என்ன சொன்னார்கள்?
ஃப்ளோரியன்
அப்பா
போதகர்
(மெல்லிய புன்னகையுடன்)
அப்படியா சொன்னார்கள்?
ஃப்ளோரியன் தலையாட்டி
போதகர்
நீ உண்மையாகவே இதைக் கவனித்துப் பார்த்துக்கொள்வாயா? அது மிகப் பெரிய பொறுப்பு. புரிகிறதா?
தன் தந்தை எதிர்ப்பாக இல்லை என்பதை உணர்ந்தவனாய், ஆர்வத்துடன் ஆமோதித்துத் தலையசைக்கிறான் ஃப்ளோரியன்.
போதகர்
சரி. இனி நீதான் அதற்குத் தந்தையும் தாயும்.
இப்போது ஃப்ளோரியன் இன்னும் வேகமாய் தலையசைக்கிறான். போதகர் சிரிப்பைச் சிரமப்
போதகர்
முதலில் உன்னுடைய நோயாளிக்கு நாம் ஒரு கூண்டை உருவாக்க வேண்டும்.
ஃப்ளோரியனால் நம்ப முடிய
ஃப்ளோரியன்
நன்றி அப்பா!
28. வெளியே / மாலை: உழவரின் வீட்டுக்குச் செல்லும் பாதை.
லெனி முகத்தில் ஆச்சரியத்துடன் நடந்து வருகிறாள். ஓடுவதைப் போல விரைந்து நடக்கிறாள். பண்ணையை அடைந்தது உள்ளே சென்று மறைகிறாள்.
29. உள்ளே / மாலை: உழவரின் வீடு. அறை.
குடும்ப
உழவர்
(ஃபிரான்ஸிடம்)
இது உண்மையா?
ஃபிரான்ஸ்
(சினத்துடன், உண்டபடியே)
எனக்கு எதுவும் தெரியாது.
உழவர்
(அச்சுறுத்தும் தொனியில்)
இது – உண்மையா?
ஃபிரான்ஸ்
(அவரைப் பார்த்து வெறியுடன்)
எதுவுமே உண்மை இல்லை! அப்படியே உண்மை
உழவர்
(தன்னைக் கட்டுப்படுத்த கடுமை
நீ அதைச் செய்தாயா, இல்லையா?
ஃபிரான்ஸ் பதிலளிக்காமல் தொடர்ந்து தின்று
லெனி
யாரோ உன்னைப் பார்த்திருக்
ஒரு கணம் அமைதியாக அமர்ந்திருந்த ஃபிரான்ஸ் சடுதியில் உரக்கப் பேசுகிறான்.
ஃபிரான்ஸ்
(லெனியிடம்)
அதனால் என்ன? அவர்கள் தலை எஞ்சியதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடை வேண்டும். (உழவரிடம் திரும்பி) அப்பா இதைக் கேளுங்கள். அந்தச் செயல் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
இதைக் கேட்டதும் அவன் கன்னத்தில் வலுவாக அறைகிறார் உழவர். ஃபிரான்ஸ் குதித்தெழுகிறான்.
உழவர்
(ஃபிரான்ஸைக் கண்ணுறாமலேயே உத்தரவிடும் தொனியில்)
உட்கார்!
ஒரு கணம் ஃபிரான்ஸ் எப்படி மறுவினை புரியப்போகிறான் என்று நமக்குத் தெரிய
உழவர்
நீ என்ன செய்யலாம் என்ற உத்தேசத்தில் இருக்
ஃபிரான்ஸ் பதிலளிக்காததால் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கிறார். அவன் திரும்பிக்கொள்கிறான்.
உழவர்
ம்.. என்ன? பதில் சொல்.
ஃபிரான்ஸ் அவரை நேருக்கு நேர் முறைத்துப் பார்க்கிறான். உழவர் இன்னும் மென்மையாகப் பேசுகிறார்.
உழவர்
ம். சொல்.
ஃபிரான்ஸ்
(பேச இயலாதவனாய்)
எல்லாம் உங்களுக்கே தெரியும் தந்தையே!
