Category: சிறுகதை

எழுத்து

பைத்தியம்

போகன் சங்கர் · 25.04.22

ஒருவேளை பைத்தியமோ என்று யோசித்தேன். ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஒரு பைத்தியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை இருக்கிறதா என்றுகூட யோசித்தேன். இன்று பைத்தியம் எனச் சொல்வது சரியில்லை என்று என் தோழி ஒருத்தி சொல்கிறாள். அப்படிச் சொல்லும் லைசன்ஸ் மனநல மருத்துவர்களிடம் மாத்திரமே உள்ளது. அவர்களும் வேறு ஏதேதோ வாயில் நுழையாத வார்த்தைகளால் அதைச் சொல்லுகிறார்களே தவிர நேரடியாகப் பைத்தியம் என்று சொல்லுவதில்லை. முன்பு இப்படி இல்லை. பைத்தியம் என்கிற சொல் […]

எழுத்து

எங்கிருந்தோ வந்தான்

எம்.கோபாலகிருஷ்ணன் · 25.04.22

மீண்டும் ஒரு முறை புனேவுக்குச் செல்ல வேண்டியாகிவிட்டது. இந்த வருடத்தில் இது நான்காவது முறை. இந்த முறை இந்தப் பயணத்தை எப்படியாவது தவிர்த்துவிடப் பார்த்தும் இயலவில்லை. வண்டியில் ஏறிய நிமிடத்திலிருந்து இதற்கு முந்தைய பயணம் எனக்குத் தந்த அனுபவத்தின் பாரம் என்னை அமைதியிழக்கச் செய்தபடியே இருந்தது. உள்ளே செல்லாமல் வாசலில் நின்றபடியே பகலைக் கழித்துவிட முடியும். ஆனால் இன்றைய இரவு என்னை என்ன செய்யப் போகிறதோ என்கிற பயம் இப்போதே எனக்குள் நிறைந்திருந்தது. தர்மாவரத்திலேயே ஏதாவது ஒரு […]

எழுத்து

சன்னக்கட்டை

ஆழிவண்ணன் · 25.04.22

1 வாசலில் ஓலைப்பாய் விரித்துப் படுத்துக்கிடந்த மருதையன் ஆசாரிக்கு மேளச்சத்தம் நன்றாகக் கேட்டது. அச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்துக்கொண்டே வந்தது. “ஏய் செயந்தி! சாமி செக்கடி திரும்பிடிச்சி. சீக்கிரமா வெத்தல பாக்கு தட்ட எடுத்துவையீ, டேய் அன்பழகா! எந்திரிடா கவுட்டிலே கைய வுட்டுக்கிட்டு தூங்கறான்” என்று காலால் அவன் உள்ளங்காலைத் தட்டினார். அவிழ்ந்துகிடந்த கைலியை ஒருகையால் பிடித்துக்கொண்டு அன்பழகன் எழுந்தமர்ந்தான். ஜெயந்தி ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்கள், சிறிய சூட வில்லை எல்லாவற்றையும் வைத்து […]

எழுத்து

அச்சு வெல்லம்

எம்.கே.மணி · 25.04.22

விடிந்தால் கல்யாணம். “விரைவாக ஓட்டு!“ என்கிறார் முதலாளி. குன்றுகள் இருக்கிற பகுதி. வளைவுகள் திரிவுகள் அதிகம். செப்பனிடப்படாத பாதை. நான் இடைவிடாமல் அல்லாடி முன்னேறிச் செல்வதை அவர் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்? ஆனால் நாளை கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முடித்தாக வேண்டும். எனது பணிகளை மனதில் தொகுக்கும்போது எனக்கே மலைப்பு உண்டாகிறது என்றால், நாளை விஜயலட்சுமி கழுத்தில் தாலி கட்டப்போகிற அவருக்கு எவ்வளவு கெடுபிடிகள் அழுத்தும்? முக்கியமான பணிகளில் ஒன்றாக இருந்த காரியத்துக்கு இப்போது சென்றுகொண்டிருக்கிறோம். அது […]

