தமிழினியின் புதிய வெளியீடுகள் 2022
நாவல்கள்: * சிறுகதைகள்: * மொழியாக்கங்கள்: * கட்டுரைத் தொகுப்புகள்: * கவிதைகள்: * அருள்மொழிகள்: * மகுடேசுவரனின் நூல்கள்: * தொடர்புடையவை: தமிழினியின் புதிய வெளியீடுகள் 2020 தமிழினியின் புதிய வெளியீடுகள் 2021
நாவல்கள்: * சிறுகதைகள்: * மொழியாக்கங்கள்: * கட்டுரைத் தொகுப்புகள்: * கவிதைகள்: * அருள்மொழிகள்: * மகுடேசுவரனின் நூல்கள்: * தொடர்புடையவை: தமிழினியின் புதிய வெளியீடுகள் 2020 தமிழினியின் புதிய வெளியீடுகள் 2021
கடந்த நான்கைந்து தினங்களாக வானிலை அறிவிப்புகளையும் அது சார்ந்த கணினி முன்மாதிரிகளையும் உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். வரும் மார்ச் (2022) ஒன்றாம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதிவரை இடையில் மூன்று நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு, தமிழகத்தின் பல இடங்களில் மழைக்கூறு இருப்பதாகக் கணிப்புகள் காட்டின. எனக்கு உடனடியாகச் சத்திரப்பட்டி சந்திரபோஸ் அண்ணனை அழைக்க வேண்டுமெனத் தோன்றியது. ஏனெனில் போன வருடம் காய்ந்தும் கெட்டவர், பெய்தும் கெட்டவர். முன்னோர்கள் அவருக்குக் கடத்திய, தன்னுடைய பாரம்பரிய அறிவை முன்னிறுத்தி மழைப் […]
நூலெழுதுங்கால் நூலெழுதுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்ன? ரைட்டேர்ஸ் ஹேண்ட்புக் – பலதும் உண்டு இக்காலத்தில். முன்னோர்களும் இத்தகைய அங்கையேடுகள் தந்துள்ளனர். இளம்பூரணர் உரை தொல்காப்பியம், மரபியல், 112க்கு கவனித்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புலப்படும். என்ன? ’உத்தி என்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது’ என்கிறார் இளம்பூரணர். அதாவது சூத்திரத்தின்பால் இருக்கும் பொருளை விளக்கிக் காட்டும் உரைவரைதல் என்பதைத்தான் உத்தி என்னும் சொல் குறிக்கும். அந்த உத்தியாகிய ‘உரைவரைதலும்’ […]
தமிழில் நாவல் என்ற நவீன இலக்கிய வடிவம், தமிழ்ச் சிறுகதை வடிவம் தோன்றும் முன்னரே, பலவித எடுத்துரைப்புகளுடன் பிரசுரம் பெற ஆரம்பித்துவிட்டது. தமிழில் நவீன நாவல் தோன்றி, சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பே நவீனச் சிறுகதை தோன்ற ஆரம்பிக்கிறது. வீரமா முனிவர் (1680-1747) படைத்த பரமார்த்த குரு கதை (அச்சில் 1728, சென்னை கல்விச் சங்கம் 1822), முத்துக்குட்டிப் புலவர் சொன்ன வசன சம்பிரதாயக் கதை (1775, அச்சில் 1895), சேஷய்யங்கார் எழுதிய கவிதை நாவலான ஆதியூர் […]
1. இன்றின்றின்றெனத்தான் இன்றுகள் மட்டுமே. இங்கே நாள்களென இன்று மட்டுமே. நேற்று என்பது வேண்டா முதுகுச்சுமை. நாளை என்பது விரும்பாத் தலைச்சுமை. * 2. வெறுமைத்திரள் அச்சத்தை எதைக்கொண்டு நெம்பிவிட்டு அகாலத்தின் பாதாளத்தில் தள்ளிவிட? * 3. மண்ணுக்கு விண் காட்டும் மின்வீச்சுகளில் கோபமில்லை. கருணைக் கண்சிமிட்டல்கள்தான் மின்னல்கள். * 4. துள்ளித் திரியும் சிறார் மீதிருந்து தள்ளாடும் முதியோர் மீது வரை உன் அழுக்காறு பாய்கிறது! * 5. மனித முகம் தவிர்த்த பிற உயிர்களின் […]
தாரிணியின் சொற்கள் என்னிடம் உள்ள மிருக குணத்தை என் குருவோ அவரின் மனைவியோ அறியமாட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. குரு என்றால் வயதானவர் என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு நாற்பது வயதும் அவர் மனைவிக்கு முப்பத்து ஐந்து வயதும் இருக்கலாம். என் தந்தை என் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். எனக்குப் படிப்பு ஏறவில்லை. நான் பாட்டுப் பாடுவதைக் கேட்டு என் சித்தப்பா என்னைக் கொண்டுவந்து பாடகர் ரவிகிருஷ்ணாவிடம் சேர்த்துவிட்டார். நான் அவருக்கு உதவியாளன் போல இருந்தேன். மாடியில் ஓர் […]
