Category: எழுத்து

கடிதம்

மகாத்மா டால்ஸ்டாய்

மாக்சிம் கார்க்கி · 20.10.26

1910 நவம்பரில், டால்ஸ்டாயின் மறைவை ஒட்டி, எழுத்தாளர் விளாதிமிர் கொரோலென்கோவுக்கு மாக்சிம் கார்க்கி எழுதிய, ஆனால் அனுப்பப்படாத கடிதம். இப்போதுதான் உங்களுக்கு ஒரு கடிதத்தை அஞ்சலில் சேர்த்தேன். அதற்குள் “டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்” என்று தந்திகள் வந்தன. மீண்டும் உங்களுடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இதோ இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்தச் செய்தியைப் பற்றி நான் சொல்லப்போவதெல்லாம் உங்களுக்குக் குழப்பமாகத் தோன்றலாம். கடுமையாகவும். எரிச்சலில் பேசுவதாகக்கூடத் தோன்றலாம். என்னை மன்னியுங்கள். யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல் இருக்கிறது. […]

கவிதை

காமத்திருவாழி: கார்த்திக் நேத்தா கவிதைகள்

கார்த்திக் நேத்தா · 16.10.26

கனியும் காமம் கனலும் இக்காமம்எரிமலையின் அறிதுயில். அழகை அடுத்தறிய அகந்தைஆர்த்தெழும் அலை அடிப்பு. முறுவெயில் நின்றெரியநீராலும் தீரா விடாய். உயிர் திரண்டு உயிருறமுனியும் மோகம். பால் ஊற விழையும்பசுவின் இயல்பசி. பதி உணரக் கதியும்பாறை நெகிழ்வு. பாசம் சூல் கொளும்கூட்டில் இடும் பரமுட்டை. ஈருயிர் இயங்கஇயல்வதோர் ஈர்ப்பு. பருவச் சிறகிசை அருகுணரஎழிலே மலராய் விரிய ஏரார்ந்து ஊறும் தேனமுது. 0 உயிரொளி மயங்கி ஆடும் பிழம்பினுக்குமாத்திரை அளவு உரைப்பாருண்டோ? பாதத்தில் பாய்ந்த முள்ளினைக் கெல்லஒளியின் கதிர் உதவுவதுண்டோ? […]

நேர்காணல்

எஸ். எல். பைரப்பா: இலக்கியமும் வாழ்க்கையும்

எஸ்.எல். பைரப்பா · 13.10.26

நவீன கன்னட இலக்கியத்தின் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவரான எஸ். எல். பைரப்பா (20 ஆகஸ்ட் 1931 – 24 செப்டம்பர் 2025), இந்திய மொழிகளில் பரந்த வாசகர்களைப் பெற்ற எழுத்தாளர். தத்துவம், வரலாறு, சமயம், குடும்ப உறவுகள், சாதி, மனித மனத்தின் சிக்கல்கள் ஆகியவற்றைத் தனது நாவல்களில் தொடர்ந்து ஆராய்ந்தவர். வம்சவிருக்ஷா, தாட்டு, பர்வா, கிருஹபங்கா ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். தமிழில் குடும்பம் சிதைகிறது என்ற பெயரில் வெளிவந்த கிருஹபங்கா, அவரது நாவல்களில் முக்கியமான ஒன்று. […]

உரையாடல்

நம் கதையை இனி யார் எழுதுவார்கள்?

யுவால் நோவா ஹராரி · 09.10.26

மனிதர்களைவிட அதிகமான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளவும், வேகமாகக் கணக்கிடவும், சிக்கலான முடிவுகளை எடுக்கவும் செயற்கை நுண்ணறிவால் முடிகிறது. மனித நாகரிகத்தை இயக்கும் பொருளாதாரம், சட்டம், அரசியல் போன்ற அமைப்புகளையும் அது நம்மைவிடத் திறமையாக நிர்வகிக்கத் தொடங்கினால் என்ன நடக்கும்? ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகும்? தொழில்நுட்பத்தின் இந்த வளர்ச்சியை மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக மாற்றுவது எப்படி? 2026 ஜூலையில் நடைபெற்ற EDP நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு விழாவில், சேப்பியன்ஸ், நெக்சஸ் நூல்களின் ஆசிரியரும் வரலாற்றாசிரியருமான யுவால் நோவா ஹராரியுடன், ஃபைனான்சியல் […]