உழவர்
(நெடிய அமைதிக்குப் பின்)
உன் அம்மாவின் மரணத்தாலா? அவர்கள்
ஃப்ரான்ஸ் தொடர்ந்து முறைத்தபடி அமைதியுடன் இருக்
உழவர்
உன் செயல்கள் இந்தக் குடும்பத்தை எப்படிப் பாதிக்கும் என்று ஒருமுறையாவது யோசித்துப் பார்த்தாயா? நம் தலைக்கு மேல் வெள்ளம் போகாமல் ஓராண்டாகக் காப்பாற்றிய லெனியின் வேலை போய்விட்டால் என்னவாகும்? இனி கோடையில் நம்மால் அங்கு வேலை செய்யவே முடியாமல் போய்விட்டால் என்னவாகும்?
பொறுமையின்றி அசைந்த ஃபிரான்ஸ் தன் கரண்டியை எடுத்து தின்பதைத் தொடர முற்படுகிறான். உழவர் அவன் கையைப் பிடித்து கிழே வேகமாக வைக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். ஒருகணம் என்னவாகப் போகிறது என்று நமக்குத் தெளிவில்லை.
உழவர்
நீ மணமுடித்து இரண்டு ஆண்டு
ஃபிரான்ஸ் தலையைத் திருப்பிக்கொள்கிறான். அவர் பேச்சை அவன் ஏற்க
உழவர்
சரி. அவர்கள்
ஃபிரான்ஸ் அவரை நோக்கி வெடுக்கெனத் திரும்பினான்.
ஃபிரான்ஸ்
அவர்கள் அதற்குப் பொறுப்பில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
புருவம் உயர்த்தி உழவர் ஃபிரான்ஸைப் பார்க்கிறார். ஒரு நெடிய அமைதி.
உழவர்
(அமைதியாக)
எனக்குத் தெரியாது.
இன்னொரு அமைதிக்குப் பின்.
உழவர்
எனக்கு அவர்கள்
30. உள்ளே / இரவு: மாளிகை. மாடிப்படிகள்.
கீழே நின்று
சீமான்
‘அங்கே இல்லை’ என்றால் என்ன அர்த்தம்?
இசையாசிரியன்
அவனைக் காணோம். நான் ஏற்கெனவே எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து
சீமான்
மடத்தனம். அவன் என்ன காற்றில் கரைந்தா போயிருப்பான்? அவனை எப்போது நீ கடைசியாகப் பார்த்தாய்?
இசையாசிரியன்
இரண்டு மணியளவில்
சீமான்
(சினம் பொங்க)
இரண்டு மணியா? இப்போது மணி என்ன தெரியுமா?
இசையாசிரியன்
(குற்ற உணர்வுடன்)
புரிகிறது அய்யா.
கடும் சினத்துடன் அந்த மூடனைப் பார்க்காமல் திரும்புகிறார். சிந்திக்கிறார். பிறகு மீண்டும் அவனைப் பார்க்கிறார்.
சீமான்
என் மனைவி என்ன சொல்கிறாள்? அவளுக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரிய
இசையாசிரியன்
அம்மா
சீமான்
(எரிச்சலுடன்)
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. (இசையாசிரியனைப் பார்த்து) ஹியூபர் நீ ஒரு மடையன். நீ இங்கு எதற்காக இருக்
இசையாசிரியன்
(மென்மை
என்னை மன்னித்துவிடுங்கள் சீமான் அவர்
சீமான்
நீ எதற்கும் பயனில்லாத உதவாக்கரை.
சீமான் திரும்பி வாசலை நோக்கி நடக்கிறார். சற்று நேரத்தில் திரும்பி மீண்டும் கேட்கிறார்.
சீமான்
என் மகனைக் கடைசியாக எங்கே பார்த்தாய்?
இசையாசிரியன்
வெளியே. மைதானத்தில். அவன் மற்ற பிள்ளை
சீமான்
எங்கே?
இசையாசிரியன்
அதை அவன் சொல்ல
சீமான்
என் மனைவி இது எதையுமே கவனிக்க
இசையாசிரியன்
முட்டைகோஸ் வெட்டப்பட்ட நிகழ்விற்குப் பிறகு அம்மா தன் அறைக்குச் சென்று
சீமான்
(கேலியாக)
என்ன? உடல்நலக் குறைவுடனா?
இசையாசிரியன்
ஆம். அவர்களுக்குக் கடுமை
சீமான்
(தனக்குத்தானே)
கடவுளே. இந்த இடம் ஒரு மிருகக்காட்சிசாலை!
அவர் திரும்பி மைதானத்தை நோக்கி நடந்தார். இசையாசிரியன் அவரைப் பார்த்தபடி பின் தொடர்ந்து நடந்
-தொடரும்.

மகிழ்ச்சி ணா. அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்.