“செத்துப் போகணும்னு முடிவுசெஞ்சேன். ஆட்டோ புடிச்சு நேரா இங்க வந்து படுத்தேன்!“ என்றார் பாசு. அவர் சொல்லி முடிக்கும்போதே காலை வெயிலை ஏற்று எதிரொளித்துக்
சாவதற்கு நல்ல இடம். சாலை விஸ்தரிக்கப்
அவர் சொன்னார். “தெரியும் இல்லையா, அப்ப எல்லாம் போட்டோ ஸ்டுடியோன்னா அதுக்கு தனி கௌரவம். காசு குடுத்து படம் எடுக்க வர்றவனை கழுத்த பிடிச்சு சரியா உக்காருய்யான்னுவாங்க. நான் வேல கத்துக்கப் போனது வேற செம்ம எடம். அந்த மொதலாளி கெத்து பண்ணிப்பார். பக்கவாட்டில பல வக்கிரம். எப்படியாவது இவன் வேலைய கத்துப்பானோன்னு ஊடுருவி பாத்துகிட்டே இருப்பார். சும்மா இருக்கக்கூடாதேன்னு ஒரு எரிச்சல் வந்துட்டா, ரிசப்ஷன்ல இருக்கற டேபிளுக்கு அடியில நாலணா எட்டணா சில்லறைக் காசை போட்டுட்டு, என்னை தேட வைக்கறதெல்லாம் உண்டு. என் வயசுக்கு அதெல்லாம் சிரிப்பு
“ஒருநாள், ஒரு சோம்பலான மதியம்னு வெச்சுக்கலாம். ஸ்டுடியோவில அப்ப நான் தனியா
“மொதலாளி வந்து என்ன
“அப்புறம் நடந்ததை எல்லாம் சொல்லணும்னா இப்பகூட எனக்கு தலை சுத்தும். நான் இறங்கின பஸ்ஸை பிடிக்க ஆட்டோ எடுத்துகிட்டு டெப்போ வரைக்கும் ஓடினேன். அத தேடி ஒரு வழியா பல பேர் முன்னாலையும் அழுது, அவங்க சொன்னத கேட்டு மறுபடி ஒரு ஆட்டோ எடுத்து பொறப்பட்டுப் போன பஸ்ஸை வழி மறிச்சு ஏறிகிட்டேன். சாயந்திர நேரம், ஜனம்! அத்தன பேரோட காலுக்குள்ளேயும் பூந்தடிச்சு தேடி, டெப்போ வந்து ஜனம் ஒஞ்சப்புறம் ஒவ்வொரு இன்ச்சையும் அலசி முடிச்சு உக்காந்துட்டேன். ஏம்பா அழறேன்னு ஆறுதல் சொன்ன ஒரு மொகத்தையும் நான் பாக்கலேன்னு சொன்னா போதாதா?”
“அது கெடைக்காது.”
“இப்ப எல்லாத்தையும் பூ பூன்னு ஊதித் தள்ளிடலாம் சிவதாசா. அன்னைக்கு ஒரு விசான்னு சொன்னா அது என்ன? அது ஒரு கேக்காத அதிசயமில்லையா? ஒர்த்தனுக்கு அது வந்து சேந்துச்சுன்னா அவன் பக்கத்து வீட்டுக்காரங்க, சாதி சனமெல்லாம் வந்து கும்பிட்டுப் போவுமே? வாசு ஒரு ஏழ வீட்டுப் பையன். எத்தன பணம் செலவு செஞ்சாங்
“அவர் நெனச்சுப் பாக்கக்
“ஆட்டோ பிடிச்சு வந்து டிரெயின் டிராக்ல படுத்தேன். ரயில் வர்றப்ப எழுந்துட்டேன். திரும்ப திரும்ப அதையே கொஞ்ச நேரம் செஞ்சுகிட்டிருந்தேன். அழுகை நிக்கவேயில்லை. நேரா நான் போனது எங்க அப்பாகிட்ட. அவர் ஆடிப் போயிட்டார். வளந்த புள்ள அழுவறதாவது. அதுவும் இல்லாம நான் எல்லாம் பெரிய ஆளுன்னு ஒரு டைம்ல நெனப்போம், பெரிய லாடு மாதிரி நடந்துப்போம், என்னால அவர் ரொம்ப அடிபட்டிருந்தார். சொல்லப்போனா எங்களுக்குள்ள பேச்சுவார்த்தையே இல்ல. அதெல்லாம் இப்ப ஒரு நிமிஷத்துல அடிச்சுகிட்டுப் போச்சு. என் தோள்ள கைய போட்டு அணைச்சுக்கிட்டு, என்னைக் கூட்டிகிட்டு நடந்தது எனக்கே பரிதாபமா இருந்துச்சு. மொதலாளி நீங்க எல்லாம் சொந்தம், உங்களுக்குள்ள முடிச்சுக்கங்க என்று தனது வேலையைப் பார்த்தார்.”
