Category: எழுத்து

எழுத்து

ஒத்தக்கை இபுராஹிம்

மானசீகன் · 29.09.23

1 ‘எலா நவீஸா, ஒத்தக்கை இபுராஹிமு மவுத் ஆயிட்டானாம். இன்னிக்குக் காலைல வெள்ளன சுருளிப்பட்டில வச்சு காட்டு யானை மிதிச்சிருச்சாம். அவுஹ அண்ணன் மகன் வீட்ல ஜனாஸாவ போட்ருக்காஹ. எல்லாவளும் தீதார் பாக்கப் போறாளுஹ. என்னா பெரிய தீதாரு? துணி மாதிரில்ல வாரிச் சுருட்டி எடுத்து வந்திருக்காஹ. மூஞ்சிய மட்டும் விட்டுப்போட்டு மிச்சத்தையெல்லாம் யானை பிதுக்கி எடுத்துக் கூழாக்கிருச்சு.’ நபீஸா அந்தச் சிறிய வீட்டை மௌனமாகக் கூட்டிக்கொண்டிருந்தாள். வலதுகையால் நெற்றி வியர்வையை வழித்துத் தன் சேலையில் துடைத்துக்கொண்டாள். […]

எழுத்து

நாவல் எனும் கலை வடிவம் – மிலன் குந்தேரா

மோகன ரவிச்சந்திரன் · 28.09.23

கேள்வி உங்கள் நாவல்களின் அழகியல் பற்றி விவாதிக்க விருப்பம். ஆனால் எங்கிருந்து தொடங்குவது? மிலன் குந்தேரா இந்த வலியுறுத்தலுடன்தான்: எனது நாவல்கள் உளவியல் சார்ந்தவை அல்ல. இன்னும் துல்லியமாக: அவை பொதுவாக உளவியல் என்று அழைக்கப்படுகின்ற நாவலின் அழகியலுக்கு வெளியே இருக்கின்றன. கேள்வி ஆனால் எல்லா நாவல்களும் உளவியல் சார்ந்தவை அல்லவா? அதாவது, ஆன்மாவின் புதிர் சம்பந்தப்பட்டவை, இல்லையா? மிலன் குந்தேரா இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால்: எல்லா நாவல்களும், ஒவ்வொரு காலகட்ட நாவல்களும், சுயத்தின் புதிரைப் பற்றியவை. […]

எழுத்து

அப்பா

பா.திருச்செந்தாழை · 28.09.23

வட்டிலில் மீந்த மோர் சோற்றைக் குடிப்பதற்காக அப்படியே கையில் ஏந்தி முகத்தை அதற்குள் செலுத்தினார் அப்பா. வட்டிலின் விளிம்பைக் கவ்விய உதடுகள் மோர் சோற்றின் உப்புக்கும் புளிப்புக்கும் அடிமையாகிவிட்டதைப் போலச் சப்புக்கொட்டி உறிஞ்சியபடி இருந்தன. நான் பார்த்தேன். கண்ணருகே உற்றுப் பார்த்தபடி ரசித்து ரசித்து அதை உறிஞ்சுகிற அப்பாவின் முகத்தை. அது எனக்கு எப்போதும் அருவருப்பான ஒரு தோற்றமாகவே தோன்றும். அந்தக் கண்களில் அப்போது முழு முற்றாக வந்துவிடுகின்ற யாரோ ஒருவரைப்போன்ற வேட்கையை நான் கூசினேன். பள்ளி […]

எழுத்து

மறிக்குட்டி

சரவணன் சந்திரன் · 28.09.23

முருகனுக்கு அன்று ரொம்பவே அச்சலாத்தியாக இருந்தது. இந்தக் கருமங்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட்டால் தேவலை என்றும் தோன்றியது. ராக்கால பூஜையை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது தீவட்டி பிடித்தபடி ஒருவன் மெல்ல அசைந்தாடி வந்தான். தீவட்டிப் புகையை நாசியினுள் ஏந்தி வாங்கி ‘ஆஹா என்ன மணம்! ஆஹா என்ன மணம்!’ எனச் சொல்வார் வழமையாய். ஆனால் அன்றைக்கு ஒன்றுமே சொல்லவில்லை. கையைக் காலைத் தடவித் தூங்க வைக்க முயல்கிறார்களாம் என எண்ணிச் சிரித்துக்கொண்டார். அப்படியெல்லாம் தூங்க வைத்துவிட முடியுமா அவரை? […]

