வானம் விட்டுக் கீழிறங்கக் கள்ளப் பருந்து ஆயத்த
இறக்கைகளுக்குக் கீழே பூமி தனக்குள் குவிந்திருந்தது. வானம் பூமியைத் தன் உள்ளங்கைக்குள் அடைகாத்திருந்தது. வடக்கில் தூரத்து மலைகளின் வழி பிற்பகலில் கனத்து மூளும் வாடைக்காற்று வசமிழக்கச் செய்தது. நேரம் ஆக ஆகக் களிற்றுக் கூட்டம் போலக் கார்முகில்கள் திரண்டு வந்தன. விரி சிறகு
ஒளி மாழ்கிச் சூழும் பையிருளில் தன் கூர்பார்வை தீரும் கடைசி நொடிவரை அசைவற்றுப் பறந்திருக்க அது விழைந்தது. தன்னை நெஞ்சகத்தில் தாங்கிக்கொள்ள எக் காலத்திற்கும் நிபந்தனைகள் ஏதுமற்றுக் கைவிரித்து வாஞ்சையுடன் காத்திருக்கும் பூமியின் மேல் மெய் மறந்து இன்னுமின்னும் பறக்க அவாவுற்றது. தன் அன்றாட வசிப்பின் காட்டுப்பரப்பில் இருட்டுவதற்குள் எம் மரத்தின் மறையிலைக் கிளையில் கால் பதிப்பது என்று எண்ணி, இனி வானத்தில் தகைக்க இயலாதென்ற போதில் சட்டெனக் காற்றில் முன்பக்க
அதுவோர் அரசமரம். அண்மையில்

நிலத்திலிருந்தபடி
பருந்து தலையைக் கீழே தாழ்த்திற்று. மரத்தடியில் யாரோ அசைவற்று அமர்ந்திருப்பது தெளிவற்றுத் தென்பட்டது. யாரது இந் நேரத்தில் என்று வியப்பும் திகைப்பும் கூடி இலைகளின் அசைவுகளினூடே தலை சரித்துக் கால் மாற்றி இன்னும் ஊன்றிப் பார்த்தது. அதே மனிதர்
சில நாட்களுக்கு முன்னர்
அவ்வப்போது அவரைச் சில நண்பர்கள் சூழ்ந்தபடி செல்வார்கள். சில சமயம் அவரோடு காட்டோரம் சுள்ளிகள் பொறுக்க வரும் ஊர்ப் பெண்கள் பேசியபடி செல்வர். பெரும்பாலும் ஊர்ச் சிறுவர்கள் அவரோடு கதைத்தும் விளையாடியும் காய்கனிகளைக் கொறித்தும் போவார்கள். குறு விலங்குகள் சில அவருடன் ஒட்டியுறவாடிப் போகும்; பருந்துக்கான இரையாகும் சிற்றுயிர்களும் சிறு பறவைகளும்கூட. எந்த அச்சமும் தயக்கமும் உணர வாய்க்காத பரிவு சூழ்ந்த நற்காட்சியது. அப் பருந்து கூட அவ்வப்போது வானில் வட்டமடிக்கையில், காட்டுமரங்
அம் மனிதரும் தன்னைப் போலவே தனித்துத் ததும்பித் தன்னிலையில் லயித்துத் திரிவதைக் கண்டு அவர்மேல் சற்றே அக்கறையும் கவனமும் கொண்டிருந்தது. தனக்கான வளிமண்டலம் போல இவருக்கு இக் கானகம் இருக்குமென்று நினைத்தது. தனிமையின் குன்றாச் சாரத்துள் தன்னைப் போன்றே அமிழ்ந்தொளிரும் ஓருயிர் அதுவென்று உணர்ந்தது. கண்மூடி மெய்மறந்து அமர்ந்து உறங்கத் தொடங்கிற்று. கருங்காட்டின் குளிர்காற்றில் இலைக் கொத்துக்குள் பொதிந்துறங்கும் வேளை இருளின் மாயக் கிறக்கத்தில் மன்னுயிர்களோடு கனவுக்குள் திளைத்தது பருந்தும்.