“ஒரு மனுஷன் ஒரு சரியை செய்றதில புதுசா சொல்றதுக்கு இல்ல. அது வாழறதுக்கு இருக்கற ஆச. அவன் தன்னை இங்க வெச்சுகிட்டா பிரயோஜனம் இருக்கும்னு நம்பறான். தப்பு செய்யும்போது என்ன நடக்குது? அது மில்லியன் டாலர் கேள்வி. என்னோட புத்தி சட்டுனு திரவ
“யாரும் எடுக்கல, நான்தான் தொலச்சேன்னு சொல்ல துணிச்சல் வந்துடும் போல இருக்கறப்ப, இன்ஸ்பெக்டர் என் கண்ண பாத்துகிட்டே ஒன்னு சொன்னான்.”

“உங்க பையன் சரி இல்லன்னு நெனக்கிறேன். எதோ புளுவடிக்கிறான். காச சுருட்டிட்டு கத சொல்றான். விசாவ எங்க தூக்கிப் போட்டான்னு கேளுங்க!“
அத்தனை பேரும் அவனையே பார்த்தார்கள். சற்றே குடியின் ஆட்டமிருந்தது.
“இல்லன்ன என்கிட்டே உட்டுட்டு போங்க. நான் விசாரிக்கறேன். மணி மணியா உண்மைங்க வரும்!“
“நாங்க எல்லாரும் திரும்பிட்டோம். அதுக்கு அப்பறம் யாரும் என்கிட்டே எதுவும் கேக்கல. மறுபடி விசா காப்பி வந்து நாலு மாசத்தில வாசு அபுதபிக்கும் போயாச்சு.”
பாசு கொஞ்ச நேரம் காரைக் கையாள்வதில் மும்முரம் காட்டினார். உள்ளே இருந்து ஒரு பாறாங்கல்லைப் புரட்டிப்போட்டதன் அதிர்வு கொஞ்ச நேரமாவது இருக்கத்தானே செய்யும்? நான் கதை கேட்கத் தயார் இல்லாதவன் போல இருந்தேன். ஒரு சீரான சாலைக்கு வந்ததும் பாசு தொடர்ந்தார்.
“சௌமியோட அப்பா எப்பவாச்சும் என்ன பாக்க வேண்டி வந்தா பேசறது கிடையாது, சௌமியோட அம்மா கழுத்தைகூட திருப்பிகிட்டாங்க. எங்க சாதி சனம் மொத்தமுமே என்ன நாலு கண்ணால பாத்துகிட்டு போறது பெரிய காமெடி. பிசாத்து பணத்துக்காக விசாவை கிழிச்சுப் போட்டவனாச்சே பாஸ்கர்!”
“சௌமி?“
“என்ன சௌமி?“
நான் மெளன
“டேய், நான் அவள எப்ப பாத்தேனோ அப்பவே எனக்கு நெஞ்சு பாரம்
எனக்கு மேலே பேசுவதற்குப் பிடிக்க
“எனக்கு அழ எல்லாம் வரல. ஏன்னு கேளு?“
“ஏன்?“
“அவ யாரு மாதிரியோ இருந்தாடா. அந்த மொகம், அது எனக்குப் பழக்கப்பட்டதே கெடையாது. விசா காணாம போச்சு இல்ல? நானும் அப்பாவும் நேரா சௌமியோட அப்பாவ பாக்கத்
“ஒன்னும் ஆவாது. கவலைப்படாத. சரியா?“
“அவ மொகத்துல எனக்காக ஒரு மொகம் இருந்திச்சு சிவதாசா. அத நான் எடுத்துகிட்டேன். அன்னைக்கும் இன்னைக்கும் அது மாயவே மாயல. என்ன
“நான் சாவற வர அவளுக்கு சாவு கெடையாது, அவ்வளவு
அவன் சட்டென காரில் பாடிக்கொண்டிருந்த பாடலுடன் இணைந்து சீட்டியடிக்கத் தொடங்கினான். நான் வெளியே வேடிக்கை பார்த்துக்