எழுத்து

மீண்டுமொரு சந்திப்பு

கமல தேவி · 25.04.22

தை மாதத்தின் பின்பனிப் புகைமூட்டம் சென்னையின் சாலையில் நகரும் திரையென நடக்க நடக்க முன் சென்றுகொண்டிருந்தது. சற்று மூச்சு வாங்க சாலையோர சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். பின்னால் பன்னீர் மரம். இரவில் மலர்ந்த மலர்களின் நறுமணம் என்னைச் சுற்றிப் பரவியிருந்தது. ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டதும் மனதிற்குள் சின்னதொரு குதூகலம் போன்ற உணர்வு. பள்ளிக்கூடத்து மைதானம் நினைவிற்கு வந்தது. பக்கவாட்டிலிருந்த சுற்றுச்சுவரைத் தாண்டி எட்டிக்கொண்டிருந்த செம்பருத்திக் கிளையின் இலைகளில் இருந்து பனிநீர் ஒவ்வொரு சொட்டாக விழுவது போடியம் விளக்கொளியில் […]

எழுத்து

நிர்வாணம்

ஐ. கிருத்திகா · 25.04.22

தங்கக்கொப்புளம் போலச் சுடர் அசைவற்று நின்றிருந்தது. கையிலோ காலிலோ மினுமினுவென்று மினுங்குமே.. அதுபோல ஒன்றல்ல, பல கொப்புளங்கள் கருவறைக்குள். விளக்குகளில் குண்டுமணி போலப் பொன் கொப்புளங்கள் மினுங்கியதைப் பார்த்துக்கொண்டேயிருந்ததில் கண்ணெதிரே வட்ட வட்டப் பொன்துகள்கள் பறப்பது போன்ற உணர்வு. பக்கவாட்டு வாசற்படியில் புறாக்கள் தத்தின. இளஞ்சிவப்பு நிறக் கால்கள் மெலிந்த கீரைத் தண்டுகளை நினைவூட்டின. கற்கூரை இடப்பட்ட உட்பிரகாரம் குளிர்ந்து கிடந்தது. படிக்கட்டுகள் ஈரமாயிருந்தன. யாரோ அலம்பிவிட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே ஒரு சேரளவு தண்ணீர் தேங்கியிருந்தது.  கன்னம் வைத்துப் […]

எழுத்து

கேன்வாஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ் · 24.02.22

அந்தத் தெருமுனையில் மிகவும் இருட்டாக இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் தெருவின் மத்தியில் மட்டும் மஞ்சளாகக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. தூசிகளை ஊடுருவியபடி தரையை நோக்கிக் கசியும் மங்கலான ஒளி மீதி இடங்களைப் புராதன காலத்தை நோக்கி நகர்த்திவிட்டிருந்தது. சாலையில் எப்போதாவது செல்லும் லாரிகளின் முகப்பு வெளிச்சம் தவிர வேறு அசைவில்லை. கனரக வாகனங்கள் செல்லும்போது தெரு இலேசாக முனகுவது போல இருக்கிறது. அவ்வளவு அலுப்பு. வாலைப்போல நீளும் தெரு தனது தலையைத் தூக்கி, எரிந்துகொண்டிருந்த மற்ற தெருவிளக்குகளை ஊதி அணைத்திருக்க வேண்டும். இப்படியான கற்பனை, தெருமுனையில் […]

எழுத்து

ஒத்தைத் தறி முதலியார்

எம்.கோபாலகிருஷ்ணன் · 24.02.22

கண்ணகி நகர் காலை நேரப் பரபரப்பில் இருந்தது. மணி எட்டரையைத் தொட்டிருந்தது. கம்பெனிகளில் தையல் மெஷின்களின் ஓசை தொடங்கிவிட்டது. போரிங் டேங்கில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்களின் கவனத்தை அந்தக் கார்களின் வரிசை சில நிமிடங்கள் ஈர்த்தது. வரிசையாக ஏழு கார்கள் 60 அடி சாலையிலிருந்து போரிங் டேங்க் அருகில் வந்து தயங்கின. இரண்டு லேன்சர்கள், ஒரு சைலோ, இரண்டு டவேராக்கள், இன்னும் இரண்டு ஐ10கள். முன்னால் இருந்த டவேரா மெல்ல மேற்கு நோக்கித் திரும்பி ஒத்தைத் தறி முதலியார் […]

