சாந்தாகுருஸ்
கிருபாவின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய முழுத்தொகுப்புக்கு “நிழலன்றி ஏதுமற்றவன்” என்ற தலைப்பையே சூட்ட முயன்றபோது அவர் “சாந்தாகுருஸ்” என்றே அதற்குத் தலைப்பிடச் சொன்னார். அது தமிழ் வாசகர்களுக்குப் புரியாது என்றபோதும் பிடிவாதமாக அதிலேயே உறுதியாக நின்றார். “வாசகர்கள் அதன் அர்த்தத்தைத் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டார். அவர் ஏன் அச்சொல்லைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான மூலகாரணம் “கன்னி” நாவலில் இருக்கிறது. ஜனவரி, 2022-இல் “சாந்தாகுருஸ்” நூல் விலையில்லாத அன்பளிப்புப் பதிப்பாகத் தமிழினியால் வெளியிடப்படும். கன்னி நாவலிலுள்ள சாந்தாகுருஸ் பகுதி இது. * கூன் குருடு நொண்டி முடமென இற்றுச் சருகான பெரும் […]