***
நூற்றாண்டுகள் தாண்டிய அந்த அரச மரத்தினடியில் கால் மடக்கிச் சம்மணமிட்டு அமரும் வேளை மழை விம்மிச் சாரலாய் இறங்கிக் காற்று சில்லென உடல் ஊடேறிற்று. பெருமரத்தண்டின் உட்புற
உள்வெளி சுவாசத்தையும் நெஞ்சுக்கூடு விம்மித் தாழ்வதையும் கூடவே வயிறு விரிந்து சரிவதையும் உணர்ந்தார். சுவாசத்தோடு முழு உடலுணர்வின் விழிப்பை மனத்துடன் ஒருமுகப்படுத்தி நிலைகொள்ளச் சற்று நேரம் தேவைப்
தண்டுவடத்தில் குளிர் மின்னல் வெட்டித் தேகம் விதிர்த்தது. மலைப்பாம்பொன்று உடலைச் சுற்றி வளைத்துத் தலைமுதல் கால்வரை பிணைத்து முறுக்கியது
உடல்நிறை புவிஈர்ப்போடு கரைந்து முழுமையும் வெற்றாய் உணர்த்திற்று. முதுகுத்தண்டின் அடியில் உள்வால் நுனி ஊக்கமுற்று உடலைத் தூக்கித் தூக்கிச் சாய்க்கத் துடித்தது. அப்பூமிப் பகுதியின் உயிர்காந்த ஆற்றல் உடலை உலுக்கியது. தக்கையென உணர்த்தியது யாக்கை.
மேகங்கள் மேன்மேலும் கருத்துக் குபுகுபுவென உருண்டு தொடர் இடியொலி முரண்டு கானகத்திற்குள் ஆழமாய் எதிரொலித்தது.
வழக்கத்திற்கு மாறாக அன்றிரவு பெருமழை
அரச மரத்தின் அகண்டு உட்குழிந்த பெருந்தண்டின் அடியில் மறைவாய் அமர்ந்திருந்தாலும் அவர் முற்றிலு
தேகத்தில் மூச்சுவழி சூல்கொண்டது ஆதார மையம். முதுகுத்தண்டு, வால்நுனி, குரல்வளை, நெற்றிப்பொட்டு, விழிக்குழி, உச்சந்தலையென ஆற்றல் தன் சுழல் குவியத்தை மாற்றி மாற்றிப் போனது. அடிவயிறு உட்சுருண்டு பின்முதுகுச் சுவர் தொட்டு உதரவிதானம் முழுதாய் நாணென விசைகொண்டு நிற்க, பிராணன் அப்படியே நிலைத்துத் தன்னை நிறுத்திக்கொள்ள, மேலேகும் சுவாசச் சுழல் தலைக்குமேல் திரண்டு நின்றது.
மூச்சுக்காற்று நாசிநுனியில் சூழ்காற்றோடு கலந்து தன்வசமிழந்தது. கயிறு இழுத்துக் கட்டிய பாய்மரமாய் சுவாசிக்கக் காற்றின் ஆழ் உந்துதலில் விழிப்பூக்கம் கூடித் தன்னுணர்வுவழி உடலின் அனைத்துத் துளைகளிலும் நுண்துவாரங்களிலும் பாய்ந்தோடியது.
மூச்சு தன்னையே நெஞ்சுக்குழிக்குள் நிறுத்தி வெகுவேக கதியில் முழு உடலைத் தனக்குள் மூழ்கடிக்கும் வெண்ணாற்றலில் இளைப்பாறி நின்றது. சுவாசச் சுழல் சிரசில் திரட்சி கொண்டு மெல்ல மெல்லப் பரவி வளியோடு ஒன்றறக் கலந்து காணாமல் போனதின் விழிப்பாக உயிருக்குள் திளைத்தது. மேனி புறத்தோலில் சிலிர்த்திருக்க உள்ளே என்பும் சதையும் ஆவியாகிக் கிளர்ந்து கரைந்து மாயத்தொகுப்பாய் அமர்ந்திருந்தது. அவ்விரவு பூராவும் தவழ்ந்து தழுவிச் செல்லும் காற்றைப்போலக் கடந்து சென்றது. அதில் நிறைவும் பூரண அமைதியும் தோய்ந்திருந்தது. தற்போதம் பரபோதமாகிக் காற்றில் விரிந்தது. மெய்யறிவின் மாயவுருக்கள் உடலுக்குள் புகுந்தோடின.
வான்பொழிவோடு நெருப்பாற்றின் தண் சுனைத் தழல் செம்பொழிவாய்க் கசிந்தோடிற்று. நெருப்பற்று தண்ணென்ற ஒளிநீர்மை
அவர் சரண்புகப் பணிந்து தொழ, சரணடைய உள்ளே ஏதுமற்று உணர்த்தியது. சரண் அளிக்க ஏதுமற்று இருந்தது. கொள்ளளவு என்று ஏதுமின்றிப் போனது. பாத்திரப் பொருளடக்கம் நழுவி விட்டிருந்தது.
எதைச் சரணுக்குட்படுத்த?
உன்னத மென் சுனை.
அடர் திரளாய் ஆற்றல்.
நாட்டங்கள் அடங்கி
வழுவுதல் அன்றி
அறிதற்கரிய
சுடர்ந்தெழும் சூழமைவில்
அகப்பெருவெளி சுவைத்துத்
திளைத்துப் பின் தொழுது
உள்ளுணர்வாய் விளங்கி
உள் வெளி தான் பிற ஏதுமற்று
செம்பொருள் பொலிந்த
செவ்வருட்காட்சி..
திளைக்காமல் திளைக்கும்

அவ்வுலகில் இவ்வுயிரிருப்பு
முதல் சாமத்தின் கணப்போதில் இருளடர்ந்து சோதியாய்ச் சுடரும் உயிரச்சம். மெல்ல உடலைப் பக்கவாட்டில் சரிசெய்து சாய்ந்தமர்ந்தார். வாழ்கூறுகள் அற்ற, எவ்வொரு நம்பிக்கையுமற்ற, நிராதரவான, எல்லாம் முடிந்தது எனும் துயரார்ந்த தருணம். மரண பயத்திற்கான அனைத்துக் காரணங்களையும் கூட்டி அழுத்திய புதுமை
ஆங்காங்கே மின்பட்டு நெருப்பூறிற்று காடு. உடற்கட்டுகள் தாண்டி, மனம் தளர்ந்து, தாதுக்கள் பேரூக்கம் கொண்டெழுந்து பிரபஞ்சப் பேராற்றலாய்த் திரண்டு தானெனும் திட திரவ வாயுவில் ஏதென அறியவியலாப் பேருண்மை
உயிரணுக்
ஆழ்தவத்தில் மன உடல் கூட்டமைப்பினுள் மேன்மேலும் ஊடுருவிச் சென்று உயிருக்குள்ளோடி இருப்பின் மையக்கருவுக்குள் இயற்கையாய் அமையப்பெற்ற மெய்ஞ்ஞான ஆற்றலை வளர்த்தெடுத்துப் பெருக்கிக் களித்து இன்புறுதலும், பிறரும் உய்த்துணர்ந்து மெய்ஞ்ஞானம் எய்த உதவுவதும், பேரின்பம் பகிர்வதுமே இப் பிறப்பின் மேலான சிறப்பென சித்தாத்தர் அன்று உணர்ந்தார்.
இரண்டாம் சாமத்தில் அவர் வாழ்நாளின் அன்றன்றைய, அவ்வக் கணத்தின் எண்ணிறந்த பிறப்புகள் எழுந்தாடின. பிறப்பும் மரணமும் எனும் ஊழிக்கூத்து. நாமரூபங்கள் உயிர்களென எழுந்தாடின. எழுந்தவை மடிந்தன. ஓலம், எங்கணும் ஊழியின் ஓலம். மரணத்துயரின் ஒப்பாரி. உருண்டோடும் தீராக் கண்ணீரின் கரிப்பு கூடி ஆற்றோடு கலந்து ஆழியில் உப்பாய் அடர்ந்தது. எல்லாம் எழுந்தெழுந்து அடங்கின ஓயாமல் தவித்துப் புரண்டன முட்டி மோதின விலகின அமைதியுற்றன. மீண்டும் எழுந்தன. பிரபஞ்சத்தின் மாயா மண்ணுயிர்ச் சுழற்சி.
நிலம் நடுங்கி பூமி பிளவுண்டாற்போல் மேன்மேலும் கூடுகள் தென்பட்டு ஆடின. பருவங்கள் மாறின. தண்மை வெப்பங்கள் மாறின. நிலம் மாறிற்று. விண்வெளி மாறிற்று. பிரபஞ்சத்தின் சுழற்சியில் இருப்பின் எல்லைகளும் எல்லை இகந்தவையும் ஒருமித்து நீண்டன.
நிகழ்வன கணங்களுக்குள் சுழல அவற்றைத் தேர்வது அறிவாகிறது. புலனூடேயே புலனுக்கப்பாற்பட்ட இருப்பின் தேறல். வளங்குன்றாச் சுவை. அச் சுவைக்கு இட்டுச்செல்லும் தவப் பெருநோக்கு மூன்றாம் சாமத்தில் எழுந்தது.
அறயின்பம், பொருளின்பம், களியின்பம் தாண்டிய வீடுபேறு. ஒண்சுடராய் அறிவதே அறிவாய் நின்றாடும் கூடற்ற உள்ளொளி.
ஈரம் பாய்ந்த அரச மரத்தடியில் உயிரணுக்கள் அனைத்
தன்னுணர்வுக்குள் ஓரளவிற்குப் புரிந்தபோதும் இப்படியானதொரு அனுபவம் சார்ந்த மெய்யறிவுத் தீண்டல் அவரைப் பரவசப்படுத்திற்று. அற்புதமென உணரவைத்தது. எத்தனை நீண்ட தேடல். ஏறத்தாழ ஏழாண்டு காலம். காடுறை வாழ்வு.
‘முதலில் பிரபஞ்ச ஒழுங்கியக்கம்; ஆதி அந்தமெனும் இருமை தாண்டிய, வெறுமனே எழுந்தடங்குவதாகத் தோன்றும் பேரியக்கத்தினுள் ஆழ்ந்து உய்த்துணர, நிர்வாணம் எனும் எல்லை கடந்த விடுதலை, அவ்வளவே’ என்று அவரால் அக் கணத்தில் கண்டுணர முடிந்தது.
உள்ளேறும் எதுவும் அங்கேயே தங்கியிருக்காது வந்து போய்க் கொண்டிருந்தது; உடலிலோ மனத்திலோ வலியோ துயரோ மகிழ்வோ நிறைவோ.. அவ்வப்போது துண்டு துண்டாக இங்கொன்றும் அங்கொன்றுமெனத் தன் விழிப்படைவில் நிகழ்வதைப் பார்த்தபடி அமைந்தது இருப்பு. சார்பெழுச்சியே பிறப்பு இறப்பு, நோய் மரணம், துயரம் மகிழ்ச்சி அனைத்து இருமை
அச் சார்புறு சுழற்சியின் மெய்மையைப் புரிந்துணர்கையில் அனைத்துலகங்
இன்பமும் துன்பமும் ஒன்றைச் சார்ந்தே எழக்
எவ்வொன்றையும் சார்ந்திராத எப் பற்றும் கழிந்துபோன இயல்பெருவெளிப் பரப்பொன்று உண்டு. அப் பரப்பே, வாழிருப்புப் பரிமாணமே அகவிடுதலையைத் தரிசனப்
அக விடுதலையின் பாதை முகிழ்த்துத் திரண்டது. களங்கங்கள் ஆன்றவிந்திட சான்றொன்றே இருப்பாய் எஞ்சியது. உயிரியக்கத்தின் கூறுகள் பற்றிய கருத்தாக்கங்கள் கலைந்து விலகின. இருப்பென்பது ஆற்றோட்டமாய், நீர்மையாய் ஓடிக்கொண்டிருப்பது புலப்
ஒன்றோடொன்று சார்புற்று செயலூக்கம் கொள்ளும் இயற்பண்பின் ஒரு சரடு உயிர்
இதோ கெடுவிழைவென மாரன் சித்தாத்தரின் தனிப்பட்ட முடிவு
நிலை தடுமாறினும் பூமியின் இதயம் தொட்டுத் தன்னைச் சமன்படுத்தி அமர்ந்து மீண்டும் தியானப் பெருவெளிக்குள் ஐக்கியப்
உயிரணுக்
‘பூமி நீர் நெருப்பு காற்று கடந்த பரிமாணம் ஒன்றுண்டு; அகண்ட வெளியின் எல்லையின்மை
துருவித் துருவிச் சுரங்கமென ஊடுருவிக் கொண்டே நீண்டது விழிப்பு, உடலுக்குள் மனத்துக்குள் மண்ணுக்குள் விண்ணுக்குள் அண்டமுழுதும். அப்படியே ஊடுருவி ஊடுருவி முற்றி விதிர்த்து பிரமாண்ட வெளியாய் ஒளியாய் விரிந்தது ஞானத்திறப்பு, நித்தியமாய் பூரணமாய் நிர்வாணமாய்..
மெய்யுலகின் மாயாவேட்கைக்
கருஞ்சுழலில் சிக்கி மடியா
விதிவிலக்கென்று எவருமிலர்.
பட்டுத்தீரா வாழ்
மயங்கு உழல்வில் தவிக்கும்
கற்பகோடித் துகள்
தாங்கொணாக் கூத்தை முடித்து
விடுதலை பெற்ற அரும்பேறின்
தெளிந்த தூய உள்ளொளி
சுடரும் ஞானவான்
அவனென அறிந்து
பதைத்தோடின களங்கங்கள்.
அதிகாலை விடிவெள்ளி வானிறங்கி நின்று ஒளிர்ந்தது, அந்தரத்தில் எப் பற்றுமற்று. புதிதெனக் காண்பதாக அவ் வெள்ளியை நோக்கினார். கடந்தது அனைத்தும் தீர்ந்துபோய் செம்மை
அதுகாறும் ஊற்ற ஊற்ற
உள்வாங்கிக் கொண்டே இருந்த
உள்ளுறை உயிர்த்தேடல்
பூரிதப்
மிச்சமீதமின்றி முழுதாகக் கவிழ்க்க
வாழிருப்பின் விளிம்பு தாண்டி
நிரம்பி வழிகிறது பூரண அகவெளி.
தொடர்புறும் அண்டத்தின்
அனைத்துப் புலப்பாடுகளையும்
ஊடேறி ஒன்றிக்கொண்டாலும்
இறுதிவரை ஈரம் ஒட்டாமல்
தகைத்துத் திகழ்கிறது
வெற்றுமையின் அகல் விரிவெளி.
தனியொரு உயிரின் ஞானப் பாதையில் நுண்ணறிவையும் தன்னுணர்வையும் அகவிழிப்பையும் கருவியாகக் கொண்டு, தனக்கப்பாற்பட்ட உயர் தெய்வப் பண்புரு எனும் எக் கருத்தையும் விலக்கி, தனிமனித சிந்தனைகளாலும் தீவிர முயற்சிகளாலும் இவ்வுலகின் அனைத்து உயிர்
தவத்தின் படிநிலை
புலரிச் செங்கதிரொளி காட்டு வெளியில் பனியினூடே கூர்ந்து பாய்ந்தது. அவர் தெளிந்தெழுந்தார். சம்போதி ஒளிர்ந்து மிளிர்ந்தது. இவ்வுலகம் இனி ஒருபோதும் முன்புபோல் இருக்கப் போவதில்லை என்பதாகப் பறவைகள் பாடின.