அ.மாதவையா (A.Madhaviah, 1872-1925) தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய காலனி ஆட்சிக் காலகட்டத்தின் ஒருவகை இலக்கிய நீட்சி என்றும் ஆரம்பகால நவீன இந்திய இலக்கிய எழுச்சியின் ஒருவகைச் சுதாரிப்பு என்றும்கூட இதைச் சொல்லலாம். மாதவையா தமிழில் எழுதிய நாவல்கள்: 1. முத்துமீனாக்ஷி: ஒரு பிராமணப் பெண்ணின் சுயசரிதை, (1892, 1903) 2. பத்மாவதி சரித்திரம்: ஒரு தமிழ் நாட்டுக்கதை, (1898-99) 3. விஜய மார்த்தாண்டம், (1903). மாதவையாவின் இறப்பிற்குப் பின், அவர் எழுதிய […]
நோற்றலுக்கு இணையான விரும்பி ஏற்கப்படும் மதிப்புமிக்கத் துன்பங்களில் ஒன்று எழுதுதல். இதை எழுதும் இவ்வேளையில் குஸ்தவ் மாஹ்லரின் ஐந்தாம் சிம்பொனி ஒலிக்கிறது. எழுத்து மேஜையில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. அசோகமித்திரனின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பும் கண் முன்னேயிருக்கிறது. 1647 பக்கங்களிருக்கும் அப்புத்தகத்தை கையிலெடுத்து க.சீ. சிவகுமார் சொன்னார்: “அசோகமித்திரனை விடவும் எடை அதிகமா இருக்கே”. அப்போது நான் புன்னகைத்தேன். இப்போதும் அவர் சொன்னது நினைவிலிருந்து புன்னகைக்கத் தூண்டுகிறது. ஆனால் நீத்தார் நினைவுக்குறிப்பை எழுதும் போது புன்னகைப்பதை யார் விரும்புவார்களோ இல்லையோ நிச்சயம் க.சீ. சிவகுமார் விரும்பவே […]
செடிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன தர்காவின் சுற்றுப்புறத்தில். பின்பக்கமாய் பக்கிங்காம் கால்வாய்க்குக் குறுக்கே பறக்கும் ரயில்தடம் பாய்ந்து சென்றது. சுமார் முன்னூறு வருட தர்கா. தஸ்தகீர் பாபா சாகிப் ஜீவசமாதியான இடம். துருக்கியரான தஸ்தகீர் பிஜப்பூரின் அடில் ஷாஹி அரச வம்சாவழி. பதினேழாம் நூற்றாண்டில் தனது உடலின் இறுதிச்சடங்கை எந்த இமாமும் செய்ய வேண்டாமென்றபடி பின்னர் தானே தன்னுடலுக்கான ஜனாசா ஈமக்கிரியைகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. வாயில் வளைவு கடந்து உள்ளே நடந்துசெல்ல மிக உயர்ந்த இரண்டு மினாராக்கள் நின்றன. சுற்றுப்புறமெங்கிலும் நிறைய இஸ்லாமியர் […]
தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக, ஆங்கிலம், கொச்சையான சொற்கள் கலந்து நேரடியாக ஒரு விசயத்தைச் சொல்லத் தலைப்படும் எழுத்துக்கு இங்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் வட்டார வழக்குக்குப் பெரிய மதிப்பு இருந்ததில்லை. நீங்கள் எந்தப் பதிவர்களைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறும் என்றாலும் பேச்சுவழக்கு என்னதான் எதார்த்தமாகவும் பாசாங்கற்றதாகவும் இருந்தாலும், பொதுவழக்கே பொதுவாகக் கோலோச்சுகிறது. இந்தப் பொதுவழக்கைப் […]
‘டீச்சிங்ஸ் ஆஃப் லவ்’ எனும் நூலில் தன் மேலிருந்த பெருவெறுப்பால் வியட்நாம் அரசு ‘தே இறந்துவிட்டார்’ எனப் புரளி கிளப்பியதைப் பற்றி திக் நாட் ஹஞ்ச் எழுதுகிறார். ‘சில வருடங்களுக்கு முன்பு, அரசுச் சார்புக் குழுவொன்று நான் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஹோசிமின் நகரத்தில் வதந்தி பரப்பிற்று. நாடே நம்ப முடியாமல் குழம்பியது. பிற்பாடு பெளத்தப் பிக்குணி ஒருத்தி எனக்கொரு கடிதம் அனுப்பியிருந்தாள். எனது மரணச் செய்தியைக் கேட்டபோது துறவுக்கான ஆரம்ப வகுப்புகளைத் தனது பெளத்தப் பள்ளியில் நடத்திக்கொண்டிருந்தாளாம். துறவு மாணவருள் ஒருத்தி துக்கம் […]
“ஹரிஹரன் என்னிடம் கேட்டால் என் வலது கையை வெட்டித் தருவேன்”, “என் உயிரையே தருவேன்” என்றெல்லாம் சொன்னவர்களைச் சந்தித்திருக்கிறேன். தொண்ணூறுகளின் ஆகச்சிறந்த பாடகர் என்று முதன்மையாக ஹரிஹரனைக் குறிப்பிட்ட பிறகுதான் வேறு யாரைப் பற்றியும் யோசிக்கவே முடியும். ஒன்பது மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கும் ஹரிஹரன் ஹிந்துஸ்தானி இசையில் தனக்கெனத் தனித் தடங்களை ஏற்படுத்தியவர். தொழில்முறைப் பாடகர்கள் யாரை விடவும் மிக அதிகமான சூப்பர் ஹிட் பாடல்களைச் சினிமாக்களில் பாடியவர். ஹரிஹரனின் குரல் மெடாலிக் தன்மையும் நம்ப […]