Category: பொது

எழுத்து

மேலும் சில சொற்கள்

நாஞ்சில் நாடன் · 24.12.21

வேற்று மொழிச் சொற்கள் வேறெந்த மொழிக்குள்ளும் தன்னியல்பாகவோ, கண்ணியத்துடனோ, வல்லந்தமாகவோ நுழையும் காலை, அந்தந்த மொழிக்கான ஒலி வடிவம் எடுக்கும். திருவல்லிக்கேணி Triplicane ஆனதும் திருச்சிராப்பள்ளி Trichy ஆனதும் தூத்துக்குடி Tuticorin ஆனதும் அவ்விதம்தான். தமிழில் இன்று புழங்கும் இருபதினாயிரத்துக்கும் மிகையான சொற்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வரம்புகள் சமைத்திருக்கிறார் தொல்காப்பியர். அறிய விரும்புவோர், இதுவரை தொல்காப்பியத்துக்கு வந்துள்ள 138 பதிப்புகளில் ஏதேனுமொன்றைக் காண்க. தொல்காப்பியத்துக்கு 2000-க்கும் அதிகமான சுவடி வேறுபாடுகள் உண்டு. என்றாலும் இளம்பூரணர், […]

எழுத்து

தமிழ் இலக்கிய வரலாற்று வரைவியல்

முனைவர் இரா.சீனிவாசன் · 24.12.21

தமிழில் உள்ள பல நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ ஆக்கப்பட்டவை என்று சிலர் கூறி வருகின்றனர். ஒரு மொழியில் ஒரு காலச்சூழலில் தோன்றி வேறு மொழியில் வேறு ஒரு காலச்சூழலில் இயற்றப்பட்ட ஆக்கங்களுக்கு இது பொருந்தும். பாரதம், இராமாயணம் ஆகியவை இவ்வாறு தோன்றியவை. வட இந்தியாவில் கி.மு. கி.பி நூற்றாண்டுகளில் தோன்றிய இந்த இதிகாசங்கள் சில நூற்றாண்டுகள் கழித்துத் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள நிலப்பரப்பு வட இந்தியவில் உள்ளது. பாத்திரங்கள், இடங்கள், சூழல், பண்பாடு முதலியவை வட […]

எழுத்து

அல்லேலூயாவும் எளிய தமிழ்ப்பிள்ளைகளும்

ஷாலின் மரியா லாரன்ஸ்  · 26.11.21

அது தாத்தா இறந்திருந்த நேரம். அம்மாவின் அப்பா. திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். காரியம் எல்லாம் முடிந்த கையோடு அம்மாவின் அம்மா சோகத்தில் இருந்து தன்னைத் தேற்றிக்கொள்ள என்னுடைய மிலிட்டரி தாய்மாமாவோடு சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றுவிட்டார். திடீரென்று அந்த வீடு காலியானது. அப்பாவுக்கு மின்சார வாரியத்தில் வேலை. அந்த மாதம் முழுவதும் அவருக்கு இரவுப் பணி. அம்மா பயமற்றவள். அவளுக்கு வீட்டில் இரவில் தனியாக இருப்பது என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. அவருடன் ஆறு வயது […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 4) : மலேசியா வாசுதேவன்

ஆத்மார்த்தி · 25.11.21

மலேசியா வாசுதேவன் ஒரு தொடுவானத் தென்றல். வாசுவின் குரல் இருக்கிறதே அது மிக மிக உன்னதமான வித்தியாசமான முழுமையான போதுமான ஒரு குரல். அதனால் ஒரு சோர்விலாப் பறவை போல் எந்த மலை உச்சிக்கும் சென்று திரும்ப முடியும். பிடிவாதம் குன்றாத நெடுங்கடல் மீன் ஒன்றினைப் போல் எம்மாதிரியான ஆழத்தையும் தொட்டுப் பார்த்து மீள முடியும். அடைய முடியாத எல்லைகளுக்குத் தன்னை விரித்துக்கொள்வது அபாரம். மலேசியா வாசுதேவன் குரல் பூரணம். பெருகிக் கடலான நதி. ரஜினியை நாயகத் […]