நாவல் பகுதி

மனையறம், இரண்டு அத்தியாயங்கள்

எம்.கோபாலகிருஷ்ணன் · 09.10.26

அத்தியாயம் 20 கார் வாசலை நெருங்கக் காத்திருந்ததுபோல அந்த ஆள் ஓடிவந்தார். கதவைத் திறந்த காவலர் அவசரமாக அவரைப் பிடித்துப் பின்னுக்கிழுத்தார். “சொல்லிட்டே இருக்கேன். மறுபடியும் நீ வந்துட்டியா. போய்யா அந்தப் பக்கம்.” தொப்பியை சரிசெய்துகொண்டே கதவைச் சாத்தினார். மீண்டும் அவர் உள்ளே கைகாட்டி வாதிடுவதைத் துர்காவால் கண்ணாடியில் பார்க்க முடிந்தது. “அது யார்னு கேளு.” துர்கா நானியிடம் சொல்லிவிட்டு இறங்கினாள். “யாராச்சும் சான்ஸ் கேட்டு வந்துருப்பாங்க. இதென்ன புதுசா? தினம் நடக்கறதுதானே? நீ போ. பாத்துக்கலாம்.” […]

கட்டுரை

நொஸ்டால்ஜியா பொருளாதாரம் (Nostalgia economy) – செயற்கை நுண்ணறிவின் கலாச்சாரப் பரிணாமத்திற்கு நாம் அறியாமலே செய்யும் முதலீடா?

தீபா ஶ்ரீதரன் · 09.10.26

சமீப காலமாக, எந்தவொரு நவீன கஃபேவிற்குள் நுழைந்தாலும், சமூக வலைத்தள பக்கங்களை ஸ்க்ரோல் செய்தாலும், மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் பின்னோக்கிய நினைவுகளில் பயணிப்பதைக் கவனிக்க முடிகிறது.மில்லினியம் தொடக்கத்தில் மழலையாக இருந்த யுவதிகள், இளைஞர்கள், இன்று இடுப்புக்குக் கீழே கார்கோ பேன்ட்களை அணிந்துகொண்டு, பழைய டிஸ்போசபிள் கேமராக்களில் படமெடுத்து, கிராமஃபோன் இசைத்தட்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஃபிலிப் ஃபோன்களை (Flip phones) மீண்டும் சந்தைக்குக் கொண்டுவருகின்றன. திரைப்படத்துறையோ கடந்த காலத்தின் தொடர்ச்சிகளிலும் (reboots) மறு […]

கட்டுரை

தற்கணம் – ஜென் மனம்

வி.அமலன் ஸ்டேன்லி · 09.10.26

தமிழினி வெளியீடாக வெளிவரவுள்ள, வி.அமலன் ஸ்டேன்லி எழுதிய தற்கணம் – ஜென் மனம் நூலின் பின்னிணைப்பை இங்கே வாசகர்களுக்காகத் தருகிறோம் புத்தத்தின் முப்பள்ளிகளான தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் (திபெத்) ஆகியவற்றின் ஒத்த நோக்கை விளக்கும் ‘சிறுபடகு – மாமலை: இயல்கிற மகாமுழுமை குறித்த தேரவாத சிந்தனைகள்’ எனும் அஜான் அமரோ நூலிலிருந்து இந்த இணைப்பு ‘தற்கணம் – ஜென் மனம்’ நூலின் வாசகத் தெளிவுக்காக இங்கே சாரமாகக் கொடுக்கப்படுகிறது.   ‘பல சமயங்களில் ‘ட்சோக்சென்’ (வஜ்ஜிராயனம்) போதனைகளினூடே திளைக்கையில் […]

எழுத்து

ஜூடோ

ப.தெய்வீகன் · 17.01.25

அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். […]

