Category: நாவல் பகுதி

எழுத்து

கன்னி

ஜெ.பிரான்சிஸ் கிருபா · 22.05.19

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் […]

எழுத்து

வலசை

சு. வேணுகோபால் · 17.02.19

இரவெல்லாம் சிறுவாணைப் பகுதியில் நான்கு யானைகள் வட்டமடித்துவிட்டு விடியற்காலை சோளக்காட்டிற்குள் புகுந்து கொண்டன. கலைந்து போகவில்லை. காலை ஒன்பது மணிக்கே சலீமைக் கொண்டு வந்து இறக்கினர். மேட்டுப்பாளையம் வனச்சரக அதிகாரிகளும் வந்தார்கள். சலீம் உற்சாகமாகத்தான் இருந்தது. ஒன்பதரைக்கு வந்த டாக்டர் “என்ன சலீம், என்ன காரியத்த முடிச்சுத் தரமாட்டெங்கிற” என்று பேசியபடி அருகில் சென்றார். சலீம் டாக்டரை அடையாளம் கண்டுகொண்டது. துதிக்கையைத் தூக்கி டாக்டரின் தலையைத் தடவியது. செல்லமாக டாக்டரை இடித்தது. தண்ணீர் வைக்கச் சொன்னார். கொஞ்சம் […]

எழுத்து

போருழல் காதை

குணா கவியழகன்  · 13.01.19

முற்றிய இருள் கரையும் அதிகாலை வேளை. பற்றியெரியப் பஞ்சியுறும் அடுப்போடு போராடி கிளியம்மா தேனீர் வைத்துக் கொண்டிருக்க, கிணற்றடியில் நாகமணி மேல் கழுவிக்கொண்டிருந்தார். பூனையொன்று உடல் குறுக்கி அருகே படுத்திருந்தது. வழக்கத்துக்கு மாறாய் கதிர் நித்திரை கலைந்து எழுந்து வந்து அடுப்பங்கரையில் குந்தி நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். பூனையும் பார்த்துக் கொண்டிருந்தது. நெருப்பின் செம்மஞ்சள் ஒளி அவன் நெஞ்சில் பட்டு தென்னோலைக் கீலங்களாய் என்புகள் துருத்தித் தெரிந்தன. “போ ராசா,  போய்ப்படு. இப்ப எதுக்கு எழும்பினாய்?” என்று […]

எழுத்து

பேருவகை

மாற்கு · 15.12.18

இப்போது எனக்கு வயது 70. என்னை முதன்முறை சந்திப்பவர் என் வயதை 75க்குமேல் கணிக்கின்றனர். எனது மூத்த அண்ணனுக்கு வயது 82. எங்களைப் பார்க்கும் சிலர் என்னிடம் நீங்கள் தான் அண்ணனா என்பர். அண்ணன்களுக்கெல்லாம் நான் அண்ணன் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்ததால் முதுமையான தோற்றம். எனது பணிக்கு முதுமைத் தோற்றம் பெரிதும் பயன்பட்டது. எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. பணியாளர் குழந்தைசாமி பீக் என்ற அமைப்பின் இயக்குநராக இருந்தார். கொடைக்கானல் […]

எழுத்து

நுண்வெளி கிரகணங்கள்

சு. வேணுகோபால் · 13.09.18

ஊறவைத்த பருத்திக் கொட்டையை ஆட்டுரலில் கடாமுடா வென்று காளியப்பன் ஆட்டினான். பத்து நாட்கள்தான் இருக்கு ரேஸ் விட. இந்திராகாந்தி நினைவுநாளை ஒட்டி ரேஸ். மாட்டு வதை. பூஞ்சிட்டு, கரச்சான், நடுமாடு, பெரியமாடு என்று வகை வகையாக ரேஸ்களுக்கென்று முன்பு இந்த கொட்டத்தில் தனித் தனியாக ஜோடிகள் இருந்தன. இப்ப பெரிய மாடு மட்டும். பேருக்கு வைத்திருக்கிறார்கள். வீச்சுக்கால் மாடுகள் ரேசுக்கு தோதுப்படாது, ரெண்டு மூணு ரேஸிலேயே நீர்க்கட்டு வந்துவிடும். அப்படி வந்தும் மொலியில் சூடுவைத்து வீக்கத்தைக் குறைத்து […]

எழுத்து

மனைமாட்சி

எம்.கோபாலகிருஷ்ணன் · 13.08.18

திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஓடியதே தெரியவில்லை. அக்காவும் புறப்பட்டுப் போனபிறகு விஜயவாடாவை சுற்றிக்காட்டி னான். சினிமாவுக்குப் போனார்கள். கோயிலுக்குப் போனார்கள். உண்டவல்லி குகைக்கோயிலுக்குக் கூட்டிப் போனான். வெயிலுக்கு இதமாக மூன்றாவது மாடத்தில் அமர்ந்து கிருஷ்ணா நதிக்கரைப் பசும் வயல்வெளிகளையும் தென்னைகளையும் பார்த்தவாறு நாள் முழுக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்குக் காலையில் அலுவலகம் புறப்பட்டபோதே சாந்தி அழத் தொடங்கிவிட்டாள். “என்ன தியாகு நீ? மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துட்டுப் போக்கூடாதா?” “இல்லம்மா. லஞ்ச் டைம் அரைமணி நேரந்தான். வந்துட்டுப் போ […]