எழுத்து

நல்குரவு என்னும் நசை

வி.அமலன் ஸ்டேன்லி · 25.11.21

செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடித்தவொன்று என்றாலும் அவற்றை வீட்டிற்குள், கூண்டிற்குள், தொட்டிக்குள் வளர்ப்பதில் ஒவ்வாமை உண்டு. மகள்கள் அவ்வப்போது வளர்க்கக் கேட்பார்கள். அழகழக்குப் பிராணிகளின் சேட்டைகளை, மனங்கவரும் இயல்புகளைக் காணொளியில் காட்டி என்னுள் விழைவைத் தூண்டுவார்கள். ‘ஏதேனும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் ஆசை இருந்தால் என்னை அப்படி பாவித்து வளருங்கள்’ என்று நைச்சியமாக நகர்ந்துவிடுவேன். ஆனாலும் பிற உயிரினங்களின் அண்மை எங்களுக்குப் பிடித்திருந்தது. நமது உள்ளத்து அன்பை, கரிசனத்தை, கருணையை வளர்த்தெடுக்க பிற பிராணிகளைப் பராமரிப்பது உகந்தது. அன்பு எந்த வகையிலும் எவ்வுயிரிலும் […]

எழுத்து

பால்வண்ணம் பிள்ளை ஏன் கந்தசாமிப் பிள்ளையாக இல்லை?

ஆர்.அபிலாஷ் · 25.11.21

அரிஸ்டாட்டில் (கி.மு 384-324) பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானிகளில் முக்கியமானவர். தத்துவம், தர்க்கம் மட்டுமன்றி உயிரியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளிலும் ஆய்வுசெய்து எழுதியவர். அவருடைய ஆசான் பிளேட்டோ ஒரு கருத்துமுதல்வாதி (எல்லா இருப்புகளுக்கும் ஆதியந்தம் ஒரு தூய கருத்தே என நம்புபவர்). ஆனால் இவரோ ஒரு “லோகாயவாதி” அல்லது நடைமுறைக்கு அதிக மதிப்பளிக்கும் தத்துவவாதி, பொருட்களுக்கும் சாரம் என ஒன்று இருக்கக்கூடும் என நம்பாதவர். அரிஸ்டாட்டில் ஒரு உருவவியல்வாதியும்கூட (formalist) – அதாவது வடிவமே ஒன்றின் தற்காலிகமான […]

எழுத்து

ஊழ்அடி முட்டம்

கார்த்திக் நேத்தா · 28.09.21

அண்ணன் பிரான்சிஸை நான் நேரில் சந்தித்தது வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட அலுவலகத்தில். 2008ம் ஆண்டு வாக்கில். அவரது கவிதைகளைச் செரித்துப் பித்தேறிக் கனன்றுகொண்டிருந்த காலகட்டத்தில் அவரையே சந்தித்த அந்த முதல்கணத்தின் உன்மத்தம் இன்றளவும் வடியவில்லை. வடியாது. எனது தோளில் கைவைத்து அமரச் சொன்னார். எப்போதும் அனந்தர் நடுக்கத்தில் இருந்த எனக்கு அந்தத் தொடுகை ஈன்றளித்த நடுக்கம் எத்தன்மையது என்பதை இன்றளவும் அறியேன். என்னைப் பற்றி, எனது ஊர் பற்றி விசாரித்தார். எனது தோள்பை நன்றாக இருப்பதாகச் சொல்லி […]

எழுத்து

ஜெ.பிரான்சிஸ் கிருபா: பரிசுத்தத்தைத் தேடியலைந்த நவயுகப் பாணன்

விஜயராகவன் · 28.09.21

ஆகஸ்ட் 8ம் தேதி, 2008ம் ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வசந்தகுமார் அண்ணாச்சி சொன்னதால், “கன்னி” நாவலை வாங்கிச்சென்று அன்றிரவே படிக்க ஆரம்பித்தேன். ஏலான் ஆசாரியின் மரணத்தைச் சத்ராதிகள் செய்தனவா அல்லது அறிவியல் தர்க்கமுறைப்படி இதய அடைப்பால் ஏற்பட்டதா எனத் தீர்மானமாக முடிவெடுக்க முடியாதவாறு இரு பக்கங்களையும் திறந்து வைத்திருந்த எழுத்து உத்தி என்னை உள்ளீர்த்தது. அதன்பின் சித்தப்பிரமை அடைந்துள்ள பாண்டி, கடலை ஒரு பெரும் படிமமாகவும் தேவமைந்தனை ஒரு ஆட்டிடைக் கிழவனாகவும் பார்த்த விவரிப்பு, மனக்கிலேசமடைந்தவனின் […]