எழுத்து

தைபிலியும் அவளுடைய பூதமும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

கோ.கமலக்கண்ணன் · 17.01.24

லுப்லினுக்கு அருகில் இருந்த லாஷ்னிக் நகரில் சயீம் நோசன், தைபிலி இணையர் வாழ்ந்தனர். அவர்களுக்கு வாரிசு இல்லை. மலட்டுத்தன்மை காரணமில்லை. தைபிலி கணவருக்காக ஒரு மகன், இரு மகள்களை ஈன்றளித்திருந்தாள். மூன்றுமே பரிபோயின: ஒன்று கக்குவான் இருமலுக்கும், ஒன்று விஷக்காய்ச்சலுக்கும், ஒன்று தொண்டை அடைப்பானுக்கும். அதன்பிறகு தைபிலியின் கருப்பை கண் மூடியது. பிரார்த்தனை, மந்திரம், கஷாயம் எதற்கும் பலன் இல்லை. துயரம் சயீம் நோசனை உலக வாழ்வில் இருந்து ஒதுக்கியது. மனைவியிடமிருந்து விலகினான். புலால் மறுத்தான். இரவிலும் […]

எழுத்து

சு.வேணுகோபாலின் வலசை: உபரி வலிகளின் கதை

கடலூர் சீனு · 17.01.24

1 மானுடப் பண்பாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவை இரண்டு. முதலாவது விவசாயம். அடுத்தது நிலத்தடி எண்ணெய்கள் வழியே உருவான இயந்திரத் தொழிற்சாலை யுக எழுச்சி. தவிர்க்கவே இயலாத இந்த இரண்டும், திரும்ப மீள இயலாத சிக்கல்களில் மானுடத்தை நிரந்தமாகக் கொண்டு நிறுத்திய இரண்டு என்று சமூக மானுடவியல் சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். விவசாயம் இன்றிலிருந்து 6000 ஆண்டுகள் முன்பே புழக்கத்தில் வந்துவிட்டது. அது புழக்கத்தில் வந்த நாள் தொட்டே உபரி மதிப்பீட்டு விதிகளின்படி, ‘எழுதப்பட்ட’ மானுட வரலாறும் தொடங்கிவிடுகிறது. […]

எழுத்து

தமிழ்ச் சித்தர் நெறி

கால.சுப்ரமணியம் · 17.01.24

உலகளாவிய தத்துவ வரலாற்றையும் அதன் வகைமைகளையும் ஆன்மீக மரபு என்ற அதன் ஒரு கிளைப் பிரிவையும் இந்தியச் சமய தத்துவ மரபையும் தமிழர் தத்துவ மரபையும், உலகளாவிய சித்தர் மரபுகளின் ஊடாட்டங்களையும் தொடர்ச்சிகளையும் இவைகளில் துலங்கி நிற்கும் நமது தமிழ்ச்சித்தர் மரபின் நெறிமுறைகளையும் குறித்த செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும் நிலையில் எழுதப்பட்ட “இந்தியத் தத்துவத்தில் ஆன்மீக மரபும் தமிழ்ச் சித்தர் நெறியும்” என்ற நெடுங்கட்டுரையின் ஒரு பகுதியான தமிழ்ச் சித்தர் மரபு பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கே […]

எழுத்து

ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி – எட்கர் ஆலன் போ

எஸ்.கயல் · 17.01.24

ஆண்டின் இருண்ட, ஒலியற்ற ஒரு நாளின் இறுதிப்பொழுது; மேகங்கள் சொர்க்கத்தின் நுனியில் தவழ்ந்துகொண்டிருந்தன. மிகக்குறைந்த ஜீவனும் அழகும் கொண்ட நகரைப் பகல் முழுதும் குதிரையில் அமர்ந்தபடி சவாரி செய்த பின் அஷரின் இந்த வீட்டை அந்தியில்தான் கண்டடைய முடிந்தது. அது எப்படி இருந்தது என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் முதல் பார்வையிலேயே அது என் ஆன்மாவைத் துயரத்தால் நிறைத்தது. அந்த வீடு, அதைச் சுற்றியுள்ள நிலம், குளுமை பரவிய கட்டிடச் சுவர்கள், விழிகளின் வடிவத்திலிருந்த வெறுமையான […]