காமத்திருவாழி: கார்த்திக் நேத்தா கவிதைகள்
கனியும் காமம் கனலும் இக்காமம்எரிமலையின் அறிதுயில். அழகை அடுத்தறிய அகந்தைஆர்த்தெழும் அலை அடிப்பு. முறுவெயில் நின்றெரியநீராலும் தீரா விடாய். உயிர் திரண்டு உயிருறமுனியும் மோகம். பால் ஊற விழையும்பசுவின் இயல்பசி. பதி உணரக் கதியும்பாறை நெகிழ்வு. பாசம் சூல் கொளும்கூட்டில் இடும் பரமுட்டை. ஈருயிர் இயங்கஇயல்வதோர் ஈர்ப்பு. பருவச் சிறகிசை அருகுணரஎழிலே மலராய் விரிய ஏரார்ந்து ஊறும் தேனமுது. 0 உயிரொளி மயங்கி ஆடும் பிழம்பினுக்குமாத்திரை அளவு உரைப்பாருண்டோ? பாதத்தில் பாய்ந்த முள்ளினைக் கெல்லஒளியின் கதிர் உதவுவதுண்டோ? […]
