நொஸ்டால்ஜியா பொருளாதாரம் (Nostalgia economy) – செயற்கை நுண்ணறிவின் கலாச்சாரப் பரிணாமத்திற்கு நாம் அறியாமலே செய்யும் முதலீடா?
சமீப காலமாக, எந்தவொரு நவீன கஃபேவிற்குள் நுழைந்தாலும், சமூக வலைத்தள பக்கங்களை ஸ்க்ரோல் செய்தாலும், மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் பின்னோக்கிய நினைவுகளில் பயணிப்பதைக் கவனிக்க முடிகிறது.மில்லினியம் தொடக்கத்தில் மழலையாக இருந்த யுவதிகள், இளைஞர்கள், இன்று இடுப்புக்குக் கீழே கார்கோ பேன்ட்களை அணிந்துகொண்டு, பழைய டிஸ்போசபிள் கேமராக்களில் படமெடுத்து, கிராமஃபோன் இசைத்தட்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஃபிலிப் ஃபோன்களை (Flip phones) மீண்டும் சந்தைக்குக் கொண்டுவருகின்றன. திரைப்படத்துறையோ கடந்த காலத்தின் தொடர்ச்சிகளிலும் (reboots) மறு […]