எழுத்து

விளம்பரம்

சரவணன் சந்திரன் · 01.07.23

அப்போது நான் புதிய பணியில் சேர்ந்திருந்த சமயம். என்னுடைய அலுவலகத்தில் உடன்பணிபுரிகிறவர் வழியாகத் திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் அறை எடுத்தேன். அதற்கு முன் நண்பர்களோடு இணைந்து ஒரு ஒண்டுக் குடித்தன அறையில் தங்கியிருந்தேன். ஊரில் விரிந்த தாழ்வாரம் கொண்ட வீட்டில் இருந்த எனக்கு அந்த அறைக்குள் மூச்சு முட்டியது. அழைத்துப்போன நண்பர் என்னுடைய மனநிலையைப் புரிந்துகொண்டார். “நல்லவேளை உதவியா வந்தீங்க. இல்லாட்டி இந்தப் பொந்துக்குள்ள மூச்சு முட்டிச் செத்திருப்பேன்” என்றேன் அவரிடம். “இப்ப போறதுமே பொந்துதான். ஆனா […]

எழுத்து

சல்மான் ருஷ்டியின் எதிர்க்குரல் – டேவிட் ரெம்னிக்

கோ.கமலக்கண்ணன் · 01.07.23

தனது எழுபத்தைந்தாவது அகவையை அடைந்தபோது தனக்கு விடப்பட்ட கொலை மிரட்டல்களை எல்லாம் கடந்து வந்துவிட்டதாக நம்புவதற்குச் சல்மான் ருஷ்டிக்கு (Salman Rushdie) காரணங்கள் வலுத்திருந்தன. நெடுங்காலம் முன்பு – 1989ம் ஆண்டு காதலர் தினம் – ஈரானிய உயர்மட்டத் தலைவர் அயாதுல்லா ருஹோல்லா கோமினி, ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ (The Satanic Verses) நாவலை மத நிந்தனைப் படைப்பு என்று குறிப்பிட்டு அதன் படைப்பாளர் உள்ளிட்ட பதிப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் கொலைத் தண்டனை வழங்கி ஃபத்வா என்ற […]

எழுத்து

நிலை

கார்த்திக் பாலசுப்ரமணியன் · 01.07.23

திருமண வீட்டுக்கென்று ஒரு தனிக் களை உண்டு. மெல்லச் சிணுங்கி, படபடத்து, ஓவெனச் சத்தமிட்டு ஒளி பெருக்கி எழுந்து நிற்கும் பூவாணம் போல, மாப்பிள்ளை வீட்டார் பூ வைத்துப்போன நாளிலிருந்து அவ்வீட்டிலும் நாளுக்கு நாள் உற்சாகம் கூட ஆரம்பித்தது. உள்நுழையும் ஒவ்வொருவரிடத்திலும் அவ்வுற்சாக ஒளியின் பிரதிபலிப்புகள். சுற்றிலும் கல்யாண வேலைகள். எதிர்ப்படும் எல்லோர் முகத்திலும் ஏதாவது ஒரு அவசரம். ஒருக்களித்துச் சாத்தப்பட்ட அவள் அறைக்கதவிடுக்கின் வழியே கசிந்த ஒளியை மறைப்பதும் விடுப்பதுமாய் நிழலுருவங்கள் குறுக்கு நெடுக்காக அலைந்துகொண்டிருந்தன. […]

எழுத்து

பேபியம்மாவின் பதம்

எம்.கே.மணி · 01.07.23

வித்யா டார்ச்லைட் எங்கே இருக்கிறது என்று பார்க்கச் சொன்னபோது பிரேமுக்கு ஆத்திரமாக வந்தது. அவள் உடை மாற்றிக்கொண்டிருந்தாள். விவஸ்தை கெட்ட கரண்ட் போயிற்று. இன்னும் பீரோவிற்குள் துழாவி எதையாவது எடுக்க வேண்டியிருக்கும். அவள் சொன்னது கேட்காதது போல அவன் வேறு சில வேலைகளைப் பார்த்தான். நாசூக்காக நேரமில்லை என்று அறிவுறுத்தினான். அவள் அவனுடைய பரபரப்பைத் தவறாக எடுத்துக்கொள்கிற மனநிலையில் இல்லை. விழா நாயகன் ஆயிற்றே? பிராவிற்குள் திணிக்கப்படுகிற அவளுடைய முலைகள் வியர்வை நசநசப்புடன் எவ்வளவு சரிந்திருக்கின்றன என்பதை […]

எழுத்து

உயிர்க்கருணையின் பேரியக்கம்: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’