எழுத்து

ஆகாயத்துப் பட்சி

சுதாகர் · 28.09.21

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் எப்போதெல்லாம் நான் கவிதை குறித்து நண்பர்களுடன் உரையாட நேர்ந்திருக்கிறதோ அப்போதெல்லாம் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசாமல் இருந்ததில்லை. எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட சில கவியரங்க நிகழ்வுகளிலும் கிருபாவின் கவிதைகளையே தேர்வுசெய்து, எனது இதயத்தில் பசுமையாகப் பதிந்திருக்கும் அந்தக் கவிதைகளை இரசித்துக் கூறி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். பல சமயங்களில் இரவின் தனிமையில் கிருபாவின் கவிதைகளைப் படிக்கும் போது அன்பினால், கருணையினால், பச்சாதப உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணீர் மல்கி இருக்கிறேன். அடுத்தநாள் கிருபாவைத் தேடி அவரது நண்பர்களின் […]

எழுத்து

பிரான்சிஸ் கிருபாவின் மும்பை நகரத்து வாழ்க்கை

இறை.ச.இராசேந்திரன் · 28.09.21

எண்பதுகளின் முற்பகுதியில் மும்பையிலிருந்து ‘காரை.பிரான்சிஸ்’ என்ற பெயரில் புதுக்கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை இங்குள்ள இதழ்களில் எழுதிவந்தார். 1991ம் ஆண்டு கவிஞர் ஆறாவயல் பெரியய்யா அவர்கள் பிரான்சிஸை என் வீட்டுக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்துதான் பிரான்சிஸுக்கும் எனக்குமான நட்பு ஆரம்பமானது. அவர் பிறந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் போகும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மூன்றடைப்பு என்ற ஊருக்குக் கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்தினிபாறை. அவர் அம்மா பிறந்தது எனது ஊர்ப்பக்கம் (இறைப்புவாரி) இருக்கும் காராங்காடு. […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 3): ஷ்யாம்

ஆத்மார்த்தி · 28.09.21

19.03.1937 அன்று சென்னையில் அவதரித்த சாமுவேல் ஜோசப் என்கிற இயற்பெயரைக் கொண்ட ஷ்யாமுக்கு அந்தப் பெயரை வழங்கு பெயராக்கியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. தக்ஷிணாமூர்த்தி, சலீல் சவுத்ரி, ஆர்.டி.பர்மன், டி.ஜி.லிங்கப்பா, ராஜேஸ்வர ராவ், பெண்டியால நாகேஸ்வர ராவ், சலபதி ராவ் போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் சியாம். எம்.பி.சீனிவாசன், ஆர்.பார்த்தசாரதி, தக்ஷிணாமூர்த்தி, எஸ்.எம்.சுப்பையா, விஸ்வநாதன் ராமமூர்த்தி எனப் பல புகழ்வாய்ந்த இசையமைப்பாளர்களிடம் வயலின் கலைஞராக வேலை பார்த்த அனுபவம் மிக்கவர். முதல் படம் மாடர்ன் […]

எழுத்து

தன் நீர்மை

வி.அமலன் ஸ்டேன்லி · 28.09.21

மனவிழிப்புநிலை தியான ஆசிரியருக்கான இரண்டரை ஆண்டுப் பயிற்சியில் சமூகத்தின் பன்முகத்தன்மை, சமத்துவம், யாவரையும் உள்ளடக்கல், யாவருக்குமான வளப் பயன்பாடு எனச் சில கூடுதல் பயிற்சிகள் வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்பட்டன. அமெரிக்காவில் இனப்பாகுபாட்டின் உச்ச இழிவுகளைப் பற்றியும் அதே போன்று இந்தியாவில் சாதி சார்ந்த கீழ்மைகளையும் அணுகுவது பற்றிய வகுப்புகள்.   தியானப் பயிற்சிக்காக வரும் மாணவர்கள் பல திறத்தவராய் இருப்பார்கள். முற்றான மெய்யறிவுத் தேடல் தாண்டி அவர்களது அன்றாட உடல், மனம் சார்ந்த அகப் புறப் பிரச்சினைகள் பெரும் தடைகளாக இருக்கக்கூடும். அவற்றுடன் […]