எழுத்து

நீமோ

லோகேஷ் ரகுராமன் · 24.02.22

“சுவாதியும் பரணியும் ஏகப்பொருத்தம்னு கல்யாணம் பண்ணி வச்சாங்க பாரு. அவங்கள சொல்லணும்.” “கொஞ்சம் பொறுப்பா. பொறுமையா ட்ரை பண்ணிப் பாக்கலாம்.” “நல்லா போய் சிக்கிருக்கு. மூடக்கூட முடியல. வந்த மொதல் நாளே வெனை. மொத்த ட்ரிப்போட மூடையும் காலி பண்ணியாச்சு.” “எப்படி வெளில எடுக்கறது இப்போ. ஒன்னு கார்ட் போய்ருக்கும். இல்ல கார்ட் ரீட் பண்ற அந்த ஸ்லாட் போயிருக்கும். அந்த ஸ்லாட் போயிருந்தா போச்சு. மொத்த காமெராவுக்குமே வொலதான். கார்ட் போயிருந்தா ஒன்னும் இல்ல. புதுசு வாங்கிக்கலாம். ஆனா […]

எழுத்து

முகம்

எம்.கே.மணி · 24.02.22

“செத்துப் போகணும்னு முடிவுசெஞ்சேன். ஆட்டோ புடிச்சு நேரா இங்க வந்து படுத்தேன்!“ என்றார் பாசு. அவர் சொல்லி முடிக்கும்போதே காலை வெயிலை ஏற்று எதிரொளித்துக்கொண்டு ஒரு புகைவண்டி போயிற்று. கொஞ்ச நேரம் அந்தத் தடக்தடக்கில் கூடிக்கொண்டிருந்தது மனம். சாவதற்கு நல்ல இடம். சாலை விஸ்தரிக்கப்பட்டு, கட்டிடங்கள் அதிகரித்து, சுரங்கப்பாதை எல்லாம் வந்து, போக்குவரத்து நெருக்கினாலும்கூட, நாற்பது வருடங்களுக்கு அப்புறமும் இது சாவதற்கு ஏற்ற இடம்தான். இவ்வளவு காலம் போன பின்னாலும், அந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் கூர்ந்து […]

எழுத்து

ஜீவா

கமல தேவி · 24.02.22

ஆகஸ்ட் மாத வெயில் சூடேறத் தொடங்கும் காலை வேளை. ஓரறை ஓட்டுவில்லை வீடு அது. கதவுக்கருகில் படுத்திருந்த அப்பாயி தலையைத் தூக்கிப் பார்த்தது. அவள் வடித்து வைத்திருந்த சோற்றைத் தட்டில் போட்டு புகையடுப்பில் சுண்டிக்கிடந்த தக்காளிக்குழம்பை ஊற்றிக்கொண்டு ஜீவா திண்ணையில் அமர்ந்தான்.  “பாப்பாவை எழுப்பிவுடுய்யா…” “இன்னிக்கி பள்ளிக்கூடம் இல்லப்பாயி… வேலைக்குப் போறேன்…” “இதுகள படிக்கவச்சி கரையேத்தலான்னு பாத்தா மாசக்கணக்கா பள்ளிக்கூடத்த மூடி போட்டுட்டானுங்க… நோவுநோவுன்னு ஊரே பதறிக்கெடக்கு. எட்டடியானுக்கு ஒரு பொங்க பூச வச்சி, ஊர்க்கெடா வெட்டி […]

எழுத்து

வஸ்திராபகரணம்

ரா. செந்தில்குமார் · 24.02.22

ரயில் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. வார விடுமுறைக்கு ஊருக்கு வந்து, சென்னைக்குத் திரும்பும் இளைஞர்கள் சிலர், பிளாட்பார்மில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மிளகாய்ப்பொடி தூவிக் கொண்டுவந்திருந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவனிடம் கொடுத்தார். அதிலிருந்து மிளகாய் காரத்துடன் கலந்த நல்லெண்ணெய் வாடை வீசியது. பின்புறம் நிற்கும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறுவதற்கு ஒரு வயதான அம்மா வேகமாக நடக்க முயன்று, மூச்சு வாங்கினார். அவருக்குச் […]