எம்.கோபாலகிருஷ்ணன் · 01.07.23

பேரியற்கையின் முன் மனிதனும் ஓர் உயிர். பிரபஞ்சத்தின் எண்ணற்ற சிறிதும் பெரிதுமான உயிர்களுக்கு நடுவே அவனும் ஓர் உயிர்தான். என்றாலும் ஆற்றல் மிகுந்தவன். பகுத்தறிவு மிக்கவன். எனவே, பிற உயிர்களைக் காட்டிலும் மேன்மையுடனும் கூடுதல் மகிழ்ச்சியுடன் நிறைவுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றவன். ஆனால், உண்மையில் பிற அனைத்து உயிர்களைக் காட்டிலும் அதிகமும் துன்புறுவதும் அலைக்கழிந்து அல்லலுறுவதும் அவனன்றி வேறு எதுவுமில்லை. அறிவின் துணைகொண்டு நோய்களுக்கான காரணிகளைக் கண்டறிந்து நீளாயுளுடன் வாழ்வதைச் சாத்தியமாக்கியிருக்கிறான். அண்டமளக்கிறான். அணுவைத் துளைக்கிறான். காலம் […]

எழுத்து

இயற்கை முன் மண்டியிடும் கடவுள்: சு.வேணுகோபாலின் நுண்வெளி கிரகணங்கள் 

மானசீகன் · 01.07.23

‘நுண்வெளி கிரகணங்கள்’ என்கிற பெயரைக் குமுதத்தின் அட்டையில் பார்த்ததுதான் அந்த நாவல் குறித்த என் முதல் ஞாபகம். இது தொண்ணூறுகளின் இறுதியில் குமுதம் – ஏர் இந்தியா இணைந்து நடத்திய பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்டது. பலரும் இந்த நாவலை என்னிடம், ‘அறிவியல் புனைவு நாவல்’ என்று சொல்லும்போதெல்லாம் மெல்லச் சிரித்துக்கொள்வேன். கிரகணங்கள் என்பதை அவர்களாகவே தம் மனத்தில் ‘கிரகங்கள்’ என்று உருமாற்றித் தட்டச்சு செய்து நாவல் குறித்து வேறொரு பிம்பத்தை சுஜாதா சாயலில் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு […]

எழுத்து

ஒரு கதையில் விவரணைகளின் உண்மைத்தன்மை எந்தளவுக்கு முக்கியம்?

ஆர்.அபிலாஷ் · 01.07.23

ஓர் இளம் எழுத்தாளராக நாம் சில நேரம் விவரணைகள், தகவல்களின் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்காக அதிகம் மெனெக்கெடுவோம். இது போலீஸ்காரராக நடிப்பவர் தன் சீருடை, தோளில் உள்ள நட்சத்திரங்கள், இடுப்புத் துப்பாக்கியிலே அதிகக் கவனம் செலுத்துவதைப் போன்றது. இப்படி இவற்றில் மிகுவிருப்பம் கொண்டு ஒரு கட்டத்தில் இது ஃபேன்ஸி டிரெஸ் போட்டி போல ஆகிவிடும். நடிகரின் கவனம் நடிப்பில் இருந்து விலகிப்போய் அவர் தன் தோற்றத்தின் போதாமை குறித்து மிகுந்த பிரக்ஞையாகி நடிப்பில் திணறலாம். இதுவே எழுத்தாளர்களுக்கும் நடக்கலாம். […]

எழுத்து

டல்ஸ் மரியா லொய்னாஸ் கவிதைகள்

க. மோகனரங்கன் · 01.07.23

1. ரோஜாக்கள் என் தோட்டத்தில்,ரோஜாக்கள் உள்ளன:நான் உங்களுக்கு ரோஜாக்களைக் கொடுக்க விரும்பவில்லைஅது நாளை…நாளைக்கு உங்களிடம் தங்கியிராது. என் தோட்டத்தில்,பறவைகள் இருக்கின்றனதமது ஸ்படிகப் பாடலுடன்:நான் அவற்றை உங்களுக்குக் கொடுக்கவில்லை;அவற்றிற்குப் பறந்துசெல்ல இறக்கைகள் உள்ளன. என் தோட்டத்தில்,நல்லதொரு தேன் கூட்டை உருவாக்கிடும்தேனீக்கள் உண்டு:நிமிட நேர இனிமை…நான் அதை உங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை! உங்களுக்காக,எல்லையற்றதை அல்லது ஒன்றுமில்லாததைஎது அழியாத ஒன்றோ அதை அல்லது உங்களால் புரிந்துகொள்ளவியலாதஇந்த ஊமைத் துயரை,கொடுப்பதற்கு எதுவுமில்லைஎன்கிற சொல்ல முடியாத சோகத்தை,நித்தியத்தின் ஒரு பகுதியெனநெற்றியில் சுமக்கும் ஒருவருக்குத்தருவதற்கு விரும்பினேன்